PDA

View Full Version : பன்றிக் காய்ச்சல் (swine flu)



aravinthan21st
04-11-2009, 12:53 PM
பன்றிக் காய்ச்சல் (swine flu)

இன்றைய உலக சந்தையில் எல்லோர் கவனத்தையும் கவர்ந்த ஓன்று இந்த பன்றிக் காய்ச்சல்.ஏன் உலக சந்தை என்று சொல்கிறேன் என்றால் பெரும்பாலான வளர்ந்த நாடுகளின் முதலிடும் இடங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டதால்.ஆராய்ச்சி,மருந்தாக்கம்,தடுப்பூசி தயாரிப்பு என்று பலவழிகளில் பொருளீட்டக் கூடிய துறைகளில் இதுவும் ஒன்று.
பலரின் கேள்வி,"அதென்ன பன்றிக் காய்ச்சல்?,பன்றிக்கு வருவதாலா? அல்லது பன்றியால் பரவுவதாலா? என்று. ஆம் இரண்டும் உண்மை.இது வைரஸ் எனும் நுண்ணுயிரியால் விளைவிக்கப்படும் நோய்.இந்த வைரஸ் சாதாரண இன்புளுவென்சா வைரஸ்,பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் ,மற்றும் பன்றிகளிடையே பரவிவந்த பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் ஆகிய மூன்றுக்கும் பிறந்த குழந்தை.ஏனென்றால் இதில் பரம்பரைப் பொருளை காவும் எட்டு நிறமூர்த்தங்கள் (RNA)உள்ளன.அவற்றில் 5 சாதாரண இன்புளுவென்சா வைரசினதும் 2 பறவைக் காச்சலை உண்டுபண்ணும் வைரசினதும்,மற்றயது பன்றிக் காய்ச்சலை விளைவிக்கும் வைரசினதும் ஆகும்.எனவே இந்த வைரசில் இம்மூன்றுக்குமுரிய குணாதிசயங்கள் இருக்கும்.ஆக மொத்தத்தில் மனிதனை புதிய கோணத்தில் தாக்க வந்த விகாரி.
இவ்வாறு உருவெடுத்த புதிய நோய் காய்ச்சல் 38 பாகை செல்சியசிற்கு மேல்,மூக்கு சிந்தல்,தொண்டை,தலை,கழுத்து,தசை வலி,பெலயீனம் அல்லது உடல்சோர்வு,இருமல்,சிலருக்கு வாந்தி,வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகளை காண்பிக்கிறது.இவ் அறிகுறிகளும் ஆளுக்காள் வேறுபடுகிறது.உதாரணமாக,சிலருக்கு மிக வீரியமாகவும் இன்னும் சிலருக்கு காய்ச்சல் கூட இல்லாமலும் இந்நோய் வருகிறது.
எனவே இக்கண்ணுக்கு தெரியாத சாத்தானிடமிருந்து தப்புவதற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் சுலபம்.அவையாவன;ஆகக் குறைந்தது அடிப்படை சுகாதாரம் பேணல்,அதாவது,பொதுசன போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்திய பின்,வேலைக்கு, பாடசாலைக்கு, மற்றும் வெளி இடங்களுக்கு சென்று வந்த பின் கை,கால்,முகத்தை ஏதாவது சவர்க்காரம் கொண்டு கழுவுதல்.கைகளால் மூடியவண்ணம் தும்முதல் அல்லது இருமுதல்.சன நெருக்கடியான இடங்களை தவிர்த்தல்.என சொல்லிக்கொண்டே போகலாம்.மற்றும் இப்போது தடுப்பூசிகளும் வந்துவிட்டன.ஆகவே இவ்வகையான வருமுன் காக்கும் நடைமுறைகளை பின்பற்றலாம்.
நோய் வந்தபின் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையைப் பெறுதல் சாலச்சிறந்தது.அத்துடன் ஒரு வாரமளவிற்கு (அண்ணளவாக) ஓய்வெடுத்தல் நோயாளிக்கும் நன்மை ,பரவாமல் தடுப்பதால் சமூகத்துக்கும் நன்மை.
இந்நோய் குறித்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்களாக நீரிழிவு நோயாளிகள் ,ஆஸ்துமா நோயாளிகள்,இதய நோயாளிகள்,வயோதிபர்,குழந்தைகள்,கர்ப்பிணிப் பெண்கள்,மற்றும் புகை பிடிப்போர் கருதப்படுகிறார்கள்.ஏனெனில் இந்த வைரஸ் ஆரம்பநிலைகளில் மேல் சுவாசக் குழாயையும்,முற்றிய நிலைகளில் அல்லது நாள்போக்கில் கிழுள்ள சுவாச சிறு குழாய்களையும் தாக்கி,அதன் மேலணி இழயத்தை அழிக்கிறது.இதனால் சுவாச சிறு குழாய்கள் வீங்கி சீதப்படையால் நிரப்பப்படுவதால் சிறு குழாய் விட்டம் குறைந்து சுவாசம் தடைப்படுகிறது.இதனால் உயிர் வாயு பற்றாக்குறை ஏற்பட்டு உதடு,முகம்,உடல் நீலமாதலுடன் மூச்சு திணறல் ஏற்படலாம்.இதுவரை பன்றிக் காய்ச்சலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும்பாலும் மூச்சுத் திணறல் உடனேயே நிகழ்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

"எனவே சுத்தம் சுகந்தரும்"என்ற கூற்றுக்கமைய நாமனைவரும் சுயநலவாதிகளாக சுய சுதாதாரம் பேணினால் மறைமுகமாக பொதுநலவாதிகள் ஆகின்றோம். :icon_b:

ஜனகன்
04-11-2009, 03:54 PM
அரவிந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி. பயனுள்ள தகவல்களையும்,
தடுப்பு முறைகளையும் கூறி உள்ளீர்கள்.நாம் இதை கடை பிடித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
Be happy.

richard
12-12-2009, 05:24 PM
பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?:

பன்றிக் காய்ச்சல் (Swine flu) என்று அழைக்கப்படும் இந்த நோய், சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் புளூவைரஸின் ஓர் உட்பிரிவான H1N1 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி, கடுமையான காய்ச்சலை உருவாக்கி, படிப்படியாக உடல் உறுப்புகளை செயல் இழக்க வைத்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ், பன்றிகளை மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் தாக்குகிறது.

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் என்ன? :

உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி, தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்.

இந்தியாவில் அதிகம் பாதிக்க பட்ட பகுதி: மும்பை, புனே நகரங்கள் அதிகம் பாதிக்க பட்ட பகுதியாக சொல்ல படுகிறது.



பன்றி காய்ச்சலை தடுப்பது எப்படி?

* கை குலுக்குவதையும், கட்டி தழுவதுவையும் தவிர்க்கவும்.

* நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.

* கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

அமரன்
12-12-2009, 09:08 PM
பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி என்று ஒன்று பிரான்சில் போடுகின்றனர். அதை போட்டுக்கக் கூடாது என்று சில மருத்துவர்களும் சொல்கின்றார்கள். ஒன்றுமே புரியல.

குணமதி
13-12-2009, 03:39 AM
பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி என்று ஒன்று பிரான்சில் போடுகின்றனர். அதை போட்டுக்கக் கூடாது என்று சில மருத்துவர்களும் சொல்கின்றார்கள். ஒன்றுமே புரியல.


ஆம். பிரான்சில் குழந்தைகளின் பெற்றோர் தடுப்பூசி பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாற்றத்தோடும் கவலையோடும் இருக்கிறார்கள்.