PDA

View Full Version : வீசிங் பற்றி சொல்லுங்கள்...சரண்யா
15-11-2009, 03:30 AM
வீசிங்...என்று சொல்லபடுவதை பற்றி அறிந்தவர்கள்...பகிர்ந்து கொள்ளுங்கள்...

anna
15-11-2009, 09:57 AM
வீசிங் பற்றி சொல்லுங்கள் என எழுதியுள்ளீர்கள். அதை ஏன் சொல்லவேண்டும் அனுபவமாகவே வழங்குகின்றேன்.ஏன்னென்றால் வீசிங் எனக்கு 5 வயதில் இருந்து வருகிறது. எனக்கு சொத்து போல்.

வீசிங் என்பது ஆஸ்த்துமா ஆகும். அதாவது நுரையீரலின் மூச்சு குழாயில் அழற்சி காரணமாக சுருக்கம் ஏற்பட்டு அடைபட்டு விடுவது.இதன் காரணமாக மூச்சு விடுவதில் சிரம்ம ஏற்படும். நெஞ்சு மேலும் கீழும் ஏறும் இறங்கும்.கஷ்ட்டப்பட்டு மூச்சு விடும்பாது பூனை கத்துவது போல் கீச் கீச் என்று சத்தம் வந்து கொண்டே இருக்கும்.இப்படியே இருந்தால் நெஞ்சு எல்லாம் வலிக்கும்.ஜூரம் வரும் உணவு உண்ண பிடிக்காது.இந்த நிலை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஒரு நரம்பு ஊசி போட்டால் தான் சரியாகும். இந்த நிலை வராமல் இருக்க வேண்டுமானால் இன்ஹேலர்கள் உபயோகப்படுத்தி கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும்.

ஆஸ்த்துமாவினை முழுமையாக நீக்க இது வரை மருந்துகள் இல்லை. கட்டுகுள் வைத்து கொண்டால் கவலை இல்லை.கண்டிப்பாக மருந்து இல்லை முழுவதுமாக குணமாக ஆக்குகின்றோம் என்றால் அவர்கள் கண்டிப்பாக ஏமாற்று பேர்வழிகள் நம்பாதீர்கள். ஏன்னென்றால் இதற்காக நான் பார்க்காத மருத்துவம் இல்லை. ஆதாலால் இன்ஹேலர் மூலம் தான் என் வாழ்க்கையே ஓடிக்கொண்டு உள்ளது. சில பேருக்கு குளிர்,அழுக்கு,பெயிண்ட்,பூமகரந்தம்,செல்லபிராணிகளின் ரோமங்கள்,தூசி ஆகியவற்றின் அழற்சியால் ஏற்படும். மேற்குறிப்பிட்டதில் எனக்கு தூசி ஆகவே ஆகாது. சுருக்கமாக சொல்வோம் ஆனால் நித்தியம் கண்டம் பூரண ஆயுள் என்ற பழமொழி இந்த நோய்க்கு முழுக்க முழுக்க பொருந்தும்.

சரண்யா
15-11-2009, 11:24 AM
நன்றிகள் அண்ணா....கடைசி பழமொழி புரியுல....
நீங்கள்...ஆஸ்த்மா..என்பதும் வீசிங் என்பதும் ஒன்று என்கிறீரா...டி.பி.என்பது தானே ஆஸ்த்மா...விளக்கம் தாருங்கள்...குழப்பத்தில் கேட்ட கேள்வியே....

குணமதி
15-11-2009, 04:27 PM
நன்றி 'அண்ணா' அவர்களே.

நல்ல விளக்ம் தந்தீர்கள்.

அந்த 'இன்ஹேலர்' பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

தாமரை
16-11-2009, 10:58 AM
டி.பி என்பதற்கும் ஆஸ்துமா அல்லது வீசிங் என்பதற்கும் ஒற்றுமை மாரில் சளி கட்டுதல் என்பது. ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. டி.பி என்பது நோய்க்கிருமிகளால் உண்டாகும். வீசிங் என்பது ஒவ்வாமையினால் உண்டாகும்..

இந்த ஆஸ்துமா பிரச்சனை இன்று பெருநகரங்களில் மிகப் பெரிய பிரச்சனையாக விசுவரூபம் எடுத்து வருகிறது. பெங்களூரில் இன்று கிட்டத்தட்ட 50 சதவிகித குழந்தைகள் இந்நோய்க்கு ஆளாகும் நிலையில் இருக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கவனித்தால் தொல்லைகளை நீக்கலாம்.

நமது சுவாசத்தின் வழியே உள்ளே செல்லும் பலவகைத் துகள் நுரையீரலில் சில சமயம் ஒவ்வாமையை உண்டாக்குகின்றன. இதனால் நுரையீரலில் உள்ள துளைகள் சுருங்கியும், அந்தத் துகள்களை நீக்கச் சளி நிரம்பியும் அடைத்துக் கொள்கின்றன. இதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு வாங்கத் தொடங்குகிறோம். சளியையும் ஒவ்வாமை உண்டாக்கும் துகளையும் வெளியேற்ற இருமல் உண்டாகிறது.. நுரையீரல் சுருங்கியதால் கொள்ளளவு குறைந்து போய் விடுகிறது..

ஆங்கில மருத்துவத்தில் உபயோகப்படுத்தப் படும் இன்ஹேலர்களில் சிறிது ஸ்டெராய்டு கலந்திருக்கும். இவை நுரையீரல் திசுக்களின் உணர்வு நுணுக்கத்தைக் குறைக்கின்றன. இதனால் நுரையீரல் விரிய மூச்சு விடுவது எளிதாகிறது. எனவே இன்ஹேலர் என்பது ஆஸ்துமாவைச் சரி செய்யும் மருந்து அல்ல. நிவாரணம் தரும் ஒரு தற்காலிக காப்பு முறை. அவ்வளவுதான்.

ஒவ்வாமை உண்டாக்கும் பொருள்களில் இருந்து ஒதுங்கி இருப்பதுதான் மிக முக்கியமாகும். அடுத்து நுரையீரல் திறன் அதிகரிக்கும் மூச்சுப் பயிற்சிகள். (நீச்சல் கூட சிறந்த பயிற்சிதான்) இதன் தீவிரத்தைக் குறைக்கும். ஒவ்வாமை போலவே மன அழற்சிகளுக்கும் ஆஸ்துமாவிற்கும் சம்மந்தம் உண்டு. மன அழுத்தம் ஏற்பட்டால் ஆஸ்துமா அதிகரிக்கும். ஆகவே மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுதல் மிக முக்கியம்.

இன்ஹேலர் பயன்படுத்துவதால் நுரையீரலின் உணர்வுகள் குறைகின்றன. எனவே பிற்காலத்தில் நுரையீரலை நோய்கள் தாக்கும் பொழுது நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும். உடனடி எதிர்ப்பான சளி, காய்ச்சல் ஆகியவை நோய் தாக்குதல் அதிகமான பின்பு வரும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதாக இருக்கும்.

பா.ராஜேஷ்
16-11-2009, 12:38 PM
இரவு முழுவதும் தூங்க முடியாமலும் அல்லல் பட்டிருக்கிறேன். தூசினால் வந்த அலர்ஜி அது.. இப்போது தூசு அண்ட விடாமல் இருப்பதால் வீசிங் வருவதில்லை.

வெற்றி
16-11-2009, 01:55 PM
விருமாண்டி படத்தில் கமல் சொல்வாரே " சந்தோசம்கிறது அதை அனுபவிக்கிறப்போ தெரியாது அது இல்லாம போறப்பததான் அதோட அருமை தெரியுமுன்னு " அப்படி தாங்க வீசிங்கும்...அதை அனுபவிச்சு பார்த்தாதான் தெரியும்.. :) :)
வீசிங் இல்லாத காலங்களின் இனிமை..
1) தூசி
2)ஒவ்வாமை
3) நுரையிரல் குறைபாடுகள்
4) நாசி அமைப்பில் இருக்கும் குறை ( அதாவது மூக்கில் இருக்கும் எலும்பு பகுதி நேராக இல்லாமல் வளைந்து காணப்படுதல்.. இவ்வகையை சின்ன ஒரு அறுவை சிகிச்சை மூலம் எளிதில் குண்படுத்தி விட முடியும் :) )
..........
முக்கியமான ஒரு குறிப்பு Deriphyllin என்ற மாத்திரையை (எந்த காரணம் கொண்டு மருத்துவர் ஆலோசனை இன்றி இந்த மருந்தை உட்கொள்ள கூடாது ..என்றாலும் ) வீட்டில் எப்போதும் வையுங்கள் இது ஒரு உயிர்காக்கும் மருந்து என்பதால் நள்ளிரவு அல்லது மருத்துவர் யாரும் கிடைக்காத சமயம் மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும் போது இவ்வகை சமயங்களில் வீசீங்/இடைவிடா இருமல்/மூச்சு விட திணரும் பொழுதுகள் (வயதானவர்களுக்காக) எடுப்பதின் மூலம் உங்கள் பொன்னான உயிரை காத்துக்கொள்ள முடியும்...

இளசு
16-11-2009, 09:01 PM
வீசிங் ( Wheezing) - ஒரு நோய்க்குறி.Symptom.

All that wheees is NOT asthma - மருத்துவ சொலவடை..

விரிந்த உதடுகள் வழி காற்று போனால் சப்தம் வராது.
குவித்து சுருக்கி காற்றிழுத்தால், காற்றூதினால் ஓசை வருமே..
அதே போல் நெஞ்சக சுவாசக்குழாயின் சுற்றளவு குறைந்த நிலையில்
உள்புகும்/ வெளிவரும் காற்றெழுப்பும் ஓசையே Wheeze.

ஆஸ்த்மா
Chronic Obstructive Pulmonary Disease
Acute bronchitis ( esp. in children)
சுவாசக்குழாயில் புகுந்த பட்டாணி
சுவாசக்குழாயை அழுத்தும் கான்சர்
சில சமயம் இருதய அழற்சியால் நுரையீரலில் நீர்கோர்ப்பு

என வீசிங் வர பல காரணிகள்...


ஆஸ்துமா பற்றி வாசிக்க---

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=432

பாரதி
17-11-2009, 12:32 AM
விளக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா.

சரண்யா
17-11-2009, 03:00 AM
நன்றிகள் தாமரை அவர்களே....நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள்...
மீண்டும் ஒரு கேள்வி.....
ஓமியோபதி மருந்தில் குண்ப்படுத்த முடியும் என்பது எந்த அளவிற்கு உண்மை...
ஆங்கில மருத்துவம் தற்காலிகமாக தான்..ஆனால் ஓமியோபதி மருத்துவத்தில் முழுவதும் குணமடைய வாய்ப்பு என்பதை பற்றி சொல்லுங்கள்...

சரண்யா
17-11-2009, 03:05 AM
நன்றிகள் பா.ராஜேஷ் அவர்களே....
தூசி அண்டாமல் இருக்கும் வரைத்தான் பாதுகாப்பு..பின்....அதனால் கேட்டேன்
இது heridity யால கூட வரும் என்றும் சொல்லுகிறார்கள்...

சரண்யா
17-11-2009, 03:08 AM
நன்றிகள்....முதல் முறையாக பதிவில் பார்க்கிறேன்...மொக்கச்சாமி அவர்களே...
உங்களை இப்படி கூப்பிட்டால் பரவாயில்லையா...

தங்களின் பதிலை கண்டு ஆச்சிர்யம்...உங்கள் பெயர் தான் காரணம்...

எனினும் உயிர் காக்க உதவும் மருந்தை குறிப்பிட்டுள்ளீர்கள்...பயனுள்ள தகவல்..

சரண்யா
17-11-2009, 03:14 AM
நன்றிகள் இளசு அவர்களே...
உங்களிடம் ஒரு கேள்வி...
நீங்கள் மருத்துவரா..ஒவ்வாமை பற்றி படித்ததில் அப்படி தோன்றுகிறது..எந்த துறையில் மருத்துவர்....
இந்த வீசிங் என்பது மழைக்காலங்களில் அதிகமாக வரக்காரணம்....இதற்கு சீசனுக்கும் சம்மதம் இருக்கா....

anna
17-11-2009, 01:06 PM
நன்றிகள் அண்ணா....கடைசி பழமொழி புரியுல....
நீங்கள்...ஆஸ்த்மா..என்பதும் வீசிங் என்பதும் ஒன்று என்கிறீரா...டி.பி.என்பது தானே ஆஸ்த்மா...விளக்கம் தாருங்கள்...குழப்பத்தில் கேட்ட கேள்வியே....

ஆஸ்த்துமா வேறு, டி.பி வேறு என தாமரை விளக்கம் அளித்துள்ளரே.

என்ன நண்பரே, கடைசியில் பழமொழிக்கு அர்த்தம் தெரியவில்லை என சொல்லிவிட்டீர்கள். ஆதாவது ஆஸ்த்துமா வந்து விட்டால் சுவாசம் தடை ஏற்படும் போது ஏற்படும் வேதனை இருக்கிறதே அது மிக கொடுமை அதைத்தான் "நித்தியம்(தினமும்) கண்டம்" என சொல்கிறேன். இன்ஹேலர் பயன்படுத்தியப்பின் கிடைக்கும் சுகத்தைத்தான் "புரண ஆயுள்" என குறிப்பிட்டு உள்ளேன்.இன்னும் ஒரு பழமொழி இந்த வியாதி வந்து விட்டால் "சாகவும் விடாது வேகவும் விடாது"

anna
17-11-2009, 01:19 PM
நன்றி 'அண்ணா' அவர்களே.

நல்ல விளக்ம் தந்தீர்கள்.

அந்த 'இன்ஹேலர்' பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

எனக்கு இப்போது வயது 39 ஆகிறது.நான் எனது 5 வயதில் இருந்து இன்ஹேலர் பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன்.எஎன்னுடைய 15 வயது வரை எந்த இன்ஹேலர் பயன்படுத்தினேன் என எனக்கு தெரியாது. 16 வயது முதல் இன்று வரையில் வென்ட்ரோலின்(VENTROLIN) என்னும் இன்ஹேலர் தான் பயன்படுத்திகிறேன். எனக்கு ஏதுவும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தெரியவில்லை. இரத்தில் இளமை இருக்கும் வரையில் ஏதும் தெரியாது என்பார்களே அது போல் இருக்குமோ என்னவோ?

தாமரை அவர்களின் பதிலை கண்ட பின்பு ஏதோ மனது உறுத்துகிறது. இருப்பினும் எனக்கு மனதிடம் மிகவும் அதிகம். இந்த வியாதி இருந்தாலும் நான் எனது 23 வயதில் மிஸ்டர் மெஜூரா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் பிடித்தேன். இதற்காக ஜிம்மில் 5 வருடங்கள் உடற்பயிற்சி செய்தேன். இப்போதும் என் உடல் கட்டு குழையாமல் தான் உள்ளது. என்னை முதலில் பார்ப்பவர்கள் இந்த பிரச்சனை இருக்கும் என எள்ளவும் நம்ப மாட்டார்கள்.

சரண்யா
17-11-2009, 04:12 PM
நன்றிகள் அண்ணா அவர்களே.....தங்கள் விளக்கத்திற்கு...பழமொழி ரொம்ப தெரியாதுங்க..
நான் கேட்டது தாமரை அவர்களின் பதிலுக்கு முன்னாடி இருந்ததால் மாற்றவில்லை....
தாங்கள் வேறு ஓமொயோபதி மருத்துவத்தில் முயற்சி செய்துள்ளீரா...

குணமதி
17-11-2009, 04:31 PM
எனக்கு இப்போது வயது 39 ஆகிறது.நான் எனது 5 வயதில் இருந்து இன்ஹேலர் பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன்.எஎன்னுடைய 15 வயது வரை எந்த இன்ஹேலர் பயன்படுத்தினேன் என எனக்கு தெரியாது. 16 வயது முதல் இன்று வரையில் வென்ட்ரோலின்(VENTROLIN) என்னும் இன்ஹேலர் தான் பயன்படுத்திகிறேன். எனக்கு ஏதுவும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தெரியவில்லை. இரத்தில் இளமை இருக்கும் வரையில் ஏதும் தெரியாது என்பார்களே அது போல் இருக்குமோ என்னவோ?

தாமரை அவர்களின் பதிலை கண்ட பின்பு ஏதோ மனது உறுத்துகிறது. இருப்பினும் எனக்கு மனதிடம் மிகவும் அதிகம். இந்த வியாதி இருந்தாலும் நான் எனது 23 வயதில் மிஸ்டர் மெஜூரா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் பிடித்தேன். இதற்காக ஜிம்மில் 5 வருடங்கள் உடற்பயிற்சி செய்தேன். இப்போதும் என் உடல் கட்டு குழையாமல் தான் உள்ளது. என்னை முதலில் பார்ப்பவர்கள் இந்த பிரச்சனை இருக்கும் என எள்ளவும் நம்ப மாட்டார்கள்.

விளக்கத்திற்கு மிக்க நன்றி.

சரண்யா
18-11-2009, 08:29 AM
இந்த விசீங் என்பதே பேருந்தில் செல்லும்போது சிலர் வாந்தி எடுப்பதற்கு காரணமாகுமா..ஒவ்வாமை என்பதா...

தாமரை
18-11-2009, 09:35 AM
அது வேற.. இது வேற

சரண்யா
19-11-2009, 02:45 AM
நன்றிகள் தாமரை ஐயா அவர்களே..

Ravee
06-12-2009, 02:32 AM
இருபது வருடங்களாக தொலைகாட்சி பெட்டி, கம்ப்யுட்டர் சரிசெய்யும் பணியில் இருக்கிறேன்.
என்ன வருமானம் கிடைத்ததோ தெரியாது ,கிடைத்த நிரந்தர சொத்து விசிங்.
ஆங்கில மருத்துவம் தற்காலிக தீர்வு. ஹோமியோபதி ஒரு தொடர்கதை, சித்தா உணவுக்கட்டுப்பாடு, மூச்சு பயிற்சி என் எல்லா முறைகளையும் கடந்த பத்து வருடங்களாக செய்து வருகிறேன். கட்டுக்குள் இருக்கும் அரக்கன் ஒரு நாள் கிளம்பும் பொது பேயாட்டம் ஆடுவான் அது போலத்தான் என் கதையும். கடந்த இரண்டு நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டேன்.

அவசரத்தேவைக்கு அஸ்தலின் இன்ஹேலர் ஹோமியோ பொறுமைவேண்டும், நல்ல மருத்துவரும் வேண்டும் மூச்சுப்பயிற்சி நல்ல முறை அதை தினமும் செய்து கொண்டு இருந்தவரை பிரச்சனை இல்லை.

சரண்யா
06-12-2009, 02:41 AM
ஆம் மூச்சுப்பயிற்சி நல்லது என்கிறார்கள்...நானும் கேள்வி பட்டேன்...
நன்றிகள் ந.இரவிந்திரன் அவர்களே...பகிர்ந்து கொண்டமைக்கு...
தீர்வு இருப்பதாக தெரியவில்லை...

குணமதி
06-12-2009, 03:32 AM
இருபது வருடங்களாக தொலைகாட்சி பெட்டி, கம்ப்யுட்டர் சரிசெய்யும் பணியில் இருக்கிறேன்.
என்ன வருமானம் கிடைத்ததோ தெரியாது ,கிடைத்த நிரந்தர சொத்து விசிங்.
ஆங்கில மருத்துவம் தற்காலிக தீர்வு. ஹோமியோபதி ஒரு தொடர்கதை, சித்தா உணவுக்கட்டுப்பாடு, மூச்சு பயிற்சி என் எல்லா முறைகளையும் கடந்த பத்து வருடங்களாக செய்து வருகிறேன். கட்டுக்குள் இருக்கும் அரக்கன் ஒரு நாள் கிளம்பும் பொது பேயாட்டம் ஆடுவான் அது போலத்தான் என் கதையும். கடந்த இரண்டு நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டேன்.

அவசரத்தேவைக்கு அஸ்தலின் இன்ஹேலர் ஹோமியோ பொறுமைவேண்டும், நல்ல மருத்துவரும் வேண்டும் மூச்சுப்பயிற்சி நல்ல முறை அதை தினமும் செய்து கொண்டு இருந்தவரை பிரச்சனை இல்லை.


இந்த மூச்சுப் பயிற்சி பற்றி யாரேனும் விளக்கிக் கூறினால் பலரும் பயன் பெறுவோம்.
தெரிந்தவர்கள் உதவ வேண்டுகிறேன்.

Ravee
06-12-2009, 04:58 PM
மன்னிக்கவும் குணவதி அவர்களே, நீச்சல் அடிப்பதை அஞ்சல் வழியில் எப்படி கற்க முடியாதோ அதை போலத்தான் யோகாவும்,மூச்சுப்பயிற்சிம்
சிறந்த பயிற்சி ஆசிரியர் இல்லாமல் பயிலும் யோகா விஷத்தை விட கொடியது. நான் பல மெய்ப்பொருள் தேடி அலைந்ததை போல நல்ல பயிற்சியாளர்களை தேடித்திரிந்தேன்.

எனக்கு இருந்த பிரச்சனை மன உளைச்சல், மெல்லிய தூசித்துகள்கள், முதல் மழையில் கிளம்பும் மண்வாசம், முன்பனி. ஒரு காலங்களில் மழை பெய்தால் குடும்பம் மொத்தமும் ஒரே கும்மாளம் போடுவோம். இன்று நிலைமையே வேறு.என் பிரச்சனையை என் உறவுக்கார பெண்மணி ஒருவர் முகத்தை பார்த்தே சொன்னார். அன்று முதல் இன்று வரை அவர்தான் என் வழிகாட்டி.
பிரானிக் ஹீலிங் என்ற முறை அவர் பின் பற்றியது. அவரிடம் இருந்து நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் "ஆட்டோ சஜசன்" என்னும் மூச்சுப்பயிற்சி முறை கற்றேன். எனவே மனக்குழப்பத்தில் இருந்து மெதுவாக வெளியே வந்து தோல்விகளை வேறு கோணத்தில் பார்க்கும் கலையை அவரிடம் இருந்து கற்றேன்.

பின்னர் இந்த பயிற்சிகளில் ஏற்ப்பட்ட ஈடுபாட்டில் மதுரை காமராஜர் பலகலை கழகத்தில் பட்ட மேற்ப்படிப்புக்கு வந்த புத்த துறவி ஒருவருடன் தொடர்பு ஏற்ப்பட்டு பின்னர் அவரும் பலகலை கழகமும் நடத்திய பயிற்சிகளில் உடல் அளவில் உபாதைகள் குறையத் தொடங்கின. ஆனாலும் என் நுரை ஈரல் மட்டும் என் கட்டுப்பாட்டில் இல்லை.

அப்போது கண்டது ஈசா மையம் , முழுமையான மூச்சுப்பயிற்சியினை அங்கே பெற்றேன் எனக்கு அமைந்த ஆசிரியர்கள் அனைவரும் பொறுமையாக அவர் அவர் உடல் நிலைப்பார்த்து கற்றுத்தந்தனர். இதில் நிறுவனர் சத்குருவும் ஒருவர். கண்களால் எங்களை அளந்து விடுவார். சிரித்துக்கொண்டே சொல்லவார் முழுமையான ஈடுபாடு இல்லாதவர்கள் இன்னும் ஓரிரு ஜென்மத்துக்கு பின் வந்து நம்முடன் சேர்வார்கள் என்று. இத்தகைய ஈடுபாடு கொண்ட குரு அமைய வேண்டும். என்னை பொறுத்தவரை சத்குருவும், என் உறவுக்கார பெண்மணியும் ஒன்று தான்.அவர்கள் அள்ளிக்கொடுத்தார்கள். நாங்கள் என்னவோ கிள்ளிகொண்டுவந்தோம். இதில் எடுத்துவந்த என் மேலேதான் பிழை இருக்கும்.

எனவே யோகா மூச்சுப்பயிற்சி இரண்டையும் நல்ல குருவின் துணையுடன் கற்றுக்கொளுங்கள்

குணமதி
07-12-2009, 02:07 AM
நன்றி இரவி.

பிரானிக் ஹீலிங் - இதை ஆங்கிலத்தில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஓவியன்
07-12-2009, 04:53 AM
வீசிங் பற்றி இளசு அண்ணா, தாமரை அண்ணா, அண்ணா, மொக்கசாமி, ரவீ என்று பலரும் விளக்கமளித்த பின் அதனைப்பற்றி தெளிவான பிம்பம் உங்களுக்கு உள்ளே விழுந்திருக்குமென நம்புகிறேன் சரண்யா.

வீசிங், எனது அப்பப்பா, அப்பா, சித்தப்பா பின் என்னையும் பிடித்துக் கொண்ட ஒவ்வாமை நோய், எனக்கு தூசி, குளிர் மற்றும் சில உணவு வகைகள்(முக்கியமாக ஆட்டிறைச்சிக் கறி) ஒத்துக் கொள்ளாமல் வீசிங் வருவது வழமையாக இருந்தது. அந்த வேளையில் இன்ஹேலர் பாவித்திருக்கின்றேன், ஆனால் அதிஸ்டவசமாக நான் இலங்கையிலிருந்து வேறு நாடு வந்த நாளிலிருந்து என்னை இந்தப் பிரச்சினை அண்டியதில்லை. இங்கே பலர் குறிப்பிட்டது போல எதனால் ஒவ்வாமை வருகிறதென அறிந்து அதிலிருந்து விலகியிருப்பதே நல்ல தடுப்பு முறை.

சரண்யா
07-12-2009, 08:31 AM
நன்றிகள் ஓவியன் அவர்களே....

Ravee
07-12-2009, 12:13 PM
Pranic Healing

http://www.pranichealing.com/

பால்ராஜ்
11-12-2009, 03:07 AM
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ...
என்று பாடத் தொடங்கினால்
அந்த மூன்று எழுத்து மூ ச் சு ஆகத்தான் இருக்கும்

பிறந்த அந்த கணத்தில் இருந்து சுவாசிக்கத் தொடங்குகிறோம்.. கடைசி மூச்சு போகப் போகும்வரை... அதை உருப்படியாகச் செய்கிறோமா என்று யோசித்து ஆழமாக மூச்சு இழுத்தால், வாழ்க்கையே மாறி விடும்..

பல ஒவ்வாமைகள் ... இல்லாமைகள் எல்லாம் போயே போச்சு...

வாழும்கலை என்பது சுவாசிப்பது பற்றிய ஒரு அருமையான பயிற்சி..
அதை நாமாகவும் கற்றுக் கொள்ளலாம்..
குருக்கள் இருந்தால் இன்னும் சுலபமாகவும் இருக்கலாம்..
முயற்சி அதுவே அடிப்படைத் தேவை.

சரண்யா
11-12-2009, 03:25 AM
நன்றிகள்..பால்ராஜ் அவர்களே...பகிர்ந்து கொண்டமைக்கு..

குணமதி
11-12-2009, 04:33 AM
Pranic Healing

http://www.pranichealing.com/

மிக்க நன்றி.