PDA

View Full Version : !!!தமிழா தமிழை பேசு!!!



இன்பக்கவி
04-11-2009, 05:15 AM
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
சொல்ல இனிமை
கேட்க இனிமை
ஆனால் எங்கே தமிழ்???

பிற மொழிக்காரன்
சொற்ப வார்த்தைகள்
கற்று நம்மை
ஆண்டான்
ஆண்டாண்டு காலமாய்...
மறக்க நினைத்து இல்லை
அவன் மொழியை

நாமும் கற்றோம்
பல மொழிகள்
கற்றதற்காய் மறந்தோம்
நம் மொழியை..

அயல் நாடுகளுக்கு சென்றோம்
அவன் மொழி நம்மை நசுக்கும்
தமிழ் பெயர் பலகை
கண்டு ஓடி செல்வோம்
தமிழ் மொழிக்காக..:fragend005:

வெட்கி தலைகுனியும்
நேரம் அல்லவா அது..:mad:
தமிழ் பேசினால்
படிக்காதவன் என்ற நிலை

மொழி வளர்த்தோம்
பேன்சி ஸ்டோர் என்று
ஆங்கிலத்தை தமிழில் வளர்த்தோம்...:mad:

ஆங்கில புலமை கண்டு
அண்ணாந்து பார்த்ததுண்டு
சரளமாய் பேச முடியாமல்
தயங்கி இருக்கிறேன் பல முறை...
தமிழர்களுக்குள்ளே
தமிழ் இல்லை..

தமிழா தமிழை பேசு
நீ வாழும் காலம் வரை
பகட்டு பேச்சு நமக்குள்
எதற்கு???

ஆயிரம் அழகு சாயம் பூசினாலும்
மஞ்சளுக்கு ஈடாகுமா????
தமிழை மறக்காமல்
பிற மொழி பயில்

குணமதி
04-11-2009, 06:24 AM
தமிழர் அனைவர்க்கும் கட்டாயம் இருக்கவேண்டிய உணர்வு.

அக்னி
04-11-2009, 06:32 AM
ஆண்டாண்டு காலமாய் ஆண்ட தமிழுக்கு
வடம்பிடிக்க வேண்டிய நிலை..,
வேதனையே...

எங்கேயிருந்தோ நினைவுக்கு வருகின்றது,
“தமிழை வளர்க்கப் பாடுபடத் தேவையில்லை, தமிழிற் பேசினாலே போதும்...”
என்பது...

ஆதங்கமும், ஆக்ரோஷமும் ஒருங்கே கவிதையில்...
பாராட்டுக்கள் கவிதா...

aren
04-11-2009, 07:42 AM
நல்ல கவிதை. சில இடங்களில் சாட்டையடி விழுகிறது. காரணம் நானும் அந்த சாக்கடையில் விழுந்தவன் என்கிறதனாலே.

இன்னும் பல கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்.

வியாசன்
04-11-2009, 09:44 AM
கவிதா கவிதை காலத்தின் கோலத்தை செப்பி நிற்கின்றது. எத்தனை கவிதைகள் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இருக்கின்றது.

நல்ல கவிதை ஒருவேண்டுகோள் உங்கள் பயனர் பெயரை தமிழிற்கு மாத்தி மற்றவர்களுக்கு அடியெடுத்து கொடுக்கலாமல்லவா?

சுகந்தப்ரீதன்
04-11-2009, 10:09 AM
தமிழ் படிக்க தெரியாது பேச மட்டும்தான் தெரியுங்கிறது இப்பல்லாம் அதிகரிச்சிட்டே வருவது தமிழுக்கு ஆரோக்கியமானதாக தெரியவில்லை..!!

ஒருவாரத்துக்கு முன்னாடி ஆந்திராவுலக்கூட ஒரு பள்ளியில ரெண்டு குழந்தைங்க தங்களோட தாய்மொழில பேசுனதுக்கு தண்டனையா, "இனி பள்ளிக்குள் தெலுங்கில் பேசக்கூடாது" என்று சிலேட்டில் எழுதி அவங்க கழுத்துல மாட்டிவிட்டு பள்ளியை சுத்திவர செஞ்சி கொடுமை பண்ணியிருக்கு பள்ளி நிர்வாகம்...!! இது எப்படியோ வெளியில தெரிஞ்சி பள்ளிநிர்வாகத்திற்க்கு எதிப்பு தெரிவிச்சி சிலபேர் போராட்டம் நடத்துனாங்க..!!

இந்தநிலமையிலதான் இப்ப நம்பநாடு இருக்குது..!! அறிவுள்ள புள்ளையா வளர்க்கிறதா நினைச்சி சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிமையாக்கிட்டு வரதுதான் வேதனையா இருக்கு..!! பாவம் பிஞ்சுகள் என்ன செய்யும் பெத்தவங்க செய்யுற தப்புக்கு..?!

இப்போதைய தேவை தனிமனித திருத்தமல்ல... தலைமுறை திருத்தமே.. கவிதா..!! கவிதையின் கடைசி பத்தி கருவை கச்சித்தமாய் தாங்கி நிற்க்கிறது... வாழ்த்துக்கள்..!!

aravinthan21st
04-11-2009, 10:12 AM
நல்ல சாட்டையடி
தமிழை மறந்த,மறந்துகொண்டிருக்கும் தனயட்கும்,மாற்றான் மொழியை மெச்சும் மக்களிற்கும்

சரண்யா
04-11-2009, 11:36 AM
எந்த மொழி கற்றாலும் தாய்மொழி வழி தான் புரிந்து கொள்ள முடியும் என்பது என் கருத்து....தமிழில் எல்லாமே இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்....நாம படித்த certificate எடுத்து பாருங்க....புரியும்.....நம்ம ஊரு வரை தானே உதவுது மொழி....வேலைக்கு போனா கேட்க கூடிய முதல் கேள்வியே...what is ur good name?
தங்களின் பெயரைக்கூட ஆங்கிலத்தின் தான் கேட்பார்கள்..தமிழ் தெரிந்தாலும்....
நன்றிகள்...தங்கள் கவி வெளிப்படுத்தியது...

ஜனகன்
04-11-2009, 01:44 PM
ஹாய் கவிதா! கவிதை வரிகள் நன்றாக இருக்கின்றது. வெளி நாட்டில் நம் குழந்தைகள் படும் பாடு!!!!!!!!!?????????. தமிழை விரும்பினாலும் படிக்க முடியாத நிலை. சில குடும்பங்களில் தமிழை பேச மட்டும் தெரிந்த பிள்ளைகள். சில இடங்களில் அதுவும் இல்லை. எதிர்கால பிள்ளைகள் மத்தியில் தமிழே அற்றுப்போகும் நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை. இப்படி இருக்கிறது நிலைமை.கவிதை வரிகள் இளம் சமுதாயத்திற்கு ஓர் நல்ல திருத்தம்.

தமிழன் என்று சொல்லடா ,
தலை நிமிர்ந்து நில்லடா

பா.ராஜேஷ்
04-11-2009, 02:08 PM
நல்லாதொரு அறிவுரை சொல்லும் கவிதை. நன்றி கவிதா

கீதம்
04-11-2009, 08:54 PM
தமிழை வளர்க்கிறேன் என்று அதைத் தலைமேல் வைத்துக் கொண்டாடாவிடினும் பரவாயில்லை; அது அழியாமல் காக்க என்னசெய்யவேண்டுமென்று சிந்தித்து செயல்படுதலே தற்சமயம் முக்கியம். அதை அழகாக வெளிப்படுத்துகிறது உங்கள் கவிதை. பாராட்டுகள் கவிதா அவர்களே.

கா.ரமேஷ்
05-11-2009, 03:48 AM
/////
தமிழா தமிழை பேசு
//////////

தமிழன் தமிழனாக வாழ்வது இழுக்கென்பவர்களுக்கு நல்ல பாடம் சொல்லும் கவிதை...

////
ஆயிரம் அழகு சாயம் பூசினாலும்
மஞ்சளுக்கு ஈடாகுமா????
///

நிச்சயமாகவே மிக அழகான வரிகள்...

இன்பக்கவி
06-11-2009, 04:47 AM
பிற மொழிகள் கற்பது தவறு இல்லை
எங்கு இருந்தாலும் தமிழை மறக்கவேண்டாம் என்பது தான் என் வேண்டுகோள் ..
ஜனகன் அவர்கள் சொல்லுவது போல வெளிநாட்டில் இருக்கும் தமிழ் குழந்தைகள் படும் பாடு சொல்லி மாளாது..
தமிழை மறந்து தமிழுக்காக சிறப்பு பயிற்சி தருகிறார்கள் சில தமிழ் குடும்பத்தில்..
அவர்களுக்கு தமிழை கற்பிக்க பெரும் போராட்டமே நடக்கும் நிலை
எம் மொழி கற்றாலும் தமிழ் மொழியை மறக்காமல் இருந்தால் போதும்