PDA

View Full Version : காளான்கள்



Ravee
10-11-2009, 01:49 PM
காளான்கள்



http://www.photos.a-vsp.com/fotodb/15_mushroom.jpg


மழைக்கால காளான்களைப்

பார்த்து வியக்கிறேன்

உங்களுக்கு யார்

விதை போட்டார்கள்

யார் உரம் வைத்தார்கள்

எங்கிறிந்து வந்திர்

இந்த உலகத்துக்கு

ஒட்டுசெடியாய்

உயிர் வாழ்ந்த

உங்களை பார்த்து

கற்றுக்கொண்டேன்

புதிய பாடம்

பிழைக்கும்

மனம் இருந்தால்

ஒட்டு உறவாய்

இருக்க வேண்டும்

அனாதையாய்

இருந்தாலும்

சொந்தங்கள்

வந்து சேரும்

அவர்களுக்கு

ஐந்து வாய் சாப்பிட்டால்

எனக்கும்

ஒரு வாய் ஊட்டாமலா

போய் விடுவார்...........

அறிஞர்
10-11-2009, 02:37 PM
காளானை கண்டு.. புதிய பாடமா...
அருமை...

காளான்கள் தனியே இருப்பதில்லை...

ஜனகன்
10-11-2009, 03:07 PM
ரவி உங்கள் வரிகளை பார்த்தவுடன்; எனக்கு அம்மா முன்பு சொல்லும் வார்த்தைகள்தான் ஞாபகத்தில் வருகின்றது.
"நேற்று பெய்த மழையிலை இன்று முளைத்த காளான் நீ" என்ன அதிகப்பிரசிங்கத்தனம் பண்ணுகிறாய் என சொல்வார்கள்.
பழசை ஞாபகப்படுத்தி விட்டிர்கள்.

இளசு
10-11-2009, 07:03 PM
parasitism = ஒட்டுண்ணியை விட
symbiosis = சேர்ந்துவாழ்வதே சிறப்பு..

இரண்டாம்வகை காளான்களுக்கே என் வாக்கு..


ஒட்டி, இணைந்து வாழும் பாடம் கற்பிக்கும் காளாசான்!


பாராட்டுகள் ரவீ..

Ravee
11-11-2009, 03:40 PM
அறிஞர் , இளசு , ஜனகன் எல்லோருக்கும் என் நன்றி