PDA

View Full Version : விடையிதற்கு விளம்புவாயே!



குணமதி
05-11-2009, 04:16 PM
வாய்ப்பக்கம் நெருப்புண்டு பேயுமில்லை!

வலிந்துமிழும் காற்றுண்டு பாம்புமில்லை!

காய்ச்சுகின்ற பணிக்குதவும் கஞ்சியில்லை!

கடுந்தாக்கு நடக்குமங்கு சண்டையில்லை!

பாய்ந்துபறக் கும்ஈக்கு இடமுமில்லை!

பாலரையும் விரட்டிடுவார் சேர்ப்பதில்லை!

சேய்போன்ற குதலைமொழி சித்திரமே

செவ்வாயால் விடையிதற்கு விளம்புவாயே!

வியாசன்
05-11-2009, 04:48 PM
கொல்லன் பட்டறையிலுள்ள துருத்தி (இரும்படிப்பதற்கு இரும்பை பழுக்க காய்சு்சுவதற்கு நெருப்பில் வைத்து காய்ச்சுவது)

ஜனகன்
06-11-2009, 06:40 AM
சிகரட் அல்லது சுருட்டு

ஆதி
06-11-2009, 07:07 AM
பட்டறை

சரண்யா
06-11-2009, 10:55 AM
இல்லை...பால் குக்கரா....

குணமதி
06-11-2009, 12:13 PM
கொல்லுலை துருத்தி - சரியான விடை

அனைவர்க்கும் நன்றி.

சரண்யா
07-11-2009, 06:35 AM
வாழ்த்துகள் வியாசன் அவர்களே....சரியா சொல்லியிருக்கீங்க...

வியாசன்
07-11-2009, 06:44 AM
வாழ்த்துகள் வியாசன் அவர்களே....சரியா சொல்லியிருக்கீங்க...

நன்றி சரண்யா எல்லாம் பூவுடன் சேர்ந்த நார்தான் நான் இங்கிருக்கும் பூக்களுடன் சேர்ந்தனால் மணம் பெறுகின்றேன்

குணமதி
07-11-2009, 01:45 PM
நன்றி சரண்யா எல்லாம் பூவுடன் சேர்ந்த நார்தான் நான் இங்கிருக்கும் பூக்களுடன் சேர்ந்தனால் மணம் பெறுகின்றேன்

முதலில் சரியான விடையைக் கண்டுபிடித்த வியாசன் சிறப்புப் பாராட்டுக்குரியவர் எனபதில் ஐயமில்லை.