PDA

View Full Version : என்னை ஆளும் விலங்குகள்



M.Rishan Shareef
05-11-2009, 04:42 AM
என்னை ஆளும் விலங்குகள் (http://mrishanshareef.blogspot.com/2009/10/blog-post.html)


எல்லாமாயும் எனக்குள்ளே
ஒளிந்திருக்கின்றன பல விலங்குகள்
பூசி மெழுகும் சொற்களெதுவும்
அவையிடத்திலில்லை
சில மீன்களைப் போல அமைதியாயும்
இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்
சில நேரங்களில் மட்டும்
எறும்பு, தேனி, கரையான்களைப் போல
சுறுசுறுப்பாகுபவையுமுண்டு

காலத்தைப் பயனுள்ளதாக
நகர்த்திப் போவதாகப் பெருமை பேசி
திரும்பிப் பார்க்கையில்
தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்
கோபமுறுகையில்
சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்
நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும்
நன்றி மறப்பதில்
பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்
குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்
புன்னகைப்பது மட்டும்
மனிதத்தை ஒத்திருக்கிறது

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வார்த்தை - ஆகஸ்ட், 2009 இதழ்
# உயிர்மை
# திண்ணை

gans5001
05-11-2009, 04:53 AM
மனிதன் பாதி மிருகம் பாதி இரண்டும் செய்த கலவையல்லவா நாமனைவரும்.. உங்கள் கவிதையின் கரு நன்றாகயிருக்கிறது.. கவனம் செலுத்த வேண்டியது சொல் கட்டில் மட்டுமே.. வாழ்த்துக்கள்..

சிறிது முயன்றால் இன்னும் அழகிய கவிதைகளை உங்களால் தர முடியும்.

M.Rishan Shareef
09-11-2009, 03:37 AM
அன்பின் gans5001,

கருத்துக்கு நன்றி நண்பரே !

இளசு
10-11-2009, 06:48 PM
பரிணாமத்தின் எச்சங்கள் இன்னும் இருப்பதும்
புன்னகையும் கண்ணீரும் உச்சங்கள் ஆனதும்

ஆழமான ரிஷானின் வரிகளில் அழகாய்..

பாராட்டுகள்!


அன்பு நண்பன் கண்ஸைக் கண்டதில் மகிழ்ச்சி..

( கண்ஸின் இன்னொரு பெயர் - விமர்சனத் திலகம்..)

M.Rishan Shareef
23-11-2009, 05:56 AM
அன்பின் நண்பர் இளசு,

//பரிணாமத்தின் எச்சங்கள் இன்னும் இருப்பதும்
புன்னகையும் கண்ணீரும் உச்சங்கள் ஆனதும்

ஆழமான ரிஷானின் வரிகளில் அழகாய்..

பாராட்டுகள்!//

மிக அழகான கருத்து.
நன்றி நண்பரே !

குணமதி
26-11-2009, 03:14 PM
விலங்கிலிருந்து பிறந்தவன் மாந்தன்.

விலங்குணர்வுகளை வெற்றி கொள்வதால் மாந்தனாகிறான்.

M.Rishan Shareef
01-12-2009, 03:03 AM
அன்பின் குணமதி,

கருத்துக்கு நன்றி நண்பரே !

இன்பக்கவி
07-12-2009, 05:53 PM
நன்றாக இருக்கு பாராட்டுக்கள்...
மனிதன் விலங்கில் இருந்து வந்ததனால் தானோ நமக்குள் பலவகை மிருகம் இருக்கு...:confused:

M.Rishan Shareef
09-12-2009, 04:36 AM
அன்பின் கவிதா,

கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :)