PDA

View Full Version : !!!கனவு தொழிற்சாலை!!!



இன்பக்கவி
16-11-2009, 11:20 AM
http://2.bp.blogspot.com/_Jeq2DwJHcCc/RnVNfx3XMJI/AAAAAAAAAEQ/KGxo8PJHvcc/s320/rajini_fan_poja.jpg
வெண்திரை..
சிலர் கனவுகளை
நனைவாக்கி
பலர்கனவுகளை
நிர்மூலம் ஆக்கும்
கனவு தொழிற்சாலை..

கோடிகளுக்கு
மதிப்பில்லாமல்
ஆடம்பரங்களை
அனாயசகமாக
கண்முன்
காட்டும் மாய உலகம்..

அழகு இருந்தால்
வாய்ப்பு..
முந்திய வரலாறு
அதிர்ஷ்டம் இருந்தால்
அழகில்லதவனும்
ஆட தெரியாதவனும்
கதாநாயகன் தான்
புது வரலாறு..

தமிழ் பேசும்
நாயகிகளுக்கு
ஆயுள் குறைவு..
பிறமொழிநாயகிகளுக்கு
தமிழும் குறைவு
ஆடையும் குறைவு
செலவு மிச்சம்
தயாரிபாளர்களுக்கு...
முதல் தர வரிசையில்
நாயகி பெயர்
வலம் வரும் கொடுமை..

மூன்று நேர
கேளிக்கையில் மூழ்கி
வாழ்வை துலைக்கும்
இளைஞர் கூட்டம்..

இளைஞர்களே
கதாயகன் பின்
அலையாதே..
உன்னை அலையவிட்டு
குளுகுளு காரில்
கை அசைத்து
வலம் வரும்
நாயகன் அவன்...
அவன் அறியமாட்டான்
உன் நிலை...

முதல் நாள் பட வெளியீடு
படம் ஓடினாலும்
கவலை இல்லை
ஓடாமல் போனாலும்
கவலை இல்லை
பணம் பெற்றுவிட்டான்..

உன்சொந்த செலவில்
பால் வாங்கி
பல அடி உயரத்தில்
உன் தலைவனுக்கு
பால் அபிஷேகம்
தேவை தானா??
கொஞ்சம் நிலை தவறி
நீ விழுந்தால்
உனக்கு தான் பால்...

பா.ராஜேஷ்
16-11-2009, 12:08 PM
இளைஞர்களே தூங்கியது போதும் விழித்து எழுங்கள் என்று அழைக்கும் உங்கள் அழைப்பு பாராட்டிற்குரியது ...

கா.ரமேஷ்
16-11-2009, 12:46 PM
/////////உன்சொந்த செலவில்
பால் வாங்கி
பல அடி உயரத்தில்
உன் தலைவனுக்கு
பால் அபிஷேகம்
தேவை தானா??
கொஞ்சம் நிலை தவறி
நீ விழுந்தால்
உனக்கு தான் பால்...
///////////

சிந்திக்க வேண்டிய கவிதை... ஆனாலும் இந்த வரிகளை படித்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை... வாழ்த்துக்கள்..

அறிஞர்
16-11-2009, 02:47 PM
இளைஞர்களுக்கு ஒரு எச்சரிப்பு குரல்...

கனவு தொழிற்சாலை நம்பி... சீரழியும் இளைஞர் பல.....

"நம் வாழ்க்கை.. நம் கையில்" என சிந்தித்தால்.. இளைஞர் கூட்டம் வளமையான இந்தியாவை உருவாக்கும்.

வாழ்த்துக்கள் கவிதா..

இன்பக்கவி
18-11-2009, 06:34 AM
இளைஞர்களே தூங்கியது போதும் விழித்து எழுங்கள் என்று அழைக்கும் உங்கள் அழைப்பு பாராட்டிற்குரியது ...
நன்றிகள் ராஜேஷ் அவர்களே
சென்னையில் தான் இந்த கூத்து அதிகம்

இன்பக்கவி
18-11-2009, 06:36 AM
/////////உன்சொந்த செலவில்
பால் வாங்கி
பல அடி உயரத்தில்
உன் தலைவனுக்கு
பால் அபிஷேகம்
தேவை தானா??
கொஞ்சம் நிலை தவறி
நீ விழுந்தால்
உனக்கு தான் பால்...
///////////

சிந்திக்க வேண்டிய கவிதை... ஆனாலும் இந்த வரிகளை படித்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை... வாழ்த்துக்கள்..
நன்றிகள் ரமேஷ்
எழுதிய எனக்கும் இவ்வரிகள் எழுதும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை
அதனால் நீங்களும் கொஞ்சம் சிரித்து கொள்ளுங்கள்:lachen001:

இன்பக்கவி
18-11-2009, 06:38 AM
இளைஞர்களுக்கு ஒரு எச்சரிப்பு குரல்...

கனவு தொழிற்சாலை நம்பி... சீரழியும் இளைஞர் பல.....

"நம் வாழ்க்கை.. நம் கையில்" என சிந்தித்தால்.. இளைஞர் கூட்டம் வளமையான இந்தியாவை உருவாக்கும்.

வாழ்த்துக்கள் கவிதா..
நன்றிகள் அறிஞர் ஐயா
படித்தவர்கள் கூட சில நேரங்களில் திரை அரங்குகளில் செய்யும் செயல்கள் கவலை அளிக்கிறது

ஜனகன்
18-11-2009, 04:36 PM
உன்சொந்த செலவில்
பால் வாங்கி
பல அடி உயரத்தில்
உன் தலைவனுக்கு
பால் அபிஷேகம்
தேவை தானா??
கொஞ்சம் நிலை தவறி
நீ விழுந்தால்
உனக்கு தான் பால்...உண்மையை எடுத்து சொல்லியிருக்கின்றீர்கள்.
ரசிகர் மன்றம் கொஞ்சம் சிந்திக்கட்டும்.

அமரன்
18-11-2009, 06:14 PM
வெண்ணிற
விழித்திரை போலும்
வெண்திரை..

நம்மிடையே
இருப்பதின் விம்பத்தை
தாங்கும்..

நமக்குத் தேவையான
நற்கருத்துகளை
தருதந்ததும் வெள்ளித்திரைதான்..

என்ன செய்வது..
எல்லாமே மாறி வருகிறது..
நம் தேவைகளும்
நாமும் சேர்ந்துதான்..

பாராட்டுகள் கவிதா123.

இன்பக்கவி
07-12-2009, 06:01 PM
வெண்ணிற
விழித்திரை போலும்
வெண்திரை..

நம்மிடையே
இருப்பதின் விம்பத்தை
தாங்கும்..

நமக்குத் தேவையான
நற்கருத்துகளை
தருதந்ததும் வெள்ளித்திரைதான்..

என்ன செய்வது..
எல்லாமே மாறி வருகிறது..
நம் தேவைகளும்
நாமும் சேர்ந்துதான்..

பாராட்டுகள் கவிதா123.

நல்லா கருத்துகள் முன்பு இருந்த படங்களில் காண முடிந்தது
இப்போது வரும் படங்களை காண்பதே பயமா இருக்கு..
எந்த நேரத்தில என்ன பண்ணுவாங்களோ என்கின்ற மாதிரி போய்விட்டது