PDA

View Full Version : கணக்கு போடுங்கள்

Pages : [1] 2

ஜனகன்
01-11-2009, 03:27 PM
திருவாளர் செல்வம் பொங்கலுக்கு காய்கறி வாங்கச் சந்தைக்கு சென்றார். அவர் மனைவி ரூபா.100கொடுத்தனிப்பினார்.கத்தரிக்காய், முருங்கக்காய், பூசணிக்காய் மூன்றும் வாங்கி வந்தார். ரூபா.100 சரியாகி விட்டது. காய்கறிகளும் மொத்தம்100 இருந்தன. வீட்டிற்கு வந்தும் அவர் மனைவி விலை விபரத்தை கேட்டார். முருங்கக்காய் ரூபாய்க்கு ஒன்று, கத்தரிக்காய் ரூபாய்க்கு இருபது, பூசணிக்காய் ஐந்து ரூபாய்க்கு ஒன்று.ரூபா.100 க்கும் காய் கறிகள் வாங்கியிருக்கின்றேன்,.ஒவ்வொன்றிலும் எத்தனை, எத்தனை வாங்கி இருக்கின்றேன்.கணக்கு போட்டு சொல்என்றார்.செல்வத்தின் மனைவியோ மூளைக்கு வேலை கொடுக்க விரும்பவில்லை. காய் கறிகளை எண்ணத் தொடங்கினார். "ஆமா! ரூபா.100 -க்கும் காய்கள்தான் இருக்க்கு"ஆச்சரியாப்பட்டார், அவர் மனைவி.

நீங்கள் கணக்குப்போட்டு கண்டு பிடியுங்கள், ஒவ்வொரு காயிலும் எத்தனை வாங்கினாரென்று?

வியாசன்
01-11-2009, 06:22 PM
ஜனகன்

19 பூசணிக்காய்
80 கத்தரிக்காய்
1முருங்கைக்காய்

விடை சரியா

ஜனகன்
01-11-2009, 06:37 PM
ஜனகன்

19 பூசணிக்காய்
80 கத்தரிக்காய்
1முருங்கைக்காய்

விடை சரியா

வியாசன் சரியான விடை.
முயற்சிக்கு பாராட்டுக்கள் :icon_b:

ஜனகன்
02-11-2009, 09:44 PM
ஒரு பையன் தன் தாத்தாவிடம் சொன்னான்,போன மாதம் பார்த்த போது என் எடையும், என் அண்ணன் எடையும்9:10 என்ற விகிதத்தில் இருந்தன. இப்போது என் எடையும் என் அண்ணன் எடையும் 8:9என்ற விகிதத்தில் இருக்கின்றன. என்று தன் தாத்தாவிடம் கதை விட்டான் பேரன்.
அப்போ போன மாதம் பார்த்த எடையை விட இப்போ உங்கள் இருவர் எடையும் குறைச்சிருக்கிறதா? என்று கேட்டார் தாத்தா.

"இல்லை, தாத்தா நான் முன்பை விட4 கிலோ எடை கூடியிருக்கிறேன்; அண்ணன் முன்பை விட 5 கிலோ எடை கூடியிருக்கிறான். விகிதாசாரத்தைப்பார்த்து எங்கள் எடை குறைந்திருக்கிறது என்று எண்ணினிர்களோ?" என்றான் பேரன். "
"அப்போ தனித்தனியே உங்கள் இருவர் எடை என்ன ?"அவனிடன் தாத்தா கேட்டார். "தாத்தா நாங்கள் எங்கள் எடையை சொல்ல மாட்டோம். நீங்கள் கண்டுபிடித்து கொள்ளுங்கள்"என்றான் பேரன். தாத்தாகண்டுபிடித்துக்கொண்டார்.

உங்களால் அண்ணன், தம்பி இருவரின் இப்போதைய எடையை கூற முடியுமா?

அன்புரசிகன்
02-11-2009, 11:36 PM
தம்பியின் முந்தய வயது 36 தற்போதயது 40
அண்ணனின் முந்தயவயது 40 தற்போதயது 45

அதாவது
தம்பி/அண்ணன்=9/10
(தம்பி+4)/(அண்ணன்+5)=8/9

விடையை சுருக்கினால் வந்திடும்.

praveen
03-11-2009, 03:21 AM
உடனே விடை சொல்லி அசத்தி விட்டார் அன்பு.

அன்புரசிகன் தாத்தாவாயிட்டார் என்றும் தெரிகிறது.

ஜனகன்
03-11-2009, 07:43 AM
அன்பு(தாத்தா ) சொன்னது சரியான விடை.
பாராட்டுக்கள்

அமரன்
03-11-2009, 06:12 PM
அன்புத் தாத்தாவுக்குப் பாராட்டு.

- இளைய பேரன்

அறிஞர்
04-11-2009, 12:30 AM
வாழ்த்துக்கள் அன்பு....
இன்னும் கொஞ்சம் கடினமாக கொடுங்கள்...

ஜனகன்
08-11-2009, 11:16 AM
அண்ணன் தம்பி இருவரும் சினிமாவுக்கு போகும்போது 5:4.என்ற விகிதத்தில் பணம் இருந்தது.
இருவரும் செலவழித்த ரூபாய் 4:3. என்ற விகிதத்தில்.
இப்போது இருவரிடத்திலும் தனித்தனியே ஆளுக்கு ரூபா 12.மீதமிருக்கிறது.
சினிமா பார்க்க கொண்டுபோன பணம் எவ்வளவு?
செலவழித்த பணம் எவ்வளவு?

அமரன்
08-11-2009, 11:55 AM
தாத்தாவைக் கேட்டீங்கண்ணா சரியாப் பதில் சொல்லி இருப்பார். இப்ப பாருங்க. அன்பு பார்த்தும் பதில் சொல்லாமல் போயிட்டார். :)

நீங்கள் தரும் எல்லாக் கணக்கும் ஒன்றாக இருக்கட்டுமே.

ஜனகன்
08-11-2009, 08:52 PM
[QUOTE=அமரன்;439659]தாத்தாவைக் கேட்டீங்கண்ணா சரியாப் பதில் சொல்லி இருப்பார். இப்ப பாருங்க. அன்பு பார்த்தும் பதில் சொல்லாமல் போயிட்டார். :)

அன்பு வந்து பார்த்திட்டு போநீர்களா??????????????
சொல்லவேயில்லை,
அமரன் உங்களுக்கு எப்படி? கணக்கு போடா முடியல்லையா?

aren
08-11-2009, 11:10 PM
அண்ணன் தம்பி இருவரும் சினிமாவுக்கு போகும்போது 5:4.என்ற விகிதத்தில் பணம் இருந்தது.
இருவரும் செலவழித்த ரூபாய் 4:3. என்ற விகிதத்தில்.
இப்போது இருவரிடத்திலும் தனித்தனியே ஆளுக்கு ரூபா 12.மீதமிருக்கிறது.
சினிமா பார்க்க கொண்டுபோன பணம் எவ்வளவு?
செலவழித்த பணம் எவ்வளவு?

அண்ணனிடம் 60 தம்பியிடம் 48. 60/12= 5, 48/12=4, 5:4
செலவழித்தது 4:3 அதாவது 48:36
60ல் 48ஐ கழித்தால் மீதம் 12 அண்ணனிடம் உள்ளது
48ல் 36ஐ கழித்தால் மீதம் 12 தம்பியிடன் உள்ளது.

ஆக, அவர்களிடம் இருந்தது 60:48
செலவழித்தது 48:36

ஜனகன்
09-11-2009, 09:20 AM
அரேன் அசத்திடிங்க!...
சரியான பதில் வாழ்த்துக்கள்.

ஜனகன்
17-11-2009, 09:57 PM
எனக்கு ஒரு பெரியம்மாவும், ஒரு சித்தியும் உண்டு. என் அம்மா வயதை 7ஆல்பெருக்கி 8 ஆல் வகுத்தால், என் சித்தி வயதை கண்டு பிடித்துக்கொள்ளலாம்.
என் அம்மா வயதை8 ஆல் பெருக்கி 7 ஆல் வகுத்தால் என் பெரியம்மா வயதை கண்டு பிடித்துக்கொள்ளலாம்.
என் சித்தி வயதோடு என் வயதை கூட்டினாலும், என் பெரியம்மா வயதை தெரிந்து கொள்ளலாம். என் வயது 15.
நீங்கள் சொல்லுங்கள் என் அம்மா, சித்தி, பெரியம்மா வயதென்ன?

பா.ராஜேஷ்
18-11-2009, 02:08 PM
அம்மா வயது : 56
சித்தி வயது : 49
பெரியம்மா வயது : 64

பா.ராஜேஷ்
18-11-2009, 02:08 PM
அம்மா வயது : 56
சித்தி வயது : 49
பெரியம்மா வயது : 64

ஜனகன்
18-11-2009, 03:08 PM
சரியாக சொன்னீர்கள் ராஜேஷ். வாழ்த்துக்கள்.

ஜனகன்
18-11-2009, 03:22 PM
ஒருவர் தம் பிள்ளைகளுக்கு பரிசாக கொடுக்க கொஞ்ச பணம் வைத்திருந்தார். அதை அவர் நாலு பேருக்கு சமமாக பங்கிட்டு கொடுத்தால் ஒவ்வொரு வருக்கும் எவ்வளவு ருபாய் கிடைக்குமோ, அதை விட ருபா ஆறு குறைவாக கிடைக்கும் ஐந்து பேருக்கு சமமாக பங்கிட்டால்.
அப்படியானால் ஆறு பேருக்கு சமமாக அந்த ருபாயை பங்கிட்டால்,
1. ஆளுக்கு எவ்வளவு ருபாய் கிடைக்கும்?
2. அவரிடம் முதலிருந்த மொத்த பணம் எவ்வளவு?

கீதம்
19-11-2009, 06:41 AM

மொத்தப்பணத்தை x என்று வைத்துக்கொண்டால்
x/5 என்பது (x/4)-6 க்கு சமம்.
இதை ஒரு சமன்பாடாக மாற்றினால்
x/5=(x/4)-6
x/5=(x-24)/4
5x-4x=120
அப்படியெனில் x என்பது ரூ.120 ஆகும். (மொத்தப்பணம்)

அதை அறுவருக்கு சமமாகப் பங்கிட, ஆறால் வகுக்கவேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ரூ.20 கிடைக்கும்.

aren
19-11-2009, 07:50 AM
கீதம் கலக்கிட்டீங்க.

கணக்கு சரிதான்.

120/4 = 30
120/5 = 24
6 ரூபாய் குறைவாக ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது
120/6 = 20

கணக்கில் பல புலிகள் நம் மன்றத்தில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது

சரண்யா
19-11-2009, 12:01 PM
ஆம கீதம் மற்றும் aren அவர்கள்...சூப்பர்...

பா.ராஜேஷ் அவர்களே..நீங்கள் எப்படி கண்டுபிடித்தர்கள் அம்மா சித்தி பெரியம்மா வயதை என்று சொல்லவே இல்லையே..சொல்வீர்களா..

ஜனகன்
19-11-2009, 09:34 PM
கீதம், அரேன் சரியான பதில் சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்
பார்வேயிட்ட சரண்யாவுக்கு நன்றி.

ஜனகன்
19-11-2009, 09:52 PM
ஒரு ஊரில் கொஞ்ச கிளிகள் இருந்தன. அவை இரவில் மரங்களில் ஒவ்வொன்றிலும் சம எண்ணிக்கையில் தங்கும். ஒருநாள் ஒருவன் ஆறு மரங்களை வெட்டிவிட்டான். அன்று மாலை அங்கு வந்த கிளிகள் எஞ்சிய மரங்களில் சம எண்ணிக்கையில் தாக்கியது. மரத்துக்கு இரண்டு கிளிகள் அன்று அதிகமாக தங்கின. அதை தொடர்ந்து மறு நாள் இன்னொருவன் மேலும் ஆறு மரங்களை வெட்டி விட்டான் அன்று மாலை வந்த கிளிகள் எஞ்சிய மரங்களில் மரத்துக்கு ஐந்து கிளிகளாக உட்காந்து அன்றிரவை சமாளித்தன.
இப்போது சொல்லுங்கள்;
மொத்த மரங்கள் எத்தனை?
அங்கு தங்கவந்த கிளிகள் எத்தனை?

ஜனகன்
21-11-2009, 06:41 PM
எங்கே கணக்கு புலிகளை இன்னும் காணவில்லை!??நித்திரையோ??

ராஜேஷ்
22-11-2009, 07:28 PM
இந்த பகுதிக்கு முதல் முறையா வந்தேன் . கணக்கில் புலியாக இருந்தால் தான் நம் புலிகள் போடும் கணக்கிற்க்கு விடை தேட முடியும் .

நான் கொஞ்சம் கணக்கில் வீக் .

இருந்தாலும் ஜனகன் போட்ட கணக்கிற்க்கு சரியான விடையை யோசித்துகொன்டு இருக்கிறேன் . விடை கிடைத்தவுடன் பதித்து விடுகிறேன் .

ஜனகன்
22-11-2009, 08:11 PM
வாங்க ராஜேஷ், நல்லாய் ஜோசியுங்க.

விகடன்
23-11-2009, 05:39 AM
ஒரு ஊரில் கொஞ்ச கிளிகள் இருந்தன. அவை இரவில் மரங்களில் ஒவ்வொன்றிலும் சம எண்ணிக்கையில் தங்கும். ஒருநாள் ஒருவன் ஆறு மரங்களை வெட்டிவிட்டான். அன்று மாலை அங்கு வந்த கிளிகள் எஞ்சிய மரங்களில் சம எண்ணிக்கையில் தாக்கியது. மரத்துக்கு இரண்டு கிளிகள் அன்று அதிகமாக தங்கின. அதை தொடர்ந்து மறு நாள் இன்னொருவன் மேலும் ஆறு மரங்களை வெட்டி விட்டான் அன்று மாலை வந்த கிளிகள் எஞ்சிய மரங்களில் மரத்துக்கு ஐந்து கிளிகளாக உட்காந்து அன்றிரவை சமாளித்தன.
இப்போது சொல்லுங்கள்;
மொத்த மரங்கள் எத்தனை?
அங்கு தங்கவந்த கிளிகள் எத்தனை?

கணக்கை சரிபார்க்க..

அன்புரசிகன்
23-11-2009, 06:18 AM
ஆரம்பத்தில் ஒரு மரத்தில் உள்ள கிளிகள் p
ஆரம்பத்தில் மரங்களின் எண்ணிக்கை t
கிளிகளின் எண்ணிக்கை=t*p
6 மரங்கள் வெட்டியபின்
tp=(p+2)*(t-6)
12 மரங்கள் வெட்டியபின்
tp=5(t-12)
=>pt-6p+2t-12=5t-60
3t-pt=48-6p
t=(48-6p)/(3-p)
p=1>t=21
p=2>t=36
ஆனால் முதலாவதன் படி அதாவது 21 கிளிகள் எனின் 12 மரங்கள் வெட்டப்பட்ட பின்னர் ஒவ்வொருமரத்திலும் 9 மரங்களின் 5 ஆக இருக்கமுடியாது
இரண்டாவதன் படி அதாவது 72 கிளிகள் எனின் 12 மரங்கள் வட்டப்பட்ட பின்னர் 24 மரங்களின் 5 படி இருக்கமுடியாது...
ஆகவே கணக்கில் எங்கோ பிழை உள்ளது. இல்லாவிடின் நான் தவறு என்றால் எங்கே தவறு உள்ளது என்று கூறுங்கள்... நாங்கள் கணக்கில் எலிகளே....

தாமரை
23-11-2009, 06:21 AM
ஒரு ஊரில் கொஞ்ச கிளிகள் இருந்தன. அவை இரவில் மரங்களில் ஒவ்வொன்றிலும் சம எண்ணிக்கையில் தங்கும். ஒருநாள் ஒருவன் ஆறு மரங்களை வெட்டிவிட்டான். அன்று மாலை அங்கு வந்த கிளிகள் எஞ்சிய மரங்களில் சம எண்ணிக்கையில் தாக்கியது. மரத்துக்கு இரண்டு கிளிகள் அன்று அதிகமாக தங்கின. அதை தொடர்ந்து மறு நாள் இன்னொருவன் மேலும் ஆறு மரங்களை வெட்டி விட்டான் அன்று மாலை வந்த கிளிகள் எஞ்சிய மரங்களில் மரத்துக்கு ஐந்து கிளிகளாக உட்காந்து அன்றிரவை சமாளித்தன.
இப்போது சொல்லுங்கள்;
மொத்த மரங்கள் எத்தனை?
அங்கு தங்கவந்த கிளிகள் எத்தனை?

கணக்கை தப்பா கொடுத்திட்டு பதில் எதிர்பார்த்தா எப்படிங்க?

மொத்த மரங்கள் A என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு மரத்தில் தங்கிய கிளிகளின் எண்ணிக்கை X என வைத்துக் கொள்வோம்.

A x X = Z(மொத்த கிளிகளின் எண்ணிக்கை)

முதல் நாள் வெட்டிய மரங்களின் எண்ணிக்கை 6.

இதனால் மற்ற மரங்களில் இரண்டிரண்டு கிளிகள் அதிகம் தங்க வேண்டி வந்தது. அதாவது

(A-6) x (X+2) = Z

AX - 6X + 2A -12 = Z

AX = Z

அதனால்

2A-6X -12 = 0

இதை இரண்டால் வகுக்க...

A-3X-6 = 0

A = 3X+6

அடுத்த நாள் 6 மரம் வெட்டப் படுகிறது.

கிளிகள் ஒவ்வொரு மரத்துக்கும் 5???? இருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா, முதல் நாள் ஆறு மரம் வெட்டினப்ப 2 கிளிகள் அதிகம் வந்தன. இப்போ ஆறுமரம் வெட்டறப்ப 2 க்கும் மேற்பட்ட கிளிகள் அதிகம் ஆகும். அப்போ முதல்ல ஒரு மரத்தில ஐந்து கிளி இருக்க சாத்தியம் இல்லை.

சரி முதல் முறை ஒவ்வொரு மரத்துக்கும் 2 கிளிகள் அதிகம், இரண்டாம் முறை கூடுதலா 5 கிளிகள் அதிகம் என்று வைத்துக் கொள்வோம்.

(A-12)x(X+7) = Z

XA - 12X +7A - 84 = Z

XA = Z எனவே

7A - 12X - 84 = 0

X = 3X+6 என்பதை இங்கே சேர்க்க

7(3X+6) - 12X = 84

21X + 42 - 12X = 84

9X = 42

X = 42 / 9 = 4.667 (இது பின்னமாக வருவதால் தவறு)

:icon_p::icon_p::icon_p:

ஒவ்வொரு மரத்துக்கும் 5 கிளிகள் அதிகமா தங்குவதாக கணக்கெடுப்போம்..

(A-12) x (X+5) = Z

XA - 12X + 5A - 60 = Z

XA = Z

எனவே,

5A-12X = 60

இங்கே A = 3X+6 என்பதை இட

5(3X+6) - 12X = 60

15X + 30 - 12X = 60

3X = 60-30 = 30

X = 10
A = 36

36 மரங்கள். மரத்துக்குப் பத்துகிளி. ஆக மொத்தம் 360 கிளிகள்
6 மரம் வெட்டியதால் மொத்தம் 30 மரங்கள்

360 / 30 = 12 மரத்துக்கு 2 கிளிகள் அதிகம் தங்கின.

மறுபடி ஆறு மரங்களை வெட்டினா.. 24 மரங்கள்

360 / 24 = 15 கிளிகள்..

முதன் முதலில் மரத்தில் தங்கியதை விட 5 கிளிகள் அதிகமாக ஒவ்வொரு மரத்துக்கும் தங்கின.

36 - 10
30 - 12
24 - 15

இதுதான் சரியான கேள்வியும் பதிலும்

aren
23-11-2009, 08:09 AM
நானும் இரண்டு மூன்று முறை உள்ளேவந்து எப்படி இந்த கணக்குவரும் என்று பார்த்துவிட்டேன், ஒன்றுமே பிடிபடவில்லை.

போட்டவரே வந்து விடை சொல்லட்டும்.

aren
23-11-2009, 08:18 AM
கடைசியாக ஒவ்வொரு மரத்திலும் 15 கிளிகள் இருந்திருக்கவேண்டும். அப்பொழுதுதான் கணக்கு சரியாக வரும் என்று நினைக்கிறேன்.

