PDA

View Full Version : உழவு எப்போது இனிய தொழில்?



குணமதி
06-11-2009, 01:43 PM
உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் இந்தக் காலத்ததில் பல்வேறு இன்னல்களுக்கிடையே தம் தொழிலை நடத்தி வருவதை அறிந்து வருகின்றோம்.

சரியான விதை கிடக்காமை, வேலைக்கு ஆள் கிடைக்காமை, செயற்கை உரங்களால் மண்ணின் வளச்சிதைவு, பூச்சி கொல்லிகளால் விளைபொருள் நஞ்சூட்டம், அறுவடை செய்கையில் பல்வேறு சிக்கல்கள், விளைபொருளுக்குத் தகுந்த விலை கிடைக்காததால் இழப்பு, இடைத் தரகர்களின் சுரண்டல் போலும் எண்ணற்ற இன்னல்களால் இன்று உழவர்கள் தொல்லைப்பட்டு வருகின்றனர்.

பல்வேறு தொல்லை இடையூறுகளுக்கு இடையில் கடன் வாங்கிப் பயிரிட்ட பின்பு, பல்வேறு காரணங்களால் தக்க பலன் கிடைக்காது இழப்பை நேர் கொள்ளும் உழவர்கள் பலர், தற்கொலை செய்கொண்டு இறந்து போகும் செய்திகளையெல்லாம் படித்து வருகின்றோம்.

இந்த நிலை இப்போது. முன்பும் கூட உழவுத்தொழில் எளிய தொழிலாக இல்லை என்ற உண்மையைப் பழமொழிகளும் கூட சொல்கின்றன. அவற்றுள், ' உழுதவன் கணக்குப் பார்த்தால், உழவுகோலும் மிஞ்சாது' என்ற பழமொழியும் ஒன்றாகும். ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்னால், உழவுத்தொழில் மிகவும் சிக்ககலானது என்ற செய்தியை ஒருபாட்டின் வழி அறிகிறோம்.

'விநோத ரச மஞ்சரி' என்ற பழைய நூலில் உள்ள இந்தப் பாடலைப் பாருங்கள் :

ஏரும் இரண்டுளதாய் இல்லத்தில் வித்துளதாய்

நீரருகே சேர்ந்த நிலமுளதாய் - ஊரருகே

சென்று வரஎளிதாய்ச் செய்வாரும் சொல்கேட்கில்

என்றும் உழவே இனிது.


எந்த வசதியிருந்தால் உழவுத்தொழில் இனிதாக இருக்கும் என்று விளக்குகிறது இப் பாடல். பொருள் எளிதில் புரிகிறது. இவ்வாறு வசதிகள் இல்லாதபோது, உழவுத் தொழில் துன்பந் தருவதாகும் என்று சொல்லாமல் சொல்கிறது!

அறிஞர்
06-11-2009, 01:53 PM
உழவுத் தொழில் இல்லாவிடில்... நம் நாட்டில் பல இன்னல்கள் உருவாக வாய்ப்புகளுண்டு...

உழவுத்தொழிலை பேணிக் காக்க அரசு முற்படவேண்டும்.. வேண்டிய உதவிகளை செய்யவேண்டும்.

இளந்தமிழ்ச்செல்வன்
06-11-2009, 04:17 PM
ஆனால் தொழில்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உழவுக்கு இல்லை.

அட உறுதுணையில்லாவிட்டாலும் பரவாயில்லை. விளைநிலத்தை தொழிற்சாலைகளுக்கும், குடியிருப்பாகவும் மாற்றிக்கொண்டே வந்தால் உணவுப் பொருளின் விலை தற்போது கண்டுகொண்டிருக்கிறோமே வேறு என்ன உதாரணம் வேண்டும்.

