PDA

View Full Version : இதற்கு பெயர் தான் வல்லரசா????



இன்பக்கவி
05-11-2009, 04:38 AM
http://3.bp.blogspot.com/_36o10GMuE00/SXIm8a-RQqI/AAAAAAAAAuY/Ptd-RDNZl1c/s320/beggar.jpg
இரு சக்கரவாகனத்தை
செலுத்தி கொண்டு
என் மனம் எதையோ சிந்தித்து..
எங்கு செல்கிறேன் என்று அடிக்கடி
என்னை நானே கேட்டுக்கொண்டு
பயணித்து கொண்டு இருந்தேன்

என் சிந்தனையின் வேகம்
என்னை மறக்க செய்ய
எதிரே வந்து போன
பல முகங்கள் மனதில்
பதிய மறுத்தது...
தெரிந்தவர்கள் எல்லாம்
மங்கலாய் கண்முன்னே..
எதையும் கவனிக்காமல்
என் பயணம்....

போக்குவரத்துக்கு அனுமதிக்காக
பச்சை விளக்கு வருமா என்ற
சிந்தனையோடு ஒரு இடத்தில
கம்பத்தையே பார்த்துக்கொண்டு இருக்க
என் சிந்தனைகள் எல்லாம்
கலைய செய்தது
ஒரு கைக்குழந்தையின் அழுகை....

எல்லா வாகனத்தையும் தட்டி
பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தால்
ஒருத்தி..
சுட்டெரிக்கும் வெயில்
கண்கள் குளமானது
பாலுக்காய் அழும் குழந்தை
அழும் குழந்தையை காட்டி
பிச்சை எடுக்கும் அவள்...

குழந்தையின் அழுகை
என் நெஞ்சை பிசைந்தது
கல் மனம் அவளுக்கு:mad:
பிள்ளை வரம் வேண்டி
பலபேர் இருக்க
பிச்சைகாரிக்கு
கடவுள் போட பிச்சை...
கடவுளுக்கு கண் இல்லை
உணர்ந்தேன் முழுமையாக...

சகிக்க முடியாத காட்சி
இன்னும் அகலவில்லை
என் விழித்திரையை விட்டு...

கோடி கோடியாய்
பிற நாடுகளுக்கு
நிவாரண நிதியாம்
தினமும் பத்திரிகைகளில்
தம்பட்டம் அடிக்கும் கட்சிகள்...
நிவாரணம் என்ற பெயரில்
நீ வாழ்கிறாய்...

சாலை வசதி
மருத்துவ வசதி
எதுவும் இல்லை
எம் நாட்டில்...

தெருவோர குடிசைகள்,
பிச்சைகாரர்கள், பைத்தியங்கள்
எல்லாம் வீதிகளில்
வாசம் செய்யும் நிலை
இதற்கு பெயர் தான்
வல்லரசா????

எதுவுமே செய்ய முடியாத
நிலை எங்களுக்கு...
வெறும் மௌனத்தை
மட்டுமே வெளிகாட்டி
கனத்த இதயத்தோடு
நகர்ந்துவந்தேன் :traurig001:

gans5001
05-11-2009, 05:24 AM
உங்களுக்குத் தெரியுமா.. சிக்னல் பிச்சைக்காரர்கள் ஒரு கூட்டுத்தொழிலாளிகள் என்று.. பச்சிளம் குழந்தைகள் வாடகைக்கு கிடைக்கிறார்கள்.. சத்தம் தராமல் இருக்க தாய்ப்பாலுக்கு பதிலாய் தரப்படுவது மது... இருமுறை நான் ஒரு நிரந்தர வேலைவாய்ப்பை அமைத்து தர முயன்றேன்.. அவர்கள் தயாராக இல்லை.. சட்டம் சிறிது கடுமையாய் பாயவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. நிற்க.

நீளம் காரணமாய் உங்கள் கவிதையின் ஆழம் மனதில் தைக்கவில்லை. கொஞ்சம் கைவைத்திருக்கிறேன், தவறாய் எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்..

"
சரியாய் நான் கடக்கும் போதுதானா சிக்னலில் சிகப்பு..
சே...இன்றும் அலுவலகத்தில் தலைசொறிதல்தான்

எண்ணங்களை வெட்டியது சில்லறைகளின் சிதறல் ஒலி..
அழுக்காய் நீளும் அலுமினியத்தட்டு..
அதெப்படி
சிக்னல் பிச்சைக்காரியின்
தொட்டில் குழந்தைக்கு மட்டும்
எப்போதும் ஆறு மாதம்?

நல்லரசா.. வல்லரசா..
நாளைய மன்னன் நீண்ட மயக்கத்தில்?
நமக்கு மட்டுமென்ன அதீத அக்கறை..

சில்லறை போடலாமா..
சிக்னல் விழுந்து விடுமா..
பாக்கெட்டைத் தொட்டது கை
சிக்னலில் மஞ்சள்
அவசரமாய் கியர் மாற்றி வண்டியைக் கிளப்பினேன்,
அவரவர் அவசரம் அவரவர்க்கு..

இந்தியாவைக் காப்பாற்ற
இருக்கிறார்கள் பலபேர்...!

அக்னி
05-11-2009, 06:29 AM
சிவப்பு விளக்குகளில்
பசுமை தேடுகின்றார்கள்...

