PDA

View Full Version : !!வான் மகளே!!

இன்பக்கவி
12-11-2009, 02:42 PM
http://i102.photobucket.com/albums/m86/kayebear/alliekatz/Rain/rain1.gif
மேக காதலனுடன் சண்டையோ!!!
காதல் தோல்வியோ!!!
வரதட்சணை கொடுமையோ!!!
ஓயாமல் அழுகிறாயே..
தாங்க முடியவில்லை..

உன் கண்ணீரில்
நனைந்து குளமாகி போயிற்று
எங்கள் தெருக்கள்..

வான் மகளே
போதும் நிறுத்தி விடு!!!
உன் கண்ணீரில்
எங்களை கண்ணீர் சிந்த
வைத்து விடாதே!!!!!

அமரன்
12-11-2009, 05:27 PM
அளவுக்கு மிஞ்சினால்
மழையும் நஞ்சு..

பிழைப்புக் கெட்டவனின்
இருண்ட முகம்
நினைவில் ஆடுகிறது..

பாராட்டுகள் கவிதா123.

ஜனகன்
12-11-2009, 09:53 PM
காலத்திற்கேற்ற கவிதை வரிகள். நன்றாக உள்ளது உங்கள் கவிதை.

பா.ராஜேஷ்
14-11-2009, 01:52 PM
"வரும் வழியில் முகிலினங்கள் முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ"

எனும் அற்புத வரிகள் போலவே உங்களுடைய வரிகளும் அருமை.

சுகந்தப்ரீதன்
17-11-2009, 08:28 AM
அருமையான கற்பனை... கூடவே அக்கறையும்..!!

வாழ்த்துக்கள்... தொடருங்கள்...!!

குணமதி
17-11-2009, 11:13 AM
மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

வானதிதேவி
17-11-2009, 12:21 PM
ம்ம்ம் காய்ந்து கெடுக்கிறது.இல்லையேல் பெய்து கெடுக்கிறது.ஆனாலும் நனைவதில் உள்ள சுகம் அலாதி தான்.நல்ல கற்பனை.வாழ்த்துக்கள் சகோதரி.

anna
17-11-2009, 01:03 PM
நண்பர் எந்த ஊருல இருக்கிறார் என தெரியவில்லை. சென்னை பொறுத்த வரை இந்த மழை சீசனில் மழை பொழிவு அளவு மிக மிக குறைவு. இந்த நிலை ஏற்பட்டால் கோடையில் தண்ணிக்கு ஜிஞ்சா அடிக்க வேண்டியது தான்.

விசும்பின் துளி விழால் மற்றாங்கே
பசும்புல் தலை காண்பதரிது

மேற்சொன்ன குறள் படி நட்ந்து விடும்.ஆகையால் இந்த கவிதை நம்க்கு ஒத்து வராது. ( ரெயின் ரெயின் கோ அவே என்ற ராய்ம்ஸ் போல்) இருப்பினும் கவிதாவின் கற்பனைக்கு வாழ்த்துக்கள்.

இன்பக்கவி
18-11-2009, 06:17 AM
அளவுக்கு மிஞ்சினால்
மழையும் நஞ்சு..

பிழைப்புக் கெட்டவனின்
இருண்ட முகம்
நினைவில் ஆடுகிறது..

பாராட்டுகள் கவிதா123.
நன்றி அமரன் அவர்களே
ஆமாம் நீங்கள் சொல்வது சரி தான்..
அளவுக்கு மீறாமல் தற்போது வந்து கொண்டிருந்தாலும்
சேதம் அதிகமாக தான் உள்ளது

இன்பக்கவி
18-11-2009, 06:22 AM
நண்பர் எந்த ஊருல இருக்கிறார் என தெரியவில்லை. சென்னை பொறுத்த வரை இந்த மழை சீசனில் மழை பொழிவு அளவு மிக மிக குறைவு. இந்த நிலை ஏற்பட்டால் கோடையில் தண்ணிக்கு ஜிஞ்சா அடிக்க வேண்டியது தான்.

விசும்பின் துளி விழால் மற்றாங்கே
பசும்புல் தலை காண்பதரிது

மேற்சொன்ன குறள் படி நட்ந்து விடும்.ஆகையால் இந்த கவிதை நம்க்கு ஒத்து வராது. ( ரெயின் ரெயின் கோ அவே என்ற ராய்ம்ஸ் போல்) இருப்பினும் கவிதாவின் கற்பனைக்கு வாழ்த்துக்கள்.
நானும் சென்னை தான்
நீங்கள் கொஞ்சம் மேடான பகுதியில் இருப்பவர் போல இருக்கிறது
மழை கொஞ்சம் தான் என்றாலும் இதற்கே நாங்கள் இருக்கும் பகுதி வெள்ளம் ஆகி விட்டது..
இனி வர போகும் பெரிய மழைக்காக இப்பவே கொஞ்சம் கெஞ்சி விட்டேன் எங்களை அழ வைக்காதே என்று:mini023::mini023::mini023:..

இன்பக்கவி
18-11-2009, 06:24 AM
ம்ம்ம் காய்ந்து கெடுக்கிறது.இல்லையேல் பெய்து கெடுக்கிறது.ஆனாலும் நனைவதில் உள்ள சுகம் அலாதி தான்.நல்ல கற்பனை.வாழ்த்துக்கள் சகோதரி.

நன்றி வானதி தேவி
இது சரி:icon_b:
வரவேண்டிய நேரத்தில் வராமலும்
வர வேண்டா நேரத்திலும் வந்து பொழியும்
மழை இயற்கை யை யாரால மாற்ற முடியும்

இன்பக்கவி
18-11-2009, 06:28 AM
நன்றிகள் ராஜேஷ்
நன்றிகள் ஜனகன்
நன்றிகள் சுகந்த பிரிதன்
நன்றிகள் குணமதி:icon_b::icon_b::icon_b: