PDA

View Full Version : இந்தியா-இலங்கை தொடர்



அறிஞர்
10-11-2009, 02:21 PM
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

இலங்கை கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.

டெல்லியில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய போட்டி அட்டவணை நிர்ணய கமிட்டி கூட்டத்தின் முடிவில் போட்டி நடைபெறும் இடங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மும்பை, கான்பூர், ஆமதாபாத் ஆகியவற்றில் டெஸ்ட் போட்டிகளும்,

கட்டாக், ராஜ்கோட், விசாகப்பட்டிணம், கொல்கத்தா, டெல்லி ஆகிய இடங்களில் ஒரு நாள் போட்டிகளும்,

மொகாலி, நாக்பூர் ஆகிய இடங்களில் 20 ஓவர் போட்டிகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்' என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் என்.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்க உள்ளது. கடைசியாக 2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா-இலங்கை அணிகள் மோதிய ஒரு நாள் போட்டி இங்கு நடந்தது.

அமரன்
10-11-2009, 09:15 PM
போச்சுடா.. ஆரென் அண்ணாவை விடுறதில்லை என்றுதான் இருக்காங்க.

aren
11-11-2009, 12:54 AM
போச்சுடா.. ஆரென் அண்ணாவை விடுறதில்லை என்றுதான் இருக்காங்க.

நீங்களும் என்னை விடுவதாக இல்லை போலிருக்கு.

பத்ரிநாத்திற்கும் விஜய்க்கும் சந்தர்பம் கொடுத்திருப்பதாக காண்பித்திருக்கிறார்கள். ஆனால் களத்தில் இறக்கப்போவதில்லை. அப்படியே அடுத்த தொடருக்கு காணாமல் போய்விடுவார்கள், அவ்வளவே.

இதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம், நானும் 1974லிருந்து பார்த்துக்கொண்டுதான் வருகிறேன்.

ஏன் 1974 என்று கேட்கிறீர்களா? அதுதான் நான் பார்த்த முதல் டெஸ்ட் தொடர். மேற்கு இந்தீஸிற்கும் இந்தியாவிற்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெஸ்ட்.

அதற்கு முன்பாக டெல்லியில் நடந்த போட்டியில் பட்டோடிக்கு அடிபட்டுவிட்டதால் வெங்கெட்ராகவன் காப்டனாக இருந்தார், ஆனால் அடுத்த டெஸ்டில் அவர்தான் 12வது ஆட்டக்காரர். தண்ணீர் இடைவேளையில் டிரிங்க்ஸ் கொண்டுவந்தார்.

இதுதான் தமிழகவீரர்களின் நிலை.

அமரன்
11-11-2009, 08:04 AM
பொதுவாகவே விளையாட்டுச் செய்திகளிலும் இன்னும் சில விடயங்களில்லும் உடனடியாக ஞாபகத்துக்கு வருபவர் நீங்கள்தான். அதிலும் இந்திய விளையாடும் துடுப்பாட்டத் தொடர்களில் உங்கள் நாளை முதல் சத்தியமாகக் குடிக்க மாட்டேன் தங்கம் நிலை நினைவை விட்டு நீங்குதில்லை. நிற்க, உங்கள் ஆரூடங்களில் இரசிகன் நான். வழக்கம் போலவே இந்த ஆரூடத்தையும் கவனிக்க முடிவு செய்து விட்டேன்.

மன்மதன்
11-11-2009, 09:38 AM
சென்னை மைதானம் பராமரிப்பு வேலையில் இருக்கிறதா? இல்லை ஓரவஞ்சனையா..??!!

பால்ராஜ்
11-11-2009, 09:53 PM
கிரிக்கெட்டே படு போராகி விட்டது..

arun
12-11-2009, 03:25 AM
தேர்வு குழு தலைவர் சரியான தேர்வை செய்து இருக்கிறார் !!!!!!!

குறிப்பு : அவர் ஒரு தமிழர் :)

arun
12-11-2009, 03:26 AM
சென்னை மைதானம் பராமரிப்பு வேலையில் இருக்கிறதா? இல்லை ஓரவஞ்சனையா..??!!

சென்னையில கிரிக்கெட்னா தான் மழை வருதே !! :D :D

aren
12-11-2009, 04:56 AM
சென்னையில கிரிக்கெட்னா தான் மழை வருதே !! :D :D

மழை வருகிறபொழுதுதானே நம் ஊரில் மாட்ச் வைப்பார்கள். அப்படின்னா இப்பொழுது இங்கே வைத்திருக்கவேண்டுமே. ஏதோ தெரியாமல் செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். மன்னித்துவிடலாம்.

aren
12-11-2009, 04:57 AM
ஸ்ரீசாந்தை எப்படி உள்ளே கொண்டுவந்தார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. இவர் ஒன்றும் பெரிதாக ஆடிவிடவில்லையே சமீபகாலங்களில்.

இதுதான் இவருக்கு கடைசி சந்தர்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஓவியன்
12-11-2009, 05:47 AM
ஆமாம் ஒரு நாள் போட்டிகளில் நன்றாக பந்து வீசி வரும் நெஃரா ஏன் உள்ளே வரவில்லை...?? :confused:

aren
12-11-2009, 08:38 AM
ஆமாம் ஒரு நாள் போட்டிகளில் நன்றாக பந்து வீசி வரும் நெஃரா ஏன் உள்ளே வரவில்லை...?? :confused:

இவர் ஏற்கெனவே பலமுறை அடிபட்டு வெளியேறியவர். இவரால் ஐந்துநாட்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடமுடியுமா என்பது சந்தேகமே. அதனால் தேர்வாளர்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாதது ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

என்ன இருந்தாலும் பிட்ச் வெறும் ஸ்பின் போலர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் (முரளி, ஹிராத் மற்றும் மெண்டிஸ் இலங்கையுடன் இருந்தாலும்).

மன்மதன்
12-11-2009, 01:23 PM
மழை வருகிறபொழுதுதானே நம் ஊரில் மாட்ச் வைப்பார்கள். அப்படின்னா இப்பொழுது இங்கே வைத்திருக்கவேண்டுமே. ஏதோ தெரியாமல் செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். மன்னித்துவிடலாம்.


ஆஸ்திரேலியா மேட்ச் இல்லை.
இப்போ இதுவும் இல்லை..
தலை : ஹை ஜாலி........:D

aren
13-11-2009, 01:04 AM
ஆஸ்திரேலியா மேட்ச் இல்லை.
இப்போ இதுவும் இல்லை..
தலை : ஹை ஜாலி........:D

ஜிம்பாப்வே அல்லது நியூஜிலாந்து வரும்பொழுது உங்களுக்கு கொடுப்பார்கள். கவலை வேண்டாம்.

மன்மதன்
13-11-2009, 07:46 AM
ஜிம்பாப்வே அல்லது நியூஜிலாந்து வரும்பொழுது உங்களுக்கு கொடுப்பார்கள். கவலை வேண்டாம்.

ஐ........அல்வா..:D

பால்ராஜ்
17-11-2009, 01:57 AM
திராவிட் மீண்டும் மலர்ந்திருப்பதாகச் செய்தியில் கேட்டு அறிந்ததில் மகிழ்ச்சி..

டீமுக்குத் தேவையான நேரத்தில் ஸ்கோர் செய்வது 'இடுக்கை இழந்தவன் கைபோல' செயலாகும்.

aren
17-11-2009, 02:31 AM
முதல் நாலு விக்கெட்டை இழந்து நிர்கதியாக நின்றோமே. அதைப் பற்றியும் பேசலாமே.

