PDA

View Full Version : வாழைத் தண்டுசரண்யா
02-11-2009, 11:49 AM
வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல்&கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.
வாழைப் பூ

வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள்.

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘

வாழைப் பூவின் சத்தை வீணடிக்காமல் சாப்பிட்டால் மூலநோயில் உதிரம் கொட்டுவதை நிறுத்தும்; கரியமில வாயுவையோட்டும்’ என்று தேரையர் பதார்த்த குண சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது?

ஒவ்வொரு மனிதரும், நோயின்றி உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் சுகமாக வாழ விரும்புவது நிச்சயம் அவ்வாறு விரும்பினால் மட்டும் போதாது. இயற்கையின் மூலம் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதுடன் செயலிலும் இறங்கவேண்டும்.

நாம் உணவை உண்ணும்போது, எந்த உணவாக இருந்தாலும், அவசரம் இல்லாமல் நன்றாக மென்று விழுங்கப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். “நொறுங்கத் தின்று நூறு வயதிரு” என்பது மூதுரையார் வாக்கு.

உடலுக்கு வேண்டிய தாவர, காய்கறி வகைகளின் சத்தை வீணாக்காமல் சமைத்துச் சாப்பிடப் பழக வேண்டும். சத்தை வீணாக்காமல் உணவுப் பொருள்களை பயன்படுத்த வேண்டும்

நன்றிகள்: உங்களுக்காக

aren
02-11-2009, 01:55 PM
எனக்கு வாழைப்பூவும் வாழைத்தண்டும் பிடிக்காமல் இருந்தது. ஆனால் இப்பொழுது இவையிரண்டையும் விரும்பிச் சாப்பிடுகிறேன். நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மையே.

சமைப்பவர்கள் கொஞ்சம் சிரத்தை எடுத்து சமைத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

ஜனகன்
02-11-2009, 02:17 PM
ஹாய் சரண்யா! வாழை தண்டில் இவ்வளவு விசயமிருக்கா, நான் இது வரை அறிந்திராத குறிப்புக்கள் தந்துள்ளிர்கள் நன்றி. வாழைத்தண்டு, வாழைப்பூ இரண்டும் நல்ல பயனுள்ள டிப்ஸ். மேலும் பயனுள்ள குறிப்புக்களை இங்கே எழுதவும். நன்றி.
அன்புடன் ஜனகன்.

குணமதி
02-11-2009, 04:05 PM
வாழைத்தண்டுச் சாறு சிறுநீரகக் கல்லை நீக்கும் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.

வியாசன்
02-11-2009, 04:34 PM
ஹாய் சரண்யா! வாழை தண்டில் இவ்வளவு விசயமிருக்கா, நான் இது வரை அறிந்திராத குறிப்புக்கள் தந்துள்ளிர்கள் நன்றி. வாழைத்தண்டு, வாழைப்பூ இரண்டும் நல்ல பயனுள்ள டிப்ஸ். மேலும் பயனுள்ள குறிப்புக்களை இங்கே எழுதவும். நன்றி.
அன்புடன் ஜனகன்.

மலிவானவை என்றால் நம்மவர்களுக்கு ஒன்றும் இல்லாதவை என்று நினைத்துவிடுகின்றார்கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
02-11-2009, 07:18 PM
சரண்ய மிகவும் பயனுள்ள செய்திகளை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி தொடருங்கள்

இளந்தமிழ்ச்செல்வன்
02-11-2009, 07:20 PM
வாழைத்தண்டுச் சாறு சிறுநீரகக் கல்லை நீக்கும் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.

உண்மைதான். சிறுநீர் அதிகம் விரிவதால் கற்கள் உடைந்து வெளியேறும். இளநீரும் இதற்க்கு உதவும்.

சரண்யா
04-11-2009, 03:50 AM
ஒ..ஓ..தங்களின் பயனுள்ள பதிவை இட்டதற்கும்..படித்து பயன் பெற்றவருக்கும் நன்றிகள்....

aravinthan21st
05-11-2009, 02:25 PM
இக்குறிப்பு காலத்தின் தேவையே!!!
குறிப்புக்கு நன்றி.
நான் இன்னுமொரு சிறு குறிப்பை சரண்யாவின் குறிப்புடன் சேர்க்கலாம் என்றெண்ணுகிறேன்.அதாவது, வாழைச்சாறு தீக்காயத்துக்கு முதலுதவியாக பயன்படுத்தலாம்.இதமாகவும் இருக்கும்.

சரண்யா
06-11-2009, 02:33 AM
ஒ..அப்படியா...நல்ல தகவலுக்கு நன்றிகள்...aravinthan21st அவர்களே...

ஆமா இந்த 21st உங்கள் வயதை குறிக்கிறதா..நூற்றாண்டை குறிக்கிறதா...(சும்மா)....

samuthraselvam
06-11-2009, 04:33 AM
இது மிகவும் பயனுள்ளது...

பாருங்கள் வாழைத் தண்டை சமைப்பதில் தான் கஷ்டமுள்ளது...

ஏனெனில் ட்யூப் லைட் போன்று இருக்கும் வாழைத் தண்டை முதலின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும்... அப்போது அதில் அதிக அளவில் நார்கள் இருக்கும் அதை எடுப்பதில் தான் சிரமம்...

அம்மா இதை செய்யும் போது, நறுக்கிய வாழைத்தண்டை ஒரு பாத்திரத்திலிட்டு, நீர் ஊற்றி அதில் ஒரு சிறிய முள் குச்சியை உள்ளே விட்டு சுற்றுவார்... முள் குச்சி சுத்தமாகவும் கிளைகள் உள்ளதாகவும் இருக்க வேண்டும்...

அந்த நார்களேல்லாம் குச்சியில் சுற்றிவிடும்... அப்படியே எல்லா நார்களும் வரும் வரை சுற்றினால்,வெறும் தண்டு மட்டும் பாத்திரத்தில் இருக்கும்... அதை எடுத்து சமைப்பார்கள்...

பா.ராஜேஷ்
06-11-2009, 09:11 AM
பயனுள்ள கருத்தை
பதித்தமைக்கு நன்றிகள் பல
சரண்யா

பா.ராஜேஷ்
06-11-2009, 09:12 AM
பயனுள்ள கருத்தை
பதித்தமைக்கு நன்றிகள் பல
சரண்யா

சரண்யா
06-11-2009, 10:27 AM
நன்றிகள் samuthraselvam மற்றும் பா.ராஜேஷ் அவர்களுக்கும்....

aravinthan21st
06-11-2009, 12:34 PM
"21st" என்பது காரணப்பெயரும் கூட,எவ்வாறெனில் நான் இந்த கணணி வலைகளுக்குள் என்னை அறிமுகப்படுத்துய போது எனக்கு வயது 21 ஆக இருந்தது(இப்பவும்தான்).

வாழையால் எவ்வளவு பயன்கள் பாருங்கள்,அதை வளர்த்தாலும் பயன்,வெட்டினாலும் பயன்.இலை,காய்,பழம்,தண்டு என்று நீண்டுகொண்டே செல்கிறதே!!!

சரண்யா
06-11-2009, 11:58 PM
எப்பவும் 21 தானா...என்றும் 16 மார்க்கண்டேயர் போல நீங்கள் aravinthan21st ...நல்ல வரம் தான்...(சும்மா) வாழ்த்துகள்...
நன்றிகள்...aravinthan21st

Mano.G.
09-11-2009, 01:07 AM
இது மிகவும் பயனுள்ளது...

பாருங்கள் வாழைத் தண்டை சமைப்பதில் தான் கஷ்டமுள்ளது...

ஏனெனில் ட்யூப் லைட் போன்று இருக்கும் வாழைத் தண்டை முதலின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும்... அப்போது அதில் அதிக அளவில் நார்கள் இருக்கும் அதை எடுப்பதில் தான் சிரமம்...

அம்மா இதை செய்யும் போது, நறுக்கிய வாழைத்தண்டை ஒரு பாத்திரத்திலிட்டு, நீர் ஊற்றி அதில் ஒரு சிறிய முள் குச்சியை உள்ளே விட்டு சுற்றுவார்... முள் குச்சி சுத்தமாகவும் கிளைகள் உள்ளதாகவும் இருக்க வேண்டும்...

அந்த நார்களேல்லாம் குச்சியில் சுற்றிவிடும்... அப்படியே எல்லா நார்களும் வரும் வரை சுற்றினால்,வெறும் தண்டு மட்டும் பாத்திரத்தில் இருக்கும்... அதை எடுத்து சமைப்பார்கள்...

நல்ல பயன் உள்ள தகவல்,
செய்யும் முறையையும் கொடுத்தற்கு
தங்கைக்கு நன்றி,

மனோ.ஜி