PDA

View Full Version : செல்போன் பேசினால் சிறை



அறிஞர்
12-11-2009, 02:25 PM
கார், பைக் ஓட்டும்போது செல்போன் பேசினால் சிறை

புதுடெல்லி : வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுபவர்களுக்கு ரூ.2,000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை அல்லது இவை இரண்டையும் சேர்த்து விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் ஓட்டுனர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.

Ôசெல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டக் கூடாதுÕ என பல மாநிலங்களின் போக்குவரத்து விதிமுறைகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இந்த விதியை மீறுபவர்களிடம் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், பெயரளவில்தான் இந்த விதிமுறை அமல்படுத்தப்படுகிறது.

காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையே செல்போனை வைத்து கழுத்தை சாய்த்தபடி, பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களை போலீசார் நிறுத்தி கண்டிப்பதால், அந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து உள்ளது. ஆனால், ஹெட்போன் மாட்டிக்கொண்டு, செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது சர்வ சாதாரணமாகி விட்டது. இதுதவிர, ஹெல்மெட்டுக்குள் லாவகமாக செல்போனை சொருகிக் கொண்டு பேசியபடியே செல்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். சாலை போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்கள் இவர்களிடம் எடுபடவில்லை.

நன்கு படித்து, உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் புழங்கும் பெருநகர் பகுதிகளில்தான் இத்தகைய விதிமீறல்கள் அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த விதி மீறலால் அவர்கள் விபத்தில் சிக்குவதோடு, வாகனங்களில் செல்லும் மற்றவர்களும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விதிமுறைகளை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய வெங்கையா நாயுடு தலைமையிலான நாடாளுமன்ற கமிட்டி சில பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அதையேற்று அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டி, விதி மீறலில் ஈடுபடுவோருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை அல்லது இவை இரண்டையும் சேர்த்து விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். இதற்காக மோட்டார் வாகனச் சட்டத்தில் 183&ஏ என்ற துணைப் பிரிவு சேர்க்கப்பட உள்ளது. செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். வாகனம் ஓட்டும்போது காதில் ஹெட்போன் மாட்டியபடி பேசி செல்வது, செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்புவது அல்லது எம்.எஸ்.எஸ்.சை படிப்பது ஆகியவையும் குற்றமாக சேர்க்கப்பட உள்ளது.

பா.ராஜேஷ்
12-11-2009, 02:56 PM
அப்ப மொபைல் ரேடியோவில் ஹெட்போன் வைத்து பாட்டு கேட்பவர்களுக்கும் இந்த சட்டம் தடை விதிப்பதாக தோன்றுகிறது... அப்படித்தானே!???

வியாசன்
12-11-2009, 03:24 PM
இது வரவேற்கப்படவேண்டியதுதான் வீதிவிபத்துக்களுக்கு முக்கிய காரணம் செல்போன்கள்தான்

மன்மதன்
12-11-2009, 03:26 PM
ம்ம்ம்.. ஹெல்மெட் சீசன்ல நல்ல வசூல்.. இப்ப பார்க்கலாம்..