தாமரை
17-11-2009, 03:38 AM
வேல கெட்ரா என்ற பெயர் கொண்டவர் பெயருக்கேற்ப நடந்து கொண்டிருக்கிறார்,, :D :D :D

அருள்
17-11-2009, 04:12 AM
முதல் நாலு விக்கெட்டை இழந்து நிர்கதியாக நின்றோமே. அதைப் பற்றியும் பேசலாமே.

அதைதான் நம்ம கேப்டன் தூக்கி நிறுத்திவிட்டாரே

426 - எல்லாரும் அவுட்

அறிஞர்
17-11-2009, 02:36 PM
இலங்கை பதிலுக்கு சிறப்பாக விளையாடியுள்ளது.. தில்சான் ஆட்டம் சிறப்பு..

275/3 (இரண்டாம் நாள் முடிவு)

aren
17-11-2009, 11:20 PM
இரண்டாவது நாள் ஆட்டத்திலிருந்து பிட்சில் ஒன்றும் இல்லை என்றே தெரிகிறது. அப்படியானால் நம் மக்கள் ஒரு சிலரைத் தவிற மற்ற அனைவரும் போனோம் வந்தோம் என்றிருந்தார்களே, அது எப்படி?

அறிஞர்
18-11-2009, 06:23 PM
இலங்கை நல்ல நிலையில் உள்ளது... 591/5.

700 ரன் எடுத்து... டிக்ளேர் செய்யலாம்.

இந்தியா கட்டை போடும்... கிட்டத்தட்ட டிராவில் முடிய வாய்ப்பு அதிகம்

அமரன்
18-11-2009, 06:28 PM
இலங்கை நல்ல நிலையில் உள்ளது... 591/5.

700 ரன் எடுத்து... டிக்ளேர் செய்யலாம்.

இந்தியா கட்டை போடும்... கிட்டத்தட்ட டிராவில் முடிய வாய்ப்பு அதிகம்

டிராவி(க்க)ட்டை நம்பிச் சொல்றீங்களா..

aren
19-11-2009, 07:53 AM
இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று இலங்கை வீரர்கள் இந்திய வீரர்களைப் பார்த்து கேட்கிறார்கள்.

நமக்கு இது தேவையா?

அடுத்த போட்டிக்கு புதிய பந்து வீச்சாளர்களை உள்ளே கொண்டுவாருங்கள்.

அமித் மிஸ்ராவிற்கு பதில் பிரக்யான் ஓஜாவைக் கொண்டுவரலாம்.

இஷாந்த் சர்மாவிற்கு பதில் ஆர்.பி.சிங் அல்லது புதிதாக வேறு யாரையாவது தியாகி போன்ற புதியவர்களை கொண்டுவரலாம்.

வியாசன்
19-11-2009, 09:38 AM
இலங்கை இந்தியஅணியுடன் விளையாடும்போது ஆக்கிரோசமாக விளையாடும். ஆனால் இந்தியா சொதப்புவது வழக்கம்

பா.ராஜேஷ்
19-11-2009, 10:59 AM
இலங்கை அணி நல்ல நிலையில் உள்ளது. இந்திய அணி இரண்டு விக்கட்டுகளை இழந்து தவிக்கிறது. டிரா ஆக வாய்ப்புகள் உள்ளது.

அன்புரசிகன்
19-11-2009, 11:10 AM
ஆடுகளம் ஆட்டக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. இந்தியவீரர்களும் சிறப்பாகவே ஆடுகிறார்கள். நாளை காலை விக்கட்டுக்கள் பறிபோக வாய்ப்புள்ளது. அப்படியாயின் இலங்கைக்கு வெற்றிக்கனி கிடைக்கலாம். முதலாவது இனிங்ஸில் இந்தியாவின் ஆரம்ப ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடவில்லை...

aren
19-11-2009, 12:26 PM
அருமையாக ஆடிய இலங்கை அணியை யாரும் பாராட்டவில்லையே.

ஜெயவர்தனே இதுவரை ஆறுமுறை இரட்டை சதம் அடித்திருக்கிறார். அவருடைய பொருமையை பாராட்டவேண்டும். லஷ்மனுக்கு அந்த பொருமை இருக்கிறது ஆனால் அவர் அதை உபயோகிப்பது இல்லை.

அறிஞர்
19-11-2009, 01:42 PM
இலங்கையின் ஆட்டம் சிறப்பு....

நாளை முதல் ஒரு மணி நேரம் முக்கியம்..

விக்கெட்டுகள் வீழ்ந்தால் இந்திய அணி நிலை பரிதாபமாகிவிடும்...

கட்டை மன்னர் டிராவிட் வேறு அவுட்டாகிவிட்டார்...

aren
19-11-2009, 02:27 PM
லஷ்மனுக்கு கடைசி சான்ஸ். இந்த முறை அவர் நின்று ஆடி டிரா செய்யவேண்டும், இல்லையேல் அவர் அடுத்த ஆட்டத்திற்கு இருப்பது சந்தேகமே.

அன்புரசிகன்
20-11-2009, 12:23 AM
அருமையாக ஆடிய இலங்கை அணியை யாரும் பாராட்டவில்லையே.
.
நம்மளை நாமளே பாராட்டக்கூடாது... :lachen001:

அறிஞர்
20-11-2009, 03:27 PM
எப்படியோ ஆட்டத்தை டிரா செய்துவிட்டனர்..

aren
21-11-2009, 03:19 AM
இந்தியாவின் முதல் ஏழு ஆட்டக்காரர்களும் இந்த டெஸ்டில் ஒரு இன்னிங்ஸிலாவது 50 ரன்கள் எடுத்துள்ளனர்.

1. ஷேவாக் இரண்டாவது இன்னிங்ஸில்
2. காம்பீர் இரண்டாவது இன்னிங்ஸில்
3. திராவி முதல் இன்னிங்ஸில்
4. சச்சின் இரண்டாவது இன்னிங்ஸில்
5. லஷ்மன் இரண்டாவது இன்னிங்ஸில்
6. யுவராஜ் முதல் இன்னிங்ஸில்
7. தோனி முதல் இன்னிங்ஸில்

இதில் காம்பீர், திராவிட், தோனி, டெண்டுல்கர் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

ஒரே இன்னிங்ஸில் முதல் ஐந்து ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் பல முறை எடுத்துள்ளனர். ஆனால் முதல் ஏழு ஆட்டக்காரர்களும் ஒரு இன்னிங்ஸிலாவது 50 ரன்கள் எடுத்திருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

அறிஞர்
24-11-2009, 02:51 PM
இரண்டாவது டெஸ்டும் டிராவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது

முதல் நாள் இந்தியா 417/2

வெகுநாட்களுக்கு பின் (2003க்கு பின்) சேவாக் 131 ரன்கள் அவுட்
கம்பீர் 167 அவுட்

டிராவிட் அடுத்த சதத்தை பூர்த்தி செய்வாரா.. 85 ரன் அவுட் இல்லை.
சச்சின் 46 சதத்தை எடுப்பாரா 20 ரன் அவுட் இல்லை