மொத்த மரங்கள் 15
மொத்த கிளிகள் 45
ஒவ்வொரு மரத்திலும் 45/15=3 கிளிகள்

6 மரங்கள் வெட்டப்பட்ட பிறகு, மீதம் 9 மரங்கள்
ஒவ்வொரு மரத்திலும் 45/9=5
ஒவ்வொரு மரத்திலும் இரண்டு கிளிகள் அதிகம்

6 மரங்கள் மறுபடியும் வெட்டப்பட்டன.
மீதமுள்ள மரங்கள் 3
45/3=15 கிளிகள்

ஒவ்வொரு மரத்திலும் 15 கிளிகள்.

எனக்குத் தெரிந்தவரை இதுதான் சரியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஜனகன்
23-11-2009, 09:23 PM
இல்லையே அரேன், நல்லாய் யோசியுங்க.

aren
23-11-2009, 11:23 PM
இல்லையே அரேன், நல்லாய் யோசியுங்க.

அப்படின்னா நீங்களே பதிலை சொல்லிவிடுங்கள்.

ஜனகன்
24-11-2009, 04:59 PM
மொத்த மரங்கள்= x
மரத்திலிருந்த கிளிகள்= y
மொத்த கிளிகள் = xy
மரங்கள் 6 வெட்டப்பட்டன x -6
கிளிகள் மரத்துக்கு 2கூடின y + 2
=(x-6) (y+2)=xy
=xy+2x-6y-12=xy
=2x-6y-12=0
=2x-6y=12
மரங்கள் மேலும் 6 வெட்டப்பட்டன =x-12
கிளிகள் மரத்துக்கு 5 =y+5
=(x-12) (y+5) =xy
= xy+5x-12y-60=xy
=5x-12y -60 =0
4x -12y =24
x =36
விடை :
முதலில் இருந்த மரங்கள் 36.
தங்க வந்த கிளிகள் 360.

ஜனகன்
24-11-2009, 05:13 PM
கணக்கை தப்பா கொடுத்திட்டு பதில் எதிர்பார்த்தா எப்படிங்க?

மொத்த மரங்கள் A என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு மரத்தில் தங்கிய கிளிகளின் எண்ணிக்கை X என வைத்துக் கொள்வோம்.

A x X = Z(மொத்த கிளிகளின் எண்ணிக்கை)

முதல் நாள் வெட்டிய மரங்களின் எண்ணிக்கை 6.

இதனால் மற்ற மரங்களில் இரண்டிரண்டு கிளிகள் அதிகம் தங்க வேண்டி வந்தது. அதாவது

(A-6) x (X+2) = Z

AX - 6X + 2A -12 = Z

AX = Z

அதனால்

2A-6X -12 = 0

இதை இரண்டால் வகுக்க...

A-3X-6 = 0

A = 3X+6

அடுத்த நாள் 6 மரம் வெட்டப் படுகிறது.

கிளிகள் ஒவ்வொரு மரத்துக்கும் 5???? இருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா, முதல் நாள் ஆறு மரம் வெட்டினப்ப 2 கிளிகள் அதிகம் வந்தன. இப்போ ஆறுமரம் வெட்டறப்ப 2 க்கும் மேற்பட்ட கிளிகள் அதிகம் ஆகும். அப்போ முதல்ல ஒரு மரத்தில ஐந்து கிளி இருக்க சாத்தியம் இல்லை.

சரி முதல் முறை ஒவ்வொரு மரத்துக்கும் 2 கிளிகள் அதிகம், இரண்டாம் முறை கூடுதலா 5 கிளிகள் அதிகம் என்று வைத்துக் கொள்வோம்.

(A-12)x(X+7) = Z

XA - 12X +7A - 84 = Z

XA = Z எனவே

7A - 12X - 84 = 0

X = 3X+6 என்பதை இங்கே சேர்க்க

7(3X+6) - 12X = 84

21X + 42 - 12X = 84

9X = 42

X = 42 / 9 = 4.667 (இது பின்னமாக வருவதால் தவறு)

:icon_p::icon_p::icon_p:

ஒவ்வொரு மரத்துக்கும் 5 கிளிகள் அதிகமா தங்குவதாக கணக்கெடுப்போம்..

(A-12) x (X+5) = Z

XA - 12X + 5A - 60 = Z

XA = Z

எனவே,

5A-12X = 60

இங்கே A = 3X+6 என்பதை இட

5(3X+6) - 12X = 60

15X + 30 - 12X = 60

3X = 60-30 = 30

X = 10
A = 36

36 மரங்கள். மரத்துக்குப் பத்துகிளி. ஆக மொத்தம் 360 கிளிகள்
6 மரம் வெட்டியதால் மொத்தம் 30 மரங்கள்

360 / 30 = 12 மரத்துக்கு 2 கிளிகள் அதிகம் தங்கின.

மறுபடி ஆறு மரங்களை வெட்டினா.. 24 மரங்கள்

360 / 24 = 15 கிளிகள்..

முதன் முதலில் மரத்தில் தங்கியதை விட 5 கிளிகள் அதிகமாக ஒவ்வொரு மரத்துக்கும் தங்கின.

36 - 10
30 - 12
24 - 15

இதுதான் சரியான கேள்வியும் பதிலும்

தாமரை சரியாகத்தான் பதிலை கொண்டு வந்தீர்கள்.கடைசியில் குழப்பி விட்டீர்கள்.

ஜனகன்
24-11-2009, 05:26 PM
இந்த முறை சுலபமான கேள்ளவி கண்டுபிடியுங்கள்

ஒரு மரத்தில் கொஞ்ச கிளிகளும், கொஞ்ச மைனாக்களும் இருந்தன.முதலில் அவற்றை எண்ணும்போது கிளிகள், மைனாக்களை விட 20 அதிகமாக இருந்தன. இப்போ 10 கிளிகளும் 10 மைனாக்களும் புதிசா வந்தச்சு. அதற்கு பிறகு கிளிகள் மைனாக்களை விட 2 மடங்கு இருக்கு.
அப்படி என்றால் இப்போது மரங்களில்
எத்தனை கிளிகள்?
எத்தனை மைனாக்கள் இருக்கின்றன?

அறிஞர்
24-11-2009, 06:01 PM

ஆரம்பத்தில்

30 கிளிகள் மற்றும் 10 மைனாக்கள்

இப்பொழுது

40 கிளிகள் மற்றும் 20 மைனக்காள்

அன்புரசிகன்
24-11-2009, 07:14 PM
மொத்த மரங்கள்= x
மரத்திலிருந்த கிளிகள்= y
மொத்த கிளிகள் = xy
மரங்கள் 6 வெட்டப்பட்டன x -6
கிளிகள் மரத்துக்கு 2கூடின y + 2
=(x-6) (y+2)=xy
=xy+2x-6y-12=xy
=2x-6y-12=0
=2x-6y=12
மரங்கள் மேலும் 6 வெட்டப்பட்டன =x-12
கிளிகள் மரத்துக்கு 5 =y+5
=(x-12) (y+5) =xy
= xy+5x-12y-60=xy
=5x-12y -60 =0
4x -12y =24
x =36
விடை :
முதலில் இருந்த மரங்கள் 36.
தங்க வந்த கிளிகள் 360.

ஒரு ஊரில் கொஞ்ச கிளிகள் இருந்தன. அவை இரவில் மரங்களில் ஒவ்வொன்றிலும் சம எண்ணிக்கையில் தங்கும். ஒருநாள் ஒருவன் ஆறு மரங்களை வெட்டிவிட்டான். அன்று மாலை அங்கு வந்த கிளிகள் எஞ்சிய மரங்களில் சம எண்ணிக்கையில் தாக்கியது. மரத்துக்கு இரண்டு கிளிகள் அன்று அதிகமாக தங்கின. அதை தொடர்ந்து மறு நாள் இன்னொருவன் மேலும் ஆறு மரங்களை வெட்டி விட்டான் அன்று மாலை வந்த கிளிகள் எஞ்சிய மரங்களில் மரத்துக்கு ஐந்து கிளிகளாக உட்காந்து அன்றிரவை சமாளித்தன.
இப்போது சொல்லுங்கள்;
மொத்த மரங்கள் எத்தனை?
அங்கு தங்கவந்த கிளிகள் எத்தனை?

நண்பரே...

குழம்பியது நீங்கள் தான். மரத்துக்கு ஐந்து என்றால் ஒரு மரத்தில் 5 கிளிகள் என்று தான் அர்த்தம். ஐந்து கிளிகள் அதிகமாக என்று நீங்கள் சொல்லியிருக்கவேண்டும். நீங்களே முதலாவதில் இரண்டு கிளிகள் அதிகமாக என்று கூறியிருக்கிறீர்கள்...

கணக்கை தப்பாக தந்தவர் நீங்கள்.

யாரும் இங்கு குழம்பவில்லை...

அறிஞர்
24-11-2009, 07:27 PM
இந்த பக்கம் வந்தாலே குழப்பம் வந்துவிடும்... போல...

அறிஞர்
24-11-2009, 07:34 PM
ஒரு ஊரில் கொஞ்ச கிளிகள் இருந்தன. அவை இரவில் மரங்களில் ஒவ்வொன்றிலும் சம எண்ணிக்கையில் தங்கும். ஒருநாள் ஒருவன் ஆறு மரங்களை வெட்டிவிட்டான். அன்று மாலை அங்கு வந்த கிளிகள் எஞ்சிய மரங்களில் சம எண்ணிக்கையில் தாக்கியது. மரத்துக்கு இரண்டு கிளிகள் அன்று அதிகமாக தங்கின. அதை தொடர்ந்து மறு நாள் இன்னொருவன் மேலும் ஆறு மரங்களை வெட்டி விட்டான் அன்று மாலை வந்த கிளிகள் எஞ்சிய மரங்களில் மரத்துக்கு ஐந்து கிளிகளாக உட்காந்து அன்றிரவை சமாளித்தன.
இப்போது சொல்லுங்கள்;
மொத்த மரங்கள் எத்தனை?
அங்கு தங்கவந்த கிளிகள் எத்தனை? "மரத்துக்கு ஐந்து கிளிகள் அதிகமாக உட்காந்து அன்றிரவை சமாளித்தன" என்று இருக்கவேண்டும்... சரியா!!!!!

ஜனகன்
24-11-2009, 09:07 PM
அன்பு ரசிகனுக்கும், அறிஞர் அவர்களுக்கும்! நான் எழுதியது முதலாவது கொடுப்பில் இரண்டு கிளிகள் அதிகமாக என கொடுத்துள்ளேன். அதை தொடர்ந்து வந்த ஐந்து கிளிகளுக்கும் அது பொருந்தும்.அப்படித்தான் நான் முன்பு படித்த புத்தகத்திலும் ஆசிரியர் சொல்லித்தந்தார். அவை இப்ப முக்குயமில்லை. அனால் நான் கொடுத்த தகவலின் படி தவறென்றுதான் உணர்கின்றேன். எல்லோர் சிரமத்திற்கும் வருந்துகின்றேன். இனிமேல் கவனமாக இருப்பேன்.நன்றி.
அன்புடன் ஜனகன்

ஜனகன்
24-11-2009, 09:09 PM
ஆரம்பத்தில்

30 கிளிகள் மற்றும் 10 மைனாக்கள்

இப்பொழுது

40 கிளிகள் மற்றும் 20 மைனக்காள்

சரியான பதில். வாழ்த்துக்கள் அறிஞர் அவர்களே :icon_b:

அறிஞர்
24-11-2009, 09:29 PM
அனால் நான் கொடுத்த தகவலின் படி தவறென்றுதான் உணர்கின்றேன். எல்லோர் சிரமத்திற்கும் வருந்துகின்றேன். இனிமேல் கவனமாக இருப்பேன்.நன்றி.
அன்புடன் ஜனகன்நன்றி ஜனகன்

ஜனகன்
24-11-2009, 09:31 PM
ஒருவருக்கு கமலா, விமலா, நேசம் என மூன்று பெண் பிள்ளைகள் இருந்தார்கள்.அவரிடம் விருந்துக்கு வந்த அவர் நண்பர் பிள்ளைகள் மூவரின் வயதையும் நண்பரிடம் கேட்டார். வீட்டுக்காரர் வயதை நேரடியாக சொல்லாமல், மூன்று பிள்ளைகளின் வயதையும் பெரிக்கினால், அதாவது கமலா வயதை, விமலா வயதைக்கொண்டு பெருக்கி வரும் தொகையை நேசம் வயதால் பெரிக்கினால் வரும் எண் 1001. அவர்கள் ஒவ்வொருவர் வயதும் என்ன என்று கண்டுபிடித்து கொள்ளுங்கள் என்றார் வீடுக்காரர்.

இப்பது மூவரின் வயதையும் நீங்கள் சொல்லுங்கள்

அறிஞர்
24-11-2009, 09:56 PM
இப்பது மூவரின் வயதையும் நீங்கள் சொல்லுங்கள்

7, 11, 13

தாமரை
25-11-2009, 01:37 AM
தாமரை சரியாகத்தான் பதிலை கொண்டு வந்தீர்கள்.கடைசியில் குழப்பி விட்டீர்கள்.

அன்புரசிகனும் அறிஞரும் என்ன பிரச்சனை என்று சொல்லி இருப்பார்கள்..

உங்கள் புதிரில் இறுதி நாளில் ஒவ்வொரு மரத்துக்கும் 5 கிளிகள் தங்கின எனச் சொல்லி இருந்தது பிழை என்பது தெரியும்.

அப்படியானால் சரியான புதிர் என்னவாக இருக்கும் என்பதைக் காணும் முயற்சியில்

முதல் நாள் கிளிகள் எண்ணிக்கை X என்றால்
இரண்டாம் நாள் X+2
மூன்றாம் நாள் X+2+5

என்ற சாத்தியக் கூறையும்

முதல் நாள் கிளிகள் எண்ணிக்கை X என்றால்
இரண்டாம் நாள் X+2
மூன்றாம் நாள் X+5

என்ற சாத்தியக் கூறையும் ஆராய்ந்து

முதல் நாள் கிளிகள் எண்ணிக்கை X என்றால்
இரண்டாம் நாள் X+2
மூன்றாம் நாள் X+5

என்பது மட்டுமே சரியான விடையைத் தரும் என்று சொல்வது குழப்பமல்ல ஜனகன்... தெளிவு...

மத்தவங்களும் கணக்கு தவறு என்பதோடு நிறுத்திகிட்டாங்க. நான் என்ன தவறு என்பதோடு மத்தவங்க கண்ணுக்குப் படாத

முதல் நாள் கிளிகள் எண்ணிக்கை X என்றால்
இரண்டாம் நாள் X+2
மூன்றாம் நாள் X+2+5

என்ற சாத்தியக் கூறையும் உங்களுக்குக் காட்டியிருக்கேன்...

அதனாலதான் இதுதான் சரியான கேள்வியும் பதிலும் அப்படின்னு கடைசியா காட்டியும் இருக்கேன்...

நான் தெளிவாத்தான் இருக்கேன்,,,

தாமரை
25-11-2009, 01:41 AM
"மரத்துக்கு ஐந்து கிளிகள் அதிகமாக உட்காந்து அன்றிரவை சமாளித்தன" என்று இருக்கவேண்டும்... சரியா!!!!!

ஹி ஹி இதுவும் தப்பு..

முதல் நாளை விட ஐந்து கிளிகள் கூடுதலாக என்று இருக்கணும் அறிஞரே

பதிலைப் பாருங்க

10 - 12 - 15

10 உடன் ஒப்பிடும் போது தான் 15 க்கு ஐந்து அதிகம். அதை சரியாக காட்ட வேண்டும்.

நீங்க சொன்னபடி பார்த்தா

10-12-17 என்றாகி விடும் கணக்கு உதைக்கும்.

ஜனகன்
25-11-2009, 09:57 AM
7, 11, 13

சரியான பதில். வாழ்த்துக்கள்.

ஜனகன்
25-11-2009, 10:03 AM
அன்புரசிகனும் அறிஞரும் என்ன பிரச்சனை என்று சொல்லி இருப்பார்கள்..

உங்கள் புதிரில் இறுதி நாளில் ஒவ்வொரு மரத்துக்கும் 5 கிளிகள் தங்கின எனச் சொல்லி இருந்தது பிழை என்பது தெரியும்.

அப்படியானால் சரியான புதிர் என்னவாக இருக்கும் என்பதைக் காணும் முயற்சியில்

முதல் நாள் கிளிகள் எண்ணிக்கை X என்றால்
இரண்டாம் நாள் X+2
மூன்றாம் நாள் X+2+5

என்ற சாத்தியக் கூறையும்

முதல் நாள் கிளிகள் எண்ணிக்கை X என்றால்
இரண்டாம் நாள் X+2
மூன்றாம் நாள் X+5

என்ற சாத்தியக் கூறையும் ஆராய்ந்து

முதல் நாள் கிளிகள் எண்ணிக்கை X என்றால்
இரண்டாம் நாள் X+2
மூன்றாம் நாள் X+5

என்பது மட்டுமே சரியான விடையைத் தரும் என்று சொல்வது குழப்பமல்ல ஜனகன்... தெளிவு...

மத்தவங்களும் கணக்கு தவறு என்பதோடு நிறுத்திகிட்டாங்க. நான் என்ன தவறு என்பதோடு மத்தவங்க கண்ணுக்குப் படாத

முதல் நாள் கிளிகள் எண்ணிக்கை X என்றால்
இரண்டாம் நாள் X+2
மூன்றாம் நாள் X+2+5

என்ற சாத்தியக் கூறையும் உங்களுக்குக் காட்டியிருக்கேன்...

அதனாலதான் இதுதான் சரியான கேள்வியும் பதிலும் அப்படின்னு கடைசியா காட்டியும் இருக்கேன்...

நான் தெளிவாத்தான் இருக்கேன்,,,

தாமரை கோபப்படாதிர்கள், இது பற்றி நான் முன்பே சொல்லி விட்டேன். சிரமத்திற்கு வருந்துகிறேன்.

ஜனகன்
26-11-2009, 09:54 PM
செழியன், மாறன் என அண்ணன், தம்பி இருவர்.செழியன் போன ஆண்டை விட ஐந்து கிலோ எடை கூடியிருந்தான்.மாறன் போன ஆண்டை விட ஆறு கிலோ கூடியிருந்தான்.இருவரின் சராசரி எடை 43 கிலோ. செழியன் எடையையும் மாறன் எடையால் பெரிக்கினால்1845 வரும்.

நீங்கள் இருவர் எடையையும் தனித்தனியே சொல்லுங்கள்

அன்புரசிகன்
26-11-2009, 11:48 PM

41, 45

aren
27-11-2009, 01:23 AM
அன்பு, எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று எழுதுங்கள்

அன்புரசிகன்
27-11-2009, 02:43 AM
5 6 எடை கூடியது என்பதெல்லாம் கவனக்கலைப்பான்கள்...

சராசரி எடை என்பதிலிருந்து அவர்களது எடை 4# என்று தான் வரவேண்டும். இறுதியில் 5 வருகிறதென்பதால் ஒருவரது எடை 45. மற்றயதை பிரித்து பார்த்திடலாம். :D

தாமரை
27-11-2009, 03:49 AM
(X + Y) / 2 = 43 = Z

X+Y = 96

If X = Y

X x Y = 43 ^2 = 1849

ஆனால்

X*Y = 1845

(A+B) x (A-B) = A^2 - B^2

இந்த அடிப்படையில்

முதல் எண்ணில் ஒன்று கூட்டி இரண்டாம் எண்ணில் ஒன்று கழித்து (அதாவது சராசரியை மாற்றாமல் எண்களை மட்டுமே மாற்ற 1^2, 2^2, 3^2, 4^2, 5^2 இந்த எண்களை ஒவ்வொன்றாக 1849 இலிருந்து கழித்துப்பார்க்க வேண்டும்.

1849 -2^2 = 1845

எனவே

சராசரி Z = 43 எனில்
X = Z + 2 = 45
Y = Z -2 = 41

aren
27-11-2009, 04:03 AM
ஏதோ புரியறமாதிரி இருக்குது ஆனால் புரிய மாட்டேங்குது

தாமரை
27-11-2009, 04:26 AM
ஏதோ புரியறமாதிரி இருக்குது ஆனால் புரிய மாட்டேங்குது

சராசரி 43. ஆகவே அதிக பட்ச பெருக்குத் தொகை 43^2 = 1849.

சராசரி மாறாமல் இருக்கணும்னா ஒரு பக்கம் ஒரு எண்ணைக் கழித்து இன்னொரு பக்கம் இன்னொரு எண்ணைக் கூட்டணும் இல்லையா?

அதனால்

(A+B)(A-B) = A^2 - B^2

என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தனும்.

1849 லிருந்து 1845 ஐ கழிக்கணும். வித்தியாசம் 4 வருதா?

நாலின் வர்க்க மூலம் 2. அதனால

X = A+2 = 43 + 2 = 45
Y = A-2 = 43 -2 = 41

அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப ஈஸி..

aren
27-11-2009, 06:29 AM
இப்பொழுது புரிகிறது தாமரை.

