PDA

View Full Version : குட்டீஸ்.....



சரண்யா
07-11-2009, 09:25 AM
குட்டீஸ் (1)....

http://4.bp.blogspot.com/_2qZyM281i_w/SvTDgzsa52I/AAAAAAAAAHQ/peh5pqA0p-U/s200/kutties.jpg

தங்கள் திருமணத்திற்கு பின்பு பல நாட்கள் கழித்து.....தவமிருந்து பெற்ற குழந்தை தான் சந்தோஷினி..தங்களை மகிழ்விக்க பிறந்தவள்...தங்களுக்கு ஓர் அடையாளமாக..தங்களுக்கென உரிமை கொண்டாட...தாங்களும் பெற்றோர் ஆனதில் மகிழ்ச்சி அடைந்த தம்பதியனருக்கு தங்களை அங்கிகரிக்க
இந்த சுற்றத்தில்.....சந்தோஷினி அம்மா லதா வீட்டிலிருக்கிறார் தற்காலிகமாக ... அப்பா அருண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்...

சந்தோஷினி அம்மா....மகளுக்கு 2 1/2 வயது வரபோகிறது.பள்ளியில் சேர்க்க வேண்டுமே...என்ற எண்ணம் வந்தது.இத்தனை நாட்களாக வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரிந்திராத அம்மா.....

விசாரிக்க தொடங்குகிறார்....

எந்த பள்ளி நல்ல பள்ளி..
எதில் என் குழந்தை பாதுகாப்பாக இருப்பாள்...
ஆங்கிலத்தில் சொல்லி கொடுப்பார்களா...
விளையாட விடுவார்களா...

இப்படி தெரிந்தவர் தெரியாதவர் எனக் காய்கறி விற்பவரில் தொடங்கி கணினி மையத்தை நடத்துபவர் வரை கேட்டு தெளிவு பெற்றாள்....

சரிங்க...நாம் இந்த பள்ளியிலே சேர்க்கலாம் என கணவரிடம் சொல்லுகிறாள்...

அப்பாவும் தன் பங்கிற்கு தன்னுடன் வேலைப் பார்ப்பவர் முதல் நட்பு வட்டம் வரை விசாரித்திருந்ததும் அதே பள்ளிக்கூடத்தின் பெயரைத் தான்.....

அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அப்பா....சிறது நேரம் கழித்து சரி என்றார்.
கட்டணத்திலும்...தரத்திலும்....சிறப்பாக சொல்லுவது இந்த பள்ளியைத் தாங்க...

குட்டிமா...அப்பாகிட்ட சொல்லுடா...ஸ்கூல் போறேன்னு....
புது டிரஸ் ......
புது ப்பஃக்.....
வேற என்ன வேணும்... செல்லத்துக்கு...போவோமா...என்று பிள்ளையின் மனதில் ஏற்றுகிறாள் தாய்.

இருவரும் சேர்ந்து முதல் முறையாக பள்ளிகூடத்தை நோக்கி...செல்லுகிறார்கள்...

http://ts19.gazettelive.co.uk/upload/2009/05/TS19/harrowgate2.jpg

மீனியல்(பள்ளிக்கூட ஆயா): என்ன வேணும் சார்
பிள்ளையை சேர்க்கனும்...
அப்படியா....வாங்க..உள்ள கிளர்க் இருப்பாங்க...வலது பக்கமாக இருக்கிற அறையில் சென்று பாருங்கள்..என்கிறாள் மீனியல்..

http://3.bp.blogspot.com/_2qZyM281i_w/SvT-AcCXM_I/AAAAAAAAAHY/m_6Qi1te8c0/s200/graphics_ism.jpg

மெதுவாக உள்ளே சுற்றி சுற்றி பார்த்தவர்கள்...இந்த பள்ளிக்கூடத்தில தன் குழந்தை படிக்க போவதை தன் கண்களால் படம் பிடித்தார்கள்...மைதானம் உள்ளது தான் போல...அங்கே...சரி வா..என்று சொல்லி அப்பா உள்ளே செல்கிறார் முதலில்...பின் தொடருகிறாள் அம்மா...

ஒன்றுமே தெரியாதவர் போல ....அங்கே....அப்பா...

தொடரும்....

aren
07-11-2009, 04:02 PM
கதை ஆரம்பம் தெரிகிறது ஆனால் அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. தொடரும் என்று போட்டுவிட்டீர்கள்.

தொடர்கதையின் அடுத்த பாகத்தைக் கொடுக்க நாள் கடத்தாதீர்கள்.

சரண்யா
08-11-2009, 02:02 AM
நிறைய நன்றிகள் aren அவர்களே..நீங்கள் தான் முதலில் பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள்....
இது நான் எழுத முயற்சிக்கும் முதல் கதை....சின்ன சிட்டுகளை பற்றி எழுத தோன்றியதில் உதித்தவை...தெரியுல..எந்த அளவுக்கு வரும் என்று...
என்னால் முடிந்த வரை நல்லா எழுத முயற்சிக்கிறேன்...
தவறு இருந்தால் சுட்டி காட்டவும்.... ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்....நன்றிகள்..

சரண்யா
08-11-2009, 02:04 AM
குட்டீஸ்(2)
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/th_kutties.jpg

ஒன்றுமே தெரியாதவர் போல ....அங்கே....அப்பா...என் மகளுக்கு 2 1/2 வயது தான் ஆகிறது.....சேர்க்கலாமா...என்றார்....

அம்மா....ஒரமாக ஒரு பார்வை பார்த்து விட்டு.....இல்ல... அவள்..நல்ல படிப்பாளா..தெரியுல...அதான்..இப்படி கேட்கிறாங்க...தயங்கி தயங்கி...சொல்லுகிறாள்... அம்மா..

ஒ..தாராளமாக..இப்ப எல்லாம் எவ்வளவோ முன்னேறிக் கொண்டு இருக்காங்க பசங்க....
2 1/2 வயதிலேயே ...படிக்கிற பசங்க எங்க பள்ளிக்கூடத்தில இரண்டு பிரிவு இருக்காங்க...

பொன்னு நல்ல பேச ஆரம்பித்துவிட்டாளா...பிறப்பு சான்றிதழ் நகலைக் (birth certificate -xexox copy)
கொண்டு வாங்க...
தலைமையாசிரியரை நாளை வந்து சந்தித்து அட்மிஷன் போட்டு கொள்ளலாம்...

இன்று நீங்கள் பார்க்க இயலாது....சார் மீட்டீங் ல இருக்காங்க...அதனால நாளை வாங்க...

நிச்சயம் அட்மிஷன் உண்டா...சந்தேகத்துடன் அப்பா கேட்கிறார்...

ம்... தலைமை ஆசிரியர் உங்களிடம் பேசுவார்...வரும் போது மகளையும் கூட்டிட்டு வாங்க...

கட்டணம் எவ்வளவு மேடம்...
அம்மா..தனக்கே உரிய பாணியில் எவ்வளவு இருந்தா என்ன ங்க..சேர்க்க தான போறோம் என்று
முணுமுனுக்கிறாள்...கணவனிடம்....வாங்க நாளை வருவோம் என்கிறாள்...

கிளர்க்...இந்தாங்க சார் உங்க மகளை சேர்க்க நீங்கள் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை எழுதியிருக்கேன்....நன்றி மேடம்..நாளைக்கு வந்து பார்க்கிறோம்...என்றார்...

வெளியே வருகிறார்கள்...அங்கே மைதானத்தில் சின்ன சிறார்கள் விளையாடுவதை பார்க்கிறார்கள்...
மீனியல் அங்கு ஒரு சின்ன குட்டீஸுக்கு பால் ஆத்தி கொடுத்து கொண்டிருந்தாள்.
கேட்டுகிட்டிங்களா...
நாளை வர சொல்லி இருக்காங்க...தலைமை ஆசிரியர் சந்திக்க....
என்ன ..பால ஆத்திகொண்டிருக்கீங்க போல...ஆமாம் மா...இந்த குழந்தை காலையில சாப்பிடல அவுங்க அம்மா கொடுக்க சொல்லியிருந்தாங்க...பாவம்.மா..பிள்ளைக்கு பசி...துவண்டு போயிடுச்சு...அதான்....

சந்தோஷினியின் அம்மாவின் கண்களில் ஒரு மலர்ச்சி....ம்..இந்த மீனியல் தன் குழந்தையும் பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் மிளிர்ந்த பார்வை....

அங்கேயிருந்த குழந்தைகள் அழகாக வரிசையில் செல்வதை பார்த்தார்கள்...இது தான் இந்த பள்ளியின்
சீருடை போல...அழ்காக தான் இருக்கிறது...

நகர்ந்தார்கள்...ஏன் ங்க...நம்ம குட்டிமா..க்கு..இந்த ஸ்கூல் பிடிக்கும் ல...
ம்..ம்.வா..நல்லாத்தான் இருக்கிறது...இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் சொன்னா கேட்க மாட்ட...
அப்பறம் ..என்னையே கேளு...பிடிக்காததை போல அலுத்து கொள்கிறார் அப்பா..

ரொம்ப கனவுகளுடன் அப்பாவும் அம்மாவும் மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறார்கள்..

ஸ்கூல் போனோம் குட்டிமா....பெரிசா...சூப்பரா..குட்டிமா..விளையாட நிறைய இருக்கு அங்க...
நாளைக்கு போவோம்....சரி குட்டிமா..அங்க உன்னோட பேரு கேட்பாங்கலே...
என்ன சொல்லுவிங்க....சந்தோசின்னி....இல்ல குட்டிமா...சின்னி இல்ல ஷினி மா...
சொல்லுங்க...சந்தோ....சினி...
இல்ல குட்டிமா... இங்க பாருமா...சந்தோஷினி.....
அம்மா ஆவலுடன் அவள் முகத்தை பார்த்து கொண்டிருக்க...அப்பா அவளை ஏன் இப்பவே படுத்தி எடுக்கிற...வரலன்னா விடு...அவளே பெரிசானா சொல்லிப்பா...
நீங்க வாங்க செல்லம்...குட்டிமா....அம்மு....
இருங்க ங்க சொல்லுவா...நாளைக்கு அட்மிஷன் கிடைக்க வேண்டுமே...
சந்தோ..ஷினி...சொல்லிவிடும் அந்த குட்டீஸ்....
அம்மாவின் முகம் மலரும்....அப்பா அங்கே எங்கையோ பார்த்து கொண்டு...சொல்லிவிட்டாள் என மனதிலே நினைக்கிறார்....பள்ளி செல்ல தயார் படுத்துகிறாள் தாய்.

மறுநாள் காலை.....

தொடரும்.....

சுகந்தப்ரீதன்
08-11-2009, 03:48 AM
முதல் முயற்சி என்பதாலோ என்னவோ தெரியலை குழந்தைத்தனமே உங்கள் கதை முழுதும் விரவி கிடக்கிறது..!! தொடர் கதையாக எழுதும்போது கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது சரண்யா..!! உதாரணத்திற்க்கு உங்கள் கதையின் முதல்பகுதியில் ஆண்குழந்தை என்பதுபோல் வாக்கியத்தை அமைத்திருக்கிறீர்கள்..!!


எதில் என் குழந்தை பாதுகாப்பாக இருப்பான்...
அடுத்த பகுதியில் அதுவே பெண் குழந்தையாக மாறுகிறது..!!:icon_rollout:ஒருவேளை இது எழுத்து பிழையாகக்கூட இருக்கலாம்... கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்...!! இல்லையென்றால் அனு அக்கா கதை எழுதிய கதையாகிவிடும்...:D:D:D

உங்களின் முதல் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்...!!:icon_b:

சரண்யா
08-11-2009, 07:24 AM
நன்றிகள்....சுகந்தப்ரீதன் அவர்களே....
ஆழமாக படித்து பின்னூட்டமிட்டு பிழையை திருத்தியமைக்கு....
அனு அக்கா கதை தெரியாதே....

ஜனகன்
08-11-2009, 10:42 AM
குட்டிஸ்(1),(2) வாசித்தேன். நல்லாய்தான் போகின்றது கதை, தொடர்ந்து படையுங்கள்.
ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

அமரன்
08-11-2009, 11:53 AM
தலைப்பு அசர வைக்கும் ஆயிரம் கவிதை.

தொட்ட பொருள் நெஞ்சை உதைக்கும் குழந்தை.

என்ன குறை..?

வசனம், சொல்லும் விதம் எல்லாமே தொடர்பறுந்து வருகிறது. அவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கதை மேலும் மிளிரும்.

கதை எழுதி விட்டு குறைந்தது மூன்று முறையாவது வாசியுங்கள் சரண்யா. உங்களுக்கே சில திருத்தங்கள் செய்யத் தோன்றும். அதன் பிறகு வந்து விழுக் கருத்துகளை கவனமாகப் பிடியுங்கள். எக்காரணம் கொண்டும் எழுதுவதை தடைப்படுத்தாதீர்கள். எழுத எழுத எல்லாம் வளைந்து வந்து விடும்.

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

சரண்யா
09-11-2009, 02:14 AM
குட்டிஸ்(1),(2) வாசித்தேன். நல்லாய்தான் போகின்றது கதை, தொடர்ந்து படையுங்கள்.
ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

நன்றிகள்.....ஜனகன்.....சந்தோஷமே.....
கதையை எழுத வைப்பது...ஊக்கத்தாலே....

சரண்யா
09-11-2009, 02:19 AM
தலைப்பு அசர வைக்கும் ஆயிரம் கவிதை.

தொட்ட பொருள் நெஞ்சை உதைக்கும் குழந்தை.

என்ன குறை..?

வசனம், சொல்லும் விதம் எல்லாமே தொடர்பறுந்து வருகிறது. அவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கதை மேலும் மிளிரும்.

கதை எழுதி விட்டு குறைந்தது மூன்று முறையாவது வாசியுங்கள் சரண்யா. உங்களுக்கே சில திருத்தங்கள் செய்யத் தோன்றும். அதன் பிறகு வந்து விழுக் கருத்துகளை கவனமாகப் பிடியுங்கள். எக்காரணம் கொண்டும் எழுதுவதை தடைப்படுத்தாதீர்கள். எழுத எழுத எல்லாம் வளைந்து வந்து விடும்.

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

சரி அண்ணா....நான் வாசிக்கிறேன்...பிழையிக்கா..என்பதிலே கவனம் செலுத்தி விட்டேன் அண்ணா...
நன்றிகள்...தொடர்ந்து ஊக்கமளிக்குமாறு...அன்புடன்...கேட்டு கொள்கிறேன்...

சரண்யா
09-11-2009, 10:50 AM
குட்டீஸ்(3)...http://3.bp.blogspot.com/_2qZyM281i_w/Svf_nUVMRhI/AAAAAAAAAHg/3Z2DuOIwv-o/s200/kutties2.jpg

மறுநாள் காலை...
அம்மா பரபரப்பாக தன் வேலையை செய்கிறாள்..தன் குழந்தை ஸ்கூல் செல்லுவது அம்மாவுக்கு பெரிய ஆவலாகவே உள்ளது....

அப்பா குட்டிமா தூங்குவதை பார்த்து மனசுக்குள்ளே.... இப்படி தூங்குபவளை பள்ளியில் சேர்க்க போகிறோமே..என்று எண்ணிக்கொண்டே வெளியில் வந்து எப்பொழுதும் போல நாளிதழ் படிக்க உட்காருகிறார்...
அப்பொழுது அவருடைய கைப்பேசி அழைக்கிறது...லதா எடுத்துட்டு வா மா.. என்றார்...
என்ன ங்க ஸ்கூல் போணும் உங்கள் அலுவலகத்திலையும் ஒரு மணி நேரம் அனுமதி வாங்குங்க...என்று கிட்சனில் இருந்து சொல்கிறாங்க அம்மா...

ம்..சரி ..சரி...என்று பிடிக்காத போல சொல்கிறார்..
என்றுமே வெகு நேரம் தூங்கும் சந்தோஷினியை பார்க்கிறாள் அம்மா...
கிட்ட சென்று....செல்..ல...ம்... செல்..லம்...இங்க பாருங்க.....என்றாள்...இன்னைக்கு ஸ்கூல் போகலாமா குட்டிமா.....
சந்தோஷினி ......ஒன்று அறியாமல்..மெதுவாக தன் வலது கைகளால் கண்களை துடைத்து கொண்டு...(அ)...ம்மா.....என்கிறாள்....
அதற்குள் அம்மா அலமாறியில் தீபாவளிக்கு எடுத்த சட்டைகளில் எந்த சட்டை போடலாம் என்று யோசிக்கிறாள்....ம்...குட்டிமா...புது சட்டை போட்டுகிட்டு போவோமா...என்கிறாள்...

அப்பொழுது கிட்சனிலிருந்து குக்கர் சத்தம் கேட்டு அம்மா...செல்கிறாள் அங்கே..குட்டிமா. அப்பாகிட்ட போங்க...என்று சொல்கிறாள் அம்மா...

மெதுவாக மெல்ல நடந்து அ...ப்...பா.. என்று சொல்லுகிட்டே வருகிறாள்...
வா....மா... என்று மடியில் அமர்த்தி கொண்டு...மெதுவாக நெற்றியில் உள்ள தலைமுடியை
விளக்கிவிட்டு...என்ன குட்டிமா..ஸ்கூல் போணுமா...தூக்கம் வருகிறதா..என்றார்..
அ.ப்..பா...
அவள் அதை கேட்காமல்... நாளிதழில் உள்ள படங்களை பார்க்கிறாள்....தட்டுகிறாள் அந்த படத்தின் மேலே....அதுவா...கம்பியூடர் குட்டிமா....என்றார்....சந்தோஷினி புரியவில்லை என்றாலும் தலை ஆட்டுகிறாள்....

பின்பு அம்மா கொடுக்கும் சத்ததில் அப்பா கிளம்புகிறார்...குட்டிமா...ஆசையாக அழைத்து கொண்டு...அம்மா ஒரு தேவதை போல அலங்காரம் செய்கிறாள்....

முடியே இல்லை தான் இருந்தும் டிரஸ் உள்ள கலரிலே அழகான பூக்கள் போல கிளிப் மாட்டி..கழுத்தில கைகளில்.. என சந்தோஷினி ரெடி ஆகிறாள்...

அம்மாவும் ஏதோ குழந்தை சேர்க்கும் ஆர்வத்தில் தானும் கிளம்பி.... செல்லுகிறார்கள்...ஸ்கூலுக்கு...

அங்கே....

தொடரும்...

அறிஞர்
09-11-2009, 02:57 PM
பள்ளி சேர்க்க பெற்றோர் படும் சந்தோசமான, வித்தியாசமான் அனுபவங்கள் உங்கள் வரிகளில்...

தொடர்ந்து எழுதுங்க...

கீதம்
10-11-2009, 06:27 AM
கதை நன்றாக உள்ளது, சரண்யா அவர்களே. தொடர்ந்து தாருங்கள். அமரன் அவர்கள் சொன்னது போல் வாக்கியங்களை சற்று கோர்வையாகக் கொடுத்தால் கதையின் சுவாரசியம் குன்றாமல் இருக்கும். முதல் முயற்சிக்கு என் வாழ்த்து. அன்புடன் கீதம்.

ஜனகன்
10-11-2009, 08:48 AM
கதை சவாரசியமாக போய்கொண்டு இருக்கின்றது. இது போலத்தான் அம்மாக்கள் தம் மனத்தில் உள்ளவற்றை பிள்ளைகளுடன் கதைத்துக்கதைத்து, அலுவலை முடிப்பார்கள். ஆனால் பிள்ளைக்கு ஒன்றும் விளங்காது.இது நடைமுறையில் உள்ளதுதான். நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.

samuthraselvam
10-11-2009, 10:22 AM
முதல் கதைக்கு வாழ்த்துக்கள் சரண்... சின்ன குழந்தைங்க சொல்லுற கதை மாதிரியே இருக்கு.... இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி வேணும் என்வது என் கருத்து....

சமுத்ராவிடம் இதே மாதிரி ஒரு கேள்வியை நான் கேட்டேன் " குஞ்சுக்குட்டி..! நீ இப்ப ஜாலியா வெளையாடிட்டு, டிவி பார்த்திட்டு இருக்கே.. பள்ளிக்கு போன இதெல்லாம் கட் ஆகுமே?" என்றேன். அதற்க்கு அவள் "நான் சீக்கிரமா படிச்சிட்டு வந்து விளையாடுவேன். ஸ்கூல் பஸ்ஸில் டிவி இருக்குமில்ல? அதைப் பார்ப்பேன்" என்கிறாள் கூலாக... என்ன சொல்ல, இந்தக் காலத்து பிள்ளைகள் படு சுட்டி இல்லையா?

வாழ்த்துக்கள் சரண்...

சரண்யா
10-11-2009, 11:42 AM
பள்ளி சேர்க்க பெற்றோர் படும் சந்தோசமான, வித்தியாசமான் அனுபவங்கள் உங்கள் வரிகளில்...

தொடர்ந்து எழுதுங்க...

நன்றிகள் அறிஞர் அவர்களிடம் வாழ்த்துகள் பெற்றதில ரொம்ப சந்தோஷம்...
தொடர்ந்து படிக்கணும்... அன்போட கேட்டு கொள்கிறேன்...

சரண்யா
10-11-2009, 11:45 AM
கதை நன்றாக உள்ளது, சரண்யா அவர்களே. தொடர்ந்து தாருங்கள். அமரன் அவர்கள் சொன்னது போல் வாக்கியங்களை சற்று கோர்வையாகக் கொடுத்தால் கதையின் சுவாரசியம் குன்றாமல் இருக்கும். முதல் முயற்சிக்கு என் வாழ்த்து. அன்புடன் கீதம்.

நன்றிகள் கீதம் அவர்களே...
மனதில் தோன்றுவதை அப்படியே எழுதிகிறேன் யதார்தமாக....அதனாலோ என்னவோ..இருந்தும் முயற்சிக்கிறேன்...

சரண்யா
10-11-2009, 11:50 AM
கதை சவாரசியமாக போய்கொண்டு இருக்கின்றது. இது போலத்தான் அம்மாக்கள் தம் மனத்தில் உள்ளவற்றை பிள்ளைகளுடன் கதைத்துக்கதைத்து, அலுவலை முடிப்பார்கள். ஆனால் பிள்ளைக்கு ஒன்றும் விளங்காது.இது நடைமுறையில் உள்ளதுதான். நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றிகள் ஜனகன் அவர்களே....
பழகிப்போன ஒன்றை கதையில் வைத்ததால் கதை சுவாரிஸ்யம் இல்லை என்று எண்ணுகிறார்களோ என்னவோ..
பசங்க செய்வதை வளர்பதை படிப்பதை சுற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லனும் தோன்றியதால் உதித்த கதை...முதல் கதையை வாழ்த்தியமைக்கும் ஊக்கம் கொடுப்பதற்கும் நன்றிகள்...

சரண்யா
10-11-2009, 11:55 AM
முதல் கதைக்கு வாழ்த்துக்கள் சரண்... சின்ன குழந்தைங்க சொல்லுற கதை மாதிரியே இருக்கு.... இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி வேணும் என்வது என் கருத்து....

சமுத்ராவிடம் இதே மாதிரி ஒரு கேள்வியை நான் கேட்டேன் " குஞ்சுக்குட்டி..! நீ இப்ப ஜாலியா வெளையாடிட்டு, டிவி பார்த்திட்டு இருக்கே.. பள்ளிக்கு போன இதெல்லாம் கட் ஆகுமே?" என்றேன். அதற்க்கு அவள் "நான் சீக்கிரமா படிச்சிட்டு வந்து விளையாடுவேன். ஸ்கூல் பஸ்ஸில் டிவி இருக்குமில்ல? அதைப் பார்ப்பேன்" என்கிறாள் கூலாக... என்ன சொல்ல, இந்தக் காலத்து பிள்ளைகள் படு சுட்டி இல்லையா?

வாழ்த்துக்கள் சரண்...
நன்றிகள்...samuthraselvam அவர்களே...
நானும் குட்டீஸோட சேர்ந்துவிட்டேன் போல ....
தொடர்ந்து படிங்க...நன்றிகள்...
பல பேருக்கு தெரிந்தவை தான்...இருந்தும் அதன் காட்சி கண் முன்னாடி உங்களுக்கு என்னோட வரிகளில்..உணர்வீர்கள்..என்று எண்ணுகிறேன்...

நீங்கள் அங்கு இருப்பதாக கூட உணர தோன்றலாம்...சரியா...
யதார்தமாக....உள்ளதே...

samuthraselvam
11-11-2009, 04:34 AM
நன்றிகள்...samuthraselvam அவர்களே...
நானும் குட்டீஸோட சேர்ந்துவிட்டேன் போல ....
தொடர்ந்து படிங்க...நன்றிகள்...
பல பேருக்கு தெரிந்தவை தான்...இருந்தும் அதன் காட்சி கண் முன்னாடி உங்களுக்கு என்னோட வரிகளில்..உணர்வீர்கள்..என்று எண்ணுகிறேன்...

நீங்கள் அங்கு இருப்பதாக கூட உணர தோன்றலாம்...சரியா...
யதார்தமாக....உள்ளதே...

சரி தான் சரண்... குழந்தைகள் சம்பந்தமாக எதை நினைத்தாலும் படித்தாலும் பார்த்தாலும் நாமும் குழந்தைகளாகவே மாறிவிடுகிறோம்... அப்படி மாறும் சமயங்களில் நம் மனதுக்குள் இருக்கும் நிம்மதி மற்ற சமயங்களில் இல்லாமலே போய் விடுகிறது...

அமரன்
11-11-2009, 08:25 AM
நொடிக்கு ஒரு பிரேம் எனப் பதிவுசெய்யும் தொழில்நுட்பத்தை கதையில் புகுத்தி, (மதிவாணன் கதைகளில் இது அதிகமாக இருக்கும்)சின்னஞ் சிறு பறவையை உயரப் பறக்க வைக்க இறக்கை கட்டி விடும் பெற்றோர் அழகை மையக் கருவாக்கி வாசகர்களை வசியம் செய்ய முயற்சி செய்கின்றீர்கள். படிப்படியாக வெற்றிப் பாதையில் பயணிக்கிறீர்கள். பாராட்டுகள்.

சரண்யா
11-11-2009, 03:23 PM
நொடிக்கு ஒரு பிரேம் எனப் பதிவுசெய்யும் தொழில்நுட்பத்தை கதையில் புகுத்தி, (மதிவாணன் கதைகளில் இது அதிகமாக இருக்கும்)சின்னஞ் சிறு பறவையை உயரப் பறக்க வைக்க இறக்கை கட்டி விடும் பெற்றோர் அழகை மையக் கருவாக்கி வாசகர்களை வசியம் செய்ய முயற்சி செய்கின்றீர்கள். படிப்படியாக வெற்றிப் பாதையில் பயணிக்கிறீர்கள். பாராட்டுகள்.

ரொம்ப நன்றிகள் அண்ணா...
தொடர்ந்து படியுங்கள்..அண்ணா..

பா.ராஜேஷ்
12-11-2009, 02:44 PM
என்னங்க !? இன்னும் அடுத்த பாகம் தயார் ஆகவில்லையா !!?? நல்லாவே எழுதி இருக்கீங்க இன்னும் கொஞ்சம் சிரமப் பட்டால் இன்னும் நன்றாக வரும் என்பது எனது கருத்து... ஈர்ப்பு குறைவாக இருப்பதாக தோன்றுகிறது...

சரண்யா
13-11-2009, 12:37 AM
என்னங்க !? இன்னும் அடுத்த பாகம் தயார் ஆகவில்லையா !!?? நல்லாவே எழுதி இருக்கீங்க இன்னும் கொஞ்சம் சிரமப் பட்டால் இன்னும் நன்றாக வரும் என்பது எனது கருத்து... ஈர்ப்பு குறைவாக இருப்பதாக தோன்றுகிறது...

நன்றிகள்...பா.ராஜேஷ் அவர்களே..
உங்களின் முதல் வரியில் ஆர்வமும்
அடுத்த வரியில் அறிவுரையும் தந்தற்கு நன்றிகள்...
விரைவில்..அடுத்த பாகம்...

சரண்யா
14-11-2009, 02:20 AM
http://2.bp.blogspot.com/_2qZyM281i_w/Sv4gCLm5gxI/AAAAAAAAAHw/Kg7C9Ns79DA/s200/crop+devathai.jpg

அங்கே இவர்கள் செல்லுவதற்கு முன்பே மூன்று பெற்றோர்கள் தலைமை ஆசிரியரை சந்திக்க காத்திருந்தனர்..
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ரொம்ப கண்டிப்பானவர் எனக் கேள்விப் பட்டிருப்பதை நேரில் பார்த்தனர்....அவரின் நடவடிக்கையில்....பள்ளி ஆசிரியர்கள் அவரிடம் பேசும் விதம்...அனைத்தையும் பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.

இவையெல்லாம் பார்க்கும்படி செய்வதே அந்த பள்ளிக்கு பேரு கிடைக்கத் தான் என்பதை அறியாமல் காத்திருந்தனர்...

பின்பு தலைமை ஆசிரியர் பள்ளியின் வழிபாடு முடிந்தவுடன் வந்தார்....
சந்தோஷினியின் அப்பா கைக்கடிகாரத்தை பார்த்தார்....
அம்மா சொல்லி கொண்டிருந்தார்...குட்டிமா...உன்னோட பெயர் கேட்டா...அழகாக சொல்லணும் என்று......பேசி கொண்டிருந்தாள்...சந்தோஷினியிடம்....

சந்தோஷினியோ முதல் முறை என்பதால் சுற்றி பார்த்து கொண்டிருந்தாள்....தலையை ஆட்டிக்கொண்டே...
மற்ற குட்டீஸ் வந்ததையும் பார்க்கிறாள்...

முதலில் வந்த இருவரை உள்ளே அழைத்தனர்....
பின்பு இவர்களுக்கு முன்பு வந்த பெற்றோரையும் அருண் தம்பதியினரையும் உள்ளே அழைத்தனர்...

உள்ளே..இவர்களுக்கு முன் இருந்தவரிடம் பேசுவதை பார்த்து கொண்டிருந்தார்..
சந்தோஷினியின் அப்பா...அம்மா குட்டிமாவை பேசாமல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள்...
சந்தோஷினிக்கு இடம் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில்....காத்திருந்தனர்....

தலைமை ஆசிரியரிடம் குழந்தையின் சான்றிதழ் கொடுத்தவர் மேஜையின் மேலே கையை வைத்துவிட்டார்....அந்த அப்பா....தலைமை ஆசிரியர் அதை பார்த்தார் சான்றிதழை படித்து கொண்டே...அப்பா அந்த மகளை பார்த்து கொண்டிருந்தார் தலைமை ஆசிரியரை கவனிக்காமல்....

இதை சந்தோஷினியின் அப்பா கவனித்து விட்டார்....ஒன்றும் சொல்லமுடியவில்லை....மேஜை மேல் கை வைப்பது இங்கிதமில்லை என்று அவர் அறிந்திருந்தார்....

ஏதோ ஒரு காரணத்தை சொல்லி சற்று காத்திருக்க சொன்னார் அவர்களை....
பின் அருண் அவர்கள்... சந்தோஷினியை அறிமுக படுத்திவிட்டு தான் இந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும் தன் மகளை பள்ளியில் சேர்த்து கொள்ளுமாறு ரொம்ப தெளிவாக பேசினார் அப்பா அருண்....
கணவர் இப்படி சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதை முதல் முறையாக பார்த்து கொண்டுருக்கிறாள் அம்மா லதா...
தலைமை ஆசிரியர் சற்றும் தயங்காமல் சான்றிதழை பார்த்துவிட்டு...
ஹலோ....வாட் ஸ் யுவர் நேம் என்கிறார்....சந்தோஷினியை பார்த்து...
சந்தோஷினி தனக்கே உரிய பாணியில் மழலையோடு...சந்..தோ.ஷி..னி..என்றாள்..

குட்.....என்று சொல்லிக்கொண்டே....கைகொடுத்தார்...சாக்லேட் வழங்கினார்...
பின் அட்மிஷன் போட்டு கொள்ளலாம் என்று அப்பா அருணுக்கும் கைகொடுத்தார்...
"தஃங்கியு"..என்றார் அப்பா..."வெல்கம்" என்றார் தலைமை ஆசிரியர்...
பின் அப்பா அருணுக்கு அம்மா லதாவிற்கும் ரொம்ப சந்தோஷம்....நேற்று சென்ற அந்த கிளர்கிடம் அட்மிஷன் படிவத்தில் எல்லாவற்றையும் எழுதி கொடுத்துவிட்டு சேர்த்துவிட்டனர்...சந்தோஷினியை....

அந்த பள்ளியில்...சேர்ந்தவுடன்...சிலர்...

(தொடரும்...)

பா.ராஜேஷ்
14-11-2009, 02:21 PM
மழலையர் தினத்தில் குட்டீஸ் நன்றாகவே இருக்கின்றது...

சரண்யா
15-11-2009, 02:05 AM
நன்றிகள்...தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கு...

சரண்யா
17-11-2009, 01:12 AM
http://2.bp.blogspot.com/_2qZyM281i_w/Sv4gCLm5gxI/AAAAAAAAAHw/Kg7C9Ns79DA/s200/crop+devathai.jpg
குட்டீஸ்...(5)

அந்த பள்ளியில்...சேர்ந்தவுடன்...சிலர்...
பழங்கால முறைப்படி....பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தட்டில் பழங்களை வைத்துக் கொடுத்து...முறைப்படி சேர்ப்பவரும் உண்டு...

பள்ளியில் சேர்ந்தவுடன்...ஒரு சில இடங்களை அன்று மட்டும் பார்க்க அனுமதி அளிக்கும் பள்ளியின் நிர்வாகம்...

அப்படி உள்ளே செல்ல ஆவலுடன் காத்திருந்தனர்....சந்தோஷினியின் குடும்பம்..
அப்பா அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தவுடன்...கொஞ்சம் நேரம் அவகாசம் கேட்டார்...பின் லதா..நான் ஆபிஸ் போகிறேன் நீயும் குட்டிமாவும் ஆட்டோல வீட்டுக்கு போங்க..என்றார்...
சரிங்க...ஒரு ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு போங்க...என்றாள்...
காத்திருந்தனர்...மூன்று நிமிட இடைவேளைக்குள் உள்ளே அழைத்தனர்...

அங்கு அரிசியை ஒரு தட்டில் வைத்திருந்தனர்...கடவுளின் படம் அலங்கறிக்கப்பட்டு இருந்தது..முதன் முதலில் பள்ளி துவங்கிய இடம் என்று..அந்த இடத்தில் தான்.... உயர்வு பெற்றதால் ராசி என்றும் அங்கு தான் அழைத்து சென்றனர்...

சந்தோஷினிஅப்படியே பார்த்து கொண்டே இருந்தாள் ...இங்க வா மா...என்று ஒரு
மிஸ் அவளை அழைக்க....சந்தோஷினி மடியில் அமர்த்தி கொண்டு...எழுதுவோமா...என்று சொன்னாங்க...
சந்தோஷினி சிணுங்கி கொண்டே....
அம்மா... அப்பாவை பார்க்கிறாள்...
அப்பா..அங்க பாருமா..என்றாள்...
அம்மா..குட்டிமா..எழுதிருங்கிளா...ம்..ம்...

என்னவென்றே தெரியாமல் பார்த்து கொண்டிருக்க.... மிஸ்.. குட்டிமாவோட... விரலை பிடித்து...அ போடுவோமா.....என்று அரிசியில் போட்டாங்க...
அவளின் பெயரையும் எழுதுங்க...என்று லதாம்மா கேட்டு கொண்டதையும் எழுதினாங்க.....

அந்த காலத்தில பண்ணுவாங்க...அதுனால ஒரு சாஸ்திரத்துக்காக தான்....என்று சொன்னாங்க....சரி வாங்க.... அங்க.....என்று உள்ளே கைக்காட்டி....அங்க போயி விளையாடுலாமா...என்று கேட்டாங்க....
குட்டிமா சந்தோஷினிக்கிட்ட ....குட்டிமாவும் தலையாட்ட.....

உள்ளே சென்றார்கள் மிஸ்,குட்டிமா, லதா...எல்லாரும்...
அப்பாவிற்கு அழைப்பு வந்தது...கைப்பேசியில் பேசி கொண்டிருக்க...

அங்கே....பார்த்தால்...

(தொடரும்)

சரண்யா
19-11-2009, 01:05 AM
அட அடா....யாருமே...படிக்க வில்லையா...சரி நான் அடுத்த பதிவை இடுகிறேன்...

சரண்யா
19-11-2009, 01:07 AM
குட்டீஸ்..(6)

அங்கே....பார்த்தால்...
சந்தோஷினியை நோக்கி ஒரு பார்பிஃ (barbie) பொம்மை http://www.my-family-fun.com/pictures/princess-rosella-doll-barbie-the-island-princess-1.jpg பாட்டு பாடிக்கொண்டே நகர்ந்து வந்தது...
அங்கே... பொம்மைகள் பல விதத்தில் தொடர்வண்டியில் நகர்வதை பார்த்தாள்....
http://images.asia.ru/img/alibaba/photo/51586773/Electric_Baby_Train.jpg http://t1.gstatic.com/images?q=tbn:yUpRdj6b9rtRHM:http://www.made-in-china.com/image/2f0j00hvHaibqPvRkEM/Wooden-Train-TS-5530-.jpg

மிஸ் சந்தோஷினியின்http://t2.gstatic.com/images?q=tbn:7tQS_6X8Zyk__M:http://www.getprice.com.au/images/uploadimg/398/350_zippyspulltoy-copy_2_2_2.jpg கையில் ஒரு கயிறு இழுக்கும் பொம்மையை உள்ள கயிற்றை கொடுத்து இழு என்றாங்க...சந்தோஷினிக்கு அங்கு உள்ள அனைத்துமே புதுசாக இருந்தது...அம்மாவை பார்த்தாள்...லதாம்மா...இழு குட்டிமா..என்றாள்.

சட்டத்தில் மணிகள் வரிசையாக உள்ளதை வண்ணமயமாக இருக்கவும்..குட்டிமா..அதை தொட்டு
http://t0.gstatic.com/images?q=tbn:WyokMcc2Qvr71M:http://www.discountattic.com/24648-EducationalWoodClock.jpg http://t1.gstatic.com/images?q=tbn:-NcBy2qQlk4EwM:http://www.thedailygreen.com/cm/thedailygreen/images/FK/cubby-wooden-toy-lg.jpg
பார்த்தாள்..பின்பு...லதாம்மா நாளைக்கு வருவோமா...என்று குட்டிமாட்ட கேட்டாள்..
ம்..ம்ம்... என்று மழலைக்கே உரித்தான அழகாக தலையை ஆட்டினாள்...
அவளுக்கு தெரியாது நாளை அம்மா வரமாட்டாங்க என்பது.

மிஸ்...இதுவெல்லாம் உள்ளே விளையாட வைப்பது(indoor games)...அங்க வெளியில விளையாட வைப்பாங்க (outdoor games) ground இருக்கு..பாருங்க...

http://cn1.kaboodle.com/hi/img/2/0/0/4d/0/AAAAAmfZGJsAAAAAAE0Jig.jpg?v=1180238968000

http://t0.gstatic.com/images?q=tbn:2s9ImDGUy31pvM:http://www.made-in-china.com/image/2f0j00hBlEqyTICDcOM/Wharf-Seesaw-QQ5036-1-.jpg

அங்க பார்த்தால் ஊஞ்சல்;ராட்டினம்;சறுக்குமரம்(see-saw;slide; swing; merrygo round;) எல்லாம் இருந்தது...
அப்பா அங்கே இருந்தாங்க..அம்மாவும் அப்பாவுக்கும் ஒரு த்ருப்தி குட்டிமாவை ஸ்கூல் சேர்த்து விட்டதால்...
அவர்கள் அறியவில்லை இவையெல்லாம் சில நேரம் மட்டுமே உபயோகிக்கப்படும்...வரிசையாக வகுப்பறையில் உட்கார வைத்து மனப்பாடம் என்கிற பாடம் என்பதே இப்போது உள்ள கல்வி முறை ஆகிவிட்டது...

மிஸ்..வேற ஒரு மிஸ் சொல்லி தருவாங்க..உங்க பாப்பாவுக்கு..சாப்பிட snacks மற்றும் தண்ணீர் மட்டும் கொடுங்க...அப்பறம் சொல்லுவாங்க...என்று அந்த பள்ளியின் வழக்கத்தை கூறினாங்க...
சிரித்து கொண்டே..விடைபெற்றாள்..சந்தோஷினி....மிஸ்...பார்த்து கொண்டே அடுத்த பெற்றோரிடம் சென்று விட்டாங்க...
இப்போ சந்தோஷினி தன் வசமில்லை வேடிக்கை பார்த்து கொண்டே...அம்மாவின் சேலையை பிடித்து கொண்டு நடந்தாள்.

அருண் மற்றும் லதா அப்படியே விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தனர்.
அப்பாவிற்கு அலுவலகத்து போகும் நேரம் என்பதால்..அவசரமாக விடைபெற்று சென்றார்..
பின் சந்தோஷினியை தூக்கிக்கொண்டு லதாவும் பக்கத்தில் இருந்ததால் நடந்தே சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் பாட்டி தாத்தாவிடம் தொலைப்பேசியில் பேசினாங்க...
ஸ்கூல் சேர்ந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாள்..லதா..குடும்பத்தாரிடம்..
குட்டிமா... அப்பா வந்தவுடன் புது டிரஸ் பஃக் வாட்டர் பாட்டில் எல்லாம் வாங்க போலாமா...என்றே சந்தோஷினியிடம் பேசிக்கொண்டே வேலையை பார்த்தாள்.

அப்பா அருண் அங்கே ஸ்கூல் சென்றதால் தாமதம் ஆனதை மேல் அதிகாரியிடம் விளக்கி விட்டு தன் சீட்டில் நிம்மதி பெருமூச்சு விட்டு அமர்ந்தார்..

மறுநாள் காலை...
(தொடரும்...)

samuthraselvam
19-11-2009, 06:53 AM
ஆர்வமாக உள்ளது தொடருங்கள் சரண்... சந்தோஷினி பாப்பாகூட நாங்களும் நாளைக்கு ஸ்கூலுக்கு போவோமே.....

சரண்யா
19-11-2009, 09:55 AM
ஆர்வமாக உள்ளது தொடருங்கள் சரண்... சந்தோஷினி பாப்பாகூட நாங்களும் நாளைக்கு ஸ்கூலுக்கு போவோமே.....

நன்றிகள் samuthraselvam அவர்களே..வரவேற்க்கிறேன்.....ஆனால்.....கதை பாருங்க புரியும் ...

பா.ராஜேஷ்
20-11-2009, 01:22 PM
என்ன, இன்னைக்கு பாப்பா பள்ளி செல்லவில்லையா!!??

சரண்யா
20-11-2009, 02:22 PM
நேரமில்லாததால் எழுதவில்லை....கண்டிப்பாக நாளை.....ஆனால்....

சரண்யா
21-11-2009, 02:13 PM
http://2.bp.blogspot.com/_2qZyM281i_w/Sv4gCLm5gxI/AAAAAAAAAHw/Kg7C9Ns79DA/s200/crop+devathai.jpg

குட்டீஸ்...(7)
மறுநாள் காலை...
குட்டிமா ஸ்கூலில் ஒரு வாரத்திற்கு ஒரு 11:00 மணிக்கு வந்து அழைத்துக் கொள்ள சொல்லி இருந்தார்கள். அதனால் அங்கே இருந்து குட்டிமாவை அழைத்து வந்திடலாம் என்பதே லதாவின் எண்ணம்.ஆகையால் வீட்டு வேலைகளை அவசரமாக செய்து கொண்டிருந்தாள்.

அப்பா அருண் எப்பொழுதும் போல தூங்கும் குட்டிமாவை கொஞ்சிவிட்டு......நாளிதழ் படிக்க உட்கார்ந்திருந்தார்....
லதா காபியை கொடுத்துவிட்டு குட்டிமாவை எழுபினிங்களா...என்று கேட்டுக் கொண்டே.....சமையல் அறைக்கு சென்றாள்...

ம்..நல்லா தூங்கிறா..கொஞ்சம் நேரம் தூங்கட்டும்...குரல் கொடுத்தார்...
இல்லங்க எழுப்புங்க சரியா இருக்கும் என்று சொல்லிக்கொண்டே வேலையைப் பார்த்து கொண்டிருந்தாள்.
வேலையை பார்த்துக் கொண்டே...சற்று..குட்டிமாவிற்கு டிரஸ் எடுக்க உள்ளே சென்றாள்.அங்கு குட்டிமா இல்லை....அப்பாவிடம் உட்கார்ந்திருப்பாள் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே குக்கர் சத்தம் போட ..கிட்சன் சென்று அடுத்து செய்ய வேண்டியதை செய்தாள்.....
அப்பா அருண் பால்கனியில் கைப்பேசியில் பேசிவிட்டு....குட்டிமா அம்மாவிடம் இருப்பதாக நினைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு ரெடி ஆகிறார்...

குட்டிமா.... என்று அழைக்கிறாள் அம்மா லதா..
வா மா...குளிக்கலாம்...ஸ்கூல் போனும் ல....

சந்தோஷினி உள்ளே இல்லை..
அருணிடம் கேட்கிறாள்..எங்க குட்டிமா...
இல்ல அங்க தூங்கலயா....இல்லயே அப்பவே..இல்ல..நான் உங்களிடம் இருப்பதாக நினைத்தேன்.....முதல இந்த செல்போன பேசுவது நிறுத்துங்க...
பொன்னு எங்கன்னு தெரியாம அப்படி என்ன பண்ணிங்க...என்று கேட்கிறாள் லதா...

சரி சரி உடனே என்கிட்ட வந்திடு,,,,அவ எங்க அத பாரு...என்றார் அருண்...
இருவரும் தேடினர்..லதா....அங்க... இங்க சென்று பார்க்கிறாள்...
உள் அறையில்....வெளியில்...கிட்சனில்...என பரபரப்பாக இருந்தது நொடிகள் கூட அங்கே....
என்ன ஆச்சு ங்க எங்கே குட்டிமா...என்று லதா....அம்மாவிற்கே உரியதாய்..சற்று கலங்குகிறாள்....
அப்பா தேடிகிறார்..இன்னொரு முறை....குட்டிமா....என்றே.....
மாடிப்படியில் மேலே..கீழே என எல்லா இடமும் தேடினர்.....
ஆனால் குட்டிமா கிடைக்கல...

அப்பாவிற்கு ஒன்றுமே புரியுல....அம்மா லதாவோ....அழத்தொடங்குகிறாள்.....
ஓடி ஓடி தேடினாலும் யாரிடமும் சொல்லவில்லை....
குட்டிமா......அங்க...
(தொடரும்)

ஜனகன்
21-11-2009, 07:14 PM
சந்தோஜினி (குட்டிமா) எங்கே?????????
எக்கும் ஒரே ஆவலாகவுள்ளது.அப்பாவிற்கு ஒன்றுமே புரியுல....அம்மா லதாவோ....அழத்தொடங்குகிறாள்.....
ஓடி ஓடி தேடினாலும் யாரிடமும் சொல்லவில்லை....
குட்டிமா......அங்க... என சின்னத்திரையில் வரும் ராமா போல் கதையை முடித்துள்ளீர்கள். அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நன்றாகவே கதையை நகர்த்துகின்றீர்கள். வாழ்த்துக்கள் சரண்யா.

இளசு
21-11-2009, 09:12 PM
சரண்யா அவர்களுக்கு


தொடர்கதை முயற்சிக்கும், எழுத்துழைப்புக்கும், படம் சேர்க்கும் சிரத்தைக்கும்
பாராட்டுகள்.. ஊக்கங்கள்..வாழ்த்துகள்!

புதிய பாணியில் நடை.. படிக்கப் புத்துணர்ச்சி.. சபாஷ்!

நேரடி வர்ணனை பாணியில்... இப்போது ஒரு முடிச்சுடன்..


என் எண்ணங்கள் இரண்டு -

1) கதை மாந்தரை ஒரே சீராய் குறிப்பிடுங்கள். லதா, லதா அம்மா, சந்தோஷினி அம்மா என மாறி மாறி - வேண்டாமே!

2) உரையாடல்களுக்கு '' '' மேற்கோள்கள் தாருங்கள்..

படிக்க இன்னும் இலகுவாகும்.

சரண்யா
22-11-2009, 01:57 AM
சந்தோஜினி (குட்டிமா) எங்கே?????????
எக்கும் ஒரே ஆவலாகவுள்ளது.அப்பாவிற்கு ஒன்றுமே புரியுல....அம்மா லதாவோ....அழத்தொடங்குகிறாள்.....
ஓடி ஓடி தேடினாலும் யாரிடமும் சொல்லவில்லை....
குட்டிமா......அங்க... என சின்னத்திரையில் வரும் ராமா போல் கதையை முடித்துள்ளீர்கள். அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நன்றாகவே கதையை நகர்த்துகின்றீர்கள். வாழ்த்துக்கள் சரண்யா.

நன்றிகள் ஜனகன் அவர்களே...விரைவில்..தொடர்ந்து ஊக்கம் அளிப்பதில் மகிழ்ச்சி....

சரண்யா
22-11-2009, 02:05 AM
சரண்யா அவர்களுக்கு


தொடர்கதை முயற்சிக்கும், எழுத்துழைப்புக்கும், படம் சேர்க்கும் சிரத்தைக்கும்
பாராட்டுகள்.. ஊக்கங்கள்..வாழ்த்துகள்!

புதிய பாணியில் நடை.. படிக்கப் புத்துணர்ச்சி.. சபாஷ்!

நேரடி வர்ணனை பாணியில்... இப்போது ஒரு முடிச்சுடன்..


என் எண்ணங்கள் இரண்டு -

1) கதை மாந்தரை ஒரே சீராய் குறிப்பிடுங்கள். லதா, லதா அம்மா, சந்தோஷினி அம்மா என மாறி மாறி - வேண்டாமே!

2) உரையாடல்களுக்கு '' '' மேற்கோள்கள் தாருங்கள்..

படிக்க இன்னும் இலகுவாகும்.

நன்றிகள் இளசு அவர்களே...

ஆமாம்..மறந்தே போயிட்டேன் மேற்கோள் தர....சரி இனிமேல் போடுகிறேன்....
அது ஒவ்வொருதவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி கூப்பிடுவோம் ல
ஸ்கூல மிஸ் சந்தோஷினி அம்மா...வீட்டில குட்டிமாக்கு லதா அம்மா....
அருணுக்கு லதா என்பதால் அப்படி போடுகிறேன்....சரியா...
இப்போ சில குழந்தைங்க பேரு சொல்லி அழைக்கிறாங்க....
எனினும் குழப்பம் நீக்க நீங்கள் சொல்லுவதும் சரி இளசு அவர்களே..ஒரே மாதிரி கூப்பிட முயற்சிக்கிறேன்....
கதையை படித்து பின்னூட்டத்தில் ஊக்கதையும் கொடுத்து அழகாய் தவறுகளை சுட்டி காமித்தற்கு மீண்டும் நன்றிகள்....தொடர்ந்து படியுங்கள்...பகிர்ந்து கொள்ளுங்கள்...

சரண்யா
01-12-2009, 01:26 AM
குட்டீஸ்...(8)
http://2.bp.blogspot.com/_2qZyM281i_w/Sv4gCLm5gxI/AAAAAAAAAHw/Kg7C9Ns79DA/s200/crop+devathai.jpg

குட்டிமா... அங்க..கட்டிலின் அடியில்....தன்னுடைய வண்ணமயமான பந்து உருண்டோடுயது..... அங்க லதாம்மா காலி அட்டைப் பெட்டிகளை வைத்திருந்தார்கள்...
அதில பந்து உள்ளே சிக்கி கொண்டது...குட்டிமா கட்டில் அடியில் செல்லும் போது வேற ஒரு பெட்டியில் குட்டிமாவோட கால் பட்டதில் பின் பக்கமாக அந்த பெட்டி குட்டிமாவை மறைத்ததால் அப்பா அருண் தேடும் போதும் அவள் அப்பாவின் கண்ணில் படவில்லை....அவள் இவர்களின் குரல்களை கேட்டும் பந்து எடுக்கும் ஆவலில் உள்ளே கையை நீட்டிக் கொண்டு எடுக்க முயற்சிக்கிறாள்...வண்ணங்களில் மனம் சென்றது குட்டிமாவிற்கு....

அப்பா...."எங்க போகி இருப்பா?"...என்ற யோசனையில் இருக்கிறார்...
அம்மா..."பெற்றவளாச்சே....அப்படியே காணாத சந்தோஷினியை நினைத்து அறையின் வெளிச்சுவரில் சாய்ந்து உட்கார்கிறாள்".
பந்தை முயற்சித்து எடுக்க முடியாத குட்டிமா..இப்போ உள்ளே சிக்கியவுடன் அம்மா....என்று குரல் கொடுக்கிறாள்....

அவ்வளவே...லதாவின் கண்கள் பளிச்சிட்டது...
ஓடோடிதேடுகிறாள்..என்னங்க...பாருங்க..எங்க.... "குட்டிமா.... எங்கடா இருக்க..."என்று ஆவலாய் கேட்கிறாள்.
என்ன பார்த்தாய்..நீ என கேட்கிறார் அருண்....
நீங்களும் தானே பார்த்தீங்க...என சொல்ல முடியுமா...அமைதியாய் இருந்தாள்..குட்டிமா என்பது மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது....
பின் அவளை அட்டை பெட்டிகளில் இருந்து விடுவித்த அப்பா அம்மா இருவரும் குட்டிமாவை அணைத்து கொஞ்சுகின்றனர்...தேடி அலைந்த சில நிமிடங்கள் எனினும் குட்டிமா...கிடைத்த சந்தோஷத்தில் பஞ்சாய் பறந்தது...

லதாம்மா....."உன்னை யாரு இங்கெல்லாம் போக சொன்னா.."எனக் கத்த தொடங்குகிறாள்..குட்டிமாவிடம்...
அதற்கு... "சரி விடு" என்று அப்பா சொல்கிறார்...

அப்பா..அப்ப அப்ப..இப்படி சந்தோஷினிக்கு சப்போர்ட் பண்ணுவதால் அவளின் மனதில் பெரிதும் இடம் பிடித்து விடுகிறார் அருண்.

இவளை தேடியதால் நேரம் சென்றது..என புலம்பிக்கொண்டே தன் வேலையை தொடங்குகிறாள்....எனினும் மனதில் எல்லா இறைவனுக்கும் நன்றி சொல்லுகிறாள்....

லதா தன் கண்வரிடம் என்னங்க....நாம இன்றைக்கு கோவில் சென்றுவிட்டு வந்திடலாம் என்கிறாள்...
ம் ..ம்...என்று சொல்லிக்கொண்டே குட்டிமாவை தூக்கி விளையாடுகிறார்...
சரி போங்க...கிளம்புங்க....மணி ஆயிடுச்சு...வா குட்டிமா....கிளம்புவோம் என்று
அழைக்கும் போது...அப்பாவின் கைப்பேசி அழைக்கிறது...

நடந்த இந்த அமளியில் கைப்பேசியை கவனிக்காத அப்பா...அதில் பார்த்தால் அத்தனை கால்கள் குவிந்துள்ளது.... இப்போ அழைத்தது......அப்பாவின்......

(தொடரும்)

சுகந்தப்ரீதன்
01-12-2009, 11:54 AM
குழந்தையை கணநேரம் காணவில்லையென்றால்கூட பெற்றோர்களுக்கு உண்டாகும் படபடப்பும் பயமும் வார்த்தைகளில் வடிக்கமுடியாது...அத்தகைய உணர்வை உணர்த்த முற்ப்பட்ட உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்... தொடருங்கள்..!!

அத்துடன் குட்டீஸ் தொடரின் ஒவ்வொரு பகுதியும் குட்டியாய் இருப்பதுபோல் ஒரு உணர்வு தோன்றுகிறது... சற்று நீட்ட முயற்சிக்கலாமே சரண்யா..?!

சரண்யா
02-12-2009, 03:03 AM
சரி...சுகந்தப்ரீதன் அவர்களே...
ஒரு பக்கம் தான் எழுதுகிறேன்...
அதற்கு மேல் எழுதினால் சலிப்பு வந்திடுமோ படிக்க என்ற ஐயமே...
மீண்டும் வந்து என்ன செய்யலாம்..என்று கருத்து சொல்லுங்கள்...
நன்றிகள்...ஊக்கம் அளிப்பதற்கும்..பாராட்டுகளும்....

கீதம்
02-12-2009, 03:17 AM
கதை சின்னச் சின்னத் திருப்பங்களுடன் சீராகப் போய்க்கொண்டு இருக்கிறது. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

சரண்யா
02-12-2009, 10:05 AM
கதை சின்னச் சின்னத் திருப்பங்களுடன் சீராகப் போய்க்கொண்டு இருக்கிறது. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றிகள்....என் முதல் கதை என்பதால் பார்த்து பார்த்து வடிவம் கொடுக்கிறேன்...தொடர்ந்து படியுங்கள் என்று அன்போட கேட்டு கொள்கிறேன்...

பா.ராஜேஷ்
10-12-2009, 03:09 PM
என்ன சரண்யா! பாப்பா ரொம்ப நாளாய் பள்ளி செல்ல வில்லை போலிருக்கிறதே!

சரண்யா
11-12-2009, 01:46 AM
ஆமாம் விரைவில் குட்டீஸ் பள்ளிக்கு செல்லுவாள்....கணினி சரியில்லை....ஆதலால்...
நன்றிகள்..

சரண்யா
12-12-2009, 04:56 AM
குட்டீஸ்...(9)
http://2.bp.blogspot.com/_2qZyM281i_w/Sv4gCLm5gxI/AAAAAAAAAHw/Kg7C9Ns79DA/s200/crop+devathai.jpg

இப்போ அழைத்தது......அப்பாவின்......அப்பாவே தான்.."என்ன பத்து நிமிடமாக கைப்பேசியில் அழைத்தும் பதில் இல்லையே...மருமகளும் கைப்பேசி எடுக்காமல் இருப்பதால்... தொடர்ந்து அழைத்திருக்கிறார்" சந்தோஷினியின் தாத்தா...

"அப்பா...சொல்லுங்க பா"...என்றார் அருண்...
"என்ன பா எப்படி இருக்கிற"...என்று கேட்கிறார்...மகன் நலமாக இருக்க வேண்டும் என மந்தில் நினைத்துக் கொண்டே....

"நலமாக இருக்கிறேன் அப்பா..சந்தோஷினியிடம் விளையாடிக் கொண்டு..."
"ஒ அப்படியா...பேத்தி என்ன சொல்லுகிறாள்"....
"ஸ்கூல் சேர்த்தாச்சு பா..இன்றைக்கு தான் முதல் நாள் போக போகிறாள்..."
லதா எப்படி இருக்கிறாள் என நலம் விசாரிக்கிறார்..
பின் அம்மாவிடம் பேசுகிறார் அருண்....
அப்பா கேட்க்காமல் விட்டதை அம்மா கேட்கிறார்..
"ஏன் பா இவ்வளவு நேரம் போன் எடுக்க..."
"அதுவா..ஒன்றுமில்ல அம்மா...."
"சொல்லுப் பா..."என்று கேட்கிறாங்க...
அம்மாவிடம் சகஜமாக எல்லாவற்றையும் சொல்லும் அருண் சந்தோஷினியை காணாமல் தவித்ததை சொல்கிறார் அருண்...பின் அம்மா ஆறுதலாக நீயும் தான் இப்படி பலமுறை காணாமல் போகிவிடுவ....சாப்பிடும் போது உன்னை தேடி தேடி தான் கண்டுபிடிக்கணும்....சொல்லுறாங்க..
அருண் கொஞ்சம் கொஞ்சமாக புன்னகைத்து லதாவிடம் கொடுக்கிறார்..
லதா..கவலைப்படாத ம்மா என்று சொல்லி கைப்பேசியை வைத்து விடுகிறாள் பாட்டி..
என்னங்க நாம அங்க போயி பார்த்துவிட்டு வந்திடுவோம்...என்கிறாள் பாட்டி தாத்தாவிடம்...
மறுப்பேச்சு பேசாத தாத்தா சந்தோஷினியை பார்க்கும் ஆவலில் இருவரும் கிளம்புகிறார்கள்...

இங்கே சந்தோஷ்னியை ஸ்கூல் கிளம்ப தயார் செய்கிறாள் அம்மா லதா..
அருண் ரெடியானவுடன் மூன்று பேரும் சந்தோஷினியின் பள்ளிக்கு போகிறார்கள்..
முதல் முறை அல்லவா...சந்தோஷினி கிட்ட அம்மா இங்கே உட்கார்ந்திருக்கேன் குட்டிமா..நீங்க உள்ள போயி படிச்சுட்டு வா ம்மா என்றாள்...
ஒன்று அறியாதவளாய்..தலையாட்டினாள்...
உள்ளே செல்லும் அழகை இருவரும் பார்த்து ரசிக்கின்றனர்...

சின்ன சிட்டு ஒன்று
செல்ல சிட்டு தான்
பள்ளி செல்லும் அழகு
பார்த்து கொண்டே கண்கள்

ஆவலாய் உள்ளே செல்லும்
ஆனந்தத்தில்...குட்டிமாக்கூடவே
செல்கிறது அவர்களின் மனமும்....

(தொடரும்)

பா.ராஜேஷ்
14-12-2009, 04:42 PM
என்னங்க! கதையின் போக்கு மாறிவிட்டது போல் இருக்கிறதே...

சரண்யா
16-12-2009, 01:34 AM
என்னாச்சு பா.ராஜேஷ் அவர்களே...
விளக்கமாக சொல்லுங்கள்....

சரண்யா
27-12-2009, 10:27 AM
குட்டீஸ்...(10)
http://2.bp.blogspot.com/_2qZyM281i_w/Sv4gCLm5gxI/AAAAAAAAAHw/Kg7C9Ns79DA/s200/crop+devathai.jpg



குட்டிமா உள்ளே சென்றவுடம் பள்ளியின் வளாகத்தை பார்க்கிறார் அருண்...
பின் விடை பெற்றுக் கொண்டு அலுவலகத்திற்கு செல்கிறார்...
அம்மா அங்கே இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறாள்...குட்டிமா சென்ற பாதையை பார்த்து கொண்டே இருக்கிறாள் லதா.....

குட்டிமா உள்ளே சென்றவுடன் வண்ணமயமான இருக்கைகள் அழகாக வரிசையாக இருந்தது..ஒரு பக்கம் கரும்பலகையில் மிக்கி மவுஸ் படம்...
இன்னொரு பக்கம் உள்ள கரும்பலகையில் அழகான பூங்கொத்து ஏந்திய இரண்டு மாணவர்கள்...என வரைந்து வைத்திருந்தார்கள்...வண்ண மயமான தோரணங்கள்....ஆங்காங்கே ஒட்டி வைக்க பட்டிருந்த வண்ணத்தாள்கள்.....என வகுப்பு அறை அலங்கரிக்க பட்டிருந்தது...

இவை எல்லாவற்றையும் பார்த்த சந்தோஷினிக்கு மற்ற மாணவர்களின்
அழுகைக்குரலும் கேட்கிறது...அப்படியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
பின் அங்கே உள்ளே செல்லும் வழியில் தோழியைப் பார்த்து செல்ல வந்த இன்னொரு ஆசிரியை நோட்டு புத்தகங்கள் ஏந்திக் கொண்டு வந்திருந்தார்கள்...

சந்தோஷினி தன் இருக்கையில் இருந்து ஓடி வந்து அந்த ஆசிரியையின் கால்களை பற்றி கொள்கிறாள்....சற்றும் எதிர்ப்பார்க்காத ஆசிரியை சந்தோஷினியிடம்
என்னம்மா.... என்ற குரல் கொடுக்கிறாங்க...கேட்டவுடன் குட்டிமா கொஞ்சம் கொஞ்சமாக தன் கையை எடுக்கிறாள்...ஆசிரியை அந்த நோட்டு புத்தகங்களை மேஜையில் வைத்துவிட்டு....சந்தோஷினியிடம்....பேசுறாங்க..அங்க உள்ள பொம்மைகளை காட்டி விளையாடலாமா..என்று கேட்கிறாங்க....
லதாம்மா கட்டி இருந்த அதே மாதிரி புடவையை அணிந்திருந்ததால் அவள் வேகமாக வந்தது....என்பதை தெரியாது அந்த ஆசிரியைக்கு....குட்டிமா அப்படியே ஒன்றும் பேசாமல் நிற்க்கிறாள்.

பின் மணி அடித்தவுடன்....அழுகின்றவர்களை ஒரு வகுப்பு அறையிலும் அழாதவர்களை அடுத்த ஒரு அறையில் உட்கார வைத்தனர்..
சந்தோஷினியிடம் லதாம்மா..அழாமல் இருக்கனும் அம்மா இங்கேயே உட்கார்ந்திருப்பேன் என்று சொன்னது புரிந்தது...

முதலில் ஆசிரியை மட்டும் கடவுள் வணக்கத்தை பாடுறாங்க....
எல்லா குழந்தைகளுக்கும் கைக்குப்பி வணங்க சொல்லுறாங்க...அப்போ வீட்டில அப்பா அம்மாவும் சாமி கும்பிடும் போது சொல்லி தந்தது போல சரியாக வைத்து கொள்கிறாள்...ஆசிரியை ஒவ்வொரு குழந்தையாக பார்க்கிறாங்க....
"வெரிகுட்" என்று சொல்லுறாங்க...சரியாக கைக்குப்பி வணங்குபவர்களை...
அப்போ சந்தோஷினியையும் "வெரிகுட்" என்று சொல்லுறாங்க...
கடவுள் வாழ்த்துப் பாடலை சொல்லுறாங்க...கண்களை மூடிக்கொண்டு...
பின்பு ஆசிரியை சொல்லுறாங்க.....
எல்லாரும் கைத்தட்டுங்க....இன்னிக்கு நம்ம கிளாஸ் பிரியாவிற்கு பிறந்தநாள்...எல்லாரும் கைத்தட்டுங்க....என்று சொல்லிக் கொண்டே ஆசிரியை
Happy birthday to you...
Happy birthday to you...
Happy birthday to you...... priyaa...என்று பாடிக்கொண்டே நகர்ந்து எல்லோரிடமும் போகிறாங்க..கையை தட்ட சொல்லி செய்கை காமிக்கிறாங்க.....
வெரிகுட்....என்று சொல்லிவிட்டு...
பின்பு எல்லாரையும் அமர சொல்லுறாங்க...
ஆசிரியை அந்த சட்டை பைக்கு மேல் குத்தி இருக்கும் ஐ.டி.கார்டை பார்த்து பார்த்து வருகை பதிவேடை குறிக்கிறாங்க...
அதற்க்குள் அங்கே நிவாஸ் எந்திருக்கிறான்...நிவாஸ் சிட் டவுண் என்று குரல் கொடுக்கிறாங்க...
அப்பறம் நீங்க எல்லாரும் அழகாக பாடினா....எல்லாருக்கும் பிரியாவோட சாக்லேட் தருவேன்...
பாடிருங்களா...என்று ஆசிரியை சொல்லுறாங்க...
நிலா நிலா ஓடி வா...
நில்லாமல் ஓடி வா...
மலை மேல ஏறி வா....
மல்லிகைப்பூக் கொண்டு வா...என்று செய்கை செய்து கொண்டே பாடுறாங்க...
எல்லாருமே சொல்வோமா....
சொல்லுங்க..நிலா.... நிலா...அங்க பாருங்க....மேல...இருட்டானதும் வீட்டல போய் பாருங்க...இது மாதிரி வானத்தில தெரியும்....என்று புத்தகத்தை காட்டுகிறாங்க...
மேல இருக்கும் நிலாவை கூப்படலாமா..கையை எல்லாரும் தூக்கி கோங்க..ம்...மேல பார்த்து சொல்லுங்க...நிலா....நிலா...
அப்போ...மெலிதான குரலில் நில் நில்தலையை ஆட்டிக்கொண்டு நிலா சொல்லி பார்க்கிறான் கௌதம்...
கார்த்திகா கத்துகிறாள்..நிலா..நிலா...என்று எல்லாரும் அவளையே வேடிக்கை பார்க்கிறாங்க....
சந்தோஷினி ஆசிரியை பார்க்கிறாள்....அவுங்க செய்வது புதிதாக இருப்பதை உணர்கிறாள்...தானும் அப்படி செய்து பார்க்கிறாள்...

அதற்குள் லதா அம்மா..குட்டிமா அழுகிறாளா...பாருங்க என்று மீனியலிடம் கேட்கிறாள்...இல்லங்க..நான் அங்கிருந்து தான் வரேன்... சமத்தா உட்கார்ந்திருக்கிறாள் என அந்த மீனியல் வழக்கம் போல எல்லா மாண்வர்களின் பெற்றோரிடம் சொல்லுவது போல சொல்கிறாள்....

உள்ளே அழகாக பாடி முடித்த சிறார்களுக்கு சொன்ன படியே..சாக்லேட் கொடுக்கிறாங்க ஆசிரியை...

பின் எல்லார் பைக்குள் இருக்கும் ஸ்னாக்ஸ் பாக்ஸை திறந்து சாப்பிட சொல்லுறாங்க...
தண்ணீர் குப்பியை திறந்து கொடுத்து கொண்டே..ஒவ்வொருவரிடமும் வருகிறாங்க...அப்போ அதற்குள்..அங்க.....
(தொடரும்)

சரண்யா
08-01-2010, 09:59 AM
குட்டீஸ்...(11)
http://2.bp.blogspot.com/_2qZyM281i_w/Sv4gCLm5gxI/AAAAAAAAAHw/Kg7C9Ns79DA/s200/crop+devathai.jpg

அப்போ அதற்குள்..அங்க.....ப்ரவீன் தன் தண்ணீர் குப்பியை கீழே போட்டுவிட்டான்....
அம்மா வீட்டில் கீழே போட்டால் அடிப்பாங்க என்பதால் அவன் பயத்தில் நின்று கொண்டிருந்தான்.
அம்மாவின் பாசத்தை இந்த முழுபாட்டில் தண்ணீர் என்பது போல ப்ரவீன் அம்மா கொடுத்தை தூக்க முடியாமல் தான் இச்சிறுவன் கீழே போட்டதை அறிந்து கொண்ட ஆசிரியை அவனிடம் வந்து சரி பரவால..நீ இப்படி வந்து நின்று கொள் என கூறிவிட்டு பின் அந்த குப்பியை எடுத்து இருந்த தண்ணீரை மூடியில் ஊற்றி கொடுத்து குடிக்க சொல்லுறாங்க...
பின் எல்லா மழலையையும் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாக அமர வைக்கிறாங்க...
எல்லாரும் நாளைக்கு அழாம சமத்தா வரணும் சரியா..என்று ஆசிரியை மாணவர்களை பார்த்து சொல்லுறாங்க...
புரிந்தது போல சில பிள்ளைகள் தலையாட்டினார்கள்...
எல்லாரையும் கை தட்ட சொல்லி பின்பு இறைவழிபாடு செய்ய வைத்து வீட்டிற்கு செல்ல முதல் அறைக்கு அழைத்து வருகிறாங்க...

அந்த பள்ளியின் சிறப்பே ஒவ்வொரு வாசலிலும் ஒரு ஆசிரியை விதம் சின்ன சிறார் விழுந்து விட கூடாது என்பதால் வீட்டிற்கு செல்லும் போது வகுப்பு செல்லாத ஆசிரியைகள் தங்கள் அறையில் இருந்து வந்து வழி அனுப்ப வேண்டும்...
இதனால் பிள்ளைகள் மிக கவனமாக செல்லுவார்கள்...

வெளியில் சந்தோஷினியின் அம்மா ஆவலாக காத்திருக்கிறாள் மகள் வரிசையில் வருவதை காண்கிறாள்....
பின் சந்தோஷினி சிரித்து கொண்டே "அம்மா..... " என்றாள்...
குட்டிமா.....என்று சொல்லி கொண்டே பையை பார்க்கிறாள்...அவள் தான் வைத்த பழங்களை சாப்பிட்டாளா..என...
குட்டிமா ஆப்பிள் சாப்பிட்டீங்களா....
ம்.. சாப்பிட்டேன் அம்மா.அம்மா..அங்க பாருங்க.....அந்த மிஸ் தான் எங்க மிஸ் அம்மா..என்று தன் ஆசிரியை கைக் காட்டுகிறாள்...
பின் லதாவும் சந்தோஷினியும் வெளியே வந்தனர்...
குட்டிமாவை தூக்கி கொண்டாள் லதாம்மா..
பின் தன் வகுப்பறையில் பார்த்ததை சொல்லி கொண்டே வந்தாள்...
அம்மழலையில் பேச்சிலே வீடும் வந்து விட்டது...
அம்மா முன் கதவை திறந்து கீழே இறக்கி விட்டதும் துள்ளி செல்லுகிறாள் கதவின் அருகே...
அம்மா வாசலில் உள்ள கதவை சாத்திவிட்டு உள்ளே வருகிறாள்...
கதவை திறந்ததும் அம்மா அப்பா எப்போ வருவாங்க என்று கேட்கிறாள்....காதில் வாங்கது போலவே இருந்தாள் லதாம்மா...
குட்டிமா..வாங்க என்று சொல்லி கொண்டே....குளியல் அறையில் காலை கழுவ சொல்லுகிறாள்...முகம் கை கால்களை அலம்பி விடுகிறாள் அம்மா....
தண்ணியில் ஆடுவது என்றால் சந்தோஷினிக்கு ரொம்ப பிடிக்கும்....இப்போ வேண்டாம் வா...என்று அழைத்து கொண்டு உள்ளே சட்டையெல்லாம் மாற்றி விடுகிறாள்..
அப்பா எப்போ வருவாங்க என்று கேட்கிறாள்....திரும்பவும் குட்டிமா...

இப்போ வந்திருவாங்க செல்லம்.....இங்க விளையாண்ட்டு இருங்க..அம்மா போயி சமையல் செய்துவிட்டு வருகிறேன்....என்று சொல்லிவிட்டு சமையல் அறை நோக்கி செல்லுகிறாள்....

வண்ணமயமான அவளின் பந்தை வைத்து கொண்டு விளையாடினாள்...

அப்பா வந்து குட்டிமாவின் கண்ணை மூடுகிறார் பின் பக்கமாக வந்து...
குட்டிமா...அப்படியே அந்த கையை பிடித்து கொண்டு அப்பா என்று கத்தினாள்...

எப்படிடா தெரியும் அப்பா தான் கேட்கிறார் அருணப்பா....
அம்மா சொன்னாங்க...
சரி ஸ்கூல் பிடிச்சுருக்கா குட்டிமாக்கு என்றார்...
ம்...அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லுகிறார்....
லதா..இங்க வா...குட்டிமா பேசுறதை பார்க்காம அங்க என்ன பண்ணுற....
வழியெல்லாம் அவள் சொல்லி கேட்டதால் அவள் வேலை செய்து கொண்டு
மதிய உணவை எடுத்து மேஜையில் வைத்து கொண்டிருந்தாள்...

வாங்க வாங்க..அப்பாவும் பொன்னும் அப்பறம் பேசலாம் வந்து சாப்பிடுங்க....
என்று சொல்லிக் கொண்டே குட்டிமாவிற்கு பருப்பு சாதம் பிசைந்து வைக்கிறாள்...

குட்டிமா....சாப்பிடலாமா...என்று அருணப்பா தூக்கி கொண்டே மேஜை அருகே வருகிறார்...

லதாம்மா சாப்பாடு போட்டு கொண்டே குட்டிமாவிற்கு ஊட்டி விடுகிறாள்....
குட்டிமாவிடம் பேசிக் கொண்டே....குட்டிமா சமத்தா சாப்பிட்டாள்.
பின் அருண் குட்டிமாவை தூங்க வைத்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கு செல்லுகிறாள்....
லதாம்மா தானும் சாப்பிட்டு குட்டிமா தூங்கும் நேரத்தில் தன் வேலைகளை முடித்துவிட வேண்டும் என செய்து கொண்டிருக்கிறாள்....
குட்டிமா தூங்கி எழுதவுடன் சற்று ஒன்றும் அறியாதவளாய் அமர்ந்து இருந்தாள்...
பின் வெளியே வந்து அம்மாவை தேடுகிறாள்...
அம்மா மாவை சலித்து கொண்டிருந்தாள்..அம்மா நான் செய்றேன் மா..இல்ல குட்டிமா...கீழே சிந்திடும் என்று சொல்லுகிறாள் அம்மா
அப்படியே பார்த்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் வருகிறாள்....
அம்மா மடியிலும் அமர்ந்து கொள்கிறாள்...
அம்மாவின் கையை பிடித்து கொள்கிறாள்...அம்மா கை ஆட ஆட...தன் கையும் ஆடுவதை ரசிக்கிறாள்...
அம்மா நான் ..நான் என்று திரும்ப திரும்ப கேட்கிறாள்..லதாம்மா கிடு கிடுவென எல்லாவற்றிஅயும் முடித்து கடைசி தடவை மிக கொஞ்சம் இருப்பதை தருகிறாள்...ஆட்டி ஆட்டி கீழே மாவு வருவதை பார்த்து சிரித்து மகிழ்கிறாள்...
அம்மா என்ன குட்டிமா என அவள் மூக்கில் மாவு கையுடன் வைக்கிறாள்...
குட்டிமா மூக்கில மாவு....தடவியவுடன் குட்டிமாவும் அம்மாவின் மேலே தடவினாள்....சின்ன மழலையின் கைகள் தொட....ஆனந்தமாய் அணைத்து கொண்டாள்...
சரி போதும் குட்டிமா என்றாள்...நீங்க போங்க அங்க ஆல்பம் இருக்கிறது திறந்து பாருங்க.... அம்மா இதோ வந்து விடுகிறேன்...
என்று லதாம்மா சொல்லுகிறாள்...

குட்டிமா ஆவலோட வந்து பார்க்கிறாள்....

முதல் பக்கம் திறக்கிறாள்.....உள்ளே..
(தொடரும்)

சுகந்தப்ரீதன்
10-01-2010, 10:19 AM
இப்பதான் குட்டிம்மா.. "நான் வளர்கிறேனே மம்மி"-ன்னு சொல்லுற மாதிரி தெரியுது..!!

குழந்தையின் செய்கைகளை குழந்தைதனம் மாறாமல் விவரிக்கும் விதத்தில் இருக்கிறது.. உங்களின் இந்த குட்டிஸ் கதை..!!

மென்மேலும் வளரட்டும் குட்டீஸ்.. வாழ்த்துக்கள்... தொடருங்கள்...!!

சரண்யா
10-01-2010, 10:38 AM
இப்பதான் குட்டிம்மா.. "நான் வளர்கிறேனே மம்மி"-ன்னு சொல்லுற மாதிரி தெரியுது..!!

குழந்தையின் செய்கைகளை குழந்தைதனம் மாறாமல் விவரிக்கும் விதத்தில் இருக்கிறது.. உங்களின் இந்த குட்டிஸ் கதை..!!

மென்மேலும் வளரட்டும் குட்டீஸ்.. வாழ்த்துக்கள்... தொடருங்கள்...!!

நன்றிகள் சுகந்தப்ரீதன் அவர்களே......
தங்களின் வாழ்த்து போல நடந்தால் மகிழ்ச்சி தான்

சரண்யா
17-01-2010, 01:30 AM
முதல் பக்கம் பார்க்கிறாள்....அப்பா அம்மா ஒன்றாய் இருந்த படம்..அ..ப்...பா அ..ம்...மா.....என்று சொல்லுகிறாள்..
அடுத்த பக்கத்தில் தாத்தா...பாட்டி....என சொல்லிக் கொண்டிருக்கும் போது தாத்தாவும் பாட்டியும் நேரிலே வந்து விட்டனர்...குட்டிமா தாத்தா...என்று ஓடி செல்கிறாள்...
குட்டிமாவை தூக்கி கொள்கிறார் தாத்தா...
குட்டிமாவிற்காக வாங்கி வந்த சாக்லேட்டை பாட்டி கொடுக்கிறாங்க...
உள்ளே வந்து அமர்ந்த போது அம்மா இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து தருகிறாள்.
பால் வந்தது.... அம்மா சமையல் அறைக்கு சென்று வேலையை பார்க்க தொடங்குகிறாள்..
அப்பா அருண் உள்ளே நுழைந்தவுடன் தன் அப்பாவும் அம்மாவும் வந்திருப்பதை பார்க்கும் போது சர்ப்ரைஸாக இருந்தது.சின்ன புன்சிரிப்புடன் இருவரையும் பார்க்கிறார்...

அப்பா இங்க பாருங்க..பாட்டி தந்த சாக்லேட் என்று குட்டிமா காமிக்கிறாள்...
அப்பா தன் மடியில் குட்டிமாவை உட்கார வைத்து கொண்டு இருவரிடமும் எப்போ வந்தீங்க..பயணம் எப்படி இருந்தது என்றெல்லாம் பேசி கொண்டிருந்தார்.

பாட்டி குட்டிமாவிற்கு தலைசீவி பூ வைத்து அழகு பார்க்கிறாள்..சின்ன முடி தான் இருந்தாலும் அதிலும் அழகை ரசிக்கிறாள் பாட்டியாக...

குட்டிமாவிற்கு சந்தோஷமாக இருந்தது .பாட்டி தாத்தாவிடம் புதுசா வாங்கின பேக்,புக்ஸ் எல்லாவற்றையும் காட்டி மகிழ்ந்தாள்.
அப்போ தாத்தா இங்க பாருங்க செல்லம்.... என்று புது டிரஸ்ஸை கொடுத்தாங்க....
ஸ்கூல் போகும் போது நாளைக்கு போட்டுட்டு போகலாம் என பாட்டி சொல்லுறாங்க...
குட்டிமா கிட்ட வந்து தொட்டு தொட்டு பார்க்கிறாள்...
குட்டிமா மகிழ்ச்சியாக இருந்தாள்...

மறுநாள் காலை புது டிரஸ் போட்டு கொள்வதால் சீக்கரமாக தூங்கி எழுந்தாள் குட்டிமா..
பள்ளி செல்லும் போது அழகாய் ஒரு குட்டி தேவதை போல இருந்தாள்...

நேற்று பள்ளியிலே இருந்த அம்மா இன்று குட்டிமாவிடம் குட்டிமா தாத்தா பாட்டி வந்திருக்காங்கல நான் வீட்டிற்கு போயிட்டு குட்டிமா ஸ்கூலைவிட்டு வரும் போது இங்க வந்திடுறேன் செல்லம்..அழாம உள்ள படிக்கணும் சரியா...
என்று சொல்லி விடுகிறாள் பள்ளியின் வாசலில்....

புது சட்டை போட்ட மகிழ்ச்சியில் அம்மா சொன்னதை காதில் வாங்காமலே சட்டையை பார்த்து கொண்டே தலையாட்டினாள்.
உள்ளே ஆசிரியை சந்தோஷினியை வந்து அமர சொன்னாங்க.
அடிப்படையில் பிள்ளைகள் அழக்கூடாது என்பதற்க்காகவே சின்ன சின்ன பாடல்களை சொல்லி தர ஆரம்பித்தார்கள்.
பின் அதிலும் தனித்திறமை வெளிப் படவேண்டும் என ஒவ்வொரு குழந்தையையும் பாட வைத்து செய்கையுடன் செய்ய வைப்பது வழக்கமாகியது.

அர்த்தமுடனோ...அர்த்தமில்லாமல் வெறும் ஒலிக்காகவோ என எல்லாம் சேர்ந்த கலவையாக தான் இருந்தது பாடல்கள்.
ரெயின் ரெயின் கோ அவே என்ற பாடல் வெளி நாட்டில் மழை பெய்த போது பாடியது.
அதனையும் இன்று மழை பெய்யாத போது பாடுவது ஒரு பயிற்சியாக கொண்டது
பள்ளியின் பாடத்திட்டம்.
அந்த பாடலையும் சொல்லி கொடுத்து தன் மாணவர்களை மதிப்பெண்கள் வாங்க வைக்க வேண்டிய கட்டாயம் என ஆசிரியைக்கு தோன்றியது.
அதில் சில நல்ல பாடலும் இருக்கும்.
அதில் ஒன்று சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.குப்பைகளை கீழே இருந்தால் அதனை அள்ள வேண்டும் என்று சொல்லி தர ஆசிரியை சுத்தமாக இருந்த வகுப்பில் சின்ன சின்ன தாள்களை கீழே போட்டு

Bits of paper.... bits of paper....
கீழே காமிச்சாங்க... சத்தத்தை கேட்ட மாணவர்கள் ஆசிரியையை பார்த்து கொண்டிருந்தனர்.
Lying on the floor..lying on the floor...
இரண்டு பக்கங்களும் கைகளால் கீழே காமிக்கிறாங்க....
Make the place untidy...Make the place untidy...
இந்த குப்பைகள் வகுப்பில் உள்ளதால் முஞ்சை சுளித்து கொண்டு ச்சீ என்பதை போல முகபாவனை காமிக்கிறாங்க...
Pick them up ......pick them up போட்ட தாள்களை திரும்ப எடுத்தாங்க...
Put it in the dustbin... put it in the dustbin மூலையில் உள்ள குப்பைத் தொட்டியில் அதனை போட்டாங்க பாடிக்கொண்டே...

ஆனால் ஆசிரியை சில மாணவர்கள் சின்ன சின்ன தாள்களை கிழித்து கிழித்து போட்டு அதனை அள்ளிவிட வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதனை அறிந்ததால் பாடலின் விளக்கத்தை சொல்லி..... கீழே வழியில் பார்த்தால் அல்லது வீட்டிலும் எங்கும் குப்பைகளை பார்த்தாலும் அதனை எடுத்து குப்பைத்தொட்டியில் தான் போட வேண்டும் என்று சொன்னாங்க.

பின் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு சில பிஸ்கட் கவர்,சாக்லேட் கவர் கீழே இருந்ததை பார்த்து திரும்பவும் இந்த பாடலை பாடினாங்க...சில மாணவர்கள் புரிந்துக் கொண்டு குப்பைகளை பாடிக்கொண்டே எடுக்க தொடங்கினர்...பழக்கத்தை மனதில் புகுத்தினாங்க...தேவையில்லாததை குப்பைத்தொட்டியில் போட வேண்டுமென அறிந்தார்கள்.

இந்த பழக்கம் வீட்டிலும் அவர்கள் கடைப்பிடிக்க தொடங்கினார்கள்.

(தொடரும்)

ஜனகன்
18-01-2010, 03:06 PM
குட்டிம்மா கதை நல்லாய் போய் கொண்டு இருக்கின்றது.நீங்களும் ஒரு குழந்தையாய் மாறி, குழந்தையின் உள்ளக்கிடக்கைகளை எம்முடம் பகிர்ந்து கொள்ளும்போது, நாமும் குழந்தையாய் மாறிவிடுகின்றோம்.
அத்துடன் சமுக சிந்தனையையும் சேர்த்து இங்கு எழுதும்போது, இன்னும் மெருகேறுகின்றது கதை.தொடருங்கள் பாராட்டுகிறேன்.

சரண்யா
19-01-2010, 01:24 AM
நன்றி ஜனகன் அவர்க்ளே...எங்க சொல்லவே இல்லையே நினைத்தேன்...
தொடர்ந்து வாங்க...நன்றி...

சரண்யா
19-01-2010, 01:58 AM
குட்டீஸ்...(13)
http://2.bp.blogspot.com/_2qZyM281i_w/Sv4gCLm5gxI/AAAAAAAAAHw/Kg7C9Ns79DA/s200/crop+devathai.jpg

இன்றும் குட்டிமாவும் ஸ்கூலில் நடந்ததை அம்மாவிடம் சொல்லிக் கொண்டே
வந்தாள்.

வீட்டிற்கு நுழைந்தவுடன் பாட்டியும் தாத்தாவையும் பார்த்ததில் ஆர்வமாக
சொல்லத் கொண்டிருந்தாள் அப்போதே பாட்டி சாப்பாடு ஊட்டி கொண்டிருக்க மழலையின் பேச்சில் இருவரும் அலாதியான மகிழ்ச்சியில் இருந்தனர்.

தாத்தாவுடன் பேத்தி அப்படியே தூங்கியும் விடுகிறாள்...
அம்மாவிற்கு உதவியாக பாட்டி சமையலுக்கு தேவைப்படும் சிலவற்றை செய்து கொடுக்கிறாங்க...
அப்பா அருண் வந்ததும் அனைவரும் வெளியில் செல்லலாம் என திட்டமிட்டாங்க..

பல நாட்களாக அலுவலகம் விட்டா வீடு,வீட்டிற்கு வந்தால் சந்தோஷினியுடன் சில நேரம்,அம்மா லதா எந்த வேலையையும் செய்ய சொல்லுவதில்லை.வீட்டிற்கு தேவையானதை அம்மா லதாவே வாங்கிக் கொள்வதால் அந்த வேலையும் இருப்பதில்லை.ஆக இப்படியே அவர்களின் நாட்கள் சென்று கொண்டிருந்தது.
ஏனென்றால் சந்தோஷினியை பார்க்கவே அவரிகளுக்கு நேரம் சரியாக இருந்தது.

அதனால் இன்று பாட்டியும் சேர்ந்து பார்த்ததால் வேலையும் முடிந்தது.
அனைவரும் அப்பா அருண் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் எப்படி கேட்பது...வேலை அதிகமாக இருந்திருந்தால் டையர்ட் ஆக இருக்குமே.. என யோசித்து கொண்டிருந்தனர்.பாட்டி கேட்டவுடன் சம்மதம் தெரிவித்தார்.பின்பு அங்கு இருக்கும் பெரிய கோவிலுக்கும்,கடற்க்கரைக்கும் மகிழ்ச்சியாக குட்டிமாவுடன் சென்று வந்தனர்.
குட்டிமாவும் சமத்தாக இருந்தாள். படுத்து தூங்கும் போது பாட்டியிடம் கதை சொல்ல சொல்லி கேட்கிறாள்.
பாட்டியும் கதை சொல்லுகிறாள்.....
ஒரு பெரிய காட்டில....நிறைய மரம்... செடி.. கொடிகள்,அப்பறம் நம்ம டி வி ல பார்ப்போமே என்ன சொல்லுமா என்று கேட்டாங்க...
புலி.....
ஆ....அப்பறம் என்ன பார்ப்போம்...
யான........ஆ யானை...அப்பறம் வேற என்ன பார்த்தோம்...
சிங்கம்.....ம்....
அந்த சிங்கம் தான்....எது பாட்டி என கேட்கிறாள்.
அவள் வைத்திருந்த புத்தகத்தில் இருந்த சிங்கத்தை எடுத்து காமிக்கிறாங்க..

பின் அந்த சிங்கம் அந்த காட்டில பெரிய ராஜாவாக இருந்தது.தினமும் அது
மத்த விலங்கு எல்லாம் இருக்குல அதுல ஏதாவது ஒன்ன பிடிச்சு அப்படியே புடிச்சு சாப்பிட்டிடும்....

இதனால பயந்த எல்லாரும் சோகமாக "உம்" ன்னு இருந்துச்சுங்க...என்ன பண்ணலாம்? எல்லாம் யோசனை பண்ணுச்சாம்...
அப்போ நரி சிங்கத்து கிட்ட போகி சிங்கராஜா....சிங்க ராஜா.....
யாரை எப்போ சாப்பிடுவீங்க ன்னு எங்களுக்கு தெரியல...
அதனால எல்லாரும் வெளிய வரவே பயமா இருக்குன்னு.....உம் ன்னு இருக்காங்க சொல்லுச்சாம்.....

ஒ..அதுவா...சரி நீங்களே உங்களில் யாராவது தினமும் என்னிடம் வந்திட்டீங்கன்னா நான் வெளிய வரல ன்னு சொல்லிடுச்சு...சிங்கம்
வெளிய வந்த நரி சொல்லுச்சாம் எப்படியும் ஒரு நாள் சாப்பிடத் தான் போகுது சிங்க ராஜா....

குட்டிமா அப்படியே பாட்டியின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்...
தாத்தா காற்று வாங்க வெளியில் அமர்ந்திருந்தாங்க....
குட்டிமா என்ன் ஆச்சி பாட்டி சொல்லுங்க..கேட்கிறாள்..
அம்மாவும் படுக்க போறாங்க..அப்பா ஏதோ கணினியில பார்த்து கொண்டிருக்கிறார்...
வா மா....போயி தூங்கலாம் என சொல்ல...பாட்டியோட இருக்கிறேன் சொல்லிவிடுகிறாள்....
தாத்தா பாட்டியோட படுக்க செல்லுகிறாள்....
ம்...பாட்டி சொல்லுங்க....
சிங்கத்துக்கிட்ட மாட்டிகிறத விட தினமும் ஒருதர் அந்த குகையில் உணவாயிட்டா மத்த எல்லாரும் நிம்மதியாக இருக்கலாம் ன்னு சொல்லுது...

ஒரு ஒரு நாளும் ஒவ்வொருத்தவங்க போனும் சொல்லிடுது......
சரி இருக்கிற நாள் வரை இருப்போம் எல்லாம் நிம்மதியா இருப்போம்ன்னு எல்லாம் போயிடுச்சு...
ஆனால் முயல் மட்டும் நாம எப்படியாச்சம் தப்பிக்கணுமே யோசிச்சு கிட்டே இருந்துச்சு.....
ஒவ்வொரு நாளும் ஒரு விலங்கு போயிடும்....சிங்கம் அப்படியே புடிச்சு சாப்பிட்டிடும்....

அப்பொ ஒரு நாள் அந்த நரி இந்த முயல கூப்பிட வந்துசு....முயலுக்கு சோகமா இருந்ததால் அங்க இருக்கிற கிணறு கிட்ட உட்கார்ந்து நாம அந்த சிங்கத்துகிட்ட மாட்டிகிறத விட இந்த தண்ணி குதிச்சிடலாமான்னு யோசிச்சுது....எட்டி பார்த்த போது இந்த நரி..ஏய் முயல வா...வா.... போலாம்ன்னு சொல்லுச்சு....
இன்னிக்கு நீ தான்...ராஜா கிட்ட போனும்...
உடனே முயல் துள்ளி குதிச்சுகிட்டு ம்..போலாமேன்னு சொல்லுச்சு....
குட்டிமா இப்போ ஊத்து பார்க்கிறாள் பாட்டியை...அடுத்து பாட்டி என்ன சொல்ல போறாங்க என..பாட்டி கொஞ்சம் நேரம் நிறுத்தினாங்க..
பாட்டி ...ம்...என்ன ஆச்சு ன்னு குட்டிமா கேட்கிறாள்....
எல்லா விலங்கு சோகமா வரும் இந்த முயல் மட்டும் சந்தோஷமா வருதேன்னு நரி நினைச்சுது....
(தொடரும்)

ஜனகன்
04-02-2010, 12:58 PM
குட்டிமாவுக்கு பாட்டி சொன்ன கதை, நாம் முன்பு கேள்விப்பட்டது என்றாலும், இங்கே படிக்கும்போது இன்னும் மெருகேறுகிறது. பாட்டி கதை சொல்வது, எனது பழைய கூட்டு குடும்ப ஞாபத்தை ஏற்படுத்துகிறது. வாத்துக்கள் சரண்யா தொடர்ந்து எழுதுங்கள்.

சரண்யா
07-02-2010, 01:50 AM
நன்றி ஜனகன் அவர்களே...

சுகந்தப்ரீதன்
07-02-2010, 01:11 PM
காட்சிகளின் விவரிப்பு மெருகேறியிருக்கிறது... அத்துடன் எழுத்தின் அளவை சிறிதாக்கி பதிவின் நீளத்தை கூட்டியிருப்பது நன்று..!!

உங்க குட்டிம்மா... எல்லோரையும் கூட்டிட்டு போறாங்க பழைய ஞாபகங்களுக்கு..!!

வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..!!

சரண்யா
08-02-2010, 01:30 AM
நன்றி சுகந்தப்ரீதன் அவர்களே...
என்றுமே சின்ன வயதில விதைத்தது மறவாமல் மனதில் பதிந்து விடுகிறது...

aren
09-02-2010, 03:29 AM
முதல் மூன்று பாகம் வாசித்தேன். நன்றாகவே எடுத்துச் சென்றுள்ளீர்கள்.

அடுத்த பாகங்களையும் கூடியவிரைவில் படித்துவிடுகிறேன்

சரண்யா
10-02-2010, 12:40 AM
முதல் மூன்று பாகம் வாசித்தேன். நன்றாகவே எடுத்துச் சென்றுள்ளீர்கள்.

அடுத்த பாகங்களையும் கூடியவிரைவில் படித்துவிடுகிறேன்
நன்றி aren அவர்களே...தங்களின் கருத்துகளை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்...

கீதம்
13-02-2010, 05:54 AM
தொடர்கதை எழுதுவது என்பது அத்தனை சுலபமில்லை. இருப்பினும் தளராமல், துவளாமல் தொடர்ந்து எழுதுவதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். எழுத்தின் வடிவம் சுருங்கியிருப்பதால் படிக்க எளிதாக உள்ளது. ஒரு குழந்தைக்குக் கதை சொல்வது போன்ற எளிய நடை நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துகள் சரண்யா அவர்களே.

சரண்யா
13-02-2010, 12:45 PM
தொடர்கதை எழுதுவது என்பது அத்தனை சுலபமில்லை. இருப்பினும் தளராமல், துவளாமல் தொடர்ந்து எழுதுவதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். எழுத்தின் வடிவம் சுருங்கியிருப்பதால் படிக்க எளிதாக உள்ளது. ஒரு குழந்தைக்குக் கதை சொல்வது போன்ற எளிய நடை நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துகள் சரண்யா அவர்களே.

ஊக்கமளித்தமைக்கு நன்றி கீதம் அவர்களே...
தொடர்ந்து வாங்க...

சரண்யா
25-03-2010, 02:13 AM
குட்டீஸ்...(14)
http://2.bp.blogspot.com/_2qZyM281i_w/Sv4gCLm5gxI/AAAAAAAAAHw/Kg7C9Ns79DA/s200/crop+devathai.jpg

முயல் நரியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே நேரத்தை வளத்தியது.பின் ஒர் இடத்தில் அமர்ந்து கொண்டது முயல்.அதனை பார்த்த நரி வா..வா..உனக்காக சிங்க ராஜா காத்துக் கொண்டிருக்கிறார் என்றது.

http://picture-book.com/files/userimages/1044u/campfireanimals.jpg

ஆமாம் எப்படியும் சிங்கம் என்னை தின்றுவிட போகிறது..போலாம் இரு நரியே எனக் கூறியது. இப்படியே எவ்வளவு நேரம் உடகார்த்திருப்ப முயலே அப்பறம் அந்த சிங்கம் வெளியே வந்திடும் என பயத்தை ஏற்படுத்தியது நரி என்று சொல்லி நிறுத்தினாள் பாட்டி. பாட்டி அந்த முயல் போச்சா..சிங்கத்துகிட்ட...சொல்லுங்க... ஒ..ஆமா ஆமா சரி வா போகலாம் சொல்லி கிளம்பிடுச்சு முயல். அங்கே குகைக்குள் ரொம்ப கோபமா...முழங்கியது சிங்கம்..நேரம் ஆயிடுச்சு அதுக்கு ரொம்ப பசி எடுத்துச்சு.. ஏ முயலேன்னு கூப்பிடுது.முயலெ ஏன் இவ்வளவு நேரம் கேட்கிறது சிங்கம். நரி அப்படியே பார்க்கிறது. முயல் என்ன சொல்லுச்சு தெரியுமா.. உ ராஜா..அங்க இன்னொரு ராஜா

http://2.bp.blogspot.com/_tvocvms3M4k/SdGt2AIqCCI/AAAAAAAAADk/pJCGQClxDns/s1600/hare4.gif

என்னோட வந்த எல்லா முயலையும் சாப்பிட்டுடுச்சு.நான் மட்டும் தான் இங்க என் ராஜாட்ட போவேன் வந்திட்டுடேன் தலை ஆட்டி ஆட்டி முயல் இங்கையும் அங்கையும் கைக்காட்டி பேசுது. சிங்கம் நம்புச்சா பாட்டி.. சிங்கம் கேட்டுச்சு..இன்னொரு ராஜாவா..அது எங்க..நான் தானே இந்த காட்டிற்கு ராஜா என சத்தமா கத்தியது,பயந்து போன முயல் மெதுவா..எட்டி நின்று அங்க இருக்கிறது சிங்க ராஜா என்று சொன்னது. சரி வா முதல பார்க்கலாம் என்று கிளம்பியது. நரியும் சிங்கமும் இந்த முயல் பின்னாடி சென்றனர்.முயல் அந்த கிணற்றுக்கே அழைச்சிட்டு போகி..உள்ளே பாருங்க ராஜா..என்றது முயல். உள்ளே பெரும்

http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/th_lion.gif

முழக்கத்தோட எட்டி பார்த்தது சிங்கம்.அதோட சத்தமும் அதனையே தான் தண்ணீரில் பார்ப்பது தெரியாம ஆர்வத்தில உள்ளே குதிச்சுடுது சிங்கம்.. குட்டிமாவின் கண்கள் பளிச்சிடுகிறது. சிங்கத்தை தைரியமாக பேசி அழைத்து வந்த முயலை அந்த காட்டில உள்ள எல்லா விலங்கும் கொண்டாடி மகிழ்ந்தாங்க.. எல்லாரும் சந்தோஷமாக வாழலாம் இனிமே எந்த தொந்தரவு இல்லை என்ற மகிழ்ச்சியில் எல்லா மிருகங்களும் கத்தின. என்று பாட்டி முடிக்க..

http://picture-book.com/files/userimages/1044u/animalsplayinggames.jpg

இந்த கதையில் சிங்கம் எல்லாரையும் அடிச்சு சாப்பிட்டதால் அதுவும் ஒரு நாள் இறந்துடுச்சு குட்டிமா என்றாள். குட்டிகளில் தூக்கம் வருவதால் படுக்க வைத்தாள் பாட்டி.தாத்தாவும் கதை தாழிட்டு வந்து பேத்தி தூங்கியாச்சா என்று பார்க்கிறாள். குட்டிமாவின் உறக்கத்தில் எல்லா விலங்குகளுடன் ஆடி பாடி மகிழ்வது போல காட்சி தெரிகிறது,குட்டிமாவிற்கு கனவு என்று தெரியவில்லை. மறுநாள் காலை அம்மா பள்ளி செல்ல வேண்டும் என எழுப்பி விடுகிறாள்.அப்பொழுது தான் குட்டிமா கண்ணை கை வைத்து பார்க்கிறாள். அப்பாவோட பள்ளி செல்கிறாள். அங்கே தமிழ் பாடல் சொல்லி தருகிறார் ஆசிரியை.

http://media.nowpublic.net/images//f8/0/f80c8324fba96df2a24d28d57f7559f3.jpg
குட்டி முயலைப் பாருங்கள்
சுறுசுறுப்பாய் ஓடுது!
குதித்து குதித்து ஓடுது
கூண்டுக்குள்ளே பதுங்குது
குட்டி குட்டி பற்களால்
புல்லைக் கொரித்து திண்ணுது
பசுமை படர்ந்த தரையிலே
பாய்ந்து பாய்ந்து ஓடுது..

ஆசிரியை செய்யும் செயல்களை அப்படியே பார்த்து செய்கிறாள் சந்தோஷினி.நேற்று அவள் கேட்ட கதை அவளுக்கு நினைவுக்கு வருகிறது. மீண்டும் மீண்டும் ஆசிரியை சொல்ல சொல்ல மாணவர்கள் சொல்லுகிறாகள்..சிலருக்கு சுறுசுறுப்பாய் என்ற வார்த்தை வரவில்லை. சு.சுப்பாய் என்றார்கள்.சொல்லி சொல்லி பார்க்கிறாள்.
பின்பு தாத்தா பள்ளி வாசலில் வந்து நிற்கிறார்.அவள் கண்கள் தேடுவது பாட்டியை...தா..த்..தா... என்று ஆவலாய் வருகிறாள்.தாத்தா குட்டிமாவை தூக்கிக் கொள்கிறார்.
குட்டிமா...நல்லா படிச்சிங்களா..
ம்..படிச்சேன் தாத்தா.. பாட்டி எங்க தாத்தா..
வீட்டில இருக்காங்க..சரி மிஸ்க்கு Thank youசொல்லிட்டியா.. போலாமா..என்றார். தாத்தாவோட பேசிக் கொண்டே வருகிறாள்.வீடு வந்ததும்...துள்ளிக் குதித்து பாட்டி...என அம்மாவை விட பாட்டியைத் தான் தேடுகிறாள்.
(தொடரும்)

சரண்யா
07-04-2010, 01:04 PM
குட்டீஸ்...(15)
http://2.bp.blogspot.com/_2qZyM281i_w/Sv4gCLm5gxI/AAAAAAAAAHw/Kg7C9Ns79DA/s200/crop+devathai.jpg
பாட்டி எங்கே என உள்ளே பாட்டி....பா...ட்ட்...டிடி....
என சொல்லிக் கொண்டே போகிறாள்.
பாட்டி அங்கே குட்டிமாவிற்கு பருப்பு சாதம் பிசைந்து கொண்டிருந்தாள்..
என்னடா..செல்லம்..
அவள் பேச வாய் எடுப்பதற்குள் அம்மா லதா அவளை கை கால்களை அலம்பி விடுகிறாள்..சட்டையை மாற்றிவிட்டு பாட்டி ...பாட்டி எனத் திரும்ப ஓடுகிறாள்.
அதற்குள் அப்பா அருண் உள்ளே வருவதை அம்மா பார்க்கிறாள்.
குட்டிமா பாட்டி ஸ்கூல இன்னைக்கு அந்த முயல் படத்தை பாட்டி காமிச்சாங்க மிஸ்.
பாட்டி முயல் நல்லா வேகமா ஓடுமா..
இங்க பாரு பாட்டி என அழைக்கிறாள்..
பாட்டி நாற்காலியில் அமர்ந்து இருக்காங்க..
அம்மாவும் அப்பாவும் பின்னாடி நிற்பதை அவள் கவனிக்கவில்லை.
தாத்தா நேர் எதிராக அங்கே அமர்ந்திருந்தாங்க...


குட்டிமா அழகா..

குட்டி முயலைப் பாருங்கள்...என்று கைகளை ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து குட்டி என காண்பித்து பின் பாருங்கள் என கையை கண்கள் கிட்ட இருந்து நீட்டுகிறாள்...

சு..சுப்பாய் ஓடுது! என நின்ற இடத்தில் ஓடுகிறாள்.

குதி..த் குதி..த்து ஓடுது...என் சொல்லி கொண்டே குதிக்கிறாள்...
கூண்டுக்குள்ளே பதுங்குது.. என இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து பதுங்குவதை போல செய்கிறாள்..
குட்டி குட்டி பற்களால் என கையின் நுனி பகுதியில் ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் தொட்டு தொட்டு எடுக்கிறாள்...
புல்லைக் கொரித்து திண்ணுது என சொல்லிக் கொண்டே சாப்பிடுவது போல செய்கிறாள்..
பசுமை படர்ந்த தரையிலே..அழகாக இருகைகளையும் நீட்டி தரையை பார்க்கிறாள்...
பாய் ...ந் பாய்....ந்து ஓடுது..என பாட்டியிடம் வருகிறாள்...
ஒ..முயல் எல்லாம் அழகாய் செய்யுதே...
கை தட்டினாங்க பாட்டி கூடவே அம்மா அப்பா தாத்தா எல்லாரும் கைத்தட்டினவுடன் குட்டிமா வெட்கபட பாட்டியின் முந்தானையில் ஒளிகிறாள்.

குட்டிமாவும் இப்ப அழகா சாப்பிடணும் சரியா..
ம்..தலையாட்டுகிறாள்.
லதா அருணுக்கும் தாத்தாவிற்கு சாப்பாடு பரிமாறுகிறாள்.பாட்டி குட்டிமாவிற்கு ஊட்டி விடுகிறாள்.
அப்போ குட்டிமா கனவில பார்த்த எல்லா விலங்குகள்...அந்த யானை பெரிசா வருது...இப்படி என செய்கிறாள்..
பள்ளியில் சேர்ந்த சில நாளில் குட்டிமா நல்லா பாட்டு பாடுவதை எண்ணி
அருணுக்கு மிகுந்த மகிழ்ச்சி..
தாத்தாவும் அதையே அருணிடம் சொல்ல..அங்க நல்லா பார்த்து கொள்கிறார்கள்.பசங்க வருவதை பார்த்தாலே அழகாக இருக்கிறது.
குட்டிமா சாப்பிட்டு தூங்கிவிடுகிறாள்.
பாட்டியும் லதாவும் சாப்பிட்டு குட்டிமாவிற்கு சின்ன கவுண் தைக்கலாம் என சீக்கரம் வேலையை முடிக்கிறாங்க.
கோடை வெயில் அதிகமாக இருக்கிறது..சின்ன சின்ன கையில்லாத கவுண்
தைத்து அதிலே குட்டிமாவிற்கு பிடிச்ச முயல் படத்தை வரைந்து எம்ராய்டரி செய்திடலாம் என நினைச்சாங்க.
ஐடியாவோட நிக்காம...
பாட்டி துணியை வெட்டி தந்தாங்க..அதனை லதா தைக்க ஆரம்பிக்கிறாள்.
சின்ன சின்ன சுருங்கங்கள் வைக்க திரும்ப பாட்டி சொல்லித்தர லதா அதனை செய்கிறாள்...
அழகாய் ஒரு சின்ன கவுண் ரெடியாயிட்டு இருந்துச்சு...
மேல் பகுதியில் நடுவில ஒரு முயல் படத்தை லதா வரைந்தாள்..பின் அதன் கலர் நூலினால் எம்ராய்டரி போட உட்காருகிறாள்.
பால் வந்துவிடுகிறது...லதா அடுப்படியில் வேலை பார்க்கிறாள்.
குட்டிமா ......தூங்கி எழுந்து வந்து.....
(தொடரும்)

சரண்யா
24-06-2010, 02:10 AM
குட்டீஸ்(16)
http://2.bp.blogspot.com/_2qZyM281i_w/Sv4gCLm5gxI/AAAAAAAAAHw/Kg7C9Ns79DA/s200/crop+devathai.jpg
குட்டிமா ......தூங்கி எழுந்து வந்து.....ஒன்றும் புரியாமல் பார்க்கிறாள்.
பாட்டி என்ன செய்றாங்க என கவனித்து கொண்டிருந்தாள். தூக்கம் கலைவதற்குள் அழகான முயலை கவுணில் பார்த்த சந்தோஷினிக்கு ஆச்சிர்யமாக இருக்கிறது..
அம்மா முயல் வரைச்சாங்கடா..என பாட்டி சொல்லுறாங்க.
அம்மாவை பார்க்கிறாள்...உள்ளிருந்து கையில குட்டிமாவிற்கு பாலை ஆத்தி எடுத்துக் கொண்டு வந்தாள்..அ..ம்மா..என குரல் கொடுக்கிறாள்...
இதுவா ஸ்கூல் விட்டு வந்து போட்டுக்கடா...நல்லா இருக்கா..முயலை பாரு நூலினால் பாட்டி தைச்சாங்க..என்றாள்.சரியா இருக்கா பார்ப்போமா டா..செல்லத்துக்கு.. என அவள் அணிந்திருந்த ஆடையை கழற்றிவிட்டு இந்த கவுணை மாட்டிவிட்டாள்..முயலை தடவி பார்த்த குட்டிமா நிமரவில்லை..இங்க பாருங்கடா..என லதா அழைக்கிறாள்..
சரி டா இன்னும் பின்னாடி சரி செய்திட்டு நாளைக்கு போட்டுக்கொள்ளலாம் என கழற்றிவிட..குட்டிமாவின் முகம் சிறயதாய் போகிறது.
உடனே பாட்டி இதுமட்டுமில்லடா..நளைக்கு கடைக்கு போய் பட்டுபாவடை வாங்குவோமா...
என்றதும் குட்டிமா பாட்டியிடம் வந்து நிற்கிறாள்.என்ன பாட்டி...நிஜமாவா..
ஆமாம் டா...உங்க சித்தப்பா உனக்கு ஒரு டிரஸ் வாங்க சொல்லி இருக்கிறான்..நாளைக்கு கடைக்கு போகி வாங்குவோமா என குட்டிமாவிடம் சொல்கிறாள் பாட்டி.
சித்தப்பா அப்பாவும் இருக்கிறது போல ஒரு படம் முன் முகப்பு அறையில் இருப்பதை அறிந்த அவள் அங்கு சென்று நிற்கிறாள்.
அவன் எங்கடா..வரவில்ல என ஏக்கமாக சொல்கிறாள் பாட்டி.
இம்முறையும் விடுமுறை இருந்தும் வேலை அதிகமாக இருக்கிறது என சொல்லுகிறான் என்றாள்.
அப்பாவும் வந்துவிட ஏன் என்னவாம் அவனுக்கு என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைகிறார்.சரி போன் பண்ணிப் பார்க்கிறேன் என அழைப்பு விடுக்க மறுப்புறம் ஒன்றும் பதில் இல்லை.
இவன் ஏன் போன் எடுக்க மாட்டிகிறான் என திரும்பவும் அழைப்பு விடுக்க...ம் என எதாவது டிராபிக்ல மாட்டி இருப்பானோ..அப்பறம் செய்யலாம் என உள்ளே சென்றுவிட..
பாட்டியின் எதிர்ப்பார்ப்பு இளைய மகனும் அங்கு இல்லையே என்பது தான்.
கொஞ்சம் நேரம் கழித்து தாத்தா அருணிடம் தம்பியிடம் பேசினாயா என கேட்க...இல்லபா அவன் போன் எடுக்கல.இப்ப முயற்சித்து பார்க்கிறேன் என்றார்.
பின் அண்ணனிடம் பவ்யமாக வெளியில் இருப்பதாக தெரிவித்தான்.சரி நீ எப்போ வருகிறாய் என கேட்கிறார்...
இல நான் வரல..என்றவுடன் ஏன் டா நாங்க எல்லாம் இருக்கிறத மறந்திட்டியா என கேட்கிறார்...
எப்பவும் வேலை வேலை எதாவது சொல்லிட்டே இருக்கிற..
அப்பா அம்மா இங்க இருக்கிறாங்கடா..நீயும் வாடா..என அழைக்கிறார்.
மறுப்பு தெரிவிக்க முடியாமல் மௌனமாக இருந்தான் அண்ணனிடம்..
குட்டிமா இங்க வாடா..சித்தப்பாட்ட பேசுடா என அழைக்கிறார்.
குட்டிமா தன்னோட பாணியில சித்...தப்பா..என்றவுடன்..ஹொய் என்ன பண்ணுற கேட்கிறார்..
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/550333091_6a6af7dad3.jpg?t=1277343589
சரி நான் அங்க வரவா கேட்டார்...ம்...என்னவோ புரிந்தது போல தலையை ஆட்டி ஆட்டி பேசினாள் குட்டிமா...
பாட்டி கேட்டாங்க..சித்தப்பா என்னமா சொன்னான் என்று..
குட்டிமா கிட்டே வந்து......
(தொடரும்)

பா.ராஜேஷ்
01-07-2010, 09:22 PM
மழலையாய் மாறி படிக்க நேர்ந்தது... விட்ட பாகங்களை எல்லாம் ஒன்றாக படித்தேன். இப்படி மாதத்திற்கொரு முறை பதித்தால் எப்படிங்க சரண்யா??

சரண்யா
03-07-2010, 03:50 AM
மழலையாய் மாறி படிக்க நேர்ந்தது... விட்ட பாகங்களை எல்லாம் ஒன்றாக படித்தேன். இப்படி மாதத்திற்கொரு முறை பதித்தால் எப்படிங்க சரண்யா??

நேரமின்மையே ங்க...நன்றி..
மழலையாய் மாறினிங்களா....ஆமா அதிலும் சந்தோஷம் தானே...
நன்றிங்க..விரைவில் பதிக்க முயற்சிக்கிறேன்...