PDA

View Full Version : இந்தியர் - அமெரிக்க அமைச்சர்.



அறிஞர்
02-11-2009, 03:25 PM
அதிபர் ஒபாமா நியமித்தார் இந்தியாவின் சுரேஷ் குமார் அமெரிக்க அமைச்சர் ஆனார்


வாஷிங்டன், அக். 31: அமெரிக்க வெள்ளை மாளிகையில் மேலும் ஒரு இந்தியருக்கு முக்கிய பதவி வழங்கி உள்ளார் அதிபர் ஒபாமா. ஆம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரேஷ் குமார் அந்நாட்டின் வர்த்தக துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு, அதிக அளவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை முக்கிய நிர்வாக பொறுப்புகளில் நியமித்து வருகிறார். அந்த வகையில், வர்த்தக துறை துணை அமைச்சர் மற்றும் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு வர்த்தக சேவையின் இயக்குநர் ஜெனரலாக சுரேஷ் குமாரை நியமித்துள்ளார்.
இந்தியரான குமார், கைஜென் இன்னவேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக பங்குதாரராக உள்ளார். இதற்கு முன்பு முன்னாள் அதிபர் கிளின்டன் நடத்திவரும் கிளின்டன் பவுண்டேஷன் அமைப்பின் ஆலோசகராக இருந்துள்ளார். அப்போது, சப்-சஹாரன் ஆப்பிரிக்க அரசுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். மேலும் அந்நாட்டின் கார்ப்பரேட் நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடன் இணைந்து பிரைவேட்-பப்ளிக் பார்ட்னர்ஷிப் முறையில் பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபட்டுள் ளார்.

1970 முதல் 1985 வரை இந்திய அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இவர், ஜான்சன் அன்ட் ஜான்சன், வார்னர் லாம்பெர்ட்/பைஸர் ஆகிய நிறுவனங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

கனடாவின் டொரண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்குலிக் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், பாம்பே யுனிவர்சிட்டி ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், ரட்கர் யுனிவர்சிட்டியில் சர்வதேச வர்த்தக பாடத்துக்கான பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். மேலாண்மை தொடர்பான புத்தகங்களையும் இவர் எழுதி உள்ளார்.

நன்றி - தினகரன்

aren
03-11-2009, 01:02 AM
இவரை நான் தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன். தாடி வைத்துக்கொண்டு டிப்டாப்பாக இருப்பார். அவரா இவர்.

பாராட்டுக்கள். அவருக்கு கொடுத்துள்ள பதவியை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி
03-11-2009, 03:22 PM
அன்னாருக்கு என் பாராட்டுகள்.

அறிஞரே படத்தை காட்டுங்க.

aren
04-11-2009, 02:43 PM
அறிஞரே படத்தை காட்டுங்க.

அறிஞர் என்ன பாம்பா படம் காட்டுவதற்கு?

praveen
04-11-2009, 02:48 PM
விரைவில் அறிஞரும் அமைச்சராக வாழ்த்துக்கள் :)

aren
04-11-2009, 02:52 PM
விரைவில் அறிஞரும் அமைச்சராக வாழ்த்துக்கள் :)

இந்தியாவிலா? அமெரிக்காவிலா?

ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் அமைச்சராக அறிஞரை போடலாமே.

ரிசர்சிற்கு 100% ஃபண்டு கொடுங்கப்பா!!!!

இளசு
04-11-2009, 05:52 PM
மகிழ்ச்சியான செய்தி..

பகிர்ந்த அறிஞருக்கு நன்றி..

அறிஞரும் பின்னாளில் அமைச்சரானால்
அதைவிட மகிழ்ச்சி உண்டா என்ன?