PDA

View Full Version : அய்யா சொன்ன வாக்கு......



Ravee
11-11-2009, 06:37 PM
அய்யா சொன்ன வாக்கு ....



http://static.flickr.com/66/154141542_ce3e7bd20f.jpg




பள்ளி ஆண்டுவிழா புத்தகத்தில்

ஒண்ணு எழுதனும்

தமிழ் அய்யா உதவி கேட்டு

அவர் அருகில் இருந்தேன்

உன் ஆற்றலுக்கும் அறிவுக்கும்

என்ன வருமோ

அதை அழகான தமிழாலே

எழுது என்றார்

கவிதை பாடி பழக்கம் இல்லை

கட்டுரைக்கு நேரம் இல்லை

கதை சொல்ல தெரியாது

கதம்பமா சேதி போட

வழி சொல்லுங்க அய்யா

அய்யா சொன்னார்

மூவாறு வயசாச்சே

முழிக்கிறியே தம்பி

முக்கினா வாறதுக்கு

தமிழ் வாத்து முட்டை இல்லை

நூலகம் போய் பாரு

நல்லாவே புரியும் என்றார்

அரைமணி நேரம் போக்கி

அய்யாவிடம் போனேன்

அங்க என்ன பார்த்த தம்பி

அனைத்தையுமே சொல்லு

ஒளிக்காமல் மறைக்காமல்

உள்ளதையே சொன்னேன்

அய்யா நீளமான மேடை சுத்தி

ஏராளமா ஆளு

மேசை மேலே பத்திரிக்கை சில நூறு

புத்தகம் எல்லாம் அடுக்கி இருக்க

பத்திரிகை இறைந்து கிடக்க

ஒண்ணுமே புரியலியே


இதில் என்ன இருக்கு சேதி

சிரித்துக்கொண்டே அய்யா சொன்னார்

தம்பி இறைந்து கிடக்கும்

பொழுதுபோக்கு பத்திரிகை எல்லாம்

எடைக்கு போகும்

இரண்டு வாரம் கழித்து என்றார்

இறவாத வரம் பெற்ற

புத்தகம் எல்லாம்

என்றைக்கும் இருக்குமே

நூலகத்தின் பலகை மேலே

பயன் இல்லா சேதி எல்லாம்

குப்பையில் போகும்

நீ படைப்பது ஒன்றே

காவியம் ஆகும்

கருத்தோடு படி....

கவிதைகள் வடி....

கட்டுரை எழுது....

காலத்திற்கும் இருக்கும்

அய்யா சொன்ன வாக்கு

அருள் வாக்கு தாங்க !!!

நீங்க சொல்லும் வாழ்த்து

எல்லாம் அவருக்கு தாங்க !!!

அறிஞர்
11-11-2009, 07:11 PM
நீ படைப்பது ஒன்றே

காவியம் ஆகும்

கருத்தோடு படி....

கவிதைகள் வடி....

கட்டுரை எழுது....

காலத்திற்கும் இருக்கும்!!
அய்யாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
காலத்திற்கும் நிற்கும் எழுத்துக்களை கொடுங்கள்...

கீதம்
11-11-2009, 08:36 PM
அய்யா சொன்ன வாக்கை
அன்றோடு மறந்துவிடாமல்
பையப் பையவேணும்
பைந்தமிழ் பழகி
கருத்தைக் கவரும்
கதை, கவிதைகள் படைக்கும்
தங்களுக்கு மனமுவந்த பாராட்டும்
ஒளிதந்த அய்யாவுக்கு நன்றியும்
உரைக்கிறேன். அன்புடன் கீதம்.

ஜனகன்
11-11-2009, 09:26 PM
ஐயா சொன்ன வாக்கு, கவிதை சுப்பர்; ஊற்றில் குறையாது ஊறும் தண்ணிர்போல் தங்கள் உள்ளத்து கவிதைகளும் பெரிகி உருகும் உள்ளங்களுக்கு ஒத்தடம் கொடுக்கப்படும்.

சுகந்தப்ரீதன்
12-11-2009, 09:03 AM
அய்யாவுக்கும் உங்களுக்கும் இடையேயான உரையாடல்களை அப்படியே கண்முன் நிறுத்தி கவிதையாக வடித்தவிதத்தில் அவரின் வேண்டுகோளை நிறைவேற்ற முனையும் உங்களின் முனைப்பு வெளிபடுகிறது..!!

வாசிப்பதற்க்கு இனிமையான வகையில் வாக்கியங்களை அமைத்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் ரவி..!! தொடருங்கள்..!!

கா.ரமேஷ்
12-11-2009, 12:15 PM
நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் ரவீ.....

பா.ராஜேஷ்
12-11-2009, 02:34 PM
அய்யா சொன்னவற்றை அப்படியே பின்பற்றுகின்ற உமக்கு பாராட்டுக்கள் !!! கருத்துள்ள செய்தி தந்த அய்யாவிற்கும் நன்றிகள் !!

Ravee
13-11-2009, 02:37 PM
ஆஹா , என் அய்யா இப்ப பார்த்தால் எவ்வவளவு சந்தோசப்படுவார், நன்றி நண்பர்களே ம்ம் அவர் சொன்ன இலக்கணங்கள் வேம்பாக கசந்தது அப்போது ..... அய்யா வருந்துகிறேன் உங்களிடம் இருந்த புலமையை முழுதாக பெறத் தவறியதை எண்ணி.

சரண்யா
13-11-2009, 02:45 PM
அறிஞர் அவர்களை வழிமொழிகிறேன்....வாழ்த்துகள் ரவி அவர்களே...

Ravee
18-11-2009, 09:08 PM
நன்றி சரண்யா, அய்யா என்னுள் இருந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்கட்டும்