PDA

View Full Version : ஆகாயம்



சரண்யா
07-11-2009, 04:23 AM
ஆகாயம்

http://t2.gstatic.com/images?q=tbn:EBdGGk-9mFyA7M:http://4.bp.blogspot.com/_67USTqHGSMM/SefzAGc6a_I/AAAAAAAAACE/CUhG32vXs9s/s320/Sky.jpg

ஆகாயமே உன்னை
அன்னார்ந்து பார்க்காதவர்
இலர் என்றே எண்ணுகிறேன்

ஆகாயம் நீ
வானம் என்றும்
வெட்டவெளி என்றும்
அழைக்கப் படுகிறாய்

எங்களை பார்க்கத்தூண்டும்
சூரியனும் சந்திரனும்
நட்சத்திரங்களும்
உன்னில் அருமை

உன்னை காணும்போது
எட்டாத தூரத்தில்
இருந்தாலும் பறவைகள்
எட்டித் தொட வரும் காட்சி
அருமையே என்பேன்.

மேகம் உன்னை
மறைத்தே சில
ஓவியமாய் திகழ்வதும்
உன்னில் அருமை

பரந்த வானில்
உன்னை ரசித்தது
ஏராளம்...
என்றாளும் மழையாய்
எங்களை வந்தடைவாய்
இடியும் மின்னலாய்
சப்தம் எழுப்பினாய்
என்றால் உன்னை
பார்க்க மனம்
ஒப்பவில்லையே...

அன்பினை உன்னை போல்
பரந்து விரிந்து விடியும்போது
எல்லாம் நல்லதே நினைத்து
முற்பகல் பிற்பகல் மாலை இரவு
என காலம் காட்டும் உன்னால் தானே
எதற்க்கும் ஒரு "காலமும் நேரமும்
உண்டு" என்பதே சொன்னார்களோ...

ஓவியன்
07-11-2009, 04:40 AM
ஒரு அமைதியான இரவில்
நமக்குப் பிடித்தவர்களுடன்
வானமே துணையென
ஒரு மொட்டை மாடியில்
சில மணித்துளிகளைக்
களித்துப் பாருங்கள்,
இல்லை, இல்லை
கடந்து பாருங்கள்....

சரண்யா வரைந்த கவியின் வீரியம் புரியும்,
வாழ்த்துகள் சரண்யா.

சரண்யா
07-11-2009, 06:25 AM
நன்றிகள்.....ஓவியன் அவர்களே....

அமரன்
07-11-2009, 07:35 AM
ஆதவன் அலைக்கரங்கள்
வரையும் சித்திரங்களால்
நிமிடமும்
வானவில் கோலம் கொள்ளும்
நவரச விதானம்..

காதலுடன் காற்று
ஆடை கலைக்க-பண்
ணாடை காட்டும்
கற்பனை இராகம்..

நட்சத்திரங்கள் அதற்கு
தப்புத் தாளம்.

ஆகாயம்...

பார்ப்பவர் மனங்களில்
ஆ....காயம்....!

சரண்யாவின் ஆகாயம்
கருவிழி நடனம்..

சரண்யா
07-11-2009, 08:50 AM
நன்றிகள்....அமரன் அவர்களே...முதல் முறை கவிக்கு பின்னூட்டம் என நினைக்கிறேன்....