PDA

View Full Version : மீண்டும் புதினம் !!!



Honeytamil
07-11-2009, 04:38 AM
சில தினங்களுக்கு முன் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதினம் இணையத்தளம், புதினம் செய்தி (http://www.puthinamnews.com) (www.puthinamnews.com) எனும் பெயரில் இயங்கத் துவங்கியுள்ளது.

கனடாவிலிருந்து இயங்கி வந்த புதினம் இணையம் தமிழீழச் செய்திகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக வன்னிப் போர்க்களச் செய்திகளை உடனுக்குடன் வழங்கியது.

ஆனால் இறுதிப் போரில் புலிகளின் படை தோற்கடிக்கப்பட்ட, பிரபாகரன் தொடர்பாக புதினம் வெளியிட்ட செய்திகள் விடுதலைப்புலி ஆதரவாளர்களால் விமர்சனத்துக்குள்ளானது. அதன் பின்னரும் தொடர்ந்து செய்திகளை வழங்கிவந்த புதினம் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தது.

இது தமிழீழச் செய்திகளை அதிகம் படிக்கும் வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து வாசகர்கள் புதினம் முடக்கப்பட்டது ஏன்? என்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் புதினம் தளம் அதே லோகோவுடன், ஆனால் புதினம்நியூஸ் என்ற புதிய பெயரில் இயங்க ஆரம்பித்துள்ளதாக மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர்.

வியாசன்
07-11-2009, 06:54 AM
இதை உடனடியாக நம்ப முடியாது. யாராவது விசமிகள் கூட புதிய பெயரில் ஆரம்பித்திருக்கலாம்.

குணமதி
07-11-2009, 01:51 PM
வரவேற்கலாம்!

ஜனகன்
07-11-2009, 02:26 PM
புதிய பெயரில் வந்தாலும், வாசகர்களுக்கு நன்மைதானே.

தூயவன்
08-11-2009, 04:20 AM
இதை உடனடியாக நம்ப முடியாது. யாராவது விசமிகள் கூட புதிய பெயரில் ஆரம்பித்திருக்கலாம்.

செய்திகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை

வியாசன்
08-11-2009, 06:43 AM
செய்திகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை

நான் நம்பவேண்டாம் என்று சொல்லவில்லை. அவதானமாக இருங்கள் என்றுதான் சொல்கின்றேன். விசமிகளானால் ஆரம்பத்தில் நம்பிக்கைக்கு உரியவர்கள்போல் நடப்பார்கள். சந்தர்ப்பம் வரும்போது............... இதை எமது போராட்ட காலத்தில் பார்த்தவர்கள் நாம்

விகடன்
11-11-2009, 12:03 PM
ஏன் அதை பழைய புதினம் இணையத்தளமாகவே பார்க்கிறீர்கள். இதை ஓர் புதிய செய்திகளை வெளியிடும் தளமாகப் பாருங்கள். காலப் போக்கில் இந்தத்தளத்தை நம்பலாமா இல்லையா என்பதை தீர்ம்மானிக்கலாம். இதுவும் புதினம் தளம்போல் செய்திகளைத் தருகிறதா இல்லையா என்பதும் புலப்படும்.