PDA

View Full Version : மைக்ரோசாப்ட் டாப் 25 அதிகாரிகளில் 6 இந்தியர்கள்



அறிஞர்
02-11-2009, 03:27 PM
சாப்ட்வேர் உற்பத்தியில் சென்னைவாசி மைக்ரோசாப்ட் டாப் 25 அதிகாரிகளில் 6 இந்தியர்கள்


புதுடெல்லி, அக். 31: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள 25 பேரில் 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் விண்டோஸ் 7 என்ற புதிய ஆப்ரேட்டிங் முறையை அறிமுகம் செய்தது. அதன் பின்னணியில் இந்தியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது வெளிவராத உண்மை.
ஆம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர் பதவி யில் உள்ள 25 அதிகாரி களில் தகவல் தொடர்பை ஒருங்கிணைப்பது, புதிய சாப்ட்வேர் உற்பத்தி உள்ளிட்ட 6 பிரிவுகளில் இந்தியர்கள் இடம் பெற்று உள்ளனர்.

குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த சோமசேகர் (மூத்த துணைத் தலைவர்) சாப்ட்வேர் வளர்ச்சிப் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். இவரது தலைமையில் உலகம் முழுவதும் 4000 பேர் பணிபுரிகிறார்கள். புதிய சாப்ட்வேர்களை கண்டுபிடிப்பதே இவரது பிரிவின் வேலை. அண்மையில் அறிமுகமான விண்டோஸ் 7 சாப்ட்வேரும் இவரது தலைமையில் உருவானதுதான். தவிர, மும்பையின் அமித் மிட்டல், கான்பூரின் அமிதாப் ஸ்ரீவத்சவா (துணைத் தலைவர்-விண்டோஸ் அஸ§ரே), சண்டிகரைச் சேர்ந்த குர்தீப் சிங் பால், ஐதராபாத்தைச் சேர்ந்த சத்ய நடெல்லா (துணைத் தலைவர்-ஆர் அன்ட் டி) மற்றும் டெல்லியைச் சேர்ந்த அனூப் குப்தா ஆகியோர் முக்கிய பொறுப்பு வகிக்கும் மற்ற இந்தியர்கள். தவிர உலகின் பல்வேறு முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களிலும் இந்தியர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

நன்றி - தினகரன்

பா.ராஜேஷ்
20-11-2009, 01:20 PM
அடடே நல்ல செய்திதான்... ஏன் இதற்கு யாருமே பின்னூட்டம் இடவில்லை என்று வியப்பாக உள்ளது...

aren
21-11-2009, 03:23 AM
இப்படி சொல்வதே நமக்கு வழக்கமாகிவிட்டது. இதற்கு பதில் இந்திய கம்பெனிகளில் பாதிக்கு பாதிபேர் அமெரிக்கர்கள் என்ற நினைப்பு வரவேண்டும், அப்படியே நம் கம்பெனிகளை பெரிய அளவில் வளர்க்கவேண்டும்.

நம்மிடம் மற்றவர்கள் வேலைபார்ப்பதில்தான் நமக்கு பெருமை இருக்கிறது, அதை விடுத்து அவர்களிடம் வேலை பார்ப்பதில் நமக்கு என்ன பெருமை இருக்கிறது.