PDA

View Full Version : !!!சிறைச்சாலை!!!



இன்பக்கவி
12-11-2009, 02:50 PM
http://beta.thehindu.com/multimedia/dynamic/00007/VBK09-CH-PUZHAL_PRISO_7452f.jpg

முன்பு
சிறை வாழ்கை
கொடியது
வேண்டாம் இந்நரகம்
இனி ஒரு முறை..
குற்றம் செய்து துடித்து
திருந்திய காலம் ..

இன்று
மாமியார் வீடாய்
மாறி போனது நிஜமே...

எது இல்லை
சிறையில்..
பணம் இருந்தால்
பத்தும் வரும் சிறைக்கு...

மாதம் மாமாக்கு
மாமுல் இரண்டாயிரம்
தண்ணி முதல்
கஞ்சா வரை அனுமதி

கஞ்சியும் களியும்
மலையேறி போச்சு
அறைக்குள்ளே சமைக்கும்
வசதியும் உண்டாம்..
தனியே விலை(மாமுல்) பட்டியல்..
சகலவசதிகள்..

கைபேசி இல்லாத
கைதியே இல்லை...
வெளியே இருந்து
துன்ப படுவதைவிட
உள்ளே இருப்பதே மேல்..
கைதியின் வாசகம்..

திடீரென்று நடக்கும்
ஒருபரிசோதனை..
மூட்டை மூட்டையாக
அள்ளி செல்வர்கள்
கைதிகளிடம் கைபற்றியது என்று ..

மாமுல் வாங்கிய
மன்னருக்கு
பார்த்த வேலைக்கு
களைப்பு நீங்க
ஊதியத்தோடு சஸ்பெண்ட்...
ஒய்வு எடுக்க
அரசாங்கம் தரும் சலுகை..

தியாகிகள் செக்கு இழுத்து
துடித்த சிறை
கஞ்சா இழுக்கும் சிறையாய்
போனது இன்று..

யார மீது குற்றம்???
பணத்தை கொண்டு
பகலை இரவாக்கலாம்
என நினைக்கும்
குற்றவாளிகள் மீதா??
குற்றவாளியோடு கூட்டு
சேரும் அதிகாரி மீதா??
எங்கும் அவலம்..
மாறவில்லை இன்னமும்...

அறிஞர்
12-11-2009, 02:58 PM
யார மீது குற்றம்???
பணத்தை கொண்டு
பகலை இரவாக்கலாம்
என நினைக்கும்
குற்றவாளிகள் மீதா??
குற்றவாளியோடு கூட்டு
சேரும் அதிகாரி மீதா??
எங்கும் அவலம்..
மாறவில்லை இன்னமும்...
சாட்டையடி கவிதை.. கவிதா....

குற்றம் புரிந்து.. குற்றவாளி பட்டம் ஏற்று.... கைதிகள்...
அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள்....
இருவரும் குற்றவாளிகள்...

இந்த அவல நிலை மாற
எத்தனை யுகங்கள் வேண்டுமோ...

மன்மதன்
12-11-2009, 03:21 PM
எத்தனை விதமான குற்றங்கள்.. எப்படியும் தண்டனை கிடைக்கபோவதில்லை..

மனமாற்றம் ஒன்றே திருந்த வழி..

கவிதை நன்று கவி..

கா.ரமேஷ்
13-11-2009, 07:18 AM
மிகவும் அருமையான கவிதை கவிதா வாழ்த்துக்கள்...

அமரன்
13-11-2009, 09:20 PM
உல்லாச புரியாக சிலச் சிறைக் கூடங்கள்.

சீர் திருத்தும் இடங்களின் சீர் கவலைக்கிடம்.

சரியான சாட்டை.

தானாகத் திருந்த வேண்டும். இல்லையேல் பயந்து திருந்த வேண்டும். இரண்டுக்கும் வழியில்லாவிடில் இருட்டை எப்படி விரட்டுவது.

இப்படியான வெளிச்சக் கவிதைகளால் முடியக்கூடும்.

பாராட்டுகள் கவிதா123.

பா.ராஜேஷ்
14-11-2009, 01:55 PM
நல்லதோர் சாட்டையடி.. சீர்திருத்த கவிதை மிக நன்று !!!

இன்பக்கவி
18-11-2009, 06:42 AM
சாட்டையடி கவிதை.. கவிதா....

குற்றம் புரிந்து.. குற்றவாளி பட்டம் ஏற்று.... கைதிகள்...
அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள்....
இருவரும் குற்றவாளிகள்...

இந்த அவல நிலை மாற
எத்தனை யுகங்கள் வேண்டுமோ...
அறிஞர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள்
இந்த கவிதை என் கற்பனையில் உதித்த கவிதை அல்ல
ஒரு நண்பர் சிறையில் இருந்த அனுபவத்தை சொல்லும் போது அதிர்ந்து போனேன்
இப்படியும் சிறைச்சாலை மாறி விட்டதே என்று
பணத்தை நோக்கி பயணிக்கும் சிலர் மனசாட்சியை மறந்து (மறைத்து) விடுகிறார்கள்

இன்பக்கவி
18-11-2009, 06:45 AM
நன்றிகள் மன்மதன், ரமேஷ், ராஜேஷ் அமரன்...
சிறையில் இருந்து வரும் கைதிகள் ஏன் கொழு கொழு என்று வருகிறார்கள் என்ற காரணம் இப்போது தான் விளங்கியது..
விருந்து முடித்து வரும் மாப்பிள்ளை போல வருகிறார்கள்
தண்டனை அனுபவித்த கவலை ரேகை துளி கூட இருப்பது இல்லை எல்லாம் கால கொடுமை:rolleyes:

muthuvel
30-12-2009, 04:45 AM
நன்றிகள் மன்மதன், ரமேஷ், ராஜேஷ் அமரன்...
சிறையில் இருந்து வரும் கைதிகள் ஏன் கொழு கொழு என்று வருகிறார்கள் என்ற காரணம் இப்போது தான் விளங்கியது..
விருந்து முடித்து வரும் மாப்பிள்ளை போல வருகிறார்கள்
தண்டனை அனுபவித்த கவலை ரேகை துளி கூட இருப்பது இல்லை எல்லாம் கால கொடுமை:rolleyes:

கல்கிடிங்க சவுக்கு அடி மாதிரி