சில தொழிலதிபர்கள் சத்தமின்றி நவீன முறையில் விவசாயம் ஆரம்பித்துள்ளார்கள். அதன் விளைவை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வியாசன்
06-11-2009, 06:41 PM
குணமதி பல ஐரோப்பிய நாடுகள் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்கின்றார்கள். ஆனாலும் தங்கள் நாடுகளில் அறுவடைக்காலம் வரும்போது இறக்குமதியை நிறுத்தி அல்லது குறைத்து தங்கள் விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுக்கின்றார்கள். மானியங்களும் அளிக்கின்றார்கள்.

இதற்கு காரணம் இறக்குமதி செய்வதில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அல்லது யுத்தங்கள் வந்தால் உணவுத்தட்டுப்பாடு வருமென்பதற்காக இப்படி செய்கின்றார்கள். இந்தியா போன்ற நாடுகளில் சுயநல அரசியலுக்காக நீரை அரசியலாக்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீரழிக்கின்றார்கள். தமிழ்நாட்டில் நீரினால் எத்தனை ஏக்கர் நிலம் விவசாயம் செய்யப்படாமல் இருக்கின்றது. நான் கேள்விப்பட்டிருக்கின்றேன் தமிழக விவசாயிகள் பசிக்கொடுமையால் எலியை சமைத்து உண்டதாக. இப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாயத்தை நினைத்தும் பார்க்க மாட்டார்கள்

குணமதி
07-11-2009, 01:48 PM
மூவர்க்கும் மிக்க நன்றி.

ஜனகன்
08-11-2009, 10:05 AM
நாட்டின் மொத்த வருமானத்தில், விவசாயத்தின் பங்கு 1951-இல் 55 சதவிகிதமாக இருந்த நிலைமை மாறி, 1991-இல் 31 சதவிகிதம், 2001-இல் 26 சதவிகிதம், 2008-இல் 17 சதவிகிதம் என ஆகிவிட்டது, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல!

இந்தியாவின் மொத்த வருமானம் 8 சதவிகிதம், 10 சதவிகிதம் என உயர்ந்து வந்த காலத்தில்கூட, விவசாயத் துறையின் வளர்ச்சி ஒரு சதவிகிதத்தை ஒட்டிய மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
நாட்டின் வருமானம் பெருகினாலும், கிராமப் பொருளாதாரம் புறக்கணிக்கப்பட்டு, விவசாயத் துறை பெருகிவரும் வேதனையின் நிலையான உறைவிடமாக ஆக்கப்பட்டு விட்டது.:icon_p:

மேலே சொன்னதுதான் நான் படித்த செய்தி..உண்மையான விவசாயிகளின்/விவசாயத்தின் நிலை இப்படிதான் இருக்கிறது…:traurig001:

குணமதி
08-11-2009, 02:35 PM
நாட்டின் மொத்த வருமானத்தில், விவசாயத்தின் பங்கு 1951-இல் 55 சதவிகிதமாக இருந்த நிலைமை மாறி, 1991-இல் 31 சதவிகிதம், 2001-இல் 26 சதவிகிதம், 2008-இல் 17 சதவிகிதம் என ஆகிவிட்டது, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல!

இந்தியாவின் மொத்த வருமானம் 8 சதவிகிதம், 10 சதவிகிதம் என உயர்ந்து வந்த காலத்தில்கூட, விவசாயத் துறையின் வளர்ச்சி ஒரு சதவிகிதத்தை ஒட்டிய மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
நாட்டின் வருமானம் பெருகினாலும், கிராமப் பொருளாதாரம் புறக்கணிக்கப்பட்டு, விவசாயத் துறை பெருகிவரும் வேதனையின் நிலையான உறைவிடமாக ஆக்கப்பட்டு விட்டது.:icon_p:

மேலே சொன்னதுதான் நான் படித்த செய்தி..உண்மையான விவசாயிகளின்/விவசாயத்தின் நிலை இப்படிதான் இருக்கிறது…:traurig001:

தக்க அட்டிப்படைச் செய்திகளோடு உழவுத்தொழிலின் நிலையைக் கூறியிருக்கிறீர்கள்.

நன்றி.