எனக்கெல்லாம் கணக்கு கொஞ்சம் வீக். அதான்.

தாமரை
27-11-2009, 07:18 AM
கணக்கு பார்க்கிறவன் சம்பாதிக்க முடியாதாம்... :D :D :D

அதனால்தானோ என்னவோ!!!

ஜனகன்
27-11-2009, 10:21 AM
41, 45

செழியனின் இப்போதைய எடை x
மாறனின் இப்போதைய எடை y
xy =1845
இருவரின் சராசரி எடை 45 கிலோ
மொத்த எடை x+y = 86 கி.
x = 45, மாறனின் எடை 45 கி.
y =41, செழியனின் எடை41 கி.

சரியான பதில் அன்புரசிகன், வாழ்த்துக்கள்:)

ஜனகன்
27-11-2009, 10:23 AM
சராசரி 43. ஆகவே அதிக பட்ச பெருக்குத் தொகை 43^2 = 1849.

சராசரி மாறாமல் இருக்கணும்னா ஒரு பக்கம் ஒரு எண்ணைக் கழித்து இன்னொரு பக்கம் இன்னொரு எண்ணைக் கூட்டணும் இல்லையா?

அதனால்

(A+B)(A-B) = A^2 - B^2

என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தனும்.

1849 லிருந்து 1845 ஐ கழிக்கணும். வித்தியாசம் 4 வருதா?

நாலின் வர்க்க மூலம் 2. அதனால

X = A+2 = 43 + 2 = 45
Y = A-2 = 43 -2 = 41

அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப ஈஸி..

தாமரை விளக்கத்துடன் பதில் தந்துள்ளிர்கள். நன்றியும், பாராட்டுக்களும்.

ஜனகன்
27-11-2009, 10:25 AM
இப்பொழுது புரிகிறது தாமரை.

எனக்கெல்லாம் கணக்கு கொஞ்சம் வீக். அதான்.

ஊக்கம் கொடுத்த அரேனுக்கும் நன்றி.

ஜனகன்
27-11-2009, 10:40 AM
நான், எனது தம்பிமார் இருவர் செழியன், மாறன். தங்கை மதி. நாம் நால்வர் எமது குடும்பத்தில்.
எங்க நாலு போருடைய சராசரி வயது 12. நான் எனது தம்பி செழியன், மாறன் ஆகிய மூவரின் சராசரி வயது 14. என் தம்பி செழியன் என் தங்கை மதி ஆகிய இருவரின் சராசரி வயது 10. என் தம்பி செல்வம்,தங்கை மதி ஆகிய இருவர் வயதின் கூட்டுத்தொகை என் வயது.

நீங்கள் எங்கள் நால்வர் வயதையும் கண்டுபிடியுங்கள்?

தாமரை
27-11-2009, 04:57 PM
நான், எனது தம்பிமார் இருவர் செழியன், மாறன். தங்கை மதி. நாம் நால்வர் எமது குடும்பத்தில்.
எங்க நாலு போருடைய சராசரி வயது 12. நான் எனது தம்பி செழியன், மாறன் ஆகிய மூவரின் சராசரி வயது 14. என் தம்பி செழியன் என் தங்கை மதி ஆகிய இருவரின் சராசரி வயது 10. என் தம்பி செல்வம், தங்கை மதி ஆகிய இருவர் வயதின் கூட்டுத்தொகை என் வயது.

நீங்கள் எங்கள் நால்வர் வயதையும் கண்டுபிடியுங்கள்?

A = ஜனகன் வயது
B = செழியன் வயது
C = மாறன் வயது
D = மதி வயது

நால்வரின் சராசரி வயது = 12

(A+B+C+D) / 4 = 12

(A+B+C+D) = 48

ஜனகன், செழியன், மாறன் சராசரி வயது 14

(A+B+C) / 3= 14
(A+B+C) = 42

D= (A+B+C+ D) - (A+B+C) = 6

தங்கை மதியின் வயது 6.

செழியன், மதி ஆகிய இருவரின் சராசரி வயது 10

(B+D)/2 = 10

(B+D) = 20

D = 6 எனவே

B = 20 - 6 = 14

தம்பி செழியன் வயது 14

ஜனகன் வயது A = செழியன் வயது B + மதி வயது D

ஜனகன் வயது = 14 + 6 = 20

A+B+C+D = 48

A=20
B=14
D=6

20+14+C+6 = 48
40+C = 48
C=48-40 =8.

ஜனகன் வயது 20
செழியன் வயது 14
மாறன் வயது 8
மதி வயது 6

aren
28-11-2009, 07:49 AM
வாவ் தாமரை!!! இப்பொழுது இந்தக் கணக்கு நன்றாகவே புரிந்தது.

ஜனகன்
28-11-2009, 11:41 AM
தாமரை அசத்தீட்டிங்க, சரியானபதில். வாழ்த்துக்கள்

ஜனகன்
28-11-2009, 11:42 AM
வாவ் தாமரை!!! இப்பொழுது இந்தக் கணக்கு நன்றாகவே புரிந்தது.

அரேன் உங்களுக்கும் நன்றி

ஜனகன்
28-11-2009, 12:27 PM
சறோ,தீபா என இரு சினேகிதிகள். அவர்கள் வீட்டுக்கதவுக்கு திரை தைத்து போட துணி வாங்க கடைக்கு போனார்கள். சறோ வீட்டுக்கு ரூபா.350 க்கு துணி வாங்கினாள்.தீபா அவள் வீட்டுக்கு ரூபா.350 க்கு துணி வாங்கினாள். ஆனால் சறோ வாங்கியதை விட தீபா நாலு மீற்றர் துணி அதிகமாக வாங்கினாள்.தீபா வாங்கிய துணி சறோ வாங்கிய துணியை விட மீற்றருக்கு ரூபா.10 விலை குறைவு.
இப்போது கூறுங்கள்:
சறோ எத்தனை மீற்றர் துணி வாங்கினாள்?
தீபா எத்தனை மீற்றர் துணி வாங்கினாள்?

தாமரை
28-11-2009, 01:50 PM
சரோ X மீட்டர் துணியை Y விலைக்கு வாங்கினார்.

X x Y = 350

தீபா மீட்டருக்கு 10 ரூபாய் குறைவாக வாங்கினார், அவருக்கு 4 மீட்டர் அதிகம் கிடைச்சது,,,

(X+4)x(Y-10) = 350

XY + 4Y - 10X - 40 = 350

XY = 350 எனவே

4Y - 10X - 40 = 0

X = 350 / Y எனவே

4Y - 3500/Y - 40 = 0

4Y^2 - 40Y - 3500 = 0

இதை 4 ஆல் வகுக்க

Y^2 - 10Y - 875 = 0

Y^2 - 10Y = 875

Y(Y-10) = 875

Y = 35

X = 10

சரோ 10 மீட்டர் துணி மீட்டர் 35 ரூபாய்க்கு வாங்கினாள்
தீபா 14 மீட்டர் துணியை மீட்டர் 25 ரூபாய்க்கு வாங்கினாள்.

ஜனகன்
29-11-2009, 11:19 AM
தாமரை சரியான பதில். வாழ்த்துக்கள்

ஜனகன்
29-11-2009, 11:31 AM
ஒரு கலவன் பாடசாலை, அங்கே ஆண்களும், பெண்களும் சேர்ந்து மொத்த மாணவர்கள் 4000 பேர். இந்த ஆண்டு 4300 பேர். போன ஆண்டைவிட 300பேர் அதிகம். இந்த ஆண்டில் மொத்த மாணவர்களில் ஆண்கள் 6 சதவிகிதம் அதிகம். பெண்கள் 10சதவிகிதம் அதிகம்.இந்த ஆண்டு படிக்கும் மொத்தம் 4300 மாணவர்களில்,
ஆண்கள் எத்தனைபேர்?
பெண்கள் எத்தனைபேர்?

aren
29-11-2009, 11:43 AM
போன வருடம் மொத்தம் 4000 பேர்
ஆண்கள் 2500
பெண்கள் 1500

இந்த வருடம் மொத்தம் 4300 பேர்
ஆண்கள் போன வருடத்தைவிட 6 சதவிகிதம் அதிகம்
பெண்கள் போன வருடத்தைவிட 10 சதவிகிதம் அதிகம்
அப்படியென்றால்: ஆண்கள் 2500 x 6% = 150
பெண்கள் 1500 X 10% = 150

இந்த வருடம் மொத்த ஆண்கள் 2500 + 150 = 2650
இந்த வருடம் மொத்த பெண்கள் 1500 + 150 = 1650

ஜனகன்
29-11-2009, 07:22 PM
அரேன் சரியான பதில். வாழ்த்துக்கள். முயற்சி செய்தால் உங்களுக்கும் எல்லாம் முடியும்.

தாமரை
30-11-2009, 01:26 AM
ஒரு கலவன் பாடசாலை, அங்கே ஆண்களும், பெண்களும் சேர்ந்து மொத்த மாணவர்கள் 4000 பேர். இந்த ஆண்டு 4300 பேர். போன ஆண்டைவிட 300பேர் அதிகம். இந்த ஆண்டில் மொத்த மாணவர்களில் ஆண்கள் 6 சதவிகிதம் அதிகம். பெண்கள் 10சதவிகிதம் அதிகம்.இந்த ஆண்டு படிக்கும் மொத்தம் 4300 மாணவர்களில்,
ஆண்கள் எத்தனைபேர்?
பெண்கள் எத்தனைபேர்?

வழி முறைகளுடன் விடை...

போன ஆண்டு ஆண்கள் எண்ணிக்கை= X
போன ஆண்டு பெண்கள் எண்ணிக்கை = Y

X + Y = 4000

X = 4000 - Y

இந்த ஆண்டு உயர்ந்த மாணவர் எண்ணிக்கை = 300

ஆண்கள் 6 சதவிகிதம்
பெண்கள் 10 சதவிகிதம்

அதாவது

(6/100)xX + (10/100)x Y = 300

இதை 100 ஆல் பெருக்க

6X +10Y = 30000

X = 4000-Y என்பதை இங்கே குறிப்பிட

6x(4000-Y) + 10 Y = 30000

24000 - 6Y + 10Y = 30000

4Y = 6000
Y = 1500

X = 4000 - 1500 = 2500

இந்த ஆண்டு ஆண்கள்

1.06 x 2500 = 2650.

இந்த ஆண்டு பெண்கள்

1.1 x 1500 = 1650.

ஜனகன்
30-11-2009, 08:12 AM
நல்ல விளக்கத்துடன் பதில் தந்தமைக்கு நன்றி. வாத்துக்கள் தாமரை.

ஜனகன்
30-11-2009, 08:22 AM
மணிக்கு 24 கி. மீற்றர் வேகத்தில் ஓடக்கூடிய ஒரு நாய் அதன் முன்னால் 150 மீற்றர் தூரத்தில் இருந்து மணிக்கு 18 கி. மீ வேகத்தில் ஓடும் முயலை எவ்வளவு நேரத்தில் பிடிக்கும். இதுதான் கேள்வி
இதெல்லாம் தாமரைக்கும், அரேனுக்கும் வெறும் சுசிப்பி என்று நினைக்கின்றேன்.

என்றாலும் வாருங்கள், வந்து பதிலை தாருங்கள்

தாமரை
30-11-2009, 08:30 AM
நாயின் வேகம் மணிக்கு 24 கி.மீ

முயலின் வேகம் மணிக்கு 18 கி.மீ

நாய் முயலை அணுகும் வேகம் மணிக்கு = 24 - 18 = 6 கி.மீ

நாய் முயலை பிடிக்க தேவையான தூரம் = 150 மீட்டர் = 0.15 கி.மீ

நாய் மணிக்கு 6 கி.மீ இடைவெளியைக் குறைக்கிறது என்பதை

6 கி.மீ யை 60 நிமிடங்களில் கடக்கிறது எனலாம்.

அதாவது 1 கி.மீ இடைவெளியைக் குறைக்க 10 நிமிடங்கள்

இதை 0.15 ஆல் பெருக்க

0.15 கிமீ இடைவெளியைக் குறைக்க...1.5 நிமிடங்கள்.

ஆகவே நாய் முயலை 1 நிமிடம் முப்பது வினாடிகளில் பிடித்து விடும்..

ஜனகன்
30-11-2009, 03:36 PM
சரியான பதில் தாமரை, பாரட்டுகின்றேன். அடுத்தது விரைவில் வரும்

ஜனகன்
30-11-2009, 09:15 PM
போன மாதம் கிலோ ரூபா. 120 ஆக இருந்த காப்பிப்பொடி இம்மாதம் கிலோ ரூபா.180 ஆகிவிட்டது. ஒரு வீட்டில் கிலோ ரூபா.120 இருக்கும்போது ரூபா. 72 க்கு காப்பிப்பொடி வாங்கினார்கள். விலை கூடியபோதும் பட்ஜெட் உதைக்கும் என்றபடியால் ருபா.72 க்குத்தான் காப்பிப்பொடி வாங்கினார்கள். போன மாதத்தை விட இந்த மாதம் எத்தனை கிராம் காப்பிப்பொடி குறைவாக வாங்கினார்கள்?

அன்புரசிகன்
01-12-2009, 04:41 AM
120 ரூபாயில் இருக்கும் போது 72 ரூபாவிற்கு வாங்கக்கூடிய அளவு = 600 கிராம்

180 ரூபாயில் இருக்கும் போது 72 ரூபாவிற்கு வாங்கக்கூடிய அளவு = 400 கிராம்

ஆகவே 200 கிராம் குறைச்சலாக வாங்கியிருப்பார்கள்...

ஜனகன்
01-12-2009, 08:39 AM
ஹாய் அன்புரசிகம், சரியான விடை வாழ்த்துக்கள்

ஜனகன்
01-12-2009, 10:03 PM
கமலாவும், விமலாவும் ஒரு அலுவலகத்தில் தட்டச்சராக வேலை செய்பவர்கள். ஒருநாள் அவர்கள் 80 பக்கங்கள் `டைப்` செய்யத் தொடங்கினார்கள். வேலையை முடித்துவிட்டு இருவரும் ஒரே சமயத்தில் அலுவலகத்தை விட்டு புறப்பட திட்டமிட்டனர். அனால் கமலாவை விட விமலா வேகமாக `டைப்` செய்யக்கூடியவள். கமலா முடிக்கும் வரை விமலா மேலும் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.கமலா எடுத்துக்கொண்ட நேரம் 4 மணி. மறுநாள் மொத்தம் 77 பக்கங்கள் `டைப்` செய்யவேண்டியிருந்தது. அந்த77 பக்கங்களையும் எப்படி பகிர்ந்து கொண்டால் ஒரே நேரத்தில் முடிக்கலாம்.
இப்போது சொல்லுங்கள் அவர்கள் ஒரே நேரத்தில் `டைப்` செய்து முடித்து விட்டு போக அந்த77 பக்கங்களையும் எப்படி பகிர்ந்து கொண்டார்கள்?

aren
02-12-2009, 02:21 AM
முதல்நாள் கமலா 80 பக்கம் தட்டச்சு செய்ய* எடுத்துக்கொண்ட நேரம் 4 மணி நேரம். அதாவது ஒரு பக்கம் தட்டச்சு செய்ய 3 நிமிடங்கள்.

விமலா கமலாவைவிட 40 நிமிடங்கள் குறைவான நேரம் எடுத்து அதே 80 பக்கங்களை தட்டச்சு செய்தாள். அதாவது விமலா எடுத்துக்கொண்டது ஒரு பக்கம் தட்டச்சு செய்ய 2 1/2 நிமிடங்கள்.

அதாவது விமலாவின் வேகம் கமலாவின் வேகத்தைவிட 20% அதிகம்.

அடுத்த நாள் 77 பக்கங்களைத் ஒரே சமயத்தில் இருவரும் தட்டச்சு செய்து முடிக்கவேண்டுமானால்:

77/2.20=35 (கமலா தட்டச்சு செய்யவேண்டிய பக்கங்கள்)
35 X 1.2 = 42 (விமலா தட்டச்சு செய்யவேண்டிய பக்கங்கள்)

விமலா 42 பக்கங்களையும் கமலா 35 பக்கங்களையும் தட்டச்சு செய்யவேண்டும்.

தாமரை
02-12-2009, 02:47 AM
ஆரென் ஜனகர் இன்னொரு முறை அதே தவறை செய்திருக்கிறார்.

ஆமாங்க முதல்முறை ஆளுக்கு 80 பக்கம் தட்டச்சு செய்தார்களா அல்லது மொத்தமாக எண்பது பக்கமா என்பதை தெளிவில்லாம கொடுத்திருக்கார் பாருங்க.,

ஆனா இந்தக் கணக்கைப் பொறுத்த வரை வேகம், மற்றும் விகிதம் என்பதே முக்கியம் இல்லையா? அதனால விடை மாறாது.

கமலா எண்பது பக்கங்களை தட்டச்சு செய்ய எடுத்துக் கொண்ட நேரம் = 4 மணி நேரம் = 240 நிமிடங்கள்

1 பக்கம் தட்டச்சு செய்ய கமலா எடுத்துக் கொண்ட நேரம் = 240 / 80 = 3 நிமிடங்கள் = 180 நொடிகள்

விமலா எண்பது பக்கங்களை தட்டச்சு செய்ய எடுத்துக் கொண்ட நேரம் = 4 மணி நேரம் = 200 நிமிடங்கள்

1 பக்கம் தட்டச்சு செய்ய விமலா எடுத்துக் கொண்ட நேரம் = 200 / 80 = 2.5நிமிடங்கள் = 150 நொடிகள்

இதை இப்படியும் பார்க்கலாம்,

கமலா 150 பக்கங்கள் தட்டச்சு செய்யவும் விமலா 180 பக்கங்கள் தட்டச்சு செய்யவும் ஒரே நேரம்தான் ஆகும்.

அதாவது

150 x 180 = 27000 = அதாவது 7-1/2 மணி நேரம்

ஆகவே தட்டச்சு வேக விகிதம் = 180 : 150

இருபுறமும் 30 ஆல் வகுக்க

6 : 5

ஆகவே விமலா 6 பக்கங்கள் தட்டச்சு செய்யும் நேரத்தில் கமலா 5 பக்கங்கள் தட்டச்சு செய்வாள். எனவே 11 பக்கங்கள் இருந்தால் விமலா ஆறு பக்கங்களையும் கமலா 5 பக்கங்களையும் தட்டச்சு செய்ய வேண்டும்.

எனவே X பக்கங்கள் தட்டச்சு செய்யப்பட வேண்டுமென்றால்

கமலா X x (5/11) பக்கங்களையும், விமலா X x (6/11) பக்கங்களையும் தட்டச்சு செய்ய வேண்டும்.

இங்கு X = 77

எனவே

கமலா தட்டச்சு செய்ய வேண்டிய பக்கங்கள் = 77 x (5/11) = 35
விமலா தட்டச்சு செய்ய வேண்டிய பக்கங்கள் = 77 x (6/11) = 42

ஆரென் செய்த வழி வேறு. நான் செய்த வழி வேறு... ஹி.. ஹி..

ஜனகன்
02-12-2009, 07:21 AM
ஆரென் ஜனகர் இன்னொரு முறை அதே தவறை செய்திருக்கிறார்.

ஆமாங்க முதல்முறை ஆளுக்கு 80 பக்கம் தட்டச்சு செய்தார்களா அல்லது மொத்தமாக எண்பது பக்கமா என்பதை தெளிவில்லாம கொடுத்திருக்கார் பாருங்க.,

ஆனா இந்தக் கணக்கைப் பொறுத்த வரை வேகம், மற்றும் விகிதம் என்பதே முக்கியம் இல்லையா? அதனால விடை மாறாது.

இருவரும் சேர்ந்துதான் எண்பது பக்கங்கள் டைப் செய்ய வேண்டும் தாமரை .அது முக்கியமில்லை என நீங்களே கூறிவிட்டீர்கள்.
இதை விட நான் என்னத்தை சொல்ல.

ஜனகன்
02-12-2009, 07:35 AM
அரேன், தாமரை! செய்த வழிகள் வேறாகஇருக்கலாம். உங்கள் இருவர் பதில்களும் சரிதான். நானும் புது வழிகளை தெரிந்து கொள்ள ஒரு சந்தர்பம். நிச்சயம் உங்கள் இருவருக்கும் எனது நன்றியையும், பாராட்டையும் சொல்லியே ஆகவேண்டும்.

அடுத்தது, சிரமப்படாமல் அவர்கள் (கமலா, விமலா) இருவரும் டைப் செய்ய எவ்வளவு நேரம் பாவித்தார்கள் என்றும் சொல்லி விடுங்களேன்.

தாமரை
02-12-2009, 07:44 AM
விமலா நாற்பது பக்கங்களை தட்டச்சு செய்ய எடுத்துக் கொண்ட நேரம் = 4 மணி நேரம் = 200 நிமிடங்கள்

1 பக்கம் தட்டச்சு செய்ய விமலா எடுத்துக் கொண்ட நேரம் = 200 / 40 = 5நிமிடங்கள்

விமலா தட்டச்சு செய்ய வேண்டிய பக்கங்கள் = 77 x (6/11) = 42

ஆகவே தட்டச்சு செய்ய எடுத்துக் கொண்ட நேரம் : 42 x 5 = 210

கமலா நாற்பது பக்கங்களை தட்டச்சு செய்ய எடுத்துக் கொண்ட நேரம் = 4 மணி நேரம் = 240 நிமிடங்கள்

1 பக்கம் தட்டச்சு செய்ய கமலா எடுத்துக் கொண்ட நேரம் = 240 / 40 = 6 நிமிடங்கள்

கமலா தட்டச்சு செய்ய வேண்டிய பக்கங்கள் = 77 x (5/11) = 35

ஆகவே தட்டச்சு செய்ய எடுத்துக் கொண்ட நேரம் : 35 x 6 = 210

ஆகவே கமலாவும் விமலாவும் மூன்றரை மணி நேரம் எடுத்துக் கொண்டார்கள்.

aren
02-12-2009, 09:24 AM
விமலா: 200/40=5
கமலா: 240/40=6
கமலா 20% அதிகநேரம் எடுத்துக்கொண்டாள்.

மறுநாள் 77 பக்கங்கள் தட்டச்சு செய்யவேண்டும்.

கமலா 77/2.2= 35 பக்கங்கள்
விமலா 35 * 1.2 = 42 பக்கங்கள்

கமலா: 35 * 6 = 210 நிமிடங்கள்
விமலா: 42 * 5 = 210 நிமிடங்கள்

தாமரை அவர்கள் சொல்வது சரியானது!!!!!!

ஜனகன்
02-12-2009, 08:45 PM
ஆமாம் இருவரும் சொன்ன பதில் சரியே. வாழ்த்துக்கள்.

ஜனகன்
02-12-2009, 09:04 PM
என் தாத்தாவின் வயது ஒரு இரட்டை இலக்க எண்.அதில் முதல் இலக்கமானது, என் வயதின் இரண்டாம் இலக்கம் ஆகும்.என் வயதின் முதல் இலக்கம், தாத்தாவின் வயதின் இரண்டாம் இலக்கம்.தாத்தா வயதின் முதல் இலக்கத்தில் இருந்து, என் வயதின் முதல் இலக்கத்தை கழித்தால் 6 வரும். என் வயதையும் என் தாத்தா வயதையும் கூட்டினால் 88 வரும்.
இப்போது என் வயதையும்,
தாத்தா வயதையும் கண்டு பிடியுங்கள்

aren
03-12-2009, 12:41 AM
17
71

தாமரை
03-12-2009, 01:18 AM
என் தாத்தாவின் வயது ஒரு இரட்டை இலக்க எண்.அதில் முதல் இலக்கமானது, என் வயதின் இரண்டாம் இலக்கம் ஆகும்.என் வயதின் முதல் இலக்கம், தாத்தாவின் வயதின் இரண்டாம் இலக்கம்.தாத்தா வயதின் முதல் இலக்கத்தில் இருந்து, என் வயதின் முதல் இலக்கத்தை கழித்தால் 6 வரும். என் வயதையும் என் தாத்தா வயதையும் கூட்டினால் 88 வரும்.
இப்போது என் வயதையும்,
தாத்தா வயதையும் கண்டு பிடியுங்கள்

வழி முறையோடு சொல்கிறேன்.

இருவரின் வயதும் இரட்டை இலக்கம்.

எனவே தாத்தாவின் வயது 88 ஐ விட குறைந்த பட்சம் 10 வய்து குறைந்து இருக்க வேண்டும்

தாத்தாவின் வயதின் முதல் இலக்கம் - என் வயதி முதல் இலக்க்ம் = 6

X - Y = 6

இரண்டு இலக்கங்களும் முதல் இலக்கங்களாய் ஒவ்வோர் இடத்தில் வருவதாய் இருப்பதால்.

X =/ 0
Y =/ 0

ஆக ஆறு வித்தியாசமுள்ள எண்கள்

7-1, 8-2, 9-3

இதில் 8-2, 9-3 ஆகியவை தாத்தாவின் வயது 88 ஐ விட குறைந்த பட்சம் 10 வய்து குறைந்து இருக்க வேண்டும் என்ற விதியில் உட்படவில்லை.

எனவே அந்த இரண்டு இலக்கங்கள் 7-1

தாத்தா வயத்ய் 71
என் வயது 17 :D:D:D

ஜனகன்
03-12-2009, 08:50 AM
17
71

சரியான விடை பாராடுக்கள் அரேன்.

ஜனகன்
03-12-2009, 08:57 AM
ஹாய் தாமரை! நல்ல விளக்கத்துடன் பதில் தந்துள்ளீர்கள் நன்றி. நான் நினைக்கின்றேன் நீங்கள் ஒரு கணித ஆசிரியராக இருக்கலாம் என. என் யூகம் சரியோதேரியவில்லை. விருன்பின் குறிப்பிடவும்.நன்றி அன்புடன் ஜனகன்

தாமரை
03-12-2009, 09:24 AM
நான் கணக்கு ஆசிரியர் அல்ல. எஞ்ஜினியரிங் படித்து இப்பொழுது மேலாளராகப் பணிபுரிபவன்.

இதற்குக் காரணம் இங்கே பாருங்கள்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13655

ஜனகன்
03-12-2009, 08:58 PM
பதில் தந்தமைக்கு தாமரை அவர்களுக்கு நன்றி. நீங்கள் தந்த பக்கம் போய் பாத்தேன். ஆனால் நேரமின்மையால் முழுவதும் பாவையிட முடியவில்லை ஆறுதலாக இருக்கும் போது வாசித்து பார்க்கின்றேன் .ஒரு பக்கம் வாசித்தேன். கதையும் கதைக்கு நண்பர்கள் கொடுத்த "கொமென்ஸ்"ஒரே சிரிப்புத்தான் போங்க.
o.k இப்போது விளங்குகின்றது நீங்கள் ஒரு சகலகலா வல்லவன்தான்.உங்களைப்போல் தமிழில் பாட்டித்தியம் எனக்கில்லை. ஏனென்றால் நானிருக்கும் இடம் சூழ்நிலை அப்படி.

ஜனகன்
03-12-2009, 09:24 PM
ஒரு பால் பண்ணை காரர் பத்து பசுக்கள் வைத்திருந்தார். அவர் அவைகளை ஒன்று, இரண்டு என்று எங்களை சொல்லியே கூப்பிடுவார்.
முதலாவது பசு ஒரு லிட்டர் பால் கொடுக்கும்.
இரண்ட்டாவது பசு இரண்டு லிட்டர் பால் கொடுக்கும்.
மூன்றாவது பசு மூன்று லிட்டர் பால் கொடுக்கும்.
நாலாவது பசு நாலு லிட்டர் பால் கொடுக்கும்.
ஐந்தாவது பசு ஐந்து லிட்டர் பால் கொடுக்கும்.
ஆறாவது பசு ஆறு லிட்டர் பால் கொடுக்கும்.
ஏழாவது பசு ஏழு லிட்டர் பால் கொடுக்கும்.
எட்டாவது பசு எட்டு லிட்டர் பால் கொடுக்கும்.
ஒன்பதாவது பசு ஒன்பது லிட்டர் பால் கொடுக்கும்.
பத்தாவது பசு மட்டும் பதினைந்து லிட்டர் பால் கொடுக்கும்.
இந்த பத்து பசுக்களையும் அவருடைய நாலு மகன்களுக்கும், சம அளவு பால் எடுக்கக்கூடியதாக எப்படி பங்கிட்டு கொடுத்தார்.

அன்புரசிகன்
03-12-2009, 10:13 PM
பத்து பசுக்களும் கொடுக்கும் பாலின் அளவு =60L

ஆகவே ஒவ்வொருமகனுக்கும் போய்ச்சேரவேண்டிய பாலின் கொள்ளளவு =60/4 L=15 L

மகன் 1 >> பசு 10
மகன் 2 >> பசு 9, 5, 1
மகன் 3 >> பசு 8, 3, 4
மகன் 4 >> பசு 6, 7, 2

ஒரு பால் பண்ணை காரர் பத்து பசுக்கள் வைத்திருந்தார். அவர் அவைகளை ஒன்று, இரண்டு என்று எங்களை சொல்லியே கூப்பிடுவார்.

அதுசரி. நீங்கள் எந்த்தனையாவது பசு?????:D :D :D

aren
04-12-2009, 12:48 AM
அன்பு சொல்வது சரியே

தாமரை
04-12-2009, 01:18 AM
பால் மட்டும் சமம் என்றால் கணக்கு மிக எளிது. ஆனால் கூடவே சாப்பிடற புல்லையும் போடற சாணத்தையும், பராமரிக்க இடத்தையும் சேர்த்து குழப்பி இருக்கலாமே!!!

அன்பும் ஆரென்னும் முழிக்கறதைப் பாக்க ஆசையா இருக்கு.. :D :D :D

தாமரை
04-12-2009, 01:19 AM
மொத்தம் கிடைக்கும் பால் 1+2+3+4+5+6+7+8+9+15 = 60.

4 மகன்களுக்கு சமமாக பிரிக்க ஒரு மகனுக்கு 15 லிட்டர் பால் கிடைக்க வேண்டும்

எனவே 10 வது மாடு ஒரு மகனுக்கு தனியே போய் சேர்ந்து விடும்.

மீதம் உள்ள 9 மாடுகளை

ஆளுக்கு மூன்று மாடு எனவும் பிரிக்கலாம்.
இருவருக்கு இரண்டிரண்டு மாடுகள் ஒருவருக்கு 5 மாடுகள் எனவும் பிரிக்கலாம்,

1,2,3,4 எனவும் பிரிக்கலாம்,

முதல் விடை அன்பு சொல்லிட்டாரு.

இரண்டாம் விடை

முதல் மகன் 10 ஆம் பசு - 15 லிட்டர்

இரண்டாம் மகன் 8ஆம் பசு, 7 ஆம் பசு = 8+7 = 15

மூன்றாம் மகன் 9 ஆம் பசு, 6 ஆம் பசு =6+9 = 15

நான்காம் மகன் 1,2,3,4,5 ஆம் பசுக்கள் = 1+2+3+4+5 = 15

மூன்றாம் விடை

முதல் மகன் 10 ஆம் பசு = 15.
இரண்டாம் மகன் 8 ஆம் பசு, 7 ஆம் பசு = 8+7 = 15
மூன்றாம் மகன் 6 ஆம் பசு 5 ஆம் பசு 4 ஆம் பசு = 6+5+4 = 15
நான்காம் மகன் 1ஆம் பசு, 2 ஆம் பசு, 3 ஆம் பசு 9 ஆம் பசு = 1+2+3+9 = 15

நான்காம் விடை

முதல் மகன் 10 ஆம் பசு= 15
இரண்டாம் மகன் 9 ஆம் பசு, 6 ஆம் பசு = 9+6
மூன்றாம் மகன் 8 ஆம் பசு 4 ஆம் பசு 3 ஆம் பசு= 8+4+3
நான்காம் மகன் 1ஆம் பசு, 2 ஆம் பசு, 5 ஆம் பசு 7 ஆம் பசு = 1+2+5+7

இந்த பதில் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

அன்புரசிகன்
04-12-2009, 01:34 AM
யாழ்ப்பாணத்தில் புல்லுக்கும் வைக்கோலுக்கும் பஞ்சமில்லையாக்கும்.... :D

aren
04-12-2009, 02:05 AM
யாழ்ப்பாணத்தில் புல்லுக்கும் வைக்கோலுக்கும் பஞ்சமில்லையாக்கும்.... :D

இது இரண்டும் மட்டும் இருந்தால் பால் அதிகமாக கொடுக்காது. புண்ணாக்கும், பருத்திக்கொட்டையும், கம்பும் மற்றும் பல போஷாக்கு அளிக்கும் உணவு வகைகளும் மாடுகளுக்கு வேண்டும் அதிக பால் கொடுப்பதற்கு.

தாமரை அவர்கள் எழுப்பிய கேள்வி சரிதான்.

வெறும் பால் கொடுப்பதை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அதற்கு ஆகும் செலவுகளையும், பால் எவ்வளவு விலைக்கு விற்கிறது போன்ற விஷயங்களையும் கூட சேர்த்திருந்தால், தாமரையையும் கொஞ்சம் மூளையை கசக்க வைத்திருக்கலாம்.

அன்புரசிகன்
04-12-2009, 02:11 AM
அதுமட்டுமா நாம வடித்த கஞ்சி அரிசி கழுவிய நீர் வாழைப்பழத்தோல் பலாப்பலத்தடல் அது இது என்று வாய்க்கு ரசனையாக பசுவை கவனிப்போமில்ல....

தாமரை
04-12-2009, 04:54 AM
வெறும் பால் கொடுப்பதை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அதற்கு ஆகும் செலவுகளையும், பால் எவ்வளவு விலைக்கு விற்கிறது போன்ற விஷயங்களையும் கூட சேர்த்திருந்தால், தாமரையையும் கொஞ்சம் மூளையை கசக்க வைத்திருக்கலாம்.

அது ஏற்கனவே கசங்கி சுருக்கம் சுருக்கமாத் தானே இருக்கு...

ஜனகன்
04-12-2009, 06:55 AM
நான் இரவு பதிவு போட்டு விட்டு படுத்தேன்.காலையில் வந்து பார்த்தால் இவ்வளவு பதிவா!!!!???.பார்க்கவே சந்தோசமாக இருக்கின்றது.அதுவும் நகைச்சுவையுடன். இதுதான், இதுதான் எனக்கு வேணும். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.சந்தோசமாக இருக்கின்றது.
சரி விடயத்திற்கு வருகின்றேன்.
அன்பு, அரேன், தாமரை மூவருக்கும் நன்றி. பதில் சரியாக கொடுத்துள்ளிர்கள்,வாழ்த்துக்கள்.தெளிவான விளக்கத்துடன் பதில் தந்த தாமரைக்கு மிக மிக நன்றி.

ஜனகன்
04-12-2009, 06:57 AM
யாழ்ப்பாணத்தில் புல்லுக்கும் வைக்கோலுக்கும் பஞ்சமில்லையாக்கும்.... :D

ஓ அப்படியா? எனக்கு தெரியாதே

ஜனகன்
04-12-2009, 07:02 AM
இது இரண்டும் மட்டும் இருந்தால் பால் அதிகமாக கொடுக்காது. புண்ணாக்கும், பருத்திக்கொட்டையும், கம்பும் மற்றும் பல போஷாக்கு அளிக்கும் உணவு வகைகளும் மாடுகளுக்கு வேண்டும் அதிக பால் கொடுப்பதற்கு.

தாமரை அவர்கள் எழுப்பிய கேள்வி சரிதான்.

வெறும் பால் கொடுப்பதை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அதற்கு ஆகும் செலவுகளையும், பால் எவ்வளவு விலைக்கு விற்கிறது போன்ற விஷயங்களையும் கூட சேர்த்திருந்தால், தாமரையையும் கொஞ்சம் மூளையை கசக்க வைத்திருக்கலாம்.

மாட்டு வழப்பை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கக்கின்றீர்கள். நீங்கள் பரம்பரை பண்ணை காறரா? ஹ ஹ ஹ

ஜனகன்
04-12-2009, 07:06 AM
அது ஏற்கனவே கசங்கி சுருக்கம் சுருக்கமாத் தானே இருக்கு...

ஏற்கனவே கசங்கி சுருங்கி விட்டதா? அதை கசக்கி, பிழிந்தவள் யார்?

தாமரை
04-12-2009, 07:20 AM
ஏற்கனவே கசங்கி சுருங்கி விட்டதா? அதை கசக்கி, பிழிந்தவள் யார்?

தமிழ்!!!

aren
04-12-2009, 07:34 AM
மாட்டு வழப்பை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கக்கின்றீர்கள். நீங்கள் பரம்பரை பண்ணை காறரா? ஹ ஹ ஹ

என்னுடைய சிறிய வயதில், எங்கள் சென்னை வீட்டில் நான்கு பசு மாடுகளும் ஒரு எருமை மாடும் இருந்தது, அதான் கொஞ்சம் தெரியும்.

ஜனகன்
04-12-2009, 09:15 PM
ஒரு விவசாயிக்கு மூன்றுசதுரமானதென்னந்தோட்டங்கள்இருந்தன.ஒன்றுசின்னது.மற்றது அதைவிட பெரியது. மூன்றாவது அதைவிட பெரியது.தோட்டங்களில் பத்து அடிக்கு ஒரு கன்று வீதம் வைக்க கணக்கு பார்த்து, மூன்று தோட்டங்களுக்கும் 338 தென்னங்கன்றுகள் வாங்கி வந்தார். மூன்றாவது தோட்டத்தில் பாதி கன்றுகள் வைத்துவிட்டு, மீதமுள்ள கன்றுகளை மூன்றாவது தோட்டத்துப் பரப்புக்கு சமமான மற்ற இரண்டு சதுரத்தோட்டங்களிலும் வைத்தார்
அப்படியானால் ஒவ்வொரு தோட்டங்களிலும் அவர் நட்ட தென்னங்கன்றுகள் எத்தனை?

அன்புரசிகன்
04-12-2009, 10:46 PM
ஆகப்பெரிய தோட்டத்தில் வைத்த எண்ணிக்கை =338/2=169

3வதினம் மற்றயவற்றின் பரப்பு சமன் எனின்

குறுக்கால போவாரின் விதிப்படி (பைதகரஸ்)

12^2 +5^=13^2

ஆகவே

1வது தோட்டத்தில் 25

2வது தோட்டத்தில் 144

2வது தோட்டத்தில் 169

ஜனகன்
05-12-2009, 06:39 AM

சரியான பதில் அன்பு, வாழ்த்துக்கள்.
3இருக்கும் இடத்தில்2 இருக்கிறது.தவறுதலாக வந்து விட்டது என்று நினைக்கின்றேன்.

அன்புரசிகன்
05-12-2009, 07:30 AM
சரியான பதில் அன்பு, வாழ்த்துக்கள்.
3இருக்கும் இடத்தில்2 இருக்கிறது.தவறுதலாக வந்து விட்டது என்று நினைக்கின்றேன்.

ஆமாம். copy paste னால் வந்த வினை :D

ஜனகன்
05-12-2009, 08:39 PM
மதியின் பாடசாலையில் பரிட்சை தேர்வு முடிவுகள் வெளிவந்தது. மொத்தத்தில் 72% தான் எடுத்துள்ளான். சமூக அறிவியலில் குறைந்த மதிப்பெண்.தமிழில் சமூக அறிவியல் மதிப்பெண்ணை விட 20 மதிப்பெண் அதிகம். ஆங்கிலத்தில் தமிழை விட 20 மதிப்பெண் அதிகம். அறிவியலில் ஆங்கிலத்தை விட 20 மதிப்பெண் அதிகம்.கணக்கில் நூறுக்கு நூறு எடுத்துள்ளான்.ஒவ்வொரு பாடத்திலும் எடுத்த மதிப்பெண்களை கண்டு பிடியுங்கள்.

அன்புரசிகன்
05-12-2009, 09:11 PM
தரவுகள்
t=sc+20
e=t+20
gk=e+30
m=100

sc+t+e+gk+m= 360 (சராசரி 72 ஆகவே 72x5)

sc ஐ காண
sc+(sc+20)+(sc+20+20)+(sc+20+20+20)+100=360
4sc=360-100-120
ஆகவே சமூக அறிவியலுக்கு 35 புள்ளிகள்.
தமிழுக்கு 55 புள்ளிகள்
ஆங்கிலத்திற்கு 75 புள்ளிகள்
அறிவியலுக்கு 95 புள்ளிகள்

aren
06-12-2009, 02:10 AM
கலக்கிட்டீங்க அன்பு.

பாராட்டுக்கள்.

ஜனகன்
06-12-2009, 09:20 AM
அன்பு! சரியான பதில் பாராட்டுக்கள்.

ஜனகன்
06-12-2009, 10:28 AM
திருவாளர் முருகன் எதிர் வீட்டு பிள்ளையாருடன் சந்தைக்கு போனார். முருகன் ரூபா 20 கொடுத்து, மீன் கடையில் சாளை மீனும், வாழை மீனுமாக 20 எண்ணங்கள் வாங்கினார். பிள்ளையார் அதே கடையில் ரூபா20 கொடுத்து சாளை மீனும், வாழை மீனும் 50 எண்ணங்கள் வாங்கினார்.
முருகனும், பிள்ளையாரும் எத்தனை சாளை மீன்களும், வாழை மீன்களும் வாங்கினார்கள்?விலை என்ன?

aren
07-12-2009, 01:06 AM
முருகன்: சாளை 16, வாழை 4
பிள்ளையார்: சாளை 40, வாழை 10

விலை: சாளை 0.75 காசுகள், வாழை 2.00 ரூபாய்

இதை விளக்கமாக சொல்வதற்கு தாமரை அவர்களும் அன்புரசிகன் அவர்களும் உதவுவார்கள்.

தாமரை
07-12-2009, 01:22 AM
எண்ணங்கள் = எண்ணிக்கைகள்
வாளை மீன் = பெரிய மீன்
சாளை மீன் = அயிரை மீன் போல குட்டி மீன்..

முருகன் 20 ரூபாய்க்கு 20 மீன்கள் வாங்கினார்.
பிள்ளையார் 20 ரூபாய்க்கு 50 மீன்கள் வாங்கினார்.

20 ரூபாய்க்கு 50 மீன்கள் வாங்க வேண்டுமென்றால் சாளை மீன் 40 பைசாவுக்கு குறைவாக இருந்தே ஆக வேண்டும்

20 ரூபாய்க்கு 20 மீன்கள் வாங்க வேண்டுமென்றால் வாளை மீன் 1 ரூபாய்க்கு அதிகமாக இருந்தே ஆக வேண்டும்.

சாளை மீன் = 40 பைசாவுக்கும் கீழ்
வாளை மீன் = 1 ரூபாய்க்கும் மேல் என்பது ஒரு க்ளூ...

40 x 0.2 = 8
10 x 1.2 = 12

--------------
50 மீன்கள் 20 ரூபாய்
----------------

1.2 x 16 = 19.20
0.2 x 4 = 0.80
---------------------
20 மீன்கள் 20 ரூபாய்.
---------------------
ஆகவே

வாளை மீன் ஒன்றின் விலை 1.20 (ஒரு ரூபாய் 20 காசுகள்)
சாளை மீன் ஒன்றின் விலை 0.20 (இருபது காசுகள்)
முருகன் வாங்கியது 16 வாளை மீன்கள், 4 சாளை மீன்கள்
பிள்ளையார் வாங்கியது 10 வாளை மீன்கள் 40 சாளை மீன்கள்

ஆரென் 20 ரூபாய் மொத்த அடக்க விலை என்பதைக் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்

எனக்கு நாளை மாலை வரை அவகாசம் கொடுங்கள். இதற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் வரும் போலத் தோன்றுகிறது.

aren
07-12-2009, 01:38 AM
ஆமாம் தாமரை, நான் கொஞ்சம் கவனிக்கத் தவறிவிட்டேன்.

தாமரை
07-12-2009, 03:30 AM
இப்போ பலவகை விடைகளை வடைகளைப் போல் எப்படிக் கண்டு பிடிப்பது என்ற சூத்திரம் காண்போம்.

எந்த விகிதத்திலும் மீன்களை வாங்கினால் என்ன விலை என எப்படிக் கண்டு பிடிப்பது?

மேலே போட்ட விகிதத்தைக் காண்போம்.

4:1 என்ற விகிதம்.

4 பங்கு சாளை மீன்கள் 1 பங்கு வாளை மீன்கள்

எனவே 20 என்ற எண்ணிக்கையை 5 ஆல் வகுத்தால் கிடைப்பது 4

அதில் 4 பங்கு வாளை என்றால் 4x4 = 16 வாளை மீன்கள்
ஒரு பாங்கு சாளை மீன்கள் என்றால் 4x1 = சாளை மீன்கள்

அதே போல் 40 சாளை மீன்கள் 10 வாளை மீன்கள் சேர்ந்து 50 மீன்கள் ஆகும்.

வாளை மீனின் விலை X எனவும் சாளை மீன்கள் விலை Y எனவும் கொள்வோம்.

16X + 4Y = 20
4X + Y = 5
Y = 5- 4X

10X + 40Y = 20
X+4Y = 2
X + 20 – 16X = 2
-15X = -18
X = 18/15 = 1.2

Y = 5 – 4x1.2 = 5 – 4.8 =0.2

அதாவது வாளை மீன் 1.20; சாளை மீன் 20 பைசா

இப்போ 9:1 பங்கு..

20 ஐ 10 ஆல் வகுக்க 2 கிடைக்கும்
அதை 9 ஆல் பெருக்க 18. வாளை மீன் 18 சாளை மீன் 2

50 ஐ 10 ஆல் வகுக்க 5 கிடைக்கும்

5 சாளை மீன்கள் 45 வாளை மீன்கள்

18X+2Y = 20
9X+Y = 10
Y = 10-9X

5X + 45Y = 20
5X + 450 - 405X =20
-400X = -430
X = 430/400 = 1.075

Y = 10 – 9x1.075 = 10 - 9.675 = 0.325

அதாவது வாளை மீன் விலை 1.075 ரூபாய்கள்
சாளை மீன் 0.325

18 x 1.075 = 19.35
2 x 0.325 = 0.65
====================
20 மீன்கள் 20 ரூபாய்

45 x 0.325 = 14.625
5 x 1.075 = 5.375
====================
50 மீன்கள் விலை 20 ரூபாய்.
========================

இப்படி பலப்பல விகிதாச்சாரங்களில் விலையும் எண்ணிக்கையும் காணலாம்.

இந்த விகிதங்கள் இல்லாதபடிக்கும் விலை இருக்கலாம். ஆனால் அல்ஜீப்ராவைப் பொறுத்தவரை எத்தனை வேறியங்கள் (வேரியண்ட்ஸ்) உள்ளனவோ அத்தனைச் சமன்பாடுகளைக் கொண்டு விடைகளைக் கண்டறியலாம்... எனவே விகிதங்கள் இல்லாத பட்சத்தில் இன்னொரு சமன்பாடு தேவைப்படும்.

அன்புரசிகன்
07-12-2009, 03:54 AM
இந்தக்கணக்கின் படி 4 தரவுகள். 6 தெரியாத விடையங்கள். ஆகவே எடுகோள்களின் அடிப்படையில் விடைகள் காண முயலும் போது ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் நிச்சயம் வரும்... ஆனாலும் தாமரை அண்ணாவின் பொறுமை நமக்கு வராதுப்பா...

தாமரை அண்ணா.. நீங்கள் மருத்துவராக வந்து மனித உடலை பிச்சுப்பிடலெடுக்கவேண்டியவர்... :D

தாமரை
07-12-2009, 04:04 AM
எங்கப்பா இப்படி எனக்கு பிளான் வச்சிருந்தார்

1. மருத்துவர்
2. எலெக்ட்ரிகல் இஞ்சினியர்
3. வக்கீல்
4. வியாபாரம்

அவரே இப்படி பல சாய்ஸ்கள் வச்சிருந்தார்னா அவர் பிள்ளை நான் எப்படி இருக்கணும் சொல்லுங்க!!!

மருத்துவம் தவறியதால் எஞ்சினியர். அது கிடைக்காம இருந்திருந்தா வக்கீலாகி இருந்திருப்பேன்..

அன்புரசிகன்
07-12-2009, 04:08 AM
எனக்கு இப்ப தானே புரியுது... அவங்க ஒரு கேள்வி கேட்க்க நீங்கள் பத்து விடை சொல்லியிருப்பீங்கள்...:D திருத்தியவர் யோசித்திருப்பார். இவரை விட்டால் வருங்காலத்தில் தனக்கு வேலைவைத்துவிடுவார் என்று யோசித்து உங்களை விலத்தியிருப்பார். :D :D :D

தாமரை
07-12-2009, 04:22 AM
அதான் பார்த்தீங்க இல்லையா, எனக்கு ஒரு விடை கிடைச்சா போதும் என்கிற மனப்பான்மை கிடையாது, அதன் அடிப்படை எப்படி ஏன் என்று முழுசுமா தெரிஞ்சிக்கணும்..

அதனால் எதைப்படித்தாலும் நான் போகிற ஆழம் வேறு...

அது எனக்கு படிப்பில் மதிப்பெண்ணை குறைத்தாலும் மதிப்பில் பல படி உயர்த்தி இருக்கிறது..

நான் காண்பதை மற்றவர் காணாத வரை நான் கிறுக்கன் தான்..

ஜனகன்
07-12-2009, 07:55 AM
அரேன், தாமரை, அன்பு முயற்சிக்கு நன்றி.தாமரை கணக்குக்கு நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நான் கூட இப்படி யோசிக்கவில்லை. அன்பு சொன்ன மாதிரி, மருத்துவராக வந்திருந்தால்,பிச்சு பிடலேடுத்திருப்பீர்கள்.ஹ ஹ ஹ

சரி விடயத்திற்கு வருகிறேன்,இக்கணக்கை பொறுத்தவரை செய் முறை ஏதும் கிடையாது.
முருகன் ரூ.20 சாளையும், வாளையுமாக 20 மீன்கள் வாங்கினார்.
பிள்ளையார் அதே ரூ.20 சாளையும், வாளையுமாக 50 மீன்கள் வாங்கினார்.
பணமும், எண்ணிக்கையும் குறிப்பிட்டபடி வரவேண்டுமானால், சாளையை குறைந்த விலையிலும், வாழையை அதிக விலையிலும் வாங்கியிருக்க வேண்டும்.
முருகன் 11சாளை +9வாழை =ரூ. 20
பிள்ளையார்44 சாளை+6வாழை=ரூ. 20
விலை ;11சாளை ரூ.2
1 வாழை ரூ.2

தாமரை
07-12-2009, 08:34 AM
சரி விடயத்திற்கு வருகிறேன்,இக்கணக்கை பொறுத்தவரை செய் முறை ஏதும் கிடையாது.முருகன் ரூ.20 சாளையும், வாளையுமாக 20 மீன்கள் வாங்கினார்.
பிள்ளையார் அதே ரூ.20 சாளையும், வாளையுமாக 50 மீன்கள் வாங்கினார்.
பணமும், எண்ணிக்கையும் குறிப்பிட்டபடி வரவேண்டுமானால், சாளையை குறைந்த விலையிலும், வாழையை அதிக விலையிலும் வாங்கியிருக்க வேண்டும்.
முருகன் 11சாளை +9வாழை =ரூ. 20
பிள்ளையார்44 சாளை+6வாழை=ரூ. 20
விலை ;11சாளை ரூ.2
1 வாழை ரூ.2

நான் செய்முறையை பிச்சிப் பிச்சி தந்த பிறகு செய்முறை இல்லை எனச் சொல்லலாமா ஜனகரே???

ஜனகன்
07-12-2009, 10:14 AM
நீங்கள் செய்தது நல்லது தானே தாமரை. புதிய முறைகளை வழிகாட்டிஇருக்கிறீர்கள்.எல்லோரும்(நானும்)பார்த்து பயன்பெறட்டும்.அதற்காக அதிகம் பிச்சு பிடலேடுக்கவேண்டாம்.இந்த சொல் எனக்கு புதிதாக இருக்கின்றது.அதுதான் மீண்டும், மீண்டும்

ஜனகன்
07-12-2009, 08:55 PM
ஒரு குடும்ப சகோதரர்கள் மாறன், செழியன், செல்வம் என மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தார்கள்.செல்வம், செழியனை விட மூன்று வயது இளையவன். மாறன், செழியனை விட மூன்று வயது மூத்தவன்.மாறன் வயது மூவர்வயதையும் கூட்டி வரும் தொகை அவன் வயதை விட 25 அதிகம்.இப்போது மூவர் வயதையும் சொல்லமுடியுமா

அன்புரசிகன்
07-12-2009, 10:18 PM
மூன்றுபேரினதும் வயதின் கூட்டுத்தொகை மாறனின் வயதைவிட 25 அதிகம் எனின்

மற்ற இருவரினதும் வயதின் கூட்டுத்தொகை 25 (செல்வம் செழியன்) (தரவு 3)

ஆகவே செல்வத்தின் வயது =(25-3)/2 = 11
செழியனின் வயது 14 (தரவு 1)
மாறனின் வயது 17 (தரவு 2)

தாமரை
08-12-2009, 01:15 AM
ஒரு குடும்ப சகோதரர்கள் மாறன், செழியன், செல்வம் என மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தார்கள்.செல்வம், செழியனை விட மூன்று வயது இளையவன். மாறன், செழியனை விட மூன்று வயது மூத்தவன்.மாறன் வயது மூவர்வயதையும் கூட்டி வரும் தொகை அவன் வயதை விட 25 அதிகம்.இப்போது மூவர் வயதையும் சொல்லமுடியுமா

செழியன் வயது X
செல்வம், செழியனை விட மூன்று வயது இளையவன்.
செல்வன் வயது = X-3
மாறன், செழியனை விட மூன்று வயது மூத்தவன்.
மாறன் வயது = X+3

மூவரின் வயதின் கூட்டுத்தொகை = X+(X-3)+(X+3) = 3X

மூவர்வயதையும் கூட்டி வரும் தொகை மாறன் வயதை விட 25 அதிகம்.

3X = 25+X+3
2X = 28
X = 14

ஆகவே

செழியன் வயது = 14
செல்வன் வயது = 14 -3 = 11
செழியன் வயது = 114 + 3 = 17

aren
08-12-2009, 02:58 PM
இல்லை தாமரை. அன்பு சொல்வது சரியே.

மாறன் வயது மூவர்வயதையும் கூட்டி வரும் தொகை அவன் வயதை விட 25 அதிகம் என்று ஜனகன் சொல்லியிருக்கிறார். ஆகையால் 17 + 25 = 42 என்பதே சரி.

ஜனகன்
08-12-2009, 02:58 PM
அன்பு, தாமரை நீங்கள் இருவர் செய்த வழிமுறைகளும் வித்தியாசம் என்றாலும், பதில் கணக்குக்கு பொருந்துகிறது.நன்றி.

எனது முறையையும் இங்கே தருகின்றேன்.
செழியன் வயது x என்றால்
செல்வம் வயது x- 3
மாறன்வயது x+3
=x+x-3 =25
=2x -3 =25
x=14
விடை: செழியன் வயது 14
செல்வம் வயது 11
மாறன் வயது 17

ஜனகன்
08-12-2009, 09:20 PM
கணித ஆசிரியரும்,அவர் மகன் துரையும் அவர்கள் சொந்த ஊரான மருதகுளத்தில் இருந்து மதுரைக்கு ஒரு திருமணத்திற்கு செல்லவேண்டி இருந்தது.திருமணம் காலை10.மணிக்கு.ஆசிரியர் மணிக்கு30 கி. மீட்டர்வேகத்தில் செல்லும் மோட்டர் சைக்கிளில் சென்றார்.அவரது மகன் மணிக்கு45 கி. மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் சென்றார்.இருவரும் மருதகுளத்தில் இருந்து ஒரே நேரத்தில் புறப்பட்டனர்.
மகன் திருமண நேரத்திற்கு 2 மணி நேரம் முன்னதாகவே சென்றுவிட்டான்.ஆசிரியர் சரியாக10 மணிக்கு கணக்காய் போய் சேர்ந்தார்.
அவர்கள் பயணம் செய்த தூரம் என்ன?
எத்தனை மணிக்கு மருதகுளத்தில் இருந்து புறப்பட்டார்கள்?

அன்புரசிகன்
08-12-2009, 09:29 PM
ஆர்முடுகலை தவிர்த்தால் சென்ற தூரம் =வேகம் x நேரம்

இருவரும் சென்ற தூரம் சமன் என்ற படியால்
t=மகன் சென்ற நேரம்
45xt=35x(t+2)
10t=70
t=7
பயணம் செய்த தூரம் 45x7 = 315 கி.மீ
அதிகாலை 3 மணி

ஜனகன்
08-12-2009, 09:42 PM
அன்பு எங்கையோ இடிக்குது, சரிபார்க்கவும்

aren
08-12-2009, 10:47 PM
இந்த கணக்கு கொஞ்சம் சுத்துகிறது. மறுபடியும் படித்து பார்த்துவிட்டு பின்னர் வருகிறேன்.

aren
08-12-2009, 10:53 PM
ஆசிரியர் செல்லும் வண்டியின் வேகம் 30கீமீ
துரை செல்லும் வண்டியின் வேகம் 45கீமீ
அப்படியானால் ஆசிரியர் ஒரு மணி நேரத்தில் கடக்கும் தூரத்தை துரை 40 நிமிடங்களில் கடந்துவிடுவார்.
அப்படியானால் ஒவ்வொரு மணி ஆசிரியர் பயனிக்கும்பொழுது துரை 20 நிமிடங்கள் சேமிப்பார்.

துரை இரண்டு மணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டார்.
அப்படியென்றால் 120 நிமிடங்கள்.

120/20=6

6 x 30 = 180KM

மொத்தம் 180 கீமீ பயணம் செய்யவேண்டும்

ஆசிரியர் எடுத்துக்கொண்ட நேரம் 180/30=6 மணி நேரம்
துரை எடுத்துக்கொண்ட நேரம் 180/45=4 மணி நேரம்

அப்படியென்றால் இருவரும் வீட்டிலிருந்து காலை நான்கு மணிக்கு கிளம்பியிருப்பார்கள்.

அன்புரசிகன்
08-12-2009, 11:22 PM
வேகத்தினை பிழையாக பார்த்துவிட்டடேன்
45t=30(t+2)
15t=60
t=4
தந்தை சென்ற நேரம் 6
ஆகவே 4 மணிக்கு ஆரம்பித்திருப்பார்கள்...
மன்னிக்க ஆரன் அண்ணா..

ஜனகன்
09-12-2009, 08:09 AM
அன்பு, அரேன் சரியான பதில் சொல்லி விட்டீர்கள்,நன்றியும், பாராட்டுக்களும்.

ஜனகன்
09-12-2009, 09:01 PM
சரோசினியின் பேரன் தமிழ்ச்செல்வன்.பாட்டி, அவனை முட்டை வாங்க கடைக்கு அனுப்பினார்.முதல் நாள் ரூ.25 கொடுத்து முட்டை வாங்கிவர சொன்னார். முட்டை வாங்கி விட்டு ஒரு ரூபாய் மீதம் கொடுத்தான். அடுத்தநாளும் ரூ.25 கொடுத்து முட்டை வாங்கிவர சொன்னார்.முட்டை வாங்கிவிட்டு ஒரு ரூபாய் மீதம் கொடுத்தான். ஆனால் முட்டையின் எண்ணிக்கை ஒன்று குறைவு.அவனிடம் பாட்டி கேட்டபோது,இன்று ஒரு முட்டையின் விலை 10 பைசா கூடியிருக்கிறது. கணக்கு பாருங்க என்றான் செல்வம்.

முதல் நாள் எத்தனை முட்டை வாங்கிவந்தான்?
மறுநாள் நாள் எத்தனை முட்டை வாங்கிவந்தான்?
முதல்நாள் முட்டை ஒன்றின் விலை என்ன?
மறுநாள் முட்டை ஒன்றின் விலை என்ன?

அன்புரசிகன்
09-12-2009, 11:16 PM
முதல் நாள் வாங்கிய முட்டைகளின் எண்ணிக்கை n. ஒரு முட்டையின் விலை x

அடுத்தநாள் வாங்கிய முட்டைகளின் எண்ணிக்கை n-1. ஒரு முட்டையின் விலை y

விலையை பைசாவிலேயே வைத்திருப்போம்.

x*n=y*(n-1)=2400
y=x+10

முதலாவதில்
xn=(x+10)(n-1)
xn=xn-x+10n-10
x=10(n-1)

10(n-1)n=2400
10n2-10n-2400=0
n2-n-240=0
n2-16n+15n-240=0
n(n-16)+15(n-16)=0
(n-16)(n+15)=0
n=16 or -15

எண்ணிக்கை என்பதால் 16 என்பதே சரி.

முதல் நாள் வாங்கிய முட்டைகளின் எண்ணிக்கை 16
அப்போது ஒரு முட்டையின் விலை. 2400/16 = 150 பைசா = ரூ1.50

அடுத்தநாள் வாங்கிய முட்டைகளின் எண்ணிக்கை 15
அப்போது ஒரு முட்டையின் விலை. = 2400/15 = 160 பைசா = ரூ1.60

aren
09-12-2009, 11:24 PM
சரியாக சொன்ன அன்பு அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

அன்புரசிகன்
09-12-2009, 11:26 PM
சரியாக சொன்ன அன்பு அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

நான் என்ன அப்பரா... சுந்தரரா ஞான சம்பந்தரரா??? இவ்வளவு மரியாதை வருது... :lachen001:

நைசா 10000 தாண்டிப்புட்டீங்க....

aren
09-12-2009, 11:28 PM
நான் என்ன அப்பரா... சுந்தரரா ஞான சம்பந்தரரா??? இவ்வளவு மரியாதை வருது... :lachen001:

நைசா 10000 தாண்டிப்புட்டீங்க....

