PDA

View Full Version : கண்ணீரும் மழைநீரும்



சரண்யா
04-11-2009, 04:01 AM
http://defan.aha.ru/img/lj/woa/girl_in_the_rain.jpg

பாரபட்சத்தை முதல்
முறையாக உணர்ந்தவள்
பாரினில் இப்படியும்
நடப்பதை அறியாதவள்
மனவலிமை இன்றி
அழுது கொண்டிருந்தாள்
அன்னாந்து இறைவனை
கேட்டு கொண்டிருந்தாள்
மனம் மாறும் மனிதர்களை
படைத்தது நீயே தானா
கண்ணீரால் கண்கள்
நனைந்து கொண்டிருந்தன
மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்
கண்ணீரின் நீருற்று
அந்த மழையின்
நீருடன் கலந்து
மண்ணில் சேர்ந்தது
தெளிவடைந்தது போல
யதார்த்தமாக எல்லாவற்றையும்
ஏற்று தானே ஆகவேண்டும்....
என மனதிலே நினைத்து
கொண்டே சென்றாள்......

சுகந்தப்ரீதன்
04-11-2009, 10:33 AM
நீங்க பாரபட்சம்ன்னு எதை சொல்லுறீங்கன்னு சொல்லவேயில்லையே கவிதையில..?!

இதேபோல் யவனியக்கா ஒரு கவிதையில், "ஆண்மகன் ஆசையாய் மழையில் நனைவது அடுத்தவருக்கு தன் அழுகை தெரியக்கூடாது என்பதற்காகத்தான்" என்று குறிப்பிட்டிருப்பார்...!!

அந்த வகையில் கண்ணீரையும் மழைநீரையும் இணைத்து மனப்பாரத்தை போக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணின் உணர்வுகளை அழகாக காட்டுகிறது உங்களின் இந்த கவிதை..!! கவிதைக்கு பொருத்தமாக நீங்கள் இணைத்திருக்கும் அந்த சின்ன பெண்ணின் படம் மிக அழகாக இருக்கிறது...!!

வாழ்த்துக்கள் சரண்யா..!!

சரண்யா
04-11-2009, 10:54 AM
நன்றிகள்.....பாரபட்சம் எங்கும் உள்ளதே...
தாமரை ஐயா பதில் சொல்லுவதில் இருக்கும் பாருங்கள்....
கவிதையை பாராட்டியமைக்கு நன்றிகள்....சுகந்தப்ரீதன் அவர்களே...

கீதம்
04-11-2009, 09:00 PM
மழை பலருக்கும் பலவிதங்களில் உதவுகிறது. புறவாழ்வுக்கும், அகவாழ்வுக்கும் இனிதாய் அமைகிறது.மகிழ்வையும், ஆறுதலையும், தருகிறது, தங்கள் கவிதையின் நாயகிக்குத் தருவதைப்போல். நல்லதொரு சிந்தனை, பாராட்டுகள் சரண்யா அவர்களே.

சரண்யா
05-11-2009, 02:39 AM
நன்றிகள் கீதம் அவர்களே...

gans5001
05-11-2009, 05:35 AM
சில இடங்களில் உரைநடையாய் தெரிவதை தவிர்த்தால் மிக அழகான கரு..

"தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யார் அறிவார்?"
இரண்டு வரிகளிலும் உங்கள்
கருத்தைப் பதிக்க முடியும் மிக ஆழமாக..

வேண்டியது எழுதிய பின் படித்துப் பார்த்து
சுய விமர்சித்து
கவிதையை சுருக்குதல்.. உங்களால் முடியும்
முயற்சிக்க வாழ்த்துக்கள்

சரண்யா
07-11-2009, 04:10 AM
நன்றிகள்....gans5001 அவர்களே....

ஓவியன்
07-11-2009, 04:52 AM
மன்றத்தின் விமர்சனத் திலகம் gans5001 அவர்களது பின்னூட்டத்தின் பின் நான் என்ன எழுத...??

வாழ்த்துகள் சரண்யா..!!

சரண்யா
08-11-2009, 07:49 AM
நன்றிகள்...gans5001 அவர்களே.... பாருங்கள்...உங்களை கண்டு பயப்படும் ஜீவன்....