பாவம் பச்சிளம் சிசுக்கள்;
பிறந்தது முதலாய்,
முதலாகிவிட்டார்கள்,
பிச்சைக்கு...


பிள்ளை வரம் வேண்டி
பலபேர் இருக்க
பிச்சைகாரிக்கு
கடவுள் போட பிச்சை...

:icon_b:
பிள்ளை வரம் வேண்டியும் பிச்சை.
பிள்ளை வரம் காட்டியும் பிச்சை.

வேதனையான முரண்...


அதெப்படி
சிக்னல் பிச்சைக்காரியின்
தொட்டில் குழந்தைக்கு மட்டும்
எப்போதும் ஆறு மாதம்?

அதுதானே... :icon_b:


சிக்னலில் மஞ்சள்
அவசரமாய் கியர் மாற்றி வண்டியைக் கிளப்பினேன்
பின்னால் காவல்துறை துரத்தப்போகின்றது. கவனம். ;)

இளந்தமிழ்ச்செல்வன்
05-11-2009, 08:25 AM
கவிதா, கன்ஸ் இதயம் தொட்டது உங்கள் சிந்தனை கவிதை.

அக்னி உங்கள் பதிலும் அருமை.

வியாசன்
05-11-2009, 09:37 AM
கவிதா உங்கள் கண்களில் மட்டும் அவலங்கள் தென்படுகின்றன. பலர் கண்டதும் காணாமல் போய்விடுகின்றனர். அரசுதான் இதைக் கவனிக்கவேண்டும்

இன்பக்கவி
06-11-2009, 04:40 AM
:icon_b:
பிள்ளை வரம் வேண்டியும் பிச்சை.
பிள்ளை வரம் காட்டியும் பிச்சை.

வேதனையான முரண்...


அதுதானே... :icon_b:



எல்லோருக்கும் நன்றிகள்
இதுக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை..

அக்னி
06-11-2009, 10:50 AM
இதுக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை..
உங்கள் வரிகளின்படியேதான்,
பிள்ளை வரம் வேண்டி, கடவுளிடம் யாசிப்போர் பலருமிருக்கப்,
பெற்ற பிள்ளையைக் காட்டி, ஏன் நிறைமாத வயிற்றைக்காட்டியும் கூட,
யாசகம் செய்யும் இழியோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
பிச்சை எடுப்பதற்காகவே பிள்ளை பெற்றுக்கொள்ளும் கேவலம் கூட, நிகழத்தான் செய்கின்றது.

ஒரு கௌரவப்பிச்சை (சில) ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுவதுண்டு.
அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள, விசாவைப் பெற்றுக்கொள்ள என்பதற்காகவே
பிள்ளை பெற்றுக்கொள்ளும் மறைமுகப் பிச்சைக்காரர்கள் ஐரோப்பாவில் இருக்கின்றார்கள்.

அறிஞர்
06-11-2009, 12:07 PM
நல்ல கவிதை கவி....
பிச்சையெடுக்கும் நிலை மாறவேண்டும்..
உதவ தயாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிலர்....
--------
அக்னி சொல்வது போல்.. குழந்தையை வைத்து ஐரோப்பா, அமெரிக்காவில் பலர் வாழுகிறார்கள்.

இன்பக்கவி
12-11-2009, 02:39 PM
நல்ல கவிதை கவி....
பிச்சையெடுக்கும் நிலை மாறவேண்டும்..
உதவ தயாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிலர்....
--------
அக்னி சொல்வது போல்.. குழந்தையை வைத்து ஐரோப்பா, அமெரிக்காவில் பலர் வாழுகிறார்கள்.

சமீபத்தில் சின்னதிரையில் ஒரு நிகழ்ச்சியில் பிச்சை எடுபவர்களை பற்றி போட்டு இருந்தார்கள்.. அதிர்ச்சியாய் இருந்தது..அவர்கள் கையில் வைத்து இருக்கும் குழந்தை கூட வாடகை குழந்தையாம்..பெரும்பாலும் குழந்தைகள் தூங்கி கொண்டு தான் இருக்கும்..அது கூட மயக்கத்தில் தானாம்.. குழந்தைகளுக்கு வயிற்று வலிக்க கொடுக்கும் (வூட்வோர்ட்ஸ் கிரேப் வாட்டர்) மருந்தினை அதிகமாக கொடுத்து தூங்க வைத்து பிச்சை எடுப்பது தான் வழக்கமாம்..பார்த்தும் அதிர்ந்து விட்டேன்
சென்னையில் தான் அதிகம் இப்படிபட்டவர்கள் இருக்காங்கள்..

வியாசன்
12-11-2009, 03:23 PM
கஸ்டம் இல்லாத உழைப்பு .வருவது எல்லாமே இலாபம். பலரின் இரக்ககுணம் சிலருக்கு சம்பாத்தியமாகின்றது.

பா.ராஜேஷ்
14-11-2009, 01:53 PM
பிச்சைக் காரர்களாய் பார்த்து திருந்தா விட்டாலும் கூட பிச்சை ஒழிக்க முடியாது. ;)

இன்பக்கவி
18-11-2009, 06:47 AM
பிச்சைக் காரர்களாய் பார்த்து திருந்தா விட்டாலும் கூட பிச்சை ஒழிக்க முடியாது. ;)
இந்த வரிகள் கூட நல்லா இருக்குதே:icon_rollout::icon_rollout: