PDA

View Full Version : எனக்கு கல்யாணமாகிவிட்டது!!!

aren
02-11-2009, 02:23 PM
எனக்கு கல்யாணமாகிவிட்டது!!!

இரவு நேரம் கழித்து
வீட்டிற்கு வந்தேன்
உனக்கு கல்யாணம்
செய்துவைக்கவேண்டும்
என்றார் அம்மா!!!

வெளியே கிளம்ப எத்தனித்தேன்
துணிகள் தோய்த்திருகக்வில்லை
உனக்கு கல்யாணம்
செய்துவைக்கவேண்டும்
என்றார் அம்மா!!!

சாப்பிட என்ன இருக்கிறது
என்று சமையலறையில் பார்த்தேன்
உனக்கு கல்யாணம்
செய்துவைக்கவேண்டும்
என்றார் அம்மா!!!

சம்பளத்தேதி பணப்பையுடன்
என் அறைக்குள் நுழைந்தேன்
உனக்கு கல்யாணம்
செய்துவைக்கவேண்டும்
என்றார் அம்மா!!!

இப்பொழுது
சரியான நேரத்திற்கு
வீட்டிற்கு வந்துவிடுகிறேன்!!!

இப்பொழுது
நானே என் துணிகளைத்
தோய்த்துக்கொள்கிறேன்!!!

இப்பொழுது
நானே சாப்பாட்டை
சமைத்துக்கொள்கிறேன்!!!

சம்பளம் வருகிறது ஆனால்
என் பையில் பணம் இருப்பதில்லை!!!

..
...
....

ஆமாம்,
எனக்கு இப்பொழுது
கல்யாணமாகிவிட்டது!!!

ஜனகன்
02-11-2009, 03:13 PM
அம்மா சொன்னார் நீங்கள் கேக்கவில்லை, நீங்களே பட்டு தெரிந்து கொண்டீர்கள்.இப்போது பணம் பையில் இல்லை, என்றாலும் மற்றவை எல்லாம் ஒழுங்காக நடக்கிறது தானே. இதுதான் வாழ்க்கை அரேன்.

அறிஞர்
02-11-2009, 03:23 PM
ஆக மொத்தத்தில்.. மிகப்பெரிய மாறுதல்....

உம் மனைவி பக்கத்திலிருந்து... அவரது மாறுதல்கள் என்ன என்ன பட்டியல் போடச் சொல்லவேண்டும்.

சுகந்தப்ரீதன்
03-11-2009, 06:03 AM
காட்டாற்று வெள்ளம் நதியானதோ...?!

அம்மா பேச்சை மட்டும் கேட்டவரு அப்படியே அப்பா பேச்சையும் கேட்டிருந்தால் (எங்க கேட்க முடியுது?) ஒருவேளை தப்பிச்சிருப்பாரு...!!

பார்வைகள் பலவிதம்... அரேன் அண்ணாவுக்கு இப்பத்தான் கல்யாணம் ஆனது நினைவுக்கு வருவது புதுவிதமால்ல இருக்குது..!!

aren
03-11-2009, 06:22 AM
அம்மா சொன்னார் நீங்கள் கேக்கவில்லை, நீங்களே பட்டு தெரிந்து கொண்டீர்கள்.இப்போது பணம் பையில் இல்லை, என்றாலும் மற்றவை எல்லாம் ஒழுங்காக நடக்கிறது தானே. இதுதான் வாழ்க்கை அரேன்.

நன்றி ஜனகன். எல்லாம் கைவிட்டுபோனபிறகுதான் புரிகிறது. என்ன செய்வது. இதுதான் வாழ்க்கை.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
03-11-2009, 06:23 AM
ஆக மொத்தத்தில்.. மிகப்பெரிய மாறுதல்....

உம் மனைவி பக்கத்திலிருந்து... அவரது மாறுதல்கள் என்ன என்ன பட்டியல் போடச் சொல்லவேண்டும்.

நன்றி அறிஞரே. நீங்கள் என் மனைவிக்கு போன் செய்து எல்லாம் பட்டியிலடச்சொல்வீர்கள் போலிருக்கே.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
03-11-2009, 06:24 AM
காட்டாற்று வெள்ளம் நதியானதோ...?!

அம்மா பேச்சை மட்டும் கேட்டவரு அப்படியே அப்பா பேச்சையும் கேட்டிருந்தால் (எங்க கேட்க முடியுது?) ஒருவேளை தப்பிச்சிருப்பாரு...!!

பார்வைகள் பலவிதம்... அரேன் அண்ணாவுக்கு இப்பத்தான் கல்யாணம் ஆனது நினைவுக்கு வருவது புதுவிதமால்ல இருக்குது..!!

நன்றி சுகந்தப்ரீதன்.

எந்த அப்பா தன் பிரச்சனைகளை வெளியே சொல்கிறார். நமக்கு வந்தது நம் பையனுக்கு வரக்கூடாது என்று எங்கே நினைக்கிறார். அதனால் வந்த விணைதான் இது.

நன்றி வணக்கம்
ஆரென்

பாரதி
03-11-2009, 07:57 AM
ஹஹஹா....
இரசித்தேன் ஆரென்.
உங்களின் படைப்புத்திறன் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுகிறது.
இரசிக்க வைத்த கவிதைக்கு இனிய பாராட்டு.

மன்மதன்
03-11-2009, 08:07 AM
மனைவிக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாது (சம்பளம் மட்டும் கொடுத்தா போதும்..)ன்னு நினைக்கிற உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் ஆரென்ஜி...

Mano.G.
03-11-2009, 08:52 AM
வெளியிலே நாம வேல சொன்னா கெட்கறதுக்கு
நிறைய பேரு,
விட்டீலோ அவங்க சொல்றத கெட்கறது நமது வேல

சம்பளத்தை எடுத்து கொடுத்து விட்டு
தனக்காக வேலை பர்க்கும் உங்களை
நானும் நினைத்து பார்க்கிரேன்.

சொல்றத யார் கேட்கறது
பட்டாதனே தெரியுது
என்ன செய்ய காலம் கடந்து போச்சு

mania
03-11-2009, 09:11 AM
அட்ரா சக்கை....அட்ரா சக்கை....இதை போட்டுக்கொடுக்கவேண்டியதுதான்....:rolleyes::rolleyes:
ஓம் சாந்தி....ஓம் சாந்தி.....ஓம் சாந்தி......:D:D
அன்புடன்
மணியா....:D:D

samuthraselvam
03-11-2009, 09:26 AM
ஆக, கல்யாணம் ஆனா பிறகுதான் பொறுப்பு வந்திருக்கு நம்ம ஆரேன் அண்ணாவுக்கு...

சூப்பரா திங் பண்ணியிருக்கிறீங்க ஆரேன் அண்ணா...

வியாசன்
03-11-2009, 09:41 AM
வாழ்த்துக்கள் ஆரென் சத்தமில்லாமல் கல்யாணம் செய்துவிட்டீர்கள்.

சரண்யா
03-11-2009, 11:58 AM
ஹா ஹா....
உண்மையில பாவம்....அரேன் நீங்க..நொந்து போயிருக்கீங்க..போல...
மாற்றம் நிகழும்...
வாழ்த்துகள்...நல்ல ரசிக்க வைக்க கவி எழுதியதிற்கு....

ஆதி
03-11-2009, 12:14 PM
:D

அருமையாய் இருக்குங்கண்ணா..

இதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கல்யாணமாக்கிவிட்டா தன்னாட்சி மட்டுமல்ல, நிதி துறையும் பரிபோய்டும் என்பதுதான்.. வீட்டுக்கு சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று போட்டிருப்பதன் மூலம் உள்துறை மட்டும் நம்ம கிட்ட இருக்கும் னு புரியுது( துறை கீழ் வருவது என்னென்ன என்று விளக்காமலே எல்லாருக்கும் புரியும் :) ) வெளி துறையை முழுமையாய் மறந்துவிட வேண்டியது கண்டாயமாகிறது..

வாழ்த்துக்கள் அண்ணா..

இதயம்
03-11-2009, 01:18 PM
நம்ம கஷ்டம் நமக்கு தான் தெரியும் ஆரென்...! ஏதாவது நல்லது நம்ம வாழ்க்கையில் நடக்காதான்னு நினைக்கிற சமயத்தில் தான் கல்யாணம் நடக்குது. ஆனா அதுக்கு பிறகு நடக்குறதெல்லாம் முன்பை விட மோசமால்ல இருக்கு..!!

நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க.. ஆனா என்னை மட்டும் காப்பாத்திடுங்க..!! (ஆதவன் படம் பார்த்தவர்களுக்கு மட்டும் இந்த வரிகள்..!!)

பாராட்டுக்கள்..!!

பா.ராஜேஷ்
03-11-2009, 01:18 PM
இன்னும் என்ன எல்லாம் விட்டு கொடுத்துள்ளீர்கள்!!?? சம்பளம் அம்மாவிடம் கூட கொடுக்க முடியாத நிலையா!!??

மதி
03-11-2009, 04:10 PM
நீங்க சொன்ன முதல் நாலு பத்தி மட்டும் எனக்கு பொருந்தும் போல... கடைசிவரைக்கும்... அம்மா சொல்லிக்கிட்டு மட்டும் தான் இருக்காங்க.. :):):)

அதனால மீதி நீங்க சொன்னதை பத்தி கருத்து ஏதும் சொல்ல முடியல..

பேசாம மொத்த குடும்பத்தையும் டைவர்ஸ் பண்ணிடவேண்டியது தான். :D:D

அமரன்
03-11-2009, 05:25 PM
ஹஹ்ஹ்ஹா...

இதை ஏன் இப்ப எழுதி மூட்டி விட்டீங்க.

எளிமையாக உண்மையை உடைத்து விட்டீர்கள்.

aravinthan21st
03-11-2009, 06:00 PM
இப்பதான் விழங்குது ஏன் கொஞ்சம் பொறுப்பு குறைவா நண்பர்களுடன் சுற்றும் பிள்ளைகளை பார்த்து "எல்லாம் ஒரு கால் கட்டு போட்டா சரிவரும்" என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று.
அவர்கள்(பெரியவர்கள்) அனுபவசளிகல்தானே என்ன இருந்தாலும்!!!
ஒரு உண்மை என்னவென்றால் ,ஏன் இப்படி தன் வேலையை தானே செய்கிறார்கள் தெரியுமோ? எல்லாம் மனைவியிடம் நல்ல பெயர் வாங்கத்தான்.
அதுமட்டுமல்ல அம்மா இனி என்ன செய்வது பிள்ளைதானே என்று செய்து தருவார் ஆனால் மனைவி???(அன்பான மனைவி விதிவிலக்கு),
அப்படியே செய்யமறுக்கும் மனைவியை அதட்டமுடியாது.இப்ப சமவுரிமை,மகளிர் அமைப்பு,பெண்கள் காப்புச்சட்டம் என்று பல(இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது,ஒரு சிலருக்கே).
மொத்தத்தில் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதை நாமும் செய்தால் குடும்ப வாழ்க்கை களைகட்டும் அன்பது என்கருத்து.

aren
04-11-2009, 07:52 AM
ஹஹஹா....
இரசித்தேன் ஆரென்.
உங்களின் படைப்புத்திறன் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுகிறது.
இரசிக்க வைத்த கவிதைக்கு இனிய பாராட்டு.

நன்றி பாரதி. நான் எழுதியது உங்களுக்கு பிடித்திருப்பதுகண்டு சந்தோஷம்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-11-2009, 07:53 AM
மனைவிக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாது (சம்பளம் மட்டும் கொடுத்தா போதும்..)ன்னு நினைக்கிற உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் ஆரென்ஜி...

நன்றி மன்மதன்.

நீங்கள் பெருமைப்படுகிறீர்கள். ஆகையால் நான் பொருமுவது உங்கள் காதில் எங்கே விழப்போகிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-11-2009, 07:54 AM
வெளியிலே நாம வேல சொன்னா கெட்கறதுக்கு
நிறைய பேரு,
விட்டீலோ அவங்க சொல்றத கெட்கறது நமது வேல

சம்பளத்தை எடுத்து கொடுத்து விட்டு
தனக்காக வேலை பர்க்கும் உங்களை
நானும் நினைத்து பார்க்கிரேன்.

சொல்றத யார் கேட்கறது
பட்டாதனே தெரியுது
என்ன செய்ய காலம் கடந்து போச்சு

நன்றி மனோஜி.