அமரன்
08-11-2009, 12:13 PM
நனைந்தது அவள்
உடலும் விழிகளும் மட்டுமல்ல
வாசகர் மனங்களும்தான்..

கண்ணீரின் காரணத்தை
சுமக்கும் வலிமை
சொற்களுக்கு இல்லை...

இல்லை..இல்லை..

அந்தச் சுமையை
சொற்களுக்குக் கொடுக்க வில்லை
கறுப்பு வெள்ளை...

எது எப்படியோ..
மஞ்சள் மலர்
மனதை மயக்குது
பாடு பொருளைப் போலவே..

பாராட்டுகள் சரண்யா.

அமரன்
08-11-2009, 12:15 PM
நன்றிகள்.....பாரபட்சம் எங்கும் உள்ளதே...
தாமரை ஐயா பதில் சொல்லுவதில் இருக்கும் பாருங்கள்....
கவிதையை பாராட்டியமைக்கு நன்றிகள்....சுகந்தப்ரீதன் அவர்களே...
இதைப் பார்க்க்கும் போது எந்தளவு சந்தோசம்.:icon_rollout:

இந்தக்கேள்விக்கு தமாரையார்தான் பதில் சொல்ல வேணும் என்று தோன்ற வேணும்..

இல்லை எனில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேணும் என்று தாமரையாரைத் தூண்ட வேணும்..

இதில் எங்கே பாராபட்சம் சரண்(யா)

சரண்யா
09-11-2009, 02:26 AM
நனைந்தது அவள்
உடலும் விழிகளும் மட்டுமல்ல
வாசகர் மனங்களும்தான்..

கண்ணீரின் காரணத்தை
சுமக்கும் வலிமை
சொற்களுக்கு இல்லை...

இல்லை..இல்லை..

அந்தச் சுமையை
சொற்களுக்குக் கொடுக்க வில்லை
கறுப்பு வெள்ளை...

எது எப்படியோ..
மஞ்சள் மலர்
மனதை மயக்குது
பாடு பொருளைப் போலவே..

பாராட்டுகள் சரண்யா.

கவிக்கு ஒர் கவி...நன்றிகள் அண்ணா...மஞ்சள் பூ மட்டும் பளிச்சிடுவதை
அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்...
தன் சோகம் வெளியில் தெரியாமல் இருக்கவே...இந்த போலித்தன்மை...அண்ணா..

சரண்யா
09-11-2009, 02:45 AM
இதைப் பார்க்க்கும் போது எந்தளவு சந்தோசம்.:icon_rollout:

இந்தக்கேள்விக்கு தமாரையார்தான் பதில் சொல்ல வேணும் என்று தோன்ற வேணும்..

இல்லை எனில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேணும் என்று தாமரையாரைத் தூண்ட வேணும்..

இதில் எங்கே பாராபட்சம் சரண்(யா)

இல்லை அண்ணா..நான் இரண்டு முறை தாமரை ஐயாவிடம் கேள்வி கேட்டிருந்தேன்...அதையே..இங்கு சுட்டி காட்டினேன்,,அண்ணா...www.tamilmantram.com/vb/showthread.php?t=17359&page=24
இங்கே. கேள்விஎண்:176 ல்
மேலும்..http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17359&page=25 இங்கே கேள்வி எண்:178 ல் இருக்கிறது அண்ணா....அதனால் தான் அப்படி சொன்னேன்..சரியா...

இளசு
10-11-2009, 07:10 PM
கண்ணீர் - வெப்பம்
மழைநீர் - குளிர்ச்சி

கண்ணீர் - உவர்ப்பு, கரிப்பு
மழைநீர் - தெளிவு, பளிங்கு..


அண்ணாந்த முகத்தின் கண்ணீருக்கு
சிந்திய மழைநீரே சரிமாற்று!


பாராட்டுகள் சரண்யா அவர்களே...


யவனிகாவின் கவிதை வரியை மேற்கோளிட்ட சுகந்தனுக்கும்
அழகிய பின்னூட்டக்கவிதையிட்ட அமரனுக்கும் என் அன்பு!

நேசம்
11-11-2009, 06:30 AM
மழையால் இறைவன் அவளை தேற்றும் போது பாரபட்சம் எங்கே வர போகிறது..அழகான கவிதைக்கு பொருத்தமான படம்.பாரட்டுகள் சகோதரி