PDA

View Full Version : திருநாவுக்கரசர் காங்கிரசில்அறிஞர்
09-11-2009, 10:48 PM
பா.ஜனதாவில் இருந்து விலகிய
திருநாவுக்கரசர் காங்கிரசில் இணைந்தார்
டெல்லி மேல் சபை எம்.பி. பதவி ராஜினாமா

புதுடெல்லி, நவ.10-

பா.ஜனதா கட்சியில் இருந்து விலகிய திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லி மேல் சபை எம்.பி. பதவியையும் அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், தற்போது டெல்லி மேல்-சபை எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.

காங்கிரசில் திருநாவுக்கரசர்

நேற்று அவர் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகினார். டெல்லி மேல் சபை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்த அவர், மத்திய சுகாதாரத்துறை மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத் இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ப.சிதம்பரம்-தங்கபாலு

இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசருடன், மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோரும் உடன் இருந்தனர். பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"பா.ஜனதா தற்போது மதச்சார்புள்ள கட்சியாக உள்ளது. கட்சியின் நடவடிக்கைகளில் `ஆர்.எஸ்.எஸ்.' இயக்கத்தின் தலையீடு நாள்தோறும் இருந்து வருகிறது. அத்வானியே தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு உள்கட்சி பிரச்சினையும் அதிகமாக இருந்து வருகிறது.

விலகியது ஏன்?

முன்னாள் பிரதமர் வாஜ்பாயினால் ஈர்க்கப்பட்ட நான், வாஜ்பாய் அரசியலில் இருந்து விலகியபோதே பா.ஜனதாவில் இருந்து விலகி இருக்க வேண்டும். குஜராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தை பா.ஜனதாவில் இருந்தபோதே நான் எதிர்த்து வந்தேன். இரண்டாவது முறையாக பா.ஜனதா எனக்கு மேல் சபை எம்.பி. பதவியை வழங்க முன்வந்தபோது ஏற்க மறுத்துவிட்டேன்.

தமிழ்நாட்டில் பா.ஜனதா என்ற கட்சியே இல்லை. தமிழக மக்கள், பா.ஜனதாவை ஒரு அன்னிய கட்சியாகவே கருதுகிறார்கள். மேலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் `தலித்' மக்களுக்கு என்னால் எந்த சேவையும் செய்ய முடியவில்லை என்பதால், பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரால் மதச்சார்பற்றவனாக வளர்க்கப்பட்ட நான், தமிழக மக்களுக்கு அரசியல் மூலம் தொடர்ந்து பணியாற்றவே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளேன்.

12-ந்தேதி இணைப்பு விழா

வருகிற 12-ந்தேதி திருச்சியில் தொண்டர்களுடன் காங்கிரசில் இணையும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.''

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

ராஜினாமா கடிதம்

திருநாவுக்கரசரின் மேல் சபை எம்.பி.யின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு (2010) மே மாதம் வரை உள்ளது. மேல் சபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரிக்கு திருநாவுக்கரசர் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று அனுப்பி வைத்தார்.

பா.ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகும் கடிதத்தையும் கட்சி மேலிடத்துக்கு அவர் அனுப்பி வைத்தார்.

நன்றி - தினதந்தி

குணமதி
10-11-2009, 12:40 AM
சட்டிக்குத் தப்பி அடுப்பில் வீழ்ந்தாரா?

சேற்றுக் குட்டையிலிருந்து குப்பைக் குட்டைக்குப் போகிறாரா?

வெல்லும் குதிரையில் ஏற இடம் கிடைக்குமா என்ற ஆசையா?

காற்றுவீசும் இடம் இது என்று தீர்மானித்து விட்டாரா?

தமிழ்நாட்டில் மக்கள்துணை இல்லாத கட்சி,
இந்திய அளவிலும் தேய்கின்ற கட்சியில் தொடர வேண்டாமெனத் தீர்மானித்தாரா?

எப்படியோ, கட்சி மாறுகிறார். ஆனால்,
இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவிக்கத் துணைபோன 'காங்கிரசு'க் கடசியில் இந்த நேரத்தில் இவர் சேருவது தமிழ்மக்களிடம் வரவேற்பைப் பெறப் போவதில்லை.

அரசியல் என்பது பிழைப்பாகவும் வணிகமாகவும் ஆகிவிட்டதால் எதைச்சொல்லி என்ன பயன்?

நேசம்
10-11-2009, 02:09 PM
இவர் சுயேட்சையாக ஒரு தேர்தலில் நின்ற போது கூட இரண்டு இலட்சம் ஒட்டு வாங்கினார்.ஆனால் பாஜகவில் சேர்ந்த போது அந்த அளவுக்கு ஒட்டு வாங்கவில்லை.அதனால் தான் மற்றமா...

பிரம்மத்ராஜா
10-11-2009, 03:23 PM
வேறு ஒன்றும் இல்லை கொஞ்ச நாட்களாகவே கட்சியில் இவரும் ஆதரவாளர்களும் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். தமிழக பாரதிய ஜனதவிலும் கோஷ்டி பூசலுக்கு பஞ்சமில்லை. MGR ஆட்சியின்போது முக்கியமான அமைச்சர்களில் இவரும் ஒருவராக இருந்தார். MGR மறைவுக்குபின். ஜெயலலிதா வளர்ச்சியில் முக்கிய பங்கு இவருக்கும் இருந்தது. BJP இல இணைவதற்கு முன்பு தி மு க வில் இணைவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இவருக்கென்று தனி செல்வாக்கு இருந்தது BJP இல இணைந்தபின் அந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.காங்கிரசில் இணைந்ததினால் இவரும் இன்னொரு கோஷ்டியாக உருவாகி வழக்கமான காங்கிரஸின் குழிபறிப்பு மற்றும் கைகலப்பு வேலைகளுக்கு பஞ்சமிருக்காது என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாளில் பல சுவாரஷ்யமான நிகழ்வுகளை காணலாம்

அறிஞர்
10-11-2009, 03:45 PM
அறந்தாங்கி தொகுதியில் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்டு.... இளம் வயதில் எம்.ஜி.ஆரால் உயர்த்தப்பட்டவர்....

திமுகவில் முன்பே இணைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

அவர் தொகுதியில் அவருக்கு மீண்டும் செல்வாக்கு கிடைக்கும் என எண்ணுகிறேன்.

aren
11-11-2009, 06:51 AM
ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர். அதிமுகவில் எம்ஜியாரின் மறைவிற்குப்பின் ஜெயலலிதாவிற்கு மிகவும் உதவியாக இருந்தவர். ஆனால் ஜெயலலிதா இவரை தூக்கி எறிந்துவிட்டார்.

இனிமேல் இவரால் அரசியலில் மேலே வரமுடியுமா என்று தெரியவில்லை. திமுகவில் சேர்ந்திருந்தால் ஏதாவது பதவி கிடைத்திருக்கும்.

காங்கிரஸில் இவர் எந்த கோஷ்டி????

ஆதி
12-11-2009, 10:48 AM
அம்மா கட்சி தலைமைக்கு வருவதற்கு இவரும், ஆ.எம்.வீரப்பனும் முக்கியமான காரணிகளாக இருந்தார்கள்.. ஜானகி அம்மாவை கவிழ்த்த பெருமை இவர்களுடையது.. ஆனா அம்மா தளிவானவர்.. இவரையும் வீரப்பனையும் அழகா ஒதுக்கிட்டார் இல்லை துரத்திட்டார்..

பின் எம்.ஜி.யார் திமுக, துவங்கினார்.. இவர் தொகுதியில் அசாத்தியமாக ஜெப்பார்.. ஆனால் இவர் கட்சியில் இருந்தவர்கள் யாரும் சோபிக்கவில்லை.. திமுகவில் போனா எம்.பி போஷ்ட் கூட கிடைக்காது னு தான்.. பாஜக போனார்.. இவர் கெட்ட நேரம்.. அப்ப பாஜக அதிமுகவோடு கூட்டணி வைத்தது.. அம்மா, திருநாவுக்கரசரை
தமிழ் நாட்டில் எங்கு நிறுத்தினாலும் கூட்டணி இல்லை னு சொல்ல.. இவருக்கு சீட் கொடுக்கப்படல்லை ( வெளி மாநிலத்தில் நின்றார் என்ற மாதிரி தோணுது, தெரியலை)..

இவர் பாஜக போன பிறகு, தமிழ் நாட்டின் பட்டித் தொட்டிகளில் சில நாள் ஹிந்து துவ கொள்கைகள் ஒலித்தன என்பது உண்மை.. போகப் போகப் பாஜக குரல் மங்க.. இவருக்கும் மரியாதை இல்லாமல் போக.. இப்ப காங்கிரஸ்.. இவர் எம்.எல்.ஏ வா இருக்க விரும்புவதில்லை.. திமுகவில் இப்போ அவ்வளவுதான் கிடைக்கும்.. காங்கிரஸ் போனா, ஏதாவது வாய்ப்பு கிடைக்கு, சொல்ல முடியாது, ராஜசபா எம்.பி போஸ்ட் போட்டு, இணையமைச்சர் பதவி கொடுக்க வாய்ப்பிருக்கு.. பார்ப்போம்..

இவர் மட்டும் அம்மாவை கொண்டுவராம இருந்திருந்தா.. அதிமுகவில் இன்று பெரிய ஆளா இருந்திருப்பார்.. இவர் விதைத்தார், கட்சியை விட்டு வெளியே அம்மா உதைத்தார்..