ஆமாம், காலம் கடந்துவிட்டது, இனிமேல் பேசி என்ன பயன். ம*ற்ற*வ*ர்க*ளாவ*து சுதாரித்துக்கொள்ள*ட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-11-2009, 07:55 AM
அட்ரா சக்கை....அட்ரா சக்கை....இதை போட்டுக்கொடுக்கவேண்டியதுதான்....:rolleyes::rolleyes:
ஓம் சாந்தி....ஓம் சாந்தி.....ஓம் சாந்தி......:D:D
அன்புடன்
மணியா....:D:D

நன்றி தல. இது ஒன்னுதான் பாக்கி அதையும் செய்துவிடுங்கள். சுத்தம்!!!!!

இதில் என்ன* அவ்வ*ள*வு சந்தோஷ*ம் உங்க*ளுக்கு.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-11-2009, 07:57 AM
ஆக, கல்யாணம் ஆனா பிறகுதான் பொறுப்பு வந்திருக்கு நம்ம ஆரேன் அண்ணாவுக்கு...

சூப்பரா திங் பண்ணியிருக்கிறீங்க ஆரேன் அண்ணா...

நன்றி லீலுமா.

அப்படின்னா எனக்கு பொறுப்பு வந்திருச்சு என்கிறீர்களா? என் ம*னைவி வேறு மாதிரியாக* நினைக்கிறார்க*ளே?

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-11-2009, 07:58 AM
வாழ்த்துக்கள் ஆரென் சத்தமில்லாமல் கல்யாணம் செய்துவிட்டீர்கள்.

நன்றி வியாசன். சத்தம்போட்டேன் ஆனால் யார் காதிலும் விழவில்லை.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-11-2009, 07:59 AM
ஹா ஹா....
உண்மையில பாவம்....அரேன் நீங்க..நொந்து போயிருக்கீங்க..போல...
மாற்றம் நிகழும்...
வாழ்த்துகள்...நல்ல ரசிக்க வைக்க கவி எழுதியதிற்கு....

நன்றி சரண்யா. நாங்க நொந்து நூலாகியது உங்களைப் போன்றவர்களுக்கு தெரியாது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-11-2009, 08:00 AM
:D

அருமையாய் இருக்குங்கண்ணா..

இதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கல்யாணமாக்கிவிட்டா தன்னாட்சி மட்டுமல்ல, நிதி துறையும் பரிபோய்டும் என்பதுதான்.. வீட்டுக்கு சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று போட்டிருப்பதன் மூலம் உள்துறை மட்டும் நம்ம கிட்ட இருக்கும் னு புரியுது( துறை கீழ் வருவது என்னென்ன என்று விளக்காமலே எல்லாருக்கும் புரியும் :) ) வெளி துறையை முழுமையாய் மறந்துவிட வேண்டியது கண்டாயமாகிறது..

வாழ்த்துக்கள் அண்ணா..

நன்றி ஆதி. இப்படி கரெக்டா புட்டு புட்டு வைச்சுட்டீங்களே. பலே பலே!!!

நன்றி வணக்கம்
ஆரென்

aravinthan21st
04-11-2009, 09:36 AM
இப்பதான் விழங்குது ஏன் கொஞ்சம் பொறுப்பு குறைவா நண்பர்களுடன் சுற்றும் பிள்ளைகளை பார்த்து "எல்லாம் ஒரு கால் கட்டு போட்டா சரிவரும்" என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று.
அவர்கள்(பெரியவர்கள்) அனுபவசளிகல்தானே என்ன இருந்தாலும்!!!
ஒரு உண்மை என்னவென்றால் ,ஏன் இப்படி தன் வேலையை தானே செய்கிறார்கள் தெரியுமோ? எல்லாம் மனைவியிடம் நல்ல பெயர் வாங்கத்தான்.
அதுமட்டுமல்ல அம்மா இனி என்ன செய்வது பிள்ளைதானே என்று செய்து தருவார் ஆனால் மனைவி???(அன்பான மனைவி விதிவிலக்கு),
அப்படியே செய்யமறுக்கும் மனைவியை அதட்டமுடியாது.இப்ப சமவுரிமை,மகளிர் அமைப்பு,பெண்கள் காப்புச்சட்டம் என்று பல(இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது,ஒரு சிலருக்கே).

நான் எழுதியது நகைச்சுவைக்காகவே அன்றி யாரையும் புண்படுத்தவல்ல.

gans5001
05-11-2009, 04:32 AM
ஆரென்... ஆனாலும் இது கொஞ்சம் அதிகம்..
கவனம் தேவை.... வீட்டிலும் மன்றத்தில் உறுப்பினராக இருக்கப் போகிறார்கள் (உங்களுக்கே தெரியாமல்), நீங்கள் சமைத்த சாப்பாடும் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடப்போகிறது

அன்புரசிகன்
05-11-2009, 06:17 AM
அண்ணர் பணம் பையில் வைத்திருப்பதில்லை. கடனட்டைகளை வைத்து சமாளித்துக்கொண்டு அண்ணியை சாடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். :D :D

இளந்தமிழ்ச்செல்வன்
05-11-2009, 08:30 AM
தலைப்பை பார்த்து யாரோ ஒருவர் மாட்டிக் கொண்டார் என்று ஆறுதல் சொல்ல வந்தால் நம்ம ஆரென். அட இவருக்கென்ன இப்போ ஒரு கல்யாணமா என்று படித்தால்........

அட அட என்னே ஒரு உண்மை.... இத்தனை வருடத்திற்க்கு பிறகு தைரியமாக வெளியே சொல்லியிருக்கீங்க....

வாழ்த்துக்கள் ஆரென்.

இளந்தமிழ்ச்செல்வன்
05-11-2009, 08:39 AM
ஆக மொத்தத்தில்.. மிகப்பெரிய மாறுதல்....

உம் மனைவி பக்கத்திலிருந்து... அவரது மாறுதல்கள் என்ன என்ன பட்டியல் போடச் சொல்லவேண்டும்.

அவங்க இன்னும் பெரிய பட்டியல் வைத்திருக்கிறார்களாம்...

வெளியிலே நாம வேல சொன்னா கெட்கறதுக்கு
நிறைய பேரு,
விட்டீலோ அவங்க சொல்றத கெட்கறது நமது வேல

சம்பளத்தை எடுத்து கொடுத்து விட்டு
தனக்காக வேலை பர்க்கும் உங்களை
நானும் நினைத்து பார்க்கிரேன்.

சொல்றத யார் கேட்கறது
பட்டாதனே தெரியுது
என்ன செய்ய காலம் கடந்து போச்சு

சரியா சொன்னீங்க....

அட்ரா சக்கை....அட்ரா சக்கை....இதை போட்டுக்கொடுக்கவேண்டியதுதான்....:rolleyes::rolleyes:
ஓம் சாந்தி....ஓம் சாந்தி.....ஓம் சாந்தி......:D:D
அன்புடன்
மணியா....:D:D

இப்பவே அப்படி இருக்கிறதாலதானே புலம்பியிருக்காரு. அதுக்கும் வேட்டு வைப்பீங்க போல...

:D

அருமையாய் இருக்குங்கண்ணா..

இதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கல்யாணமாக்கிவிட்டா தன்னாட்சி மட்டுமல்ல, நிதி துறையும் பரிபோய்டும் என்பதுதான்.. வீட்டுக்கு சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று போட்டிருப்பதன் மூலம் உள்துறை மட்டும் நம்ம கிட்ட இருக்கும் னு புரியுது( துறை கீழ் வருவது என்னென்ன என்று விளக்காமலே எல்லாருக்கும் புரியும் :) ) வெளி துறையை முழுமையாய் மறந்துவிட வேண்டியது கண்டாயமாகிறது..

வாழ்த்துக்கள் அண்ணா..

இருக்கும் துறைகள் கைவிட்டு போனதற்கா????

அமரன்
05-11-2009, 08:31 PM
ஆரென்... ஆனாலும் இது கொஞ்சம் அதிகம்..
கவனம் தேவை.... வீட்டிலும் மன்றத்தில் உறுப்பினராக இருக்கப் போகிறார்கள் (உங்களுக்கே தெரியாமல்), நீங்கள் சமைத்த சாப்பாடும் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடப்போகிறது
அம்மாவின் ஆக்கினை தாங்காமல்
எந்தக் கழுதையையாவது கட்டி வைங்க என்று
சொல்லாத வரை ஆரெனார் தப்பித்தார்.:lachen001: