PDA

View Full Version : என் உறவுகள் எப்போதும் அந்தரத்தில்



Ravee
11-11-2009, 03:45 PM
என் உறவுகள் எப்போதும் அந்தரத்தில்


http://www.billpruitt.com/images/cliffhanger.JPG


நான் வாங்கி வந்த வரம்

யாருக்கும் வேண்டாம்

எப்போதும் சிரிக்கவே ஆசைபட்டேன்

எப்போதாவது சிரிக்கிறேன்

உறவுகளுக்காக ஆசைப்பட்டேன்

அவைகள் கல்யாண வீட்டில் மட்டுமே

கை நனைக்கின்றன

என்ன குறை என்னிடத்தில்

குழப்பமாக இருக்கிறது

நான் எப்போதும் உங்களிடம்

எதிர்பார்ப்பது அன்பைத்தானே

கொடுத்தால் கூடும்

செல்வம்தானே அது

பின் ஏன் கொடுக்க மறுக்கிறிர்கள்

கொடுத்துதான் பாருங்களேன்

அதை என் இதயத்தில் வைப்பேன்

ஏன் என்றால் ......

என் இரத்தத்தோடு உங்கள் அன்பு

என் உடலை சுற்றி வரும்

அறிவு பணம் சுகம் இவை

அனைத்தும் இருந்தும்

அநாதை போல பல வேளை

கண்மூடி அமர்ந்தால்

காற்றில் ஒரு சருகு போல

கோபுரத்தில் ஒரு நாள்

குடிசையில் ஒரு நாள்

எல்லாம் இருந்தும்

இல்லாத ஒரு நிலை

தொங்கிக்கொண்டு இருக்கிறேன்

அந்தரத்தில் நிர்க்கதியாய்

கை கொடுப்பவர் யாரோ............

வியாசன்
11-11-2009, 04:12 PM
அருமையான கவிதை உங்கள் மனக்குமுறலா இது? சிலவேளை பணத்தை கொடுத்துபாருங்கள் அதிகப்படியான (போலி) அன்பு கிடைக்கும்

Ravee
11-11-2009, 04:19 PM
பணத்துக்கு வரும் சொந்தங்கள் என்ன தரும் என்று.....
வியாசன் உங்களுக்கு தெரியாதா?

ஜனகன்
11-11-2009, 08:43 PM
கிட்டத்தட்ட வெளியுலகில் வாழும் இளைஞர்களின் நிலையம் இப்படித்தான். பாசத்துக்கு ஏங்குவான் இவன், பணத்திற்காக அங்கே.............