PDA

View Full Version : வாரத்திற்கு ஒரு நாள் மன்றம் பொது திறப்பாக்குதல் - குறித்து

praveen
14-11-2009, 04:56 AM
வாரத்திற்கு ஒரு நாள் (வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை) மட்டும் நம் தளத்தை கெஸ்ட் யூசர்ஸ், அதாவது தளத்தில் லாகின் ஆகாமல் பார்ப்பவர் பார்க்க அனுமதிக்கலாமா?. தற்போது முதல் பகுதி மட்டும் (முல்லை மன்றம்) தெரியும். நாம் அதனை நீட்டித்து கதம்பம் மன்றம் வரை அனுமதிக்கலாம் என்று நினைக்கிறேன். இது பற்றிய அறிவிப்பை தளத்தின் முகப்பிலே இடவும் வேண்டும். அதாவது இம்மன்றம் பிரதி ______கிழமை அனைவரும் பார்க்கும் வண்ணம் இருக்கும். தினமும் பார்க்க வேண்டும், உங்கள் கருத்துக்கள்/ஆக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் உறுப்பினராகுங்கள் என்று.

இது பற்றி தள நண்பர்கள் கருத்து பெற விழைகிறேன்.

நம் தளத்தை பார்வையிடுபவர் எண்ணிக்கை இன்னும் கூடும்

நம் தளத்தை சர்ச் எஞ்ஜின்கள் அந்த நாளில் தகவல் எடுப்பதால் பிறர் தேடும் போது நம் தள செய்தி தெரிந்து பின் அவர்கள் இங்கே பார்க்க விரும்பும் போது, அந்த இலவச நாள் வரை காத்திருக்காமல் உள் நுழைய விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்.

இதுநாள்வரை பூட்டித்தான் வைத்திருந்தோம், சில வாரம் ஒருமுறை திறந்து வைத்து பார்ப்போம். அப்போதாவது நண்பர்கள் வருகை அதிகமாகிறதா என்று.

நாம் நம் தளத்திலே பார்ப்பவர் தீமை பயப்பதோ, சட்டவிரோதமானதோ, அல்லது எந்த ஒரு சமூகம்/மொழி/இனம்/பிரதேசத்திற்கு எதிரான கருத்தோ கொண்டதில்லை என்னும் போது வாரம் ஒரு நாள் திறந்து விடுவதில் தவறு ஏற்படாது என்றே நினைக்கிறேன்.

சிவா.ஜி
14-11-2009, 05:01 AM
மிக நல்ல யோசனை. மேலோட்டமாகப் பார்ப்பதைவிட உட்சென்று பார்த்து படிக்கும்போது, மன்றத்தின் மேல் ஆர்வம் கூடுமென்பதை மறுக்க முடியாது.

வாரமொருமுறை திறந்து வைத்தலை நானும் ஆமோதிக்கிறேன்.

பாரதி
14-11-2009, 05:48 AM
இதே கருத்தை நானும் முன்பு தெரிவித்திருக்கிறேன். மன்றத்தில் பின்னூட்டமிடவோ, திரி ஆரம்பிக்கவோ உறுப்பினராதல் அவசியம் என்ற கட்டுப்பாடுடன் பிரவீணின் ஆலோசனையை நடைமுறைப்படுத்தலாம் என்பதே என் கருத்து.

த.ஜார்ஜ்
14-11-2009, 06:37 AM
பாரதியை நான் வழிமொழிகிறேன்.

வியாசன்
14-11-2009, 06:45 AM
இந்த யோசனையை சற்று திருத்தி எப்போதுமே விருந்தினர்களை பார்க்கும்படியாக வைக்கலாம். ஒருநாள் என்றால் பலருக்கு அது தெரியாமல் போய்விடும். பார்வையிடுவதற்கு அனுமதிப்பதில் தவறில்லை. அவர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கு பதிவுசெய்யும்படியாக இருந்தால் போதும்.

நல்ல ஆலோசனை நன்றி பிரவீன்

jbala
14-11-2009, 08:21 AM
இது நல்ல ஐடியாவா இருக்கே.

கதவைத் திறந்து விடுங்கள் காற்று வரட்டும்.
மெல்லியப் பூங்காற்று தமிழ் வாசத்தை உரசிச் செல்லட்டும்.
உரசிய வாசமே வருபவர்களின் சுவாசமாகட்டும்.
சுவாசிக்கும் சுகத்தை கொஞ்சம் எமக்கும் சொல்லிச் செல்லட்டும்.

மஸாகி
14-11-2009, 09:17 AM
வரவேற்போம் - விருந்தினரை - எம் பந்திக்கு - மொய் எழுதாமலேயே எம் அறுசுவை விருந்தை சாப்பிட்டுப் பார்க்கட்டுமே..

நல்ல யோசனை - வாழ்த்துக்கள்..

குணமதி
14-11-2009, 12:06 PM
நல்ல கருத்து.

ஆ.ஜெயஸ்ரீ
14-11-2009, 12:31 PM
பிறர் சொல்ல கேட்பதை விட தான் தெரிந்து உணரும் போது பயன் அதிகமாகும் . அதனால் இதனை நடைமுறை படுத்தலாம்

பா.ராஜேஷ்
14-11-2009, 01:07 PM
நல்ல ஐடியா தான்... திறந்து விடலாம்... அப்படியே ஏற்கனவே வந்தவர்கள் (உறுப்பினர்கள்) காணமல் போய் விட்டவர்களுக்கும் ஒரு வழி காணுங்களேன் !!!

ஸ்ரீதர்
14-11-2009, 01:22 PM
இதே கருத்தை நானும் முன்பு தெரிவித்திருக்கிறேன். மன்றத்தில் பின்னூட்டமிடவோ, திரி ஆரம்பிக்கவோ உறுப்பினராதல் அவசியம் என்ற கட்டுப்பாடுடன் பிரவீணின் ஆலோசனையை நடைமுறைப்படுத்தலாம் என்பதே என் கருத்து.

நண்பர் பாரதியின் கருத்தினை நானும் வழிமொழிகிறேன்

தாமரை
16-11-2009, 08:45 AM
எல்லோரும் நல்லவரேன்னு நினைச்சா சரிதான்.. ஆனால் அப்படி இல்லையே

meera
16-11-2009, 09:10 AM
ப்ரவீண், உங்கள் கருத்து வரவேற்க்கதக்கது. இதை மன்ற மக்கள் பரிசீலிக்கலாமே??

வியாசன்
16-11-2009, 09:47 AM
எல்லோரும் நல்லவரேன்னு நினைச்சா சரிதான்.. ஆனால் அப்படி இல்லையே

சலித்துக்கொள்ளாதீர்கள் தாமரை விருந்தினர்கள் பார்வையிடுவதற்குதான் அனுமதி. அவர்களால் கருத்துக்களை வைக்கமுடியாது. அதற்கு அவர்கள் பதிவு செய்யவேண்டும். அதனால் எந்தவித பிரச்சனைகளும் வரமுடியாது.

தாமரை
16-11-2009, 12:06 PM
இது சலிப்பு அல்ல வியாசன்.. விஷமிகளின் விஷக்கொடுக்கு கொட்டிய தழும்பின் நெருடல்,, :D :D :D

praveen
16-11-2009, 01:09 PM
உண்மை தான் நண்பர்களே,

நம் தளத்தை பொதுவில் திறந்து விட்டால் நல்லவர்கள் பார்த்து மகிழ்வார்கள். விஷமிகள் இங்கே இருக்கும் கவிதை / கட்டூரை / கதை இவைகளை எடுத்து பிளாக் ஆரம்பிப்பார்கள், அல்லது பத்திரிக்கைகளில் போட்டு பேர்வாங்குவார்கள். மெம்பராக அனுமதித்தால் மட்டும் எடுக்க மாட்டார்களா என்றால், சோம்பேறிகள் கொஞ்சம் தாமதப்படுவார்கள்.

இன்னொரு பக்கத்தையும் சுட்டிகாட்டிய தாமரைக்கு நன்றி.

நான் சமயத்தில் லாகின் ஆகிப்பார்க்கும் போது 2 யூசர், 16 கெஸ்ட் இருப்பார்கள். யாருக்காக இந்த தளம் என்ற ஆதங்கத்தில் தான், நான் திரி ஆரம்பித்து விட்டேன். நேற்று காலை முதல் மாலை வரை நான் ஒருவன் மட்டுமே தளத்தில் இருந்ததாக பீல் செய்தேன். தனியாக இருக்க பயமாக இருந்ததால் வீட்டிற்கு கிளம்பிட்டேன் :).

aren
16-11-2009, 01:41 PM
இப்பொழுது இருக்கும் முறையே சரியானது என்று எனக்குத் தோன்றுகிறது. வெறுமனே வந்துபோகுபவர்களுக்கு நம் மன்றம் நிச்சயம் உதவாது. இது உறுப்பினர்களால் உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் மன்றம், ஆகையால் இங்கே வெறுமனே வந்து போகுபவர்களுக்கு இடமில்லை.

மன்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மன்றத்தில் உறுப்பினராக சேரட்டும் என்பதே என் கருத்து.

அறிஞர்
16-11-2009, 02:42 PM
ஒரு பக்கம் நன்றாக தெரிந்தாலும், மற்றொரு பக்கத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது....

நிர்வாக குழு, ஆலோசகர்கள் கலந்தாலோசித்து விரைவில் முடிவு எடுப்போம்.

வியாசன்
16-11-2009, 05:55 PM
ஒரு பக்கம் நன்றாக தெரிந்தாலும், மற்றொரு பக்கத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது....

நிர்வாக குழு, ஆலோசகர்கள் கலந்தாலோசித்து விரைவில் முடிவு எடுப்போம்.

இதை நீங்கள் பரீட்சித்து பார்க்கலாம். இதனால் ஒரு பிரச்சனையும் வரமாட்டாது. பார்வையிடுபவர்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளலாம். பார்வையிடுவதை தவிர அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது.

anna
17-11-2009, 12:55 PM
வரவேற்கத்தக்க கருத்து தான். ஆனாலும் கெஸ்டகள் எல்லா நாளும் பார்க்க படிக்க உரிமை அளிக்கலாம். பின்னுட்டம் இட அல்லது அவர்கள் கருத்துக்களை தெரிவிப்பதானால் விருந்தாளிகள் உறுப்பினாராக பதிவு செய்யும் படி தெரிவிக்கலாம்.

அறிஞர்
17-11-2009, 02:39 PM
இதை நீங்கள் பரீட்சித்து பார்க்கலாம். இதனால் ஒரு பிரச்சனையும் வரமாட்டாது. பார்வையிடுபவர்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளலாம். பார்வையிடுவதை தவிர அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது.
பதிவுகளால் யாரால் திருடப்படுகிறது... என கண்டுபிடிப்பது... கடினமாக இருக்கும்...

மன்றத்தில் பேசுவதை மன்ற இடங்களில்.. வெளிப்படையாக/கேலித்தனமாக விமர்சிக்கிறார்கள் சிலர்... இது போன்ற பாதிப்புகள் பல எழ வாய்ப்புண்டு...

அதனால் சற்று யோசிக்கிறோம்.

வியாசன்
17-11-2009, 03:05 PM

அறிஞரே எதையும் நல்லதாகவும் கெட்டதாகவும் விமர்சிப்பதுதான் இயல்பு. நான் யாரென்று உங்களுக்கு தெரியாது. நான் இன்னொரு இடத்தில் மன்றத்தை கெட்டதாக விமர்சித்தால் உங்களுக்கு யார் விமர்சிக்கின்றார்கள் என்று தெரியாது. எதற்குமே இரண்டு பக்கங்கள் உண்டு . பயந்துகொண்டிருந்தால் உச்சியை எட்ட முடியாது.

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் மன்றம் தன் பாதையில் போய்க்கொண்டிருக்கட்டும்

Mano.G.
17-11-2009, 11:45 PM
இது சலிப்பு அல்ல வியாசன்.. விஷமிகளின் விஷக்கொடுக்கு கொட்டிய தழும்பின் நெருடல்,, :D :D :D

பட்ட வடு இன்னும் மாறவில்லை,
அதனால் கவனம் மிக மிக தேவை,
நன் கு பரிசீலனை செய்த பிறகு
முடிவெடுப்பது நல்லது

ஆதி
18-11-2009, 03:12 AM
அறிஞரே எதையும் நல்லதாகவும் கெட்டதாகவும் விமர்சிப்பதுதான் இயல்பு. நான் யாரென்று உங்களுக்கு தெரியாது. நான் இன்னொரு இடத்தில் மன்றத்தை கெட்டதாக விமர்சித்தால் உங்களுக்கு யார் விமர்சிக்கின்றார்கள் என்று தெரியாது. எதற்குமே இரண்டு பக்கங்கள் உண்டு . பயந்துகொண்டிருந்தால் உச்சியை எட்ட முடியாது.

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் மன்றம் தன் பாதையில் போய்க்கொண்டிருக்கட்டும்

இது பயமல்ல வியாசன், நிதானம்.. பட்ட காலில் தான் படும் என்பார்கள்.. ஏற்கனவே ரணப்பட்டாயிற்று பல விடயங்களில்.. மீண்டும் அதை பட விரும்பவில்லை..

வியாசன்
18-11-2009, 04:10 AM
இது பயமல்ல வியாசன், நிதானம்.. பட்ட காலில் தான் படும் என்பார்கள்.. ஏற்கனவே ரணப்பட்டாயிற்று பல விடயங்களில்.. மீண்டும் அதை பட விரும்பவில்லை..

அப்படி என்னதான் நடந்தது ?

ராஜேஷ்
22-11-2009, 06:47 PM
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெருக .

நமக்கு கிடைக்கும் நல்ல பல பொக்கிஷங்களை பலருக்கும் பகிர்ந்து கொடுப்பதில் தவேறும் இல்லை என்பதுதான் என் கருத்தும் .

ஜனகன்
22-11-2009, 08:00 PM
மனறத்தில் உள்ள மூத்த அங்கத்தவர் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரட்டும். நமக்கு கருத்து சொல்ல அனுபவம் காணாது.

aren
23-11-2009, 01:14 AM
அப்படி என்னதான் நடந்தது ?

நீங்கள் இப்பொழுதுதான் வந்திருக்கிறீர்கள் வியாசன். போகப்போக நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

நம் தளத்திலிருந்து பல நல்ல படைப்பாளிகள் வெளியேறிவிட்டார்கள் சில விஷக்கிருமிகளின் செயல்களால். ஆகையால்தான் கொஞ்சம் பார்த்து முடிவுகள் எடுக்கவேண்டியுள்ளது.

நீங்களே புரிந்துகொள்ளும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அப்பொழுது நாங்கள் சொல்வது உங்களுக்கு புரியும் என்றே நான் நினைக்கிறேன்.