PDA

View Full Version : மறந்ததினால் அவதி......



சரண்யா
04-11-2009, 03:47 AM
மறக்குதே மனமா?புத்தியா?...மறந்ததினால் நீங்கள் சந்தித்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்......
மனம்-எண்ணங்களின் கூட்டு....புத்தி-வழிகாட்டி.....
ஏதோ நினைவில் மறந்துட்டேன்....இப்போ என்ன.....(tension)டென்ஷன் ஆகாம....
இனி அந்த மறதி வராமல் தவிர்க்க என்ன வழி செய்வோம்.....நீங்கள் கூறுவதை நினைவில் கொண்டு.......
மறதியை தவிர்க்கலாம்ல....


சமீபத்துல குலதெய்வக்கோவிலுக்கு போகிறப்போது சாமிக்கு வாங்கிய மாலையை மறந்து படியிலே விட்டுவிடோம்.
கசங்காம இருக்கனும் கையில் வைத்துக்கொள்ளலாமே என்று நினைத்து வெளியில் வைக்க..... அப்படியே......
மறந்து கொஞ்ச தூரம் போகிவிட்டோம்...........பின்பு மாலையை பார்த்த ரஸலாம்பாய் என்ற அன்பர்
கைப்பேசியில் தொடர்புக் கொண்டு வந்து கொடுத்தார்.காத்திருந்து கால தாமதமாக சென்றோம்.

கல்லூரியில் தேர்வு எழுத சென்ற போது,தேர்வு எழுதவேண்டிய இடம் சற்று தொலைவில் இருந்ததால்....
தனிப்பேருந்து ஒன்று ஏற்பாடு செய்து இருந்தார்கள்...எல்லோரும் சரியாக ஒன்பது மணிக்கு பேருந்தில் அமர்ந்திருந்தோம்........
அப்போது வண்டி கிளம்பும் சமயத்தில்...விரிவுரையாளர் எல்லாம் எடுத்து வைதீர்களா? என்று பாருங்கள் என்று சொல்ல
ஒருவர் மட்டும் தேர்வு நுழைவுச்சீட்டை மறந்து விட்டார்.....
பின்பு .....
காத்திருந்து....
தேர்வுக்கு நேரமாகிவிட்டதே......என்ற எண்ணம் எல்லோர் நினைவில்....
இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வரை.....
நன்றிகள்... நீங்க தொடருங்கள்...

பா.ராஜேஷ்
12-11-2009, 12:27 PM
என் நண்பன் ஒருவன் அடிக்கடி மறக்கும் பழக்கம் உடையவன்... தன்னுடைய கைபேசியை மறந்து போய் எங்கேயோ விட்டு விட்டன். எங்கே வைத்தான் என்பது நினைவில் இல்லாததால் அந்த விலை உயர்ந்த நோக்கியா வேறு எவர்க்கோ உரிமையாய் ஆகிவிட்டது. அதன் பிறகு அடிக்கடி சோதித்து கொள்ளும் பழக்கத்தை வளர்த்து கொண்டான்...

குணமதி
12-11-2009, 01:26 PM
அப்போது எனக்குத் திருமணமாகி யிருக்கவில்லை. வெளியூரில் வேலைபார்த்து வந்தேன். அவ்வப்போது எங்கு சாப்பிட நினைக்கிறேனோ அந்தக்கடையில் சாப்பிட்டு வந்தேன்.

ஒருநாள், சாப்பிட்டுவிட்டு அலுவலகம் போகவேண்டும். காலங் கடத்தி விட்டதால் விரைவாகக் கிளம்பினேன். கடையில் சாப்பிட்டுவிட்டு, பணம்கொடுக்கக் கையைச் சட்டைப்பையில் நுழைத்தேன். அப்போதுதான் நினைவிற்கு வந்தது, பணம் எடுத்துவர மறந்துவிட்டேன்!

என்ன செய்வது? பணம் வாங்குகிறவரிடம் சென்று, மெதுவாக, பணம்எடுத்துவர மறந்ததைக் கூறி, என் கைக்கடிகாரத்தைக் கழற்றி அவரிடம் நீட்டி, பணம் கொடுத்தபின் அதைத் திரும்ப வாங்கிக் கொள்கின்றேன் என்று கூறினேன்.

அவர் மெல்லப் புன்னகைத்து, 'நீங்கள் பிறகு கொடுத்தால் போதும்; கைக்கடிகாரமெல்லாம் வேண்டாம் போய்வாருங்கள்' என்று கூறினார். அவருக்கு நன்றி கூறிவிட்டு வந்தேன்.

அன்றுதான் மறதியால் ஏற்படும் இக்கட்டை முழுமையாக உணர்ந்தேன்.

சரண்யா
13-11-2009, 02:17 AM
நன்றிகள் பா.ராஜேஷ் அவர்களுக்கு...சரி தாங்கள் எதுவும் மறந்ததில்லையா...

நன்றிகள் குணமதி அவர்களே...படத்தில உள்ளது போல இருக்கிறது உங்கள் அனுபவம்...நல்லவராக இருந்ததால் தப்பித்தீர்கள் போல...மாவாட்டுவதிலிருந்து..(சும்மா)...

அமரன்
13-11-2009, 09:15 PM
சென்றவாரம் நடந்தது..

வேலைத்தளத்தில் ஓய்வு அறையில் என் அலுமாரியின் சாவியை மறந்துபோய் வீட்டில் விட்டுவிட்டுச் சென்று விட்டேன். வேலை சம்பந்தமான பிரத்யேக ஆவணங்கள் அதுக்குள் வைத்திருந்தேன். தவிர வேலைத்தள அடையாள அட்டை வேறு அதுக்குள். அதில்லாமல் அங்கே எதுவும் செய்ய இயலாது. கொஞ்ச நேரம் பட்ட பாடு. இப்போ சாவிப்பூட்டுக்குப் பதில் இலக்கப் பூட்டுத் தொங்குது. இலக்கத்தை மறக்காதிருக்க வேணும்.

தர்மத்தின் தலைவர்களுக்கும் தலைவிகளுக்கும் ஏதுவான இழை. வாங்க.. வந்து கோருங்க.

குணமதி
14-11-2009, 03:03 AM
தர்மத்தின் தலைவர்களுக்கும் தலைவிகளுக்கும் ஏதுவான இழை. வாங்க.. வந்து கோருங்க.

பொருத்தம் - புரியவில்லை. கொஞ்சம் விளக்கிக் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சரண்யா
17-11-2009, 03:14 AM
அமரன் அண்ணா...இத்திரியை குறிப்பிடுகிறார்கள்..நினைக்கிறேன்...
வந்து சொல்லுவாங்க...

சில நேரங்களில் காபி குடிக்க மறந்து அம்மாவிடம் திட்டு வாங்கி சூடு செய்வதும் உண்டு...

த.ஜார்ஜ்
17-11-2009, 01:32 PM
அப்பாவுக்கு மருந்து வாங்க வேண்டுமென்று கிளம்புவேன்.போகிற வழியில் என்னவெல்லாமோ நினைவு வந்து தொலைக்கும்.உதாரணமாக முன்னால் சென்ற ஆட்டோ சிக்னல் போடாமலே வலதுபுறம் திரும்பி என் வண்டியை நிலைகுலைய வைக்கும்.அப்புறம் அதைப்பற்றியே நினைத்துக் கொண்டு போய்க்கொண்டிருப்பேன்.
நீண்ட நேரமாய் வந்த காரியம் மறந்து சுற்றியலைந்து விட்டு வீட்டுக்கு வந்தால் " நமக்கு ஒண்ணுன்னா யாரு பாக்கிறா" அப்பாவின் முனகல்.

இது ப்ரவாயில்லை. " வெளிய போனா காய்கறி வாங்கிட்டு வந்திருங்க.சமைக்க ஒண்ணும் இல்ல." என்பாள் என்னவள்.ஏதோ ஒரு குரல் வருகிறதே என்று உணர்ந்தாவது மறுபடி கேட்டிருக்கலாம்.அடுத்த கதை என்ன எழுதுவது என்ற நினைப்பிலேயே லயித்திருப்பதால் சொன்னதெதுவும் காதில் விழாது
வெறுங்கையுடன் திரும்பி வந்தால் அன்றைய பொழுது எப்படி நகர்ந்திருக்கும் என்று உங்களுக்கு தெரியாதா?

இன்னொருமுறை அருள்சாமியின் அப்பா இறந்துபோனது நினைவுக்குவந்து விசாரித்து வரலாம் என்று போயிருந்தேன். அவன் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தோம்."அவர் போனதே பெரிய விசயம்" என்று அவன் தொடங்கியதுதான் தெரியும்
நானோ எதிரே மரத்தில் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டிருக்கும் அணிலை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தேன்.வந்த விசயம் மறந்து போனது.ஆறுதல் வார்த்தை சொல்ல வந்தவனின் செய்கை அவனை வெறுப்பெற்றியிருக்க வேண்டும்.கதவை சாத்திக்கொண்டு உள்ளே போயிருந்தான்

இப்படி மறதியில் நான் கில்லாடியாக்கும்.


இந்த மறதி இருப்பதால் ஒரு பயன் இருக்கதான் செய்கிறது.என்னை திட்டியவர்கள்,கோபப்பட்டவர்கள்,வெறுப்புகொண்டவர்கள் செயல்களையெல்லாம் மறந்து விடுவதால் யாரையுமே பகைமையாக நான் நினைப்பதில்லை. அது ஒன்றே நிம்மதி தரும் விசயம்.[மின்மலரில் சமுத்திரசெல்வத்தின் மறதி பற்றிய கவிதை வாசித்தீர்கள்தானே]

அப்புறம் மறதி பற்றி இன்னும் நிறைய சொல்ல நினைத்திருந்தேன்.எல்லாம் மறந்து போய் விட்டது.

வானதிதேவி
17-11-2009, 02:39 PM
ஹா ஹா ஹா மறதி தான் எத்தனை விதம் நகைசுவை மிளிர பாராட்டுகள் ஜார்ஜ்.
எனக்கு தியாகராஜ பாகவதர் பாடல் முதல் இப்போ உள்ள பாடல் வரை அத்துபடி.ஆனால் தினமும் பார்த்தாலும் முகம் மறந்துவிடும்.யார் வீட்டிற்கு வந்தாலும் தெரியாது.அவர்களாக அறிமுகபடுத்திக்கொள்ளும் போது வழியும் அசடு இருக்கிறதே, ஒரு முறை வீட்டு விலாசம் கேட்க வந்தவரை விருந்தாளி என நினைத்து வலுக்கட்டாயமாக காபி இனிப்பென்றுகொடுத்து வந்தவர் மிரண்டு காபி குடித்துவிட்டு அட்ரஸ் கேட்கதாங்க வந்தேன் என்றார் பாவமாக.
என்னவர் இருக்கிறாரே முக்கிய சாமான் வாங்கி வரச்சொன்னால் மறந்துவிட்டு இப்போலாம் வரது இல்லையாம் தாயாரிக்கறதையே நிப்பாட்டிடாங்களாம் என்று மருந்துக்கூட நிஜம் கலக்காமல் அழகாய் கூறிவிடுவார்.

அறிஞர்
17-11-2009, 02:48 PM
ஒவ்வொன்றும் ஒரு ரகம்... மறதிகள் சில நேரம் கெட்டதாய் முடிகிறது.
------------
இமெயில் வந்து குவியும் மெயில்கள் பல (5 அக்கவுண்டும் இதே கதிதான்)... ஒரு முக்கியமான அக்கவுண்டில் பல விளம்பர மெயில்கள், வேலை சம்பந்தமான மெயில், தனிப்பட்ட மெயில்கள் வரும்.

தனிப்பட்ட மெயில்களை மட்டும் கவனித்துவிட்டு, மற்ற மெயில்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம். என விட்டுவிட்டேன்.

ஒரு மாதம் கழித்து எல்லா பழைய மெயில்களை பார்த்து அழிக்கும் பொழுது... ஒரு பெரிய கம்பெனியில் இண்டர்வியூவுக்கு கூப்பிட்டு இருந்ததை... கவனித்தேன்...

என்ன பண்ணுவது காலம் கடந்துவிட்டது.. அந்த பணிக்கு வேறு ஆளையும் நியமித்துவிட்டனர்...

சரண்யா
17-11-2009, 02:50 PM
ஹா ஹா.....கடைசி வரி...
நன்றிகள் த.ஜார்ஜ் பகிர்ந்து கொண்டமைக்கு...
இறந்தவர் விசாரிக்க சென்ற இடத்தில் தவறு தானே...உணர்ந்திருப்பீர்கள்...
ஆம்....திட்டியவர்கள்...நடந்தது செயல்களையெல்லாம் மறந்து விடுவதால் சில நன்மையும் உண்டு...

சரண்யா
17-11-2009, 02:58 PM
தமிழரின் பண்பாடு உபசரிப்பு தானே...
சரியான விலாசம் தேடி உங்கள் வீட்டிற்கே வந்தால் விருந்துண்டோ...

நன்றிகள் வானதிதேவி அவர்களே...
இன்னும் பகிர்ந்து கொள்ளுங்கள்....
ஆசைகள் ஓராயிரத்திலும்...

சரண்யா
17-11-2009, 03:00 PM
ஒ..மறந்ததால் வாய்ப்பு தவறியதா...
நன்றிகள் அறிஞர் அவர்களே....இந்த தவற்றை பல பேரு செய்ய மாட்டார்கள்..இதை படித்தவுடன்....
இது அலட்சியம் என்று கூட சொல்லலாமோ...

சரண்யா
17-11-2009, 03:01 PM
என்னவர் என்பவரெல்லாம் மறப்பவர் போல....யாரெல்லாம் அவர்கள்...வருவார்களா..மன்றத்தில் உள்ள குடும்ப தலைவர்கள்...

ஜனகன்
21-11-2009, 07:26 PM
எங்கள் வீட்டில் ஒருநாள் எல்லோரும் அவரவர் வேலையாக வெளியில் போய் விட்டார்கள். நான் கடைசியாக வீட்டில் இருந்து புறப்பட்டேன். எதோ ஞாபகத்தில் கதவை பூட்டாமல் போய் விட்டேன். அன்று விபரிதம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் எல்லோரிடமும் நல்லாய் திட்டு வாங்கினேன்.

சரண்யா
22-11-2009, 02:09 AM
ஒ..இப்படி கூட மறதியா....தப்பிச்சுட்டீங்க...

arun
07-12-2009, 05:10 AM
மறதிகள் எனக்கு பல உண்டு லேட்டஸ்ட் மறதி

பைக்கை நிறுத்தி விட்டு சாவியை எடுக்காமல் மறந்து விட்டேன் சாவியின் நினைவும் வரவில்லை

பைக்கை எடுக்க வரும்போது பாக்கெட்டில் சாவியில்லை எங்கே போய் இருக்கும் என தேடி கொண்டிருக்கும்போது சாவி வண்டியிலேயே இருக்கிறது

எப்படிடா மறந்தோம் என என்னை நானே கேட்டுக்கொண்டு எந்த வித பதட்டமும் இல்லாமல் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டேன்

வண்டி மட்டும் காணமல் போய் இருந்தால் ???? ......

சரண்யா
07-12-2009, 06:36 AM
ஒ...இதுவாது பரவால...
நான் ஒரு முறை பெட்ரோல் போட்டுவிட்டு போகும் அவசரத்தில் வண்டி ஸ்டார்ட் செய்ய ஸ்டார்ட் ஆகுல...
கடுப்பாகி உதைத்து கொண்டிருந்தேன்..நேரமாகிவிட்ட டென்சன்....
பின்னாடி இருந்து ஒருவர் வந்து சாவி பின் பக்கம் இருக்கு சொல்ல...
சங்கடமாக போச்சு...
பின் அவசரமாக சாவி போட்டு ஸ்டார்ட் பண்ணிணேன்...
அதிலுருந்து எப்போஸ்டார்ட் பண்ணாலும் ஒரு முறை பார்த்துக்கொள்வேன்...