PDA

View Full Version : ஊட்டியில் நிலச்சரிவு



மன்மதன்
11-11-2009, 11:34 AM
ஊட்டியில் வரலாறு காணாத அளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டு 29 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்..

கடந்த 3 நாட்களாக பெய்யும் கனமழையால் ஊட்டியில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் 82 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மழையில் பலியானவர்கள் அனைவருக்கும் அஞ்சலிகள்.

ஜனகன்
11-11-2009, 03:14 PM
மன்மதன் நானும் இவ்விடம் டிவி நியூஸ் பார்த்தேன். மிகவும் கவலைக்குரிய விடயம்.
உயிர்சேதம், பொருள்சேதம் அடைந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பால்ராஜ்
11-11-2009, 09:52 PM
இந்த முறை மழை பயங்கரமாகத்தான் பெய்திருக்கிறது என்று தோன்றுகிறது. எல்லா இடங்களிலுமே பெரும் சேதம்..

இயற்கை சில வேளைகளில் அளவுக்கு மீறி அள்ளிக் கொடுக்கும்போது விபரீதமாகத்தான் ஆகி விடுகிறது.

xavier_raja
12-11-2009, 09:27 AM
இந்த நிலைமைக்கு காரணம் மக்களும் அரசாங்கமும்தான். இருக்கும் மரங்களை வெட்டி நிறைய ஹோட்டல் மற்றும் ரேசொர்டுகளை உருவாக அனுமதி கொடுத்துவிட்டு இப்போது மண் அரிப்பு ஏற்பட்டு இந்த உயிர்சேதம். என்றைக்கு இவர்கள் இயற்கையுடன் விளையாடுவதை நிறுத்துகிறார்களோ அன்றைக்குத்தான் விடிவுகாலம். உயிர் நீத்த ஆன்மாக்கள் இளைப்பாற என்னுடைய பிரார்த்தனைகள்.