பார்த்துட்டீங்களா?

நான் இந்த கணக்கைப் போட நினைத்தேன். ஒரு வேலையை முடித்துவிட்டு வந்து பார்க்கலாம் என்று இருந்தேன், அதற்குள் இத்தனை விளக்கங்களுடன் அருமையாக கணக்கை முடித்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

ஜனகன்
10-12-2009, 07:13 AM
அன்பு, சரியான பதில் வாழ்த்துக்கள். உங்கள் இருவருக்கும் நன்றி.

ஜனகன்
10-12-2009, 09:46 PM
ஒரு இலக்கம்.அது ஒரு அதிசய எண்.எந்த இரண்டு இலக்க எண்ணையும்,அந்த அதிசய எண்ணால் பெரிக்கினால் அதே எண்களை கூடுதலாக சேர்த்தால் வரும் நாலு இலக்க எண் கிடைக்கும்.அதாவது எடித்துக்காட்டாக 23 ஐஅதிசய எண்ணால் பெரிக்கினால், 2323 வரும். 91ஐ பெரிக்கினால் 9191 வரும்.இதேபோல் எந்த 2 இலக்க எண்ணையும் அந்த அதிசய எண்ணால் பெரிக்கினால் விடை கிடைக்கும்.

அந்த அதிசய எண்ணை கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.

நான் வெளியூர் போவதால் திங்கள் மீண்டும் சந்திப்போம்

தாமரை
11-12-2009, 01:25 AM
இன்னா ஜனகரே 101 என்று எல்லோருக்கும் ஈஸியா கண்டுபிடிக்கக் கூடிய எண்ணைக் கொடுத்திட்டு போயிட்டீரே

101010101010101010101

இப்படி ஒரு எண்ணால் 65 ஐ பெருக்க
6565656565656565656565

இதே மூணு இலக்க எண் என்றால்

1001001001001001001 இப்படிப் போகணும்

நாலு இலக்க எண் என்றால்

1000100010001000100010001 இப்படிப் போகணும்

இதெல்லாம் சொல்லியா கொடுக்கணும்?

ஜனகன்
14-12-2009, 04:48 PM
நான் விடுப்பில் போகும் பொது சுலபமான கணக்காக தந்து விட்டு போகவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது உங்களுக்கு இவ்வளவு சுலபமாக இருக்குமென நான் நினைக்கவில்லை. எனவே நன்றியும் பாராட்டும்.

ஜனகன்
14-12-2009, 05:22 PM
ஒரு தோட்டக்காரன் பரமசிவம். அவனுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவனது தோப்பில் பாக்கு மரமும் தேக்கு மரமுமாக 250 மரங்கள் உண்டு.மகன்மார் நாலு பேருக்கும் சம அளவு மதிப்பு வரக் கூடியதாக மரங்களை பங்கிட்டு கொடுக்கவேண்டும்.மூத்த மகனுக்கு 80 மரங்கள். அடுத்தவனுக்கு 70 மரங்கள். மூன்றாவது மகனுக்கு 60 மரங்கள்.இளையவனுக்கு 40 மரங்கள் என்று பகிர்ந்து கொடுத்தார்.நாலு பேரும் அவரவர் களுக்குரிய மரங்களை வேறொருவருக்கு விற்ற பொழுது சரியாக ஆளுக்கு ரூபாய் ஒரு லட்சம் கிடைத்தது.அப்படி என்றால்

ஒவ்வொருவருக்கும் கிடைத்த பாக்கு மரங்கள் எத்தனை?
தேக்கு மரங்களின் விலையென்ன?

(இதற்கு விதிமுறை ஏதும் கிடையாது.)

தாமரை
15-12-2009, 05:18 AM
இதற்கு பல விடைகள் உண்டு.

முதல் கருத்து.. தேக்கு மரங்கள் பாக்கு மரங்களை விட அதிக விலை உள்ளவை.
இங்கு மொத்த விலை ஒரு இலட்சம் என்பது மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது.

40 எண்ணிக்கையில்

40 ம் தேக்கு என்று கொள்வோம்

40 தேக்கு மரம் = 1 இலட்சம்

1 தேக்கு மரம் = 2500 ரூபாய்

60 மரங்களில் 40 க்கும் குறைவான தேக்கு மரமே இருக்க முடியும். அதை 20 தேக்கு மரம் என எண்ணிக்கொள்வோம்

40 பாக்கு மரம் = 50000
1 பாக்கு மரம் = 1250

70 மரங்களில்

60 பாக்கு மரம் = 75000
10 தேக்கு மரம் = 25000

80 மரஙங்களும் பாக்கு மரங்கள்

ஆகவே பாக்கு மர எண்ணிக்கை = 80 + 60 + 40 = 180
தேக்கு மர எண்ணிக்கை = 40 + 20 + 10 = 70

ஊகத்தை மாற்றுவதன் மூலம் பல விடைகள் கிடைக்கும்.

aren
15-12-2009, 05:46 AM
சரியான விடை தாமரை.

ஜனகன்
15-12-2009, 08:26 AM
தரவுகள், விளக்கங்கள் எல்லாம் சரியாகத்தான் கொடுத்துள்ளீர்கள் தாமரை,
ஆனால் பதிலை கூறவில்லையே!!!!!????.அதையும் சொல்லியிருந்தால் நல்லாய் இருக்கும்.

தாமரை
15-12-2009, 02:12 PM
இன்னா ஜனகரே இப்படிச் சொல்லீட்டீங்க...

ஒவ்வொருவருக்கும் கிடைத்த பாக்கு மரங்கள் எத்தனை?

மூத்த மகனுக்கு 80 மரங்கள்,

80 மரங்களும் பாக்கு மரங்கள்

அடுத்தவனுக்கு 70 மரங்கள்.
70 மரங்களில்
60 பாக்கு மரம் = 75000
10 தேக்கு மரம் = 25000

மூன்றாவது மகனுக்கு 60 மரங்கள்.

60 மரங்களில் 40 க்கும் குறைவான தேக்கு மரமே இருக்க முடியும். அதை 20 தேக்கு மரம் என எண்ணிக்கொள்வோம் அப்ப பாக்கு மரம் 40

இளையவனுக்கு 40 மரங்கள் 40 ம் தேக்கு

தேக்கு மரங்களின் விலையென்ன?
1 தேக்கு மரம் = 2500 ரூபாய்

எல்லா பதிலும் அங்கயே இருக்கே...

aren
15-12-2009, 02:59 PM
மூத்த மகனுக்கு 80 பாக்கு மரங்கள்
இரண்டாவது மகனுக்கு 60 பாக்கு மரங்கள்
மூன்றாவது மகனுக்கு 40 பாக்கு மரங்கள்
நான்காவது மகனுக்கு 0 பாக்கு மரங்கள்

ஒவ்வொரு தேக்கு மரத்தின் விலை 2500

தாமரை அவர்கள் சொன்ன பதிலில் மேலேயுள்ள அனைத்தும் மற்றும் மேலும் அதிகமான விஷயங்களும் இருக்கின்றனவே.

ஜனகன்
15-12-2009, 04:28 PM

நன்றி தாமரை, இன்னுமொருபதிலுமுண்டு.

ஜனகன்
15-12-2009, 05:57 PM
மூத்த மகனுக்கு 80 பாக்கு மரங்கள்
இரண்டாவது மகனுக்கு 60 பாக்கு மரங்கள்
மூன்றாவது மகனுக்கு 40 பாக்கு மரங்கள்
நான்காவது மகனுக்கு 0 பாக்கு மரங்கள்

ஒவ்வொரு தேக்கு மரத்தின் விலை 2500

தாமரை அவர்கள் சொன்ன பதிலில் மேலேயுள்ள அனைத்தும் மற்றும் மேலும் அதிகமான விஷயங்களும் இருக்கின்றனவே.

நன்றி, வாழ்த்துக்கள்.எனது முறையையும் இங்கே தருகின்றேன்.

ஜனகன்
15-12-2009, 06:10 PM
மூத்தவனுக்கு 77 பாக்குமரம் 3 தேக்குமரம்,
அடுத்தவனுக்கு 66 பாக்குமரம் 4 தேக்குமரம்,
மூன்றாமவனுக்கு 55 பாக்குமரம் 5 தேக்குமரம்,
இளையவனுக்கு 33 பாக்குமரம் 7 தேக்குமரம்.

11 பாக்குமரம் ரூபா 10,000
1 தேக்குமரம் ரூபா 10,000

என்று கணக்கிட்டால் 4 பேருக்கும் ஆளுக்கு ரூபா ஒரு லட்சம் கிடைக்கும்.

அறிஞர்
15-12-2009, 06:40 PM
எல்லாரும் மரத்தை தனி தனி விலையாக யோசித்திருப்பார்கள்...
எல்லாரின் மூளைக்கும் நல்ல வேலை...

ஜனகன்
15-12-2009, 08:56 PM
எல்லாரும் மரத்தை தனி தனி விலையாக யோசித்திருப்பார்கள்...
எல்லாரின் மூளைக்கும் நல்ல வேலை...

மன்றத்தில் அதற்கும் கொஞ்ச வேலைவேனும் தானே, அறிஞர்அண்ணா அவர்களே.

ஜனகன்
15-12-2009, 09:39 PM
கந்தசாமி தாத்தாவுக்கு மதி,எழில் என இரண்டு பேத்திமார். அவர்கள் தீபாவளிக்கு பட்டாசு வாங்க கொஞ்ச பணம் வைத்திருந்தார்கள்.அவர்களிடம் "நிறைய பணம்வைத்திருக்கிறமாதிரிதெரியுது"ஆளுக்கு பத்து ரூபா தாருங்களேன் என்றார், கந்தசாமி.உங்களுக்கு நாங்கள் ஆளுக்கு பத்து ரூபாய் தந்தால்என்னிடம் இருக்கும் ரூபாய், தங்கை எழிலிடம் இருக்கும் ரூபாயை விட மூன்றுமடங்கு இருக்கும். என்றாள் மதி.கந்தசாமி சொன்னார் "நான் ஆளுக்கு பத்து ரூபாய் தரட்டுமா" என்று சிரித்தார் . தந்தால் இப்போது "என்னிடத்தில் இருக்கும் ரூபாய் எழிலிடம் இருக்கும் ரூபாயை போல் இரண்டு மடங்கு ஆகிவிடும் என்றாள் மதி.இப்போது கந்தசாமி தாத்தா அவர்களிடம் ஆளுக்கு எவ்வளவு பணம் இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டார்.அவர் அவர்கள் இருவருக்கும் ரூபாய் ஐன்பது கொடுத்தார்.கொடுத்தபின்

மதியும், எழிலும் தனித்தனியே எவ்வளவு பணம் வைத்திருந்தார்கள்.?

தாமரை
16-12-2009, 12:15 AM
மதியிடம் இருக்கும் பணம = 70
எழிலிடம் இருக்கும் பணம் = 30

ஆளுக்கு பத்து ரூபாய் தாத்தாவிற்கு கொடுத்தால்

60 : 20 அதாவது 3:1

மதிக்கும் தாத்தாவிற்கும் தாத்தா 10 ரூபாய் கொடுத்தால்

30+10 = 40 எழில்
70+10 = 80 மதி

40:80 = 1:2

மதியிடம் உள்ள பணம் = X
எழிலிடம் உள்ள பணம் = Y

X-10 = 3(Y-10)
X+10 = 2(Y+10)

முதல் சமன்பாட்டிலிருந்து இரண்டாம் சமன்பாட்டைக் கழிக்க

X-10 - X -10 = 3Y-30 - 2Y - 20

-20 = Y-50
Y = 50-20 = 30

இதை இரண்டாம் சமன்பாட்டில் உபயோகிக்க
X+10 = 2(30+10)
X+10 = 80
X = 70

aren
16-12-2009, 12:58 AM
கலக்கல் தாமரை. அணிரூத்திற்கு வெளியே டியூஷன் வைக்கவே வேண்டாம்.

அன்புரசிகன்
16-12-2009, 01:38 AM
நீங்கவேற... அனிருத் தான் தாமரை அண்ணாவை பொறுத்த மட்டில் சுவாமிநாதராம்...

aren
16-12-2009, 03:20 AM
நீங்கவேற... அனிருத் தான் தாமரை அண்ணாவை பொறுத்த மட்டில் சுவாமிநாதராம்...

அப்படியா. எல்லாம் நல்லபடியா நடந்தா சரிதான்.

ஜனகன்
16-12-2009, 07:17 AM
செய்முறை தரவுகள் எல்லாம் சரிதான் தாமரை,கணக்கு என்று வந்துவிட்டால் பதில் சொல்லித்தானே ஆகணும்.ஏன்என்றால் இதை பார்க்கும் மற்றவர்களுக்கும் பிரயோசனமாக இருக்குமெல்லே.நீங்கள் கடசியா உள்ள ரூபா 50 ஐ மறந்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

தாமரை
16-12-2009, 07:31 AM

அதை கூட்டிக் கொள்ள வேண்டியதுதானே... அதைச் சின்ன பசங்க செஞ்சிடுவாங்க:icon_rollout:

ஜனகன்
16-12-2009, 08:58 PM
ஒரு இளம் தம்பதிகள். அவன் வயசின் இரண்டு அடுக்கில் இருந்து, அவன் மனைவி வயதின் இரண்டு அடுக்கை கழித்தால் நூறு வரும். அப்போ அவர்கள் இருவர் வயதையும் சொல்ல முடுயுமா?

அன்புரசிகன்
17-12-2009, 12:51 AM
26, 24
26 இன் வர்க்கம் 676
24 இன் வர்க்கம் 576

இரண்டினதும் வித்தியாசம் 100.

தாமரை
17-12-2009, 01:08 AM
ஒரு இளம் தம்பதிகள். அவன் வயசின் இரண்டு அடுக்கில் இருந்து, அவன் மனைவி வயதின் இரண்டு அடுக்கை கழித்தால் நூறு வரும். அப்போ அவர்கள் இருவர் வயதையும் சொல்ல முடுயுமா?

கணவன் வயது = X, மனைவி வயது = Y

X^2 - Y^2 = 100

(X+Y)x(X-Y) = 100

இப்பொழுது 100 க்கான காரணிகளைப் பார்ப்போம்

2x50, 4x25, 5x20, 10x10 ஆகியவை 100 க்காண காரணிகள்

இவை நான்கும் நான்கு விடைகளைத் தரவேண்டும்

இதில் 10x10 என்பதில் Y = 0 என்ற பதில் வரும்

X + Y = 50
X-Y = 2

X = Y+2

(Y+2)+Y = 50
2Y=48
Y = 24

X = 24 + 2 = 26

கணவன் வயது = 26
மனைவி வயது = 24

X+Y = 25
X-Y = 4

X = Y+4

(Y+4)+Y = 25
2Y = 21

Y = 10.5
X = 14.5

கண்வன் வயது 21 க்கு கீழ் இருப்பதாலும், மனைவி வயது 10 க்கு கீழே இருப்பதாலும் இது குழந்தைத் திருமணம் என்கிற சட்ட விரோதச் செயல். ஆகவே இந்த விடை செல்லாது என்பது நாட்டாமை தீர்ப்பு

X + Y = 20
X - Y = 5

X = Y+5

Y+5+Y = 20
2Y = 15
Y = 7.5

X = 7.5 -+ 5 = 12.5

கண்வன் வயது 21 க்கு கீழ் இருப்பதாலும், மனைவி வயது 10 க்கு கீழே இருப்பதாலும் இது குழந்தைத் திருமணம் என்கிற சட்ட விரோதச் செயல். ஆகவே இந்த விடை செல்லாது என்பது நாட்டாமை தீர்ப்பு

அன்புரசிகன்
17-12-2009, 01:17 AM
அப்போ 40 வயசுக்கு பிறகு கட்டுற திருமணத்தை என்னவென்று சொல்வார்கள்???? நான் மதியை சொன்னேன்... :D இதுக்கு நாட்டாமையின் தீர்ப்பு???

தாமரை
17-12-2009, 01:25 AM
அப்போ 40 வயசுக்கு பிறகு கட்டுற திருமணத்தை என்னவென்று சொல்வார்கள்???? நான் மதியை சொன்னேன்... :D இதுக்கு நாட்டாமையின் தீர்ப்பு???

21 க்கு கீழ குழந்தைத் திருமணம் :icon_rollout:
21 க்கு மேல 50 வரை குழந்தைக்காக திருமணம் :icon_rollout::icon_rollout:

50 க்கு மேல குழந்தைத்தனமான திருமணம் :icon_rollout::icon_rollout::icon_rollout:

:D :D :D :D

பாவம் மதி.. இன்னும் ஒரு 10 வருஷம் எக்ஸ்ட்ரா கொடுத்து நம்பிக்கை கொடுப்பமே!!! :eek::eek::eek:

ஜனகன்
17-12-2009, 03:27 PM
அன்பு, தாமரை இருவரும் சரியான பதில் சொல்லி இருக்கின்றீர்கள்.நன்றியும் பராடும்.

ஜனகன்
17-12-2009, 03:37 PM
21 க்கு கீழ குழந்தைத் திருமணம் :icon_rollout:
21 க்கு மேல 50 வரை குழந்தைக்காக திருமணம் :icon_rollout::icon_rollout:

50 க்கு மேல குழந்தைத்தனமான திருமணம் :icon_rollout::icon_rollout::icon_rollout:

:D :D :D :D

பாவம் மதி.. இன்னும் ஒரு 10 வருஷம் எக்ஸ்ட்ரா கொடுத்து நம்பிக்கை கொடுப்பமே!!! :eek::eek::eek:

என்ன கொடுமையப்பா இது.இப்படி கலாய்க்கிறீங்களே?

ஜனகன்
17-12-2009, 09:28 PM
எங்கள் தொலைபேசி எண் ஆறு இலக்கங்களை கொண்டது. முதல் இரண்டு எண்களின் சராசரி ஆறு.கடைசி இரண்டு எண்களின் சராசரி ஐந்து.முதல் மற்றும் கடைசி எண்களின் சராசரி ஐந்து.நாலாவது ஐந்தாவது இலக்கங்களின் சராசரி ஆறு.முதல் மூன்றுஇலக்கங்களின் கூட்டுத்தொகை 17.
தொலைபேசி எண்ணை கண்டு பிடியுங்கள்.

அன்புரசிகன்
17-12-2009, 11:07 PM
இலக்கங்கள் முறையே a b c d e f என்றால்

a+b=12
e+f=10
a+f=10
d+e=12
a+b+c=17
------
ஃ c=5
e+f=a+f
e=a
ஃ b=d
முதலாவதிலிருந்து இரண்டாவதை கழிக்க
a+b-e-f=2
அதாவது a+b-e-f=2
b-f=2

இப்போது இலக்கங்களை பார்த்தால்
ab5baf

a+b=12 எடுகோள் ஆகக்கூடிய இலக்கத்திலிருந்து வருவோம். b=9
=> a=3, f=7
இப்போது இலக்கங்கள்
395937 அனைத்து தரவுகளும் ஒத்திசைகிறது.
======
b=8
=> a=4, f=6
TP No: 485846 அனைத்து தரவுகளும் ஒத்திசைகிறது
====
b=7 => a=5 , f=5
TP No 575755 இதுவும் ஒத்திசைகிறது.
=====
b=6
TP 665664
====
b=5
TP 755573
===
b=4
845482
===
b=3
935391
===
b=2 a=10 இப்படி இலக்கம் வராது. ஆகவே இதற்கு மேல் எடுகோள் ஒத்திசையாது...

ஜனகன்
18-12-2009, 07:18 AM
அன்பு பல விடைகள் கொடுத்துள்ளீர்கள், அதில் (முன்றாவது விடை கொஞ்சம் ஒத்திசைகிறது ஆனால் ஒரு இலக்கம் பிழை.)எதுவும் எனது தொலைபேசி எண்ணுக்கு பொருந்தவில்லை.முடிந்தால் ஒருமுறை திருப்பி பாருங்கள். இல்லாவிட்டால் நான் மாலை வருகின்றேன்.நன்றி

தாமரை
18-12-2009, 08:45 AM
ஜனகரே எதுக்கும் பிளாஸ்திரியோட வாங்க...

அன்புரசிகன்
18-12-2009, 09:11 AM
ஜனகரே நீங்கள் கொடுத்த தரவுகளையும் எனது விடைகளையும் பாருங்கள். எங்கு பிழை எப்படி பிழை என்று சொல்லுங்கள்...

=====
எங்கள் தொலைபேசி எண் ஆறு இலக்கங்களை கொண்டது.
abcdef

முதல் இரண்டு எண்களின் சராசரி ஆறு.
(a+b)/2=6 ... a+b=12
கடைசி இரண்டு எண்களின் சராசரி ஐந்து.
(e+f)/2=5.. e+f=10
முதல் மற்றும் கடைசி எண்களின் சராசரி ஐந்து.
(a+f)/2=5.. a+f=10

நாலாவது ஐந்தாவது இலக்கங்களின் சராசரி ஆறு.
(d+e)/2=6.. d+e=12

முதல் மூன்றுஇலக்கங்களின் கூட்டுத்தொகை 17.
a+b+c=17

இனி நான் கொடுத்த விடைகளை பாருங்கள். விடை பிழை எனின் உங்களின் கேள்வியை சரிபாருங்கள்....

ஜனகன்
18-12-2009, 05:23 PM
////////////ஜனகரே நீங்கள் கொடுத்த தரவுகளையும் எனது விடைகளையும் பாருங்கள். எங்கு பிழை எப்படி பிழை என்று சொல்லுங்கள்...//////
நீங்கள் கேட்டுக்கொண்டபடி பதில் தந்துள்ளேன். எங்கே தவறுள்ளது என கண்டுபிடியுங்கள்.நேரமின்மையால் எல்லாவற்றையும் பார்க்க முடியவில்லை.மன்னிக்கவும்

கணக்கில் கொடுக்கப்பட்ட விபரம் தொலைபேசி எண் ஆறு இலக்கங்களை உடையது.
முதல் இரண்டு எண்களின் சராசரி ஆறு.
கடைசி எண்களின் சராசரி ஐந்து.
முதல் மற்றும் கடைசி எண்களின் சராசரி ஐந்து.
நாலாவது ஐந்தாவது இலக்கங்களின் சராசரி ஆறு.
முதல் மூன்று இலக்கங்களின் கூட்டுத்தொகை 16.
கடைசி மூன்று இலக்கங்களின் கூட்டுத்தொகை 17.
மேலே குறிப்பிட்டுள்ள விபரங்களை வைத்து முதல் மூன்று எண்களின் கூட்டுத்தொகை ஆன16 லிருந்து , முதல் இரண்டு எண்களின் மொத்தமான 12ஐ கழித்தால் மூன்றாவது எண் 4என்று கண்டு பிடித்து கொள்ளலாம்.
அதேபோல் கடைசி மூன்று இலக்கங்களின்
கூட்டுத்தொகையான 17 லிருந்து கடைசி இரண்டு இலக்கங்களின் மொத்தம் 10 ஐ கழித்தால் 4வது எண் 7 என்று கண்டுகொள்ளலாம்.
நாலாவது ஐந்தாவது எண்களின் மொத்தம் 12
நாலாவது எண்ணான 7 ஐ கழிக்க 5 வது எண் 5 என்று தெரிந்து கொள்ளலாம்.
கடைசி இரண்டு எண்களின் மொத்தம் 10.ஐந்தாவது எண்ணான ஐந்தை கழிக்க ஆறாவது எண்ணும் 5 தான் என கண்டுகொள்ளலாம்.
முதல் மற்றும் கடைசி எண்களின் கூட்டுத்தொகையான10 லிருந்து ஆறாவது எண்ணான ஐந்தை கழிக்க,முதல் எண் 5 என கண்டுகொள்ளலாம்.அதேபோல் முதலிரண்டு எண்களின் மொத்தம் 12 லிருந்து முதல் எண் ஐந்தை கழிக்க இரண்டாவது எண் [B]7என தெரிந்து கொள்ளலாம்.இப்படி ஆறு எண்களையும் கண்டுபிடித்து விடலாம் = 574755

அன்புரசிகன்
19-12-2009, 12:41 AM
எங்கள் தொலைபேசி எண் ஆறு இலக்கங்களை கொண்டது. முதல் இரண்டு எண்களின் சராசரி ஆறு.கடைசி இரண்டு எண்களின் சராசரி ஐந்து.முதல் மற்றும் கடைசி எண்களின் சராசரி ஐந்து.நாலாவது ஐந்தாவது இலக்கங்களின் சராசரி ஆறு.முதல் மூன்றுஇலக்கங்களின் கூட்டுத்தொகை 17.
தொலைபேசி எண்ணை கண்டு பிடியுங்கள்.

////////////ஜனகரே நீங்கள் கொடுத்த தரவுகளையும் எனது விடைகளையும் பாருங்கள். எங்கு பிழை எப்படி பிழை என்று சொல்லுங்கள்...//////
நீங்கள் கேட்டுக்கொண்டபடி பதில் தந்துள்ளேன். எங்கே தவறுள்ளது என கண்டுபிடியுங்கள்.நேரமின்மையால் எல்லாவற்றையும் பார்க்க முடியவில்லை.மன்னிக்கவும்

கணக்கில் கொடுக்கப்பட்ட விபரம் தொலைபேசி எண் ஆறு இலக்கங்களை உடையது.
முதல் இரண்டு எண்களின் சராசரி ஆறு.
கடைசி எண்களின் சராசரி ஐந்து.
முதல் மற்றும் கடைசி எண்களின் சராசரி ஐந்து.
நாலாவது ஐந்தாவது இலக்கங்களின் சராசரி ஆறு.
முதல் மூன்று இலக்கங்களின் கூட்டுத்தொகை 16.
கடைசி மூன்று இலக்கங்களின் கூட்டுத்தொகை 17.
மேலே குறிப்பிட்டுள்ள விபரங்களை வைத்து முதல் மூன்று எண்களின் கூட்டுத்தொகை ஆன16 லிருந்து , முதல் இரண்டு எண்களின் மொத்தமான 12ஐ கழித்தால் மூன்றாவது எண் 4என்று கண்டு பிடித்து கொள்ளலாம்.
அதேபோல் கடைசி மூன்று இலக்கங்களின்
கூட்டுத்தொகையான 17 லிருந்து கடைசி இரண்டு இலக்கங்களின் மொத்தம் 10 ஐ கழித்தால் 4வது எண் 7 என்று கண்டுகொள்ளலாம்.
நாலாவது ஐந்தாவது எண்களின் மொத்தம் 12
நாலாவது எண்ணான 7 ஐ கழிக்க 5 வது எண் 5 என்று தெரிந்து கொள்ளலாம்.
கடைசி இரண்டு எண்களின் மொத்தம் 10.ஐந்தாவது எண்ணான ஐந்தை கழிக்க ஆறாவது எண்ணும் 5 தான் என கண்டுகொள்ளலாம்.
முதல் மற்றும் கடைசி எண்களின் கூட்டுத்தொகையான10 லிருந்து ஆறாவது எண்ணான ஐந்தை கழிக்க,முதல் எண் 5 என கண்டுகொள்ளலாம்.அதேபோல் முதலிரண்டு எண்களின் மொத்தம் 12 லிருந்து முதல் எண் ஐந்தை கழிக்க இரண்டாவது எண் [B]7என தெரிந்து கொள்ளலாம்.இப்படி ஆறு எண்களையும் கண்டுபிடித்து விடலாம் = 574755

உங்களின் கேள்விப்படி முதல் மூன்று எண்களின் கூட்டுத்தொகை 17. கடைசி மூன்று எண்களின் விடையை பற்றி சொல்லவே இல்லை. அப்படி தெரிந்திருந்தால் எடுகோள்கள் தேவையற்றது. இலகுவில் விடை வந்திருக்கும். இங்கு எடுகோள் தேவைப்பட்டது காரணம் 6 தெரியா கணியம். 5 தரவுகள்... இப்பொதய உங்கள் கேள்வியில் 6 தரவுகள் உள்ளது.

a+b=12 .....1
e+f=10 ......2
a+f=10 ......3
d+e=12 ......4
a+b+c=16 ...5
d+e+f=17 ....6

.. c=4 (1,5 -)
.. f=5 (4,6 -)
.. a=5 (3)
.. b=7 (1)
.. e=5 (2)
.. d=7 (4)
இலக்கம் 574755

-------

நான் தான் சொன்னேனே... விடை தவறு எனில் தவறு எங்கே என்று சொல்லுங்கள். இல்லை என்றால் உங்கள் கேள்வியை சரிபாருங்கள் என்று...

உங்களுடைய கேள்விப்பதிவை மீண்டும் படித்துப்பாருங்கள்... நான் சொன்னது தவறு என்றால் தாமரை அண்ணாவே என்னை பிரிச்சு மேஞ்சிருப்பார்... :D

தாமரை
19-12-2009, 09:40 AM
எங்கள் தொலைபேசி எண் ஆறு இலக்கங்களை கொண்டது.
1. முதல் இரண்டு எண்களின் சராசரி ஆறு.
2. கடைசி இரண்டு எண்களின் சராசரி ஐந்து.
3. முதல் மற்றும் கடைசி எண்களின் சராசரி ஐந்து.
4. நாலாவது ஐந்தாவது இலக்கங்களின் சராசரி ஆறு.
5. முதல் மூன்றுஇலக்கங்களின் கூட்டுத்தொகை 17.

தொலைபேசி எண்ணை கண்டு பிடியுங்கள்.

////////////ஜனகரே நீங்கள் கொடுத்த தரவுகளையும் எனது விடைகளையும் பாருங்கள். எங்கு பிழை எப்படி பிழை என்று சொல்லுங்கள்...//////
நீங்கள் கேட்டுக்கொண்டபடி பதில் தந்துள்ளேன். எங்கே தவறுள்ளது என கண்டுபிடியுங்கள்.நேரமின்மையால் எல்லாவற்றையும் பார்க்க முடியவில்லை.மன்னிக்கவும்

கணக்கில் கொடுக்கப்பட்ட விபரம் தொலைபேசி எண் ஆறு இலக்கங்களை உடையது.
1. முதல் இரண்டு எண்களின் சராசரி ஆறு.
2. கடைசி எண்களின் சராசரி ஐந்து.
3. முதல் மற்றும் கடைசி எண்களின் சராசரி ஐந்து.
4. நாலாவது ஐந்தாவது இலக்கங்களின் சராசரி ஆறு.
[B]5. முதல் மூன்று இலக்கங்களின் கூட்டுத்தொகை 16.
6. கடைசி மூன்று இலக்கங்களின் கூட்டுத்தொகை 17.மேலே குறிப்பிட்டுள்ள விபரங்களை வைத்து முதல் மூன்று எண்களின் கூட்டுத்தொகை ஆன16 லிருந்து , முதல் இரண்டு எண்களின் மொத்தமான 12ஐ கழித்தால் மூன்றாவது எண் 4என்று கண்டு பிடித்து கொள்ளலாம்.
அதேபோல் கடைசி மூன்று இலக்கங்களின்
கூட்டுத்தொகையான 17 லிருந்து கடைசி இரண்டு இலக்கங்களின் மொத்தம் 10 ஐ கழித்தால் 4வது எண் 7 என்று கண்டுகொள்ளலாம்.
நாலாவது ஐந்தாவது எண்களின் மொத்தம் 12
நாலாவது எண்ணான 7 ஐ கழிக்க 5 வது எண் 5 என்று தெரிந்து கொள்ளலாம்.
கடைசி இரண்டு எண்களின் மொத்தம் 10.ஐந்தாவது எண்ணான ஐந்தை கழிக்க ஆறாவது எண்ணும் 5 தான் என கண்டுகொள்ளலாம்.
முதல் மற்றும் கடைசி எண்களின் கூட்டுத்தொகையான10 லிருந்து ஆறாவது எண்ணான ஐந்தை கழிக்க,முதல் எண் 5 என கண்டுகொள்ளலாம்.அதேபோல் முதலிரண்டு எண்களின் மொத்தம் 12 லிருந்து முதல் எண் ஐந்தை கழிக்க இரண்டாவது எண் 7என தெரிந்து கொள்ளலாம்.இப்படி ஆறு எண்களையும் கண்டுபிடித்து விடலாம் = 574755

பிளாஸ்திரி கொண்டு வந்தீங்களா ஜனகரே! ம்ம்.. அதைப் பிரிச்சி

அப்படியே உங்க மூக்கு மேல ஒட்டிக்குங்க..

ஜனகன்
19-12-2009, 05:26 PM
அன்பு, தாமரை என்ன இப்படி என்னை இரண்டுபேரும் பயமுறுத்து கின்றீர்கள். இந்த பக்கம் வரவே பயமாக இருக்கின்றது.
என்மேல் தான் பிழையிருக்கிறது. நீங்கள் திரும்பபார்க்க சொல்லியும் வேலை பளு காரணமாக வடிவாக அதை சரிபார்க்க தவறிவிட்டேன்.முதல் தந்த தரவில் ஒரு வசனம் தவறுதலாக எழுதப்பட்டு விட்டத்து.இருவரும் சிரமத்துக்கு மன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தாமரை
20-12-2009, 12:38 AM
என்னங்க ஜனகரே இப்படிப் புலம்பறீங்க... சரி சரி, உங்களை ரொம்பவே கலாய்க்க முடியாது போல இருக்கே..

வேணாம்.. வலிக்குது... அழுதுருவேன்,,,

அப்படின்னு வடிவேலுகணக்கா டயலாக் பேசறீங்களே..

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..

அடுத்த கணக்கைப் போடுங்க...

ஜனகன்
20-12-2009, 06:08 PM
ஒரு நெய் வியாபாரி, நெய்யுடன் டால்டாவும் கலந்து விற்பது வழக்கம்.
கிலோ ரூ.60 என்று நெய் வாங்கி,
கிலோ ரூ.50 என்று டால்டா வங்கி
7:3 என்ற விகித்தில் கலந்து கிலோ ரூ.60 கே விற்றார்.
அன்று லாபம் ரூ.150 கிடைத்தது.
அன்று எத்தனை கிலோ நெய் வாங்கினார்?
டால்டா எத்தனை கிலோ வாங்கிக் கலந்தார்?

அன்புரசிகன்
20-12-2009, 11:11 PM
7 kg நெய்யின் விலை =7x60=420
3kg டால்டாவின் விலை = 3x50=150
10 kg கலவையின் விலை =570
1 kg கலவையின் விலை = 57
60 ற்கு விற்றால் kg ற்கு லாபம் 3 ரூபா. ஃ 150 ரூபாய் இலாபம் பெற தேவையான அளவு
150/3=50
கலவை 50 kg என்றால் 10 ,இன் 7 பகுதி நெய். அதாவது 35kg நெய். 15 kg டால்டா.

ஜனகன்
21-12-2009, 07:53 AM
அன்பு சரியான பதில் சொல்லி விட்டார்.வாழ்த்துக்கள். எங்கே தாமரையாரை காணவில்லை. நீங்களும் வந்து ஏதாவது வம்பிளுக்கலாமே!!!!!!!!!!

தாமரை
21-12-2009, 07:57 AM
எல்லாஞ்சரியா இருந்தா நானெதுக்கு வம்பிழுக்கறேன்.. எனக்கென்ன விராடன் ஐ-கேஷா கொடுத்திருக்கார்?

ஜனகன்
21-12-2009, 08:47 PM
அது ஒரு "டால்கம் பவுடர்"தயாரிக்கும் தொழிற்சாலை. அங்கே வேலை செய்யும் நண்பர் ஒருவர் சொன்னார். "எங்கள் தொழிற்சாலையில் இப்பொழுது ரூ.20 க்கு100 கிராம் பவுடர் பிடிக்கும் உருளை வடிவான சின்ன டப்பா போட்டுக்கொண்டு இருக்கின்றோம்.இனி இருமடங்கு பெரிதான டப்பாவில், (டப்பாவின் குறுக்களவும்(விட்டம்)இரு மடங்கு, உயரமும் இரு மடங்கு) இதே போல் உருளை வடிவம்தான்.. விலைதான் அதிகம் ரூ.100 என்றார்."அப்படிஎன்றால் பவுடர் டின் மலிவாக இருக்கின்றதே என்றேன். இப்பொழுது பவுடர் எவ்வளவு கொள்ளும் என நான் கண்டு பிடித்து விட்டேன், நீங்கள் சொல்லுங்கள்.

புதிய பெரிய டப்பா எத்தனை கிராம் பவுடர் கொள்ளும்?

அன்புரசிகன்
21-12-2009, 11:46 PM
100கிராம் டப்பாவின் ஆரை R உயரம் H என்று எடுத்துக்கொண்டால் அதன் கொள்ளளவு = pixRxRxH
புதிய டப்பாவின் ஆரை 2R உயரம் 2H ஆகும். ஆகவே கொள்ளளவு.. = pix(2R)x(2R)x(2H)=8piRRH
புதிய டப்பாவின் கொள்ளளவு கிராமில் = 100x8piRRH/piRRH=800

தாமரை
22-12-2009, 04:09 AM

உருளை என்பது வட்டங்கள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்பட்ட உருவம்.

வட்டத்தின் பரப்பளவு = pi x R^2
உருளையின் கொள்ளளவு = H x pi x R^2

அன்பு சொன்னது சரி..

100 கிராம் பவுடர் = 20 ரூபாய்

800 கிராம் பவுடர் = 100 ரூபாய் என்றால்

100 கிராம் பவுடர் = 100 / 8 = 12.50

ஜனகரே பவுடர் டின் மலிவல்ல. பவுடர்தான் மலிவு..:D:D:D:D:D

(உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்..!!!)

அன்புரசிகன்
22-12-2009, 04:24 AM
அட.. ஆமால்ல... பவுடர் தான் மலிவு...

aren
22-12-2009, 05:22 AM
இதனால்தான் ஒரு கிலோ பாக்கெட்டிற்கும் ஐந்து கிலோ பாக்கெட்டிற்கு விலையில் நிறைய வித்யாசம் இருக்கிறது. ஐந்து விலோ பாக்கெட் வாங்கினால் குறைந்த விலையில் அதிக பொருள் கிடைக்கும்.

அன்புவும் தாமரையும் இப்படி அசத்தினால் கணக்குத் தெரியாத நாங்களெல்லாம் இங்கேயே வரமுடியாது போலிருக்கே.

ஜனகன்
22-12-2009, 08:51 AM
அன்பு, தாமரை இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஊர் சிரித்தது, சந்தை கூடியது, M.G R இறந்த செய்தி கேட்டு உரே சோகத்தில் இருந்தது.அது போலத்தான் பவுடர் டின் மலிவானதும்.இலக்கணத்தில் இதற்கென்றே ஒரு இடம் இருக்கின்றது.கேள்விப்பட்டதே இல்லையா.தாமரை இப்ப என்ன பண்ணுவீர்?அதற்கு ஆமாப்போட்ட அன்பு இதற்கு என்ன சொல்லுவீர்?ஹி ஹி ஹி..........

ஜனகன்
22-12-2009, 08:55 AM
இதனால்தான் ஒரு கிலோ பாக்கெட்டிற்கும் ஐந்து கிலோ பாக்கெட்டிற்கு விலையில் நிறைய வித்யாசம் இருக்கிறது. ஐந்து விலோ பாக்கெட் வாங்கினால் குறைந்த விலையில் அதிக பொருள் கிடைக்கும்.

அன்புவும் தாமரையும் இப்படி அசத்தினால் கணக்குத் தெரியாத நாங்களெல்லாம் இங்கேயே வரமுடியாது போலிருக்கே.

நன்றி அரேன்.

தாமரை
22-12-2009, 09:04 AM
அன்பு, தாமரை இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஊர் சிரித்தது, சந்தை கூடியது, M.G R இறந்த செய்தி கேட்டு உரே சோகத்தில் இருந்தது.அது போலத்தான் பவுடர் டின் மலிவானதும்.இலக்கணத்தில் இதற்கென்றே ஒரு இடம் இருக்கின்றது.கேள்விப்பட்டதே இல்லையா.தாமரை இப்ப என்ன பண்ணுவீர்?அதற்கு ஆமாப்போட்ட அன்பு இதற்கு என்ன சொல்லுவீர்?ஹி ஹி ஹி..........

ஊர் என்றால் ஊர் மக்கள். ஏன்னா மக்கள் இல்லாம ஊர் இல்லை

சந்தை என்றால் கடைகள். ஏன்னா கடைகள் இல்லாம சந்தை இல்லை

பவுடர் இல்லாம டின் இருக்குமே ஜனகரே..

அந்த இலக்கணம் இக்கட பொருந்தாதுங்களே...

aren
22-12-2009, 09:20 AM
ஜனகன் அடுத்த கணக்கிற்கு வாங்க. தாமரை அவர்களிடம் விவாதம் செய்யமுடியாது.

அன்புரசிகன்
22-12-2009, 09:24 AM
அன்புவும் தாமரையும் இப்படி அசத்தினால் கணக்குத் தெரியாத நாங்களெல்லாம் இங்கேயே வரமுடியாது போலிருக்கே.