தாமரை
25-11-2009, 03:15 AM
Uda Walawwe Mahim Bandaralage Chanaka Asanga Welegedara,
Herath Mudiyanselage Rangana Keerthi Bandara Herath,
Kumar Chokshanada Sangakkara,
Tillakaratne Mudiyanselage Dilshan,
Congenige Randhi Dilhara Fernando,
Denagamage Proboth Mahela de Silva Jayawardene,
Hewasandatchige Asiri Prasanna Wishvanath Jayawardene,
Kulasekara Mudiyanselage Dinesh Nuwan Kulasekara,
Balapuwaduge Ajantha Winslo Mendis,
Kariyawasam Tirana Gamage Dammika Prasad,
Magina Thilan Thushara Mirando.
Muthiah Muralitharan

பெயர் பட்டியலை படிச்சு முடிக்கரதுக்குள்ள உணவு இடைவேளை வந்திடும் போல... முத்தையா முரளிதரன் தான் ரொம்பச் சின்னப் பெயர். :D :D :D

aren
25-11-2009, 07:49 AM
நம்ம ஊரில் பழைய காலங்களில் ஊர் பெயர், அப்பா பெயர், தாத்தா பெயர், ஜாதிப்பெயர் இப்படி பல பெயர்களை சேர்த்து வைப்பதுபோல் அவர்களும் பெயர் வைத்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அறிஞர்
25-11-2009, 02:41 PM
5 நாள் ஆட்டத்தில் நல்ல அலசல் தாமரை...
----------
சுழல் பந்துவீச்சு எடுக்க ஆரம்பித்துவிட்டது போல ஹெராத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

பொறுமையாக ஆடி இலங்கை 400 ரன்களுக்கு மேல் எடுத்தால் டிரா..

aren
27-11-2009, 01:26 AM
சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாகவே பந்து வீசுகிறார்கள்.

ஸ்ரீசந்த் வேறு நன்றாகவே பந்து வீசினார்.

சாமரவீரா மட்டை போட ஆரம்பித்தால் போட்டுக்கொண்டேயிருப்பார். அவருக்கு பக்க பலமாக மாத்யூஸும், பிரசன்னாவும் இருக்கிறார்கள்.

இன்று காலை கொஞ்சம் கஷ்டப்பட்டு ஆடவேண்டும். ஆனால் 413 ரன்கள் என்பது கொஞ்சம் கடினம்தான்.

ஓவியன்
27-11-2009, 03:44 AM
சமரவீர நின்று நிலைத்து ஆடக் கூடியவர்தான், ஆனால் அவருக்கு பக்க பலமாக நின்று கொடுக்க மத்யூவினாலும் முடியவில்லை...

பிரசன்னா நின்று நிலைத்து ஆடுவாரா..??

இந்திய அணிக்கு மெகா வெற்றி பிரகாசமாக இருக்கிறது....

தாமரை
27-11-2009, 03:53 AM
ஓன் சன்னே ஆட முடியலை.. பிற சன்னா ஆடப் போறார்?

aren
27-11-2009, 04:00 AM
ஓன் சன்னே ஆட முடியலை.. பிற சன்னா ஆடப் போறார்?

ஆடிக்கொண்டுதானே இருக்கிறார்

தாமரை
27-11-2009, 04:27 AM
சொன்னாக் கேட்கணும் பாருங்க... இப்ப காலி..

ஓவியன்
27-11-2009, 04:57 AM
இப்ப காலி..

இல்லைங்கண்ணா, அவரோட இடம் இலங்கையில் காலி இல்லை, கொழும்பு..!! :D

தாமரை
27-11-2009, 05:08 AM
இல்லைங்கண்ணா, அவரோட இடம் இலங்கையில் காலி இல்லை, கொழும்பு..!! :D

நான் அவர் காலி ன்னா சொன்னேன்.. ஆரென்னை காலியைப் பார்க்கச் சொன்னேன்.. அதாவது மலிங்கா இருந்தா நல்லா இருக்குமில்ல அப்படின்னு சொன்னேன்.. ஹா ஹா

aren
27-11-2009, 07:32 AM
இந்தியா ஜெயித்துவிட்டார்களே.

இது இந்தியாவின் 100வது வெற்றியாம். எத்தனை தோல்வி என்று தெரியவில்லை.

இந்தியாவிற்கு என் வாழ்த்துக்கள்.

aren
27-11-2009, 07:35 AM
அடுத்த டெஸ்டில் இலங்கை மாத்யூஸை வெளியே அனுப்பிவிடும் என்று நினைக்கிறேன்.

அவருக்கு பதில் தில்ஹாரா ஃபெர்னான்டோவையோ அல்லது குலசேகராவையாவது உள்ளே கொண்டுவரலாம். அது மாதிரி பிரஸன்னா ஜெயவர்தனேயை தொடக்க ஆட்டக்காரராக தில்ஷானுடன் உள்ளே கொண்டுவரலாம். அப்படியென்றால் நடு ஆட்டக்காரராக ஒரு நல்ல ஆட்டக்காரரை உள்ளே கொண்டுவரலாம். கந்தாம்பியை கொண்டுவருவார்கள் என்றே நினைக்கிறேன்.

தாமரை
27-11-2009, 07:36 AM
Results summary
Team Span Mat Won Lost Tied Draw W/L %W %L %D
Australia 1877-2009 714* 332 186 2 193 1.78 46.49 26.05 27.03
Bangladesh 2000-2009 61 3 52 0 6 0.05 4.91 85.24 9.83
England 1877-2009 891 310 258 0 323 1.20 34.79 28.95 36.25
ICC World XI 2005-2005 1 0 1 0 0 0.00 0.00 100.00 0.00
India 1932-2009 432 100 136 1 195 0.73 23.14 31.48 45.13
New Zealand 1930-2009 354* 66 142 0 145 0.46 18.64 40.11 40.96
Pakistan 1952-2009 341* 103 91 0 146 1.13 30.20 26.68 42.81
South Africa 1889-2009 344 120 121 0 103 0.99 34.88 35.17 29.94
Sri Lanka 1982-2009 191 60 68 0 63 0.88 31.41 35.60 32.98
West Indies 1928-2009 460* 152 150 1 156 1.01 33.04 32.60 33.91
Zimbabwe 1992-2005 83 8 49 0 26 0.16 9.63 59.03 31.32

aren
27-11-2009, 07:41 AM
பாகிஸ்தான் இந்தியவைவிட குறைந்த டெஸ்ட் ஆடி இந்தியாவைவிட அதிகமாக வெற்றி பெற்றிருக்கிறது.

தாமரை
27-11-2009, 07:56 AM
இருக்காதா பின்ன...

அவங்க இந்தியாவை ஜெயிச்சதை கழிச்சிட்டுப் பாருங்க... கணக்கு சரியாயிடும் :D :D :D

aren
30-11-2009, 05:37 AM
இந்தியாவோட ஜெயித்ததும் நல்லா விளையாடித்தான்டே ஜெயித்தார்கள், எதற்கு அதை கழிக்கவேண்டும்.

அறிஞர்
02-12-2009, 02:30 PM
இன்று இலங்கை சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளது..

முதல் நாள் 366/8 (தில்சான் 109 அவுட், மாத்யூஸ் 86 அவுட் இல்லை)

aren
03-12-2009, 01:50 AM
தில்ஷானின் ஆட்டம் பிரமாதம். பாவம் அநியாயமாக அவுட் கொடுத்துவிட்டார்கள்.

ஹர்பஜனின் பந்துவீசும் நன்றாக இருந்தது.

இன்று ஆட்டம் எப்படி போகிறது என்பதைப் பொருத்தே யார் ஜெயிப்பார்கள் என்று நிர்ணயிக்கமுடியும். இலங்கைக்கு சாதகமாக பல விஷயங்கள் உள்ளன. குறிப்பாக முரளி.

பா.ராஜேஷ்
03-12-2009, 01:23 PM
அட! யாருமே இன்னிக்கு அப்டேட் செய்யலையா!?? இன்னிக்கு இந்தியா ரொம்ப நல்லாவே விளையாடி இருக்காங்க.... சேவாக் ரொம்ப கலக்கி இருக்காரு ... இன்று இந்தியா 443/1 (79 ஓவர்). சேவாக் 239 பந்துல 284 எடுத்து இன்னும் களத்துல இருக்காரு... ஒரே நாள்ள இவ்ளோ அடிச்சிருக்காரு... நாளைக்கு தொடர்ந்து ஆடி லாராவோட சாதனைய முரியடிபாரான்னு தெரியல ... எல்லோரும் வேண்டிகோங்க ;) இவரோட, டிராவிட் களத்துல இர்க்காரு 121 பந்துல 62 ஓட்டங்கள் எடுத்து இருக்காரு. இவருக்கு முன்னாடி விஜய் 87 எடுத்து ஹேரத் பந்துல எல்.பி.டபிள்யு ஆயிட்டாரு !!!

பா.ராஜேஷ்
03-12-2009, 02:29 PM
நாளை சேவாக் 300 தாண்டினால், டெஸ்ட் தொடர்களில் மூன்று முறை 300 தாண்டிய ஒரே வீரர் ஆவாராமே! சரியா!???

அறிஞர்
03-12-2009, 02:44 PM
நாளை முதல் ஒரு மணி நேரம் சேவாக் தாக்குபிடித்தால்... 400 ரன்களை கூட கடக்கலாம்...

சேவாக்கின் ஆட்டம் வெகு சிறப்பு... இந்தியா நல்ல நிலையில்... 750 ரன்கள் எடுத்தால் இலங்கைக்கு கடினமாகிவிடும்.

பா.ராஜேஷ்
03-12-2009, 03:10 PM
இந்த டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் டெஸ்ட் தர வரிசையில் முதன் முதலாய் முதலிடம் பிடிக்கும் ... இந்திய அணியினருக்கு இறை ஆசி அவசியம்..

அன்புரசிகன்
03-12-2009, 10:25 PM
நேற்றய ஆட்டம் டெஸ்ட் ஆட்டம் போல் இல்லை. ஒருநாள் போட்டிபோல் விறுவிறுப்பாக இருந்தது. காரணம் ஷேவாக்...

aren
04-12-2009, 12:51 AM
75 ஓவர்களில் 400க்கும் அதிகமாக ரன்கள் எடுத்திருக்கிறார்கள். ஆனால் வெறும் ரன்களை மட்டுமே எடுக்கும்படி ஆட்டக்களத்தை தயாரித்தால் பந்து வீச்சாளர்கள் உற்சாகம் இழந்துவிடுவார்கள். அதையும் நிர்வாகம் கவனிக்கவேண்டும்

ஓவியன்
04-12-2009, 12:59 AM
நேற்று ஒரு நாளில் அதிக ஓட்டங்களைக் குவித்த கிரிக்கட் பிதாமகனின் சாதனையை சமப்படுத்த தவறிய ஷேவக், இன்று முச்சதம் குவிப்பாரா...??

aren
04-12-2009, 09:09 AM
வெல்ல வேண்டிய மாட்சை விட்டுவிட்டார்களோ என்ற அச்சம் எனக்கிருக்கிறது.

ஓவியன்
04-12-2009, 09:11 AM
சுழற் பந்து வீச்சாளர்களின் சொல்லினை, இப்போது ஆடுகளம் கேட்பதாகத் தெரிவதால், ஹர்பஜனின் கைகளில் வெற்றி தங்கியுள்ளது...

aren
04-12-2009, 09:16 AM
சுழற் பந்து வீச்சாளர்களின் சொல்லினை, இப்போது ஆடுகளம் கேட்பதாகத் தெரிவதால், ஹர்பஜனின் கைகளில் வெற்றி தங்கியுள்ளது...

சங்காகராவின் சதத்தை இரண்டாவது இன்னிங்ஸில் எதிர்பார்க்கிறேன். அவரும் ஜெயவர்தனேவும் நன்றாக தடுப்பாட்டும் போடுவார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

aren
04-12-2009, 09:17 AM
தோனியால் அடித்து விளையாடமுடியவில்லை. 9 விக்கெட்டுகள் விழுந்தும் தோனி அடித்து விளையாடவில்லை, ஆகையால் ஆடுகளத்தில் பந்து சுழல்கிறது என்றே தெரிகிறது.

ஹர்பஜன் என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கலாம்.

ஓவியன்
04-12-2009, 09:45 AM
தோனியால் அடித்து விளையாடமுடியவில்லை..

உங்களது இந்தப் பதிவினை தோனி பார்த்து விட்டார் போல, மைதானமெங்கும் சிக்சர் மழை பொழிகிறார்... :)

பாவம் ரங்கன ஹேரத்..!! :D

ஓவியன்
04-12-2009, 09:54 AM
இறுதி விக்கெட் இணையாட்டத்தில் ஏறக்குறைய 50 ஓட்டங்களைக் குவித்து சதமடித்த தோனிக்கு பாராட்டுகள்..!!

:aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033:

தாமரை
04-12-2009, 09:56 AM
3 ஓவர்ல முதல் விக்கெட் விழுமா?

ஓவியன்
04-12-2009, 10:19 AM
3 ஓவர்ல முதல் விக்கெட் விழுமா?

ம்ஹூம், விழலையே...

மதி
04-12-2009, 10:29 AM
இன்றைய நாள் ஆட்டம் இனிதே முடிந்தது. நாளை இந்தியா ஜெயிக்குமா..?

தாமரை
04-12-2009, 10:32 AM
ஆசையைப் பாரு... நாளையே ஜெயிக்கணும்னா கஷ்டம்.

பா.ராஜேஷ்
05-12-2009, 11:20 AM
வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளன... நாளை சங்ககராவை வெளியேற்றிவிட்டால் பின்னர் வெல்வது இன்னும் சுலபம் ஆகிவிடும். இன்று இலங்கை ஆறு (6) விக்கெட் இழந்து 274 ஓட்டங்கள் எடுத்துள்ளனர். சங்ககரா 133 ஓட்டங்கள் எடுத்து தமது அணியை சரிவிலிருந்து மீட்க போராடுகிறார் .... அவர்கள் 59 ஓட்டங்கள் பின் தங்கி உள்ளனர்...

aren
05-12-2009, 03:28 PM
உங்களது இந்தப் பதிவினை தோனி பார்த்து விட்டார் போல, மைதானமெங்கும் சிக்சர் மழை பொழிகிறார்... :)

பாவம் ரங்கன ஹேரத்..!! :D

சங்காகராவும் நான் எழுதியதைப் படித்துவிட்டாரோ?

ஓவியன்
06-12-2009, 03:39 AM
இலங்கை அணி மீதான இந்த வெற்றியூடாக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தினைப் பிடித்துள்ள இந்திய கிரிக்கட் அணிக்கு மனதார்ந்த பாராட்டுகள்..!!

:aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033:

aren
06-12-2009, 03:44 AM
இலங்கை அணி மீதான இந்த வெற்றியூடாக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தினைப் பிடித்துள்ள இந்திய கிரிக்கட் அணிக்கு மனதார்ந்த பாராட்டுகள்..!!

:aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033: :aktion033:

ஆனால் இது எத்தனை நாட்களுக்கு. தென் அப்பிரிக்கா இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை ஆரம்பிக்கிறது. அதில் வெற்றி பெற்றால் மறுபடியும் அவர்கள் முதல் இடத்திற்கு வந்துவிடுவாகள். ஆனால் இந்தியாவிற்கு உடனடியாக டெஸ்ட் தொடர் எதுவுமில்லை என்பதை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

இருந்தாலும் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்த இந்தியாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இன்னும் பல வெற்றிகளைப்பெற என் வாழ்த்துக்கள்.

ஓவியன்
06-12-2009, 10:53 AM
சங்காகராவும் நான் எழுதியதைப் படித்துவிட்டாரோ?

சங்ககார பார்த்திருக்கிறார் போலத்தான் தெரியுது, அதை மகேல ஜெயவர்த்தனவும் பார்த்திருந்தால் இலங்கைக்கு சில வேளை அதிஸ்ட காற்று அடித்திருக்குமோ - தோல்வியைத் தவிர்ப்பதற்கு..!! :wuerg019:

அய்யா
06-12-2009, 11:26 AM
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு பாராட்டுகள்!

சிவா.ஜி
06-12-2009, 02:50 PM
இன்னிங்ஸ் வெற்றியை அடைந்து 77 வருடத்தில் முதன் முறையாக ஐ.சி.சி தர வரிசையில் முதலிடம் பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்.

arun
08-12-2009, 11:17 AM
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு இனிய பாராட்டுக்கள் மற்றூம் வாழ்த்துக்கள் :icon_b:

ஆனால் ஜெயித்ததற்கு 25 லட்சம் போன சீரிஸ் தோத்ததுக்கு?????...... :fragend005::fragend005:

நான் கேக்கல மிஸ்டர் பொது ஜனம் கேக்குது .... :sprachlos020::sprachlos020:

அறிஞர்
08-12-2009, 02:00 PM
கிரிக்கெட் பிஸினஸ் நல்லா நடக்க... முதல் இடம்...

இன்னும் எத்தனை நாளைக்கு..

தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால்....

பால்ராஜ்
11-12-2009, 06:14 AM
கிரிக்கெட் விளையாட்டாக இருக்கும்வரை நல்லது

பிஸினஸ்...ஆகும்போதுதான் பிரச்சினை தொடங்குகிறது..
பார்வையாளர்கள் எல்லோரும் இளிச்ச வாயர்களாகி
விளையாடுபவர்கள் பணம் சேர்ப்பவர்கள ஆகி..

எங்கேய்யா போகுது உலகம்..??

குணமதி
11-12-2009, 07:02 AM
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு இனிய பாராட்டுக்கள் மற்றூம் வாழ்த்துக்கள் :icon_b:

ஆனால் ஜெயித்ததற்கு 25 லட்சம் போன சீரிஸ் தோத்ததுக்கு?????...... :fragend005::fragend005:

நான் கேக்கல மிஸ்டர் பொது ஜனம் கேக்குது .... :sprachlos020::sprachlos020:

மற்ற விளையாட்டுக்களில் முதன்மை வகிப்பவர்கள் பாவம்!

இரங்கத் தக்கவர்களே!

அன்புரசிகன்
11-12-2009, 10:33 AM
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு இனிய பாராட்டுக்கள் மற்றூம் வாழ்த்துக்கள் :icon_b:

ஆனால் ஜெயித்ததற்கு 25 லட்சம் போன சீரிஸ் தோத்ததுக்கு?????...... :fragend005::fragend005:

நான் கேக்கல மிஸ்டர் பொது ஜனம் கேக்குது .... :sprachlos020::sprachlos020:

குடுக்குறவங்க தான் கேள்விகேட்க்கணும்... மிஸ்டர் அன்ட் மிஸஸ் மிஸ் ஜனங்களுக்கு ஏன் பதில் சொல்லணும். மச் பாக்கிறத தவிர வேற என்ன செய்யுறாங்க??? பந்து பொறுக்கிப்போட்டாங்களா? பட் ஐ துடைத்து வைத்தாங்களா??? ஜூனிஃபோர்மை துவைத்தாங்களா??? அட்லீஸ்ட் ஆரஞ்சு ஜூஸ் ஆவது செஞ்சு கொடுத்தாங்களா??? :D மாமனா மச்சானா???

aren
12-12-2009, 02:20 AM
அன்பு உங்கள் கலாய்ச்சலில் நியாயம் இருப்பதாகவே எனக்கும் தெரிகிறது.

அதற்காக வீரபாண்டிய கட்டபொம்மனாக மாறவேண்டாம்.

aren
12-12-2009, 02:22 AM
இன்றைக்கு நடக்கும் 20/இருபது ஆட்டத்தில் அஸ்வினுக்கு சந்தர்பம் கிடைக்குமா? அப்படியில்லையெனில் தினேஷ் கார்த்திக்கிற்காவது சந்தர்பம் கொடுக்கலாம்.

அசோக் டிண்டாவிற்கு பதிலாக சுதீப் தியாகியை உள்ளே கொண்டுவரலாம்.

யூசுஃப் பத்தானை நம்பியதுபோதும் என்று நினைக்கிறேன். பட்டால் பாக்யம் என்ற நிலையிலேயே அவர் ஆட்டம் இருக்கிறது. பந்தைப் பார்த்து விளையாடினால்தான் அவருடைய உண்மையான திறமை வெளிப்படும். அவர் அதையாவது இந்தமுறை செய்வாரா?

"பொத்தனூர்"பிரபு
12-12-2009, 11:23 AM
இலங்கை 42/1
டில்சன் 1(3) -சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்
சங்ககாரா-27(12)*
ஜெசூரியா-11(9) *

"பொத்தனூர்"பிரபு
12-12-2009, 12:02 PM
இலங்கை 132/3,12 ஓவர்
டில்சன் 1(3) -சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்
சங்ககாரா-59(31) யுவ்ராச் பந்தில்
ஜெசூரியா-31(21) பதான் பந்தில்

"பொத்தனூர்"பிரபு
12-12-2009, 12:20 PM
மோசமன பீல்டிங்


முன்பு வயதானவர்கள் இருந்ததால் பில்டிங் மோசம் என பேசிய வாய் எல்லாம் இப்ப என்ன சொல்லா போறாங்க???

14 ஓவரில்3 முறை தவற விட்டாச்சு

இன்னும் சொல்லனுமுனா நம்மவர்களுக்கு கேட்ச் பிடிக்கவே தெரியல

"பொத்தனூர்"பிரபு
12-12-2009, 12:32 PM
5 முறை தவற விட்டாச்சு

"பொத்தனூர்"பிரபு
12-12-2009, 12:34 PM
கோழி பிடிக்க போக சொல்லலாம்

அன்புரசிகன்
12-12-2009, 12:54 PM
இலங்கை 7 விக்கட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது. வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாகவே ஓட்டங்களை அள்ளிவழங்கினர். பத்தாக்குறைக்கு களத்தடுப்பாளர்கள் பந்தினை கண்டாலே துஷ்டன் போல் தூரவிலகினர். அநேக பந்துகளை பிடிக்கத்தவறினர்...

நியோ தொலைக்காட்சியில் extra cover ல் முரளி கார்த்திக் சொன்ன குற்றச்சாட்டு ஓளிப்பற்றாக்குறையாக இருக்கலாம் என்று...

எப்படியோ இந்தியாவிற்கு சிறந்த ஆரம்ப ஓட்ட அஸ்திவாரம் தேவைப்படுகிறது... சேவாக் காம்பீர் ரெய்னா யுவராஜ் டோனி இவர்கள் திறமையாக இல்லாவிட்டாலும் சராசரியாக விளையாடினாலே போதும்....

பார்க்கலாம்..

"பொத்தனூர்"பிரபு
12-12-2009, 01:17 PM
51/0 ,5.3 ஓவர்

"பொத்தனூர்"பிரபு
12-12-2009, 01:18 PM
உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று இலங்கையும் தடுப்பாட்டதில் தடுமறுது

மதி
12-12-2009, 02:32 PM
முடிந்துவிட்டது...!! யுவராஜ் அதிரடி.. மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டம்.. ஆனாலும் இத்தனை மிஸ்ஃபீல்டிங்கா... இரு தரப்பிலும்...

"பொத்தனூர்"பிரபு
12-12-2009, 02:37 PM
யுவராஜ் கலக்கல் ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது

அதிக ஓட்டங்களி துரத்தி வெண்ற அணி என்ற உலக சாதனையுடன் (http://stats.cricinfo.com/ci/content/records/283214.html)

"பொத்தனூர்"பிரபு
12-12-2009, 02:37 PM
வாழ்த்துக்கள்

அன்புரசிகன்
12-12-2009, 10:58 PM
எடுத்துக்கொடுத்தது ஷேவாக். பிறகு டோனி ஓட்ட வீதம் குறையும் போதெல்லாம் ஆறுகள் அடித்து மீட்டெடுத்தார். பின்னர் யுவராஜின் சிறப்பானதும் சிக்கன பந்துகளுடனான ஆட்டம் இந்தியாவின் இலகு வெற்றிக்கு காரணமாயிற்று...

இலங்கையின் தரப்பில் மாலிங்க தவிர அனைவரும் அள்ளி வழங்கினர்.

3 விக்கட்டுக்கள் கைப்பற்றி சிறந்த ஓட்ட எண்ணிக்கை பெற்றுக்கொடுத்த பிறந்தநாள் நாயகன் தான் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்.

மன்மதன்
13-12-2009, 07:01 AM
.

3 விக்கட்டுக்கள் கைப்பற்றி சிறந்த ஓட்ட எண்ணிக்கை பெற்றுக்கொடுத்த பிறந்தநாள் நாயகன் தான் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்.

ஆமாம்.. அவரேதான்.

நேற்று 200 தொட மாட்டார்கள் என்று நினைத்தால், ஷேவாக், தோனி, யுவி என்று எல்லோரும் பொளந்து கட்டிவிட்டார்கள்.

20-20 யில் அதிக ரன் சேஸிங் என்ற ரெக்கார்டு ...

வாழ்த்துகள்........

aren
14-12-2009, 12:50 AM
ஆமாம்.. அவரேதான்.

நேற்று 200 தொட மாட்டார்கள் என்று நினைத்தால், ஷேவாக், தோனி, யுவி என்று எல்லோரும் பொளந்து கட்டிவிட்டார்கள்.

20-20 யில் அதிக ரன் சேஸிங் என்ற ரெக்கார்டு ...

வாழ்த்துகள்........

எல்லா ரெக்கார்டுகளையும் நம் ஆட்கள் நம் நாட்டிலேதான் செய்கிறார்கள். அதை எதிர்த்துவிளையாடுபவர்களின் நாட்டில் செய்தால்தான் நமக்குப் பெருமை.

ஒரு முறையாவது இதை செய்வார்களா?

mania
14-12-2009, 03:58 AM
எல்லா ரெக்கார்டுகளையும் நம் ஆட்கள் நம் நாட்டிலேதான் செய்கிறார்கள். அதை எதிர்த்துவிளையாடுபவர்களின் நாட்டில் செய்தால்தான் நமக்குப் பெருமை.

ஒரு முறையாவது இதை செய்வார்களா?

அதுவும் ஒரு ரெக்கார்ட் தானே....:rolleyes::rolleyes: ஹி...ஹி...ஹி...
அன்புடன்
மணியா.....:D

aren
14-12-2009, 06:42 AM
அதுவும் ஒரு ரெக்கார்ட் தானே....:rolleyes::rolleyes: ஹி...ஹி...ஹி...
அன்புடன்
மணியா.....:D

நான் இல்லேன்னு சொல்லவில்லையே.

ஒரு ரெக்கார்டாவது நம் மக்கள் வெளிநாட்டில் செய்வார்களா என்பதே என் கனவு.

பால்ராஜ்
15-12-2009, 12:58 PM
இன்னிக்கு என்னதான் ஆச்சு...
மதியானம் என்னவோ மாட்ச் நடக்குதுன்னு பார்க்கும்போது இந்தியா 400+ எடுத்திருந்தார்கள் என்று புரிந்தது.

அதனால் நன்றாகத் தூங்கி விட்டு பின்னர் எழுந்து கேட்டதில்..
3 ரன் வித்தியாசத்தில் ஜெயித்தார்கள் என்று கேள்விப்பட்டதில் .... மிக ஆச்சரியம்!!!

நம்ம பசங்களுக்கு ஒரு 'இது'தான்...! என்ன ஆனாலும்..

இல்லெங்கில்.. 'பாட்டிங்' ஐ விட 'பெட்டிங்' அதிக முக்கியத்துவம் பெறுகிறதோ??

அறிஞர்
15-12-2009, 01:45 PM
மிகவும் விறுவிறுப்பான போட்டி....

இரவு விழித்து.. இந்திய ஆட்டத்தை ரசித்தேன்.

சேவாக் 200 எடுப்பார் என எதிர்பார்த்தேன்... நடக்கவில்லை...

சேவாக், டெண்டுல்கர், தோனி, தில்ஷான், சங்ககாரா ஆட்டம் சிறப்பாக இருந்தது...

ஒரு காலத்தில் ஒரு நாள் போட்டியில் 250+ என்றாலே பெரிய விசயம்.. இப்ப 400+ எளிதாகி விட்டது...

பா.ராஜேஷ்
15-12-2009, 01:53 PM
சங்ககராவின் ஆட்டமே மிக சிறப்பு... அவ்வளவு கடின இலக்கை நெருங்குவதற்கு இவரின் விளையாட்டு மிகவும் அற்புதமாக இருந்தது

மன்மதன்
15-12-2009, 02:22 PM
அடுத்த ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்கா மேட்சாக அமைந்து இலங்கை வென்று விடும் என்று நினைத்தேன். இந்தியா இந்த மேட்சில் தோற்று இருந்தால் மீடியாக்கள் ஒரு வழி பண்ணி இருப்பார்கள்..

aren
15-12-2009, 03:05 PM
இது என்ன ஆட்டம்பா. இந்த மாதிரி பிட்சுகளை தயாரித்தால் மக்கள் அனைவரும் பேட்ஸ்மென்களாகவே விருப்பப்படுவார்கள். பந்துவீச்சாளர்களைக் காண்பது கடினம்.

இனிமேலாவது இருவருக்கும் ஒத்துழைக்கும் ஆடும் தளத்தைத் தயாரிப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

"பொத்தனூர்"பிரபு
18-12-2009, 10:09 AM
Ranjit: "No wonder Dhoni has an average above 50.It is only when the top order has the laid the platform,that Dhoni comes in and scores.But in situations like these,where the ball is doing something,and wickets are falling,he hides away in the dressing room." (http://www.cricinfo.com/indvsl2009/engine/current/match/430887.html)

"பொத்தனூர்"பிரபு
18-12-2009, 10:36 AM
172/4 (36.4 ov)

"பொத்தனூர்"பிரபு
18-12-2009, 11:21 AM
267/5 (46.6 ov)

"பொத்தனூர்"பிரபு
18-12-2009, 11:25 AM
India 283/5 (48.0 ov)

"பொத்தனூர்"பிரபு
18-12-2009, 11:37 AM
301/7 (50.0 ov)

"பொத்தனூர்"பிரபு
18-12-2009, 01:04 PM
இலங்கை -81/0

"பொத்தனூர்"பிரபு
18-12-2009, 01:45 PM
இலங்கை - 139/1 (19.5 ov)

அறிஞர்
18-12-2009, 02:10 PM
இலங்கை சிறப்பாக விளையாடுகிறது... தில்ஷான் நிதானமாக விளையாடுகிறார் (94 ரன்கள் அவுட் இல்லை)

இலங்கை 162/2 (26.0 ஓவர்).

அறிஞர்
18-12-2009, 03:02 PM
தில்ஷானின் சிறப்பு ஆட்டம் முடிந்தது 123 ரன்னில் அவுட்
இலங்கை 218/3 (37 ஓவர்)

அறிஞர்
18-12-2009, 03:45 PM
விறு விறுப்பான ஆட்டம்... 32 பந்துகள் 35 ரன்கள் தேவை...

அன்புரசிகன்
19-12-2009, 02:27 AM
சென்றமுறை போன்ற ஆட்டமே இந்த முறையும். பொறுத்த நேரத்தில் முக்கிய ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்துவிட்டனர். ஆனால் இந்தமுறை மத்தியூஸ் தன்னை செப்பமிட்டுள்ளார். ஓட்டவீதங்களுக்கு ஏற்றாற்போல் 4 ஓட்டங்களை பெற்று மற்றய ஆட்டக்காரர்களின் மனஉறுதியை ஏற்படுத்திக்கொடுத்தார். இறுதி ஓவ்வொரு ஓவரிலும் ஒவ்வொரு 4 ஓட்டங்களை பெற்று வலுவேற்றிக்கொண்டிருந்தார். 3 ஓவரில் 19 ஓட்டங்கள் என்று வந்தபொது மத்தியூஸூக்கு கால் சறுக்கி அவருக்கு உதவி ஓட்டக்காரர் வந்தார்.

ஆனாலும் அடுத்தடுத்த ஓவரில் 2 நான்கு ஓட்டங்களை பெற்றதால் ஓட்ட இலக்கு இலகுவாகியது. வந்தவர்கள் சறுக்கினாலும் அந்த நான்கு ஓட்டங்கள் உதவிற்று. ஆட்ட நாயகனாக டில்சான் தெரிவானார்.

மன்மதன்
19-12-2009, 03:34 PM
அடுத்த இரண்டு ஆட்டங்களுக்கு ஷேவாக் கேப்டன்.

சென்ற ஆட்டத்தில் பந்து வீசியபோது 45 நிமிடங்கள் அதிகம் எடுத்துக்கொண்டனர் என்று இரண்டு ஆட்டங்களுக்கு தோனிக்கு தடை விதித்துள்ளனர்.

பால்ராஜ்
21-12-2009, 04:17 AM
சென்ற ஆட்டத்தில் பந்து வீசியபோது 45 நிமிடங்கள் அதிகம் எடுத்துக்கொண்டனர் என்று இரண்டு ஆட்டங்களுக்கு தோனிக்கு தடை விதித்துள்ளனர்.

மடத்தனமான விதிமுறை.... வாழ்க்கையில் எத்தனையோ பார்க்கிறோம்.. இது அபத்தத்தின் எல்லையைத் தொடுகிறது...

arun
21-12-2009, 04:30 AM
மடத்தனமான விதிமுறை.... வாழ்க்கையில் எத்தனையோ பார்க்கிறோம்.. இது அபத்தத்தின் எல்லையைத் தொடுகிறது...

45 நிமிடம் என்பது ரொம்ப ஓவர் ஆனால் சம்பளத்தை மட்டும் கட் பண்ணி இருக்கலாம்

arun
21-12-2009, 09:12 AM
மூன்றாவது ஒரு நாள் போட்டி

அடித்து விளையாடுகிறது இலங்கை 112/1

14 ஓவர்கள்

"பொத்தனூர்"பிரபு
21-12-2009, 09:54 AM
இலங்கை 170/3 (24.6 ov)

அறிஞர்
21-12-2009, 03:18 PM
இந்தியா சிறப்பாக ஆடி... 240/3 எடுத்து வெற்றி பெற்றது...

ஜடேஜா பவுலிங்க்... டெண்டுல்கர் பேட்டிங்க் சிறப்பாக இருந்தது

aren
22-12-2009, 08:26 AM
தினேஷ் கார்த்திக் கொஞ்சம் மெதுவாக ஆடி சச்சின் டெண்டுல்கரை சதம் அடிக்க வைத்திருக்கலாம். 96 ரன்களில் அப்படியே நின்றுவிட்டார்.

நேசம்
22-12-2009, 12:09 PM
இத்தனை ஒவர்கள் மீதம் இருக்க ஏன் தினேஸ் கார்த்திக் மெதுவாக ஆடி சச்சினை சதம் பெற செய்ய வில்லை.இது ஒரு நல்ல வாய்ப்பு சச்சினுக்கு

ஓவியன்
22-12-2009, 01:56 PM
இத்தனை ஒவர்கள் மீதம் இருக்க ஏன் தினேஸ் கார்த்திக் மெதுவாக ஆடி சச்சினை சதம் பெற செய்ய வில்லை.இது ஒரு நல்ல வாய்ப்பு சச்சினுக்கு

நீங்கள் கூறியதைத்தான் தினேஸ் கார்த்திக்கும் நினைத்திருப்பார், ஆமாம் இது ஒரு நல்ல வாய்ப்பு தினேஸ் கார்த்திக்கு கூட...

தோனி நல்ல நிலையில் ஆடிக் கொண்டிருக்கும் வரை கார்த்திக் அணிக்குள் நுளைவது கடினமாயிருக்க, கிடைக்கும் இது போன்ற அருமையான சந்தர்ப்பங்களை அவர் நழு விட முடியாத நிலையில் இருக்கின்றார்....

முடிந்த வரை ஓட்டங்களைக் குவிக்க எண்ணியிருப்பார், நீங்கள் எல்லோரும் டெண்டுல்கரின் தனிப்பட்ட சாதனையைப் பார்ப்பது போல, கார்த்திக் தன் தனிப்பட்ட எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்திருப்பார்....

அந்த வகையில் அவர் செய்தது சரிதானென நான் நினைக்கின்றேன்...

அறிஞர்
22-12-2009, 02:06 PM
கடைசி ஓவருக்கு முந்தின ஓவரில் ஒரு 6 ரன்கள் அடிப்பதை தவித்திருக்கலாம்.
---------
96 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்ததால்.. டெண்டுல்கர் நாட்டிற்காக ஆடுகிறார்... தனக்காக ஆடவில்லை.. என்ற பாராட்டு எழுந்துள்ளது...

aren
22-12-2009, 02:54 PM
இன்னொரு சந்தர்பம் டெண்டுல்கருக்கு நிச்சயம் கிடைக்கும், அப்பொழுது சதம் அடித்துவிட்டால் போயிற்று.

ஓவியன் சொல்வதுபோல் தினேஷ் கார்த்திக்கிற்கு இரண்டு சந்தர்பங்களே உள்ளன, அதில் ஏதாவது ஒன்றிலாவது கொஞ்சம் ரன் எடுத்து அடுத்த சீரியஸில் இடம் பெறவேண்டும் என்று நினைத்திருப்பார்.

"பொத்தனூர்"பிரபு
24-12-2009, 10:17 AM
இலங்கை 184/2 (33.5 ov)

ஓவியன்
24-12-2009, 07:38 PM
அடுத்த சீரியஸில் இடம் பெறவேண்டும் என்று நினைத்திருப்பார்.

அடுத்த சீரியசில் விளையாடுவது இருக்கட்டும், இந்த சீரியஸ்(:D), சீரியசாகவே இந்தியா வசம் வந்து விட்டதே... :)

aren
25-12-2009, 01:33 AM
இந்தியாவில் மட்டையடிக்கும் ஆட்டக்காரர்கள் இப்பொழுது கொஞ்சம் சிறப்பாகவே ஆடுகிறார்கள். இதுதான் இந்தியாவிற்கு பல வருடங்களாக பலவீனமாக இருந்தது. ஐபிஎல் உபயமாகவும் இருக்கலாம்.

வெற்றி பெற்ற இந்தியாவிற்கு என் வாழ்த்துக்கள்.

மன்மதன்
25-12-2009, 05:57 PM
இந்தியா கடைசி ஆட்டத்திற்கு முந்தைய ஆட்டங்களில் சீரிஸை வென்றது ஒரு புதிய சாதனைதான். வாழ்த்துகள்..

பால்ராஜ்
27-12-2009, 05:00 AM
தற்செயலாக தொலைகாட்சியை ஆன் செய்த போது இன்னும் ஒரு மாட்ச் நடந்து கொண்டிருக்கிறது என்பது தென்பட்டது..

முதல் சில ஓவர்களில்.. நம்ம பசங்க கையில் வெண்ணெய்..
எத்தனை மிஸ்ஃபீல்டிங்..??

தோனி.... இந்த மாட்ச் ஜெயிக்காவிட்டால் ராசி இல்லாத காப்டன் என்ற பெயர் நிலைத்து விடும்(??) ஒரு ஸ்டேஜில் ராஹுல் திராவிட்-உக்கு இதுதான் சம்பவித்தது..

மன்மதன்
27-12-2009, 05:37 AM
பிட்ச் சரியில்லை என்று மேட்ச் பாதியிலே நிற்கிறது.

75 ஆட்டங்களுக்கு 5 விக்கெட் இலங்கை இழந்து விட்டது.

anna
27-12-2009, 08:09 AM
பிட்ச் சரியில்லை என காரணம் காட்டி ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாதிரி சம்பவங்கள் ஒண்ணும் இந்திய இலங்கை அணிகளுக்கு புதியது அல்ல.

குணமதி
27-12-2009, 09:23 AM
காசு கொடுத்து ஆட்டத்தைப் பார்க்கச் சென்றவர்களுக்கு ஏமாற்றம் தானா?

aren
27-12-2009, 09:37 AM
இந்திய கிரிக்கெட்டிற்கு இது ஒரு மாபெரும் வெட்கக்கேடு. உலகப்கோப்பை 2011 இங்கே நடைபெறுவது சந்தேகமே.

புதிய ஸ்டேடியம் கட்டியதிலிருந்தே பிரச்சனைதான் டெல்லி மைதானத்திற்கு. சாம்பியன்ஸ் லீக் போட்டியில்கூட டெல்லி மைதானம் கொஞ்சம் சொதப்பியது. இதனாலேயே டெல்லி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது.

கிரிக்கெட் வாரியம் இதை கவனித்து உடனடி நிவாரணம் செய்யும் என்றே எதிர்பார்க்கிறேன்.

மதி
27-12-2009, 12:48 PM
இன்னிக்காவது மேட்ச் பார்க்கலாம் என்றால் சொதப்பிட்டாங்க. இனியாவது இந்த மாதிரி விஷயங்களில் வாரியம் அக்கறை எடுக்கும் என்று நம்புவோம்.

தமிழ் தென்றல்
28-12-2009, 04:09 AM
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் கருத்து, சற்று சிந்திக்கத் தக்கதாக இருந்தது. ஆடுகளம் சரியில்லை என்றால், ஆட்டத்தின் முதல் ஐந்தாறு ஓவர்களிலேயே தெரிந்திருக்கும். நல்ல ஆடுகளம் என ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆடுகளங்களிலும் சில பந்துகள் எதிர்பாரா வகையில் எகிறுவது உண்டு.

23 ஓவர்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு ஆட்டம் நடைபெற்ற பிறகு, அதுவரை தாக்குப் பிடித்த களம், அதற்கு மேல் மட்டும் என்ன செய்து விடும்..? களம் சற்று தரமாக தயாரிக்கப் படவில்லை என்றாலும், ஆட்டத்தினைக் கைவிடுமளவு மோசமான ஆடுகளமல்ல நேற்றைய டெல்லி ஆடுகளம் என்கிறார் அஜய் ஜடேஜா.

ஹும்... ஆட்டத்தின் பத்தாவது ஓவரில் தில்ஷான் கைகளில் அடி வாங்கினார். அதற்கு முன்னர் ஒரு முறையும், பின்னர் ஒரு முறையும் ஜெயசூர்யா தோள்பட்டையிலும், கையில் ஒரு முறையும் ஆக இரு முறைகள் அடி வாங்கினார்.

அதன் பின் தியாகியின் பந்துகள் சில எகிறி விழுந்ததும் உண்மைதான். ஆனால், பந்துகள் எகிறி விழும் ஆடுகளங்களில் ஆட்டங்கள் நடப்பதையும், அவை தொடர்ந்து நடந்து முடிவதையும் நாம் கண்களால் கண்டவர்கள் தானே..?

ஆனால், இந்திய அணி, இலங்கை வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த பந்துகள் அனைத்தும் அருமையாக வீசப்பட்டவை. அதற்கும் ஆடுகள அமைப்புக்கும் சற்றும் சம்பந்தமில்லை.

எப்படியும் இலங்கை தோற்றிருக்க வேண்டிய ஒரு ஆட்டம். இந்திய அணிக்கு வெற்றிப் புள்ளிகள் கிடைத்திருக்க வேண்டும்.

இனி ஆடுகளங்களை, எவ்வித குறையும் சொல்லாதவாறு நம்மவர்கள் தயாரித்து விடுவார்கள் என்று உறுதி சொல்லிட முடியாது. ஏனென்றால், இந்தூரில் 12 வருடங்களுக்கு முன் ஏற்கனவே இப்படியொரு பாடம் கற்றிருக்கிறது இந்தியா. அதன் பின்னும் இப்படியொரு நிகழ்வுக்கு வழி வகுத்திருக்கிறார்கள். என்ன சொல்ல..?

aren
13-01-2010, 07:21 AM
இந்தியர்கள் இன்று சொதப்புகிறார்களே. 16 ரன்களுக்கு மூன்று விக்கெட் அவுட்.

காம்பீர், கோஹலி, யுவராஜ் ஆகியோர் அவுட்

aren
13-01-2010, 07:56 AM
5 காலி

arun
15-01-2010, 10:50 PM
பைனல் அலர்ஜி தோனிக்கும் வந்து விட்டது போல 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை கோப்பையை கைப்பற்றியது