அவர் படுக்கும் போது கணக்கு போடுறார். நான் விழித்ததும் உங்களுக்கு முன் பார்க்கிறேன். ஏன் என்றால் உங்களுக்கு முன் எங்களுக்கு விடிஞ்சிடும். :D

மற்றப்படி நான் அசத்துறன் என்பதெல்லாம் ஓவர். தாமரை அண்ணா கொடுப்புக்குள்ள சிரிக்கிறது உங்களுக்கு தெரியலயா???

ஜனகன்
22-12-2009, 09:43 AM
ஊர் என்றால் ஊர் மக்கள். ஏன்னா மக்கள் இல்லாம ஊர் இல்லை

சந்தை என்றால் கடைகள். ஏன்னா கடைகள் இல்லாம சந்தை இல்லை

பவுடர் இல்லாம டின் இருக்குமே ஜனகரே..

அந்த இலக்கணம் இக்கட பொருந்தாதுங்களே...

உங்களுடன் கதைத்து யெயிக்க முடியாது போல் இருக்கின்றதே, எதோ சொல்லுங்கள் கேட்போம்.

ஜனகன்
22-12-2009, 09:44 AM
ஜனகன் அடுத்த கணக்கிற்கு வாங்க. தாமரை அவர்களிடம் விவாதம் செய்யமுடியாது.

அடுத்த கணக்கு மாலை வரும்.

விகடன்
22-12-2009, 10:17 AM
”கணக்கு மாலை” வேண்டாம். ஒவ்வொன்றாக கேளுங்கள்!!!

ஜனகன்
22-12-2009, 02:26 PM
வாங்க விராடன் எப்படி இருக்கின்றீர்கள். உங்களை கண்டு கனகாலம். உங்கள் சின்ன வயது படத்தையும் மாற்றி விட்டிடீர்கள்.காரணம் என்னவோ தெரியவில்லை. இதை விட அது சிறந்தது.யாரிந்த கரடி காலையும் உயத்தியபடி.அது சரி அது உங்கள் விருப்பம்.
நாங்கள் கணக்கு மாலையில் தான் போடுவோம். நீங்கள் கழுத்தில் போட்ட மாலை எப்போது மலைக்கு போய் கலட்டுவதென உத்தேசம்?

aren
22-12-2009, 03:26 PM
”கணக்கு மாலை” வேண்டாம். ஒவ்வொன்றாக கேளுங்கள்!!!

இந்த குசும்புக்கு ஒன்னும் குறைவில்லை உங்களிடம். அடுத்த கணக்கிற்கு நீங்கள்தான் விடை கொடுக்கவேண்டும்.

விகடன்
22-12-2009, 03:59 PM
என்னுடைய படத்தைப் போட்டு மன்றத்திற்கு வருவோரை வெருட்ட விரும்பாததால் மாற்றிவிட்டேன். :icon_b:

அடுத்த கணக்கிற்கு நீங்கள்தான் விடை கொடுக்கவேண்டும்.

அப்படியே ஆகட்டும்.
ஜனகன் ஏதோ ஓர் கேள்வி கேட்டிருக்கிறார். அது எப்போது கல(ழ)ட்டுவது என்ற கேள்விக்கு விடையை தனிமடலில் அனுப்பிவைத்தால் அதை இங்கே போட்டு பாராட்டை பெற்றிடுவேன். :D

தாமரை
22-12-2009, 04:12 PM
வாங்க விராடன் எப்படி இருக்கின்றீர்கள். உங்களை கண்டு கனகாலம். உங்கள் சின்ன வயது படத்தையும் மாற்றி விட்டிடீர்கள்.காரணம் என்னவோ தெரியவில்லை. இதை விட அது சிறந்தது.யாரிந்த கரடி காலையும் உயத்தியபடி.அது சரி அது உங்கள் விருப்பம்.
நாங்கள் கணக்கு மாலையில் தான் போடுவோம். நீங்கள் கழுத்தில் போட்ட மாலை எப்போது மலைக்கு போய் கலட்டுவதென உத்தேசம்?

நாங்க எல்லாம் கணக்கை மூளையில் தான் போடுவோம்... :D :D :D

ஜனகன்
22-12-2009, 09:48 PM
ஒரு வகுப்பில் கணக்கு தேர்வு நடைபெற்றது.ஆசிரியர் சொன்னார், நான் கொஞ்ச சாக்லேட் வாங்கி வைத்திருக்கின்றேன்.அதை 100 க்கு 100 மதிப்பெண் வாங்குகிற மாணவருக்கு பரிசாக கொடுப்பதாக சொன்னார்.இரண்டு மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண் வாங்கிகிட்டா, இரண்டாக பிரித்து கொடுக்க போவதாக சொல்லி, சக்லேட்டுக்களை என்னினாங்க.
இரண்டாக பங்கு போட்டால் ஒரு சாக்லேட் மீதமிருந்தது.
மூன்று பேர்100 மதிப்பெண் வாங்கிகிட்டா மூன்றாக பங்கு போட்டால், அப்போதும் ஒன்று மீதமிருந்தது.
நாலுபேர் 100 மதிப்பெண் வாங்கிகிட்டா நாலாக பங்கு போட்டால், அப்போதும் ஒன்று மீதமிருந்தது.
ஐந்து பேர் 100 மதிப்பெண் வாங்கிகிட்டா ஐந்தாக பங்கு போட்டால், அப்போதும் ஒன்று மீதமிருந்தது.
ஆறுபேர் 100 மதிப்பெண் வாங்கிகிட்டா ஆறாக பங்கு போட்டால், அப்போதும் ஒன்று மீதமிருந்தது.
கடைசியாக தேர்வும் ஒருவாறு முடிவடைந்தது. எவரும் 100 க்கு100 மார்க் வாங்கவில்லை. அப்போது ஆளுக்கு ஒவ்வொன்றாக கொடுத்தார், அப்போதும் ஒரு சாக்லேட் மீதமிருந்தது.
அன்று தேர்வெழுதிய மாணவர்கள் எத்தனை பேர்?
ஆசிரியர் வாங்கிவந்த சாக்லேட் எத்தனை?

ஜனகன்
22-12-2009, 09:51 PM
.
(ஜனகன் ஏதோ ஓர் கேள்வி கேட்டிருக்கிறார். அது எப்போது கல(ழ)ட்டுவது என்ற கேள்விக்கு விடையை தனிமடலில் அனுப்பிவைத்தால் அதை இங்கே போட்டு பாராட்டை பெற்றிடுவேன்.)

விராடன் பதில் "கொறியர்" ல் வருகிறது.

ஜனகன்
22-12-2009, 09:56 PM
நாங்க எல்லாம்
கணக்கை மூளையில்
தான் போடுவோம்... :D :D :D

கவனமாக இருங்கள், மண்டை ஊதி பெரிதாக போகின்றது.

தாமரை
23-12-2009, 12:48 AM
2,3,4,5,6 - இவை ஐந்திற்கும் மீச்சிறு மடங்கு கண்டுபிடிக்கணும் என்று நேரடியாகச் சொல்லுங்க ஜனகரே

60 இவை 5 ற்கும் மீச்சிறு பொது மடங்கு. எனவே அவர் 61 சாக்லேட் வாங்கினார்.

61 / 2 = 30 - 1

61 / 3 = 20 - 1

61 / 4 = 15 - 1

61 / 5 = 12 - 1

வகுப்பில் மொத்தம் 60 பேர் இருந்தார்கள்.

இப்போ 121, 181, 241, 301 இப்படி 60 ன் மடங்குகள் + 1 எல்லாத்துக்கும் இந்த விடை பொருந்தும்..

aren
23-12-2009, 01:08 AM
தாமரை இப்படி எல்லா கணக்கிற்கும் விடை வைத்துள்ளீர்கள். அசத்துங்கள்.

அன்புரசிகன்
23-12-2009, 01:10 AM
தாமரை இப்படி எல்லா கணக்கிற்கும் விடை வைத்துள்ளீர்கள். அசத்துங்கள்.
ஆமா...... எல்லாக்கணக்குக்கும். அங்க LKG திரியையும் பாருங்க... எங்கயெல்லாம் கணக்கு பார்க்கிறார் என்று... :D

விகடன்
23-12-2009, 03:01 AM
சின்னனில ரொம்பத்தான் கணக்குப் பார்த்திருக்கிறார் போல...
அல்லது, தாமரை அண்ணா கணக்கு வாத்தியாக இருப்பாரோ?

தாமரை
23-12-2009, 03:20 AM
மீச்சிறு மடங்கு எப்படிக் கண்டு பிடிப்பது என கேட்காம இப்படிக் கேட்டா எப்படி?

2,3,4,5,6

இதில் பகா எண்கள்

2,3,5

அதை அப்படியே வச்சுக்குங்க

பகு எண்கள்

4 = 2x2
6 = 3x2

இப்போ

2 = 2
3 = 3
4 = 2, 2
5 = 5
6 = 3,2

எனவே 2x2x3x5 = 60

aren
23-12-2009, 03:39 AM
கணக்குலே உண்மையாகவே புலிதான் தாமரை என்று இதன் மூலம் தெள்ளத் தெளிவாகக் தெரியது.

கேள்வி கேட்கும் ஜனகன் அவர்களே கொஞ்சம் ஆடிப்போய்தான் இருக்கிறார்.

விகடன்
23-12-2009, 05:38 AM
கேள்வி கேற்பது கடினம், பதில் சொல்வது இலகு என்று சொல்வதுபோல வெகு விரைவாக விளக்கத்துடன் பதிலிடுகிறார் தாமரை அண்ணா. இது இப்படியே நீண்டுகொண்டு போனால், தாமரை அண்ணாவிற்கு இந்தத்திரியில் பதில் போட தடை போட்டாலும் போட்டுவிடுவர் ஜனகன்.

aren
23-12-2009, 05:59 AM
தாமரையின் விளக்கமான பதில்களால் பலருக்கு இந்த கணக்குகள் எளிதாக இருப்பதுபோல் தோன்றும், ஆனால் அது உண்மையல்ல என்பதே உண்மை.

அன்புரசிகன்
23-12-2009, 06:20 AM
சில சொற்பதங்கள் எனக்கு புதிது... நாங்கள் படிக்கும் போது பொ.கா.பெ பொ.கா.சி என்று தான் படித்திருந்தொம். எல்லாம் ஒன்று தான்... (பொதுக்காரணிகளில் பெரியது பொது காரணிகளில் சிறியது) :D

விகடன்
23-12-2009, 06:28 AM
எனக்கும் ஞாபகமிருக்கிறது அன்பு.
எங்களுடைய 10 ஆவது வயதில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக படித்தது...

ஜனகன்
23-12-2009, 08:19 AM
தாமரைக்கு வாழ்த்துக்கள், மற்றும் அன்பு, அரேன், விராடன் எல்லோருக்கும் நன்றி.

ஜனகன்
23-12-2009, 08:28 AM
கேள்வி கேற்பது கடினம், பதில் சொல்வது இலகு என்று சொல்வதுபோல வெகு விரைவாக விளக்கத்துடன் பதிலிடுகிறார் தாமரை அண்ணா. இது இப்படியே நீண்டுகொண்டு போனால், தாமரை அண்ணாவிற்கு இந்தத்திரியில் பதில் போட தடை போட்டாலும் போட்டுவிடுவர் ஜனகன்.

தாமரையை அவ்வளவு சுலபமாக இந்த பகுதியில் இருந்து எடுத்திட முடியாது.ஏனென்றால் எனக்கு தெரியாத கணக்கெல்லாம் அவர்தான் செய்து காட்டுகின்றார்.அவர் வந்தால்தான் கலகலப்பாக இருக்கும்.

தாமரை
23-12-2009, 09:00 AM
சில சொற்பதங்கள் எனக்கு புதிது... நாங்கள் படிக்கும் போது பொ.கா.பெ பொ.கா.சி என்று தான் படித்திருந்தொம். எல்லாம் ஒன்று தான்... (பொதுக்காரணிகளில் பெரியது பொது காரணிகளில் சிறியது) :D

மீச் சிறு பொது மடங்கு
மீப் பெரு பொது வகு எண்..

இப்படித்தான் நாங்கள் படித்தோம் ரசிகரே...

காரணி என்று சொல்லும் பொழுது அது வகு எண்ணை மட்டுமே குறிக்க வேண்டும். மீச்சிறு மடங்கை காரணி என்று சொல்லக் கூடாது. இலக்கணப்படி அது தவறு.

காரணி என்பது காரணமாக இருக்க வேண்டியது.

6 என்ற எண்ணிற்கு 2 என்பது ஒரு காரணி 3 என்பது இன்னொரு காரணி..

ஆனால் 12 ற்கும் 18 ற்கும் பொது காரணி பெரியது 6ஆகும்

12 = 2 x 3 x 2
18 = 3 x 3 x 2

இரண்டிற்கும் பொதுவாக உள்ளது 3 x 2 ஆகும். எனவே பொதுகாரணி பெரியது 6 ( மீப்பெரு வகு எண்)

பொதுக் காரணி சிறியது என்னும் பொழுது அது 2.

ஆனால் மீச் சிறு பொது மடங்கு என்னும் பொழுது

3 x 3 x 2 x 2 = 36 ஆகும்.

ஏனென்றால் 18 ற்கு இரண்டு மூன்றுகள் தேவை. ஒரு 2 இரண்டு தேவை
12 ற்கு இரண்டு இரண்டுகள் தேவை. ஒரு மூன்று தேவை

3 x 3 x 2 x 2 என்பது இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்து விடுகிறது.

இதுவே 6, 12 என்றால், மீச்சிறு பொது மடங்கு 12 தான்.

ஜனகன்
23-12-2009, 07:58 PM
பால் காரர் ஒருவரிடம் 20 லிட்டர் பால் ஒரு பாத்திரத்தில் இருந்தது.
அவரிடம் மூன்றுஅளவுகள் உள்ள பாத்திரங்கள் தான் இருந்தன.
ஒன்று 13 லிட்டர் பாத்திரம்.மற்றொன்று 11 லிட்டர், இன்னொன்று 7 லிட்டர் பாத்திரம்.
இந்த மூன்று பாத்திரங்களை பயன்படுத்தி ஒருவருக்கு 10 லிட்டர் பால் கொடுக்க வேண்டும்.
மற்றொருவருக்கு 1 லிட்டர் பால் கொடுக்க வேண்டும்.
இது எப்படி சாத்தியம் கண்டுபிடியுங்கள்.

அன்புரசிகன்
23-12-2009, 09:48 PM

உங்களுடைய கேள்வி சற்று வித்தியாசமாக உள்ளது. இல்லை இது தானா கேள்வி???

இந்த சுட்டியையும் (http://www.slcues.net/mantram/WaterShare.xls) பாருங்கள். இதில் உள்ளவாறு என்றால் உங்கள் கேள்வி திருத்தப்படவேண்டும்.

தாமரை
24-12-2009, 01:01 AM
பால் காரர் ஒருவரிடம் 20 லிட்டர் பால் ஒரு பாத்திரத்தில் இருந்தது.
அவரிடம் மூன்றுஅளவுகள் உள்ள பாத்திரங்கள் தான் இருந்தன.
ஒன்று 13 லிட்டர் பாத்திரம்.மற்றொன்று 11 லிட்டர், இன்னொன்று 7 லிட்டர் பாத்திரம்.
இந்த மூன்று பாத்திரங்களை பயன்படுத்தி ஒருவருக்கு 10 லிட்டர் பால் கொடுக்க வேண்டும்.
மற்றொருவருக்கு 1 லிட்டர் பால் கொடுக்க வேண்டும்.
இது எப்படி சாத்தியம் கண்டுபிடியுங்கள்.

முதல்ல ஒரு லிட்டரை அளந்து விடுவோம்

7 லிட்டர் பாத்திரத்தில் பாலை அளந்து 13 லிட்டர் பாத்திரத்தில் ஊற்றவும்.
இன்னுமொரு முறை 7 லிட்டர் பாத்திரத்தில் பாலை அளந்து மீண்டும் ஏற்கனவே 7 லிட்டர் பால் உள்ள 13 லிட்டர் பாத்திரத்தில் ஊற்றவும்

13 - 7 = 6
7 - 6 =1

எனவே 7 லிட்டர் பாத்திரத்தில் 1 லிட்டர் பால் பாக்கி இருக்கும். அதை 1 லிட்டர் கேட்டவருக்கு ஊற்றி விடவும்.

இப்போ 13 லிட்டர் அளந்து வச்சிருக்கமில்லையா அதில் 7 லிட்டர் அளந்து பெரிய பாத்திரத்தில் ஊற்றி விட மிச்சம் (6 லிட்டர்)

இப்பொழுது 11 லிட்டர் பாத்திரத்தில் பாலை அளந்து 7 லிட்டர் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

11 லிட்டர் பாத்திரத்தில் மிச்சம் 4 லிட்டர் பால் இருக்கும். அதை ஏற்கனவே 13 லிட்டர் பாத்திரத்தில் உள்ள 6 லிட்டர் பாலுடன் சேர்க்க

10 லிட்டர் பால் கிடைக்கும்.

அதாவது

13 - 7 = 6

11 - 7 = 4

6+ 4 = 10

போதுமா?

இன்னிக்குச் செத்தா நாளைக்குப் பால்..
கல்யாணம் பண்ணினா
அன்னிக்கே பால்.!!!

aren
24-12-2009, 01:25 AM
என்னத்த சொல்றது தாமரை. போங்க.

இப்படி கலக்குறீங்க!!!!

ஜனகன் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு ஓட வேண்டியதுதான் பாக்கி.

அன்புரசிகன்
24-12-2009, 06:22 AM
இன்னிக்குச் செத்தா நாளைக்குப் பால்..
கல்யாணம் பண்ணினா
அன்னிக்கே பால்.!!!
அப்போ சாகிறது நல்லதா? கல்யாணம் பண்றது நல்லதா??? :lachen001:

தாமரை
24-12-2009, 06:24 AM
அப்போ சாகிறது நல்லதா? கல்யாணம் பண்றது நல்லதா??? :lachen001:

நான் முதல் இரவு அறைக்குக் கொண்டு வருகிற பாலைச் சொன்னேனுங்க அன்பு!!!

அன்புரசிகன்
24-12-2009, 07:07 AM
நான் முதல் இரவு அறைக்குக் கொண்டு வருகிற பாலைச் சொன்னேனுங்க அன்பு!!!

அப்போ ஏன் சாகிறதயும் கல்யாணம் கட்டுறதையும் ஒன்றா சொன்னீங்கள்??? ஏதாவது வகையில ஒத்துப்போகணுமே... :D

தாமரை
24-12-2009, 07:23 AM
அப்போ ஏன் சாகிறதயும் கல்யாணம் கட்டுறதையும் ஒன்றா சொன்னீங்கள்??? ஏதாவது வகையில ஒத்துப்போகணுமே... :D

எல்லாம் ஒத்துப் போனாத்தான் கல்யாணம் என்றால்

இந்த ஜன்மத்தில உங்களுக்கு கல்யாணம் ஆகாது..

வர்ட்டா...!!!

ஜனகன்
24-12-2009, 08:32 AM
முதல்ல ஒரு லிட்டரை அளந்து விடுவோம்

7 லிட்டர் பாத்திரத்தில் பாலை அளந்து 13 லிட்டர் பாத்திரத்தில் ஊற்றவும்.
இன்னுமொரு முறை 7 லிட்டர் பாத்திரத்தில் பாலை அளந்து மீண்டும் ஏற்கனவே 7 லிட்டர் பால் உள்ள 13 லிட்டர் பாத்திரத்தில் ஊற்றவும்

13 - 7 = 6
7 - 6 =1

எனவே 7 லிட்டர் பாத்திரத்தில் 1 லிட்டர் பால் பாக்கி இருக்கும். அதை 1 லிட்டர் கேட்டவருக்கு ஊற்றி விடவும்.

இப்போ 13 லிட்டர் அளந்து வச்சிருக்கமில்லையா அதில் 7 லிட்டர் அளந்து பெரிய பாத்திரத்தில் ஊற்றி விட மிச்சம் (6 லிட்டர்)

இப்பொழுது 11 லிட்டர் பாத்திரத்தில் பாலை அளந்து 7 லிட்டர் பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

11 லிட்டர் பாத்திரத்தில் மிச்சம் 4 லிட்டர் பால் இருக்கும். அதை ஏற்கனவே 13 லிட்டர் பாத்திரத்தில் உள்ள 6 லிட்டர் பாலுடன் சேர்க்க

10 லிட்டர் பால் கிடைக்கும்.

அதாவது

13 - 7 = 6

11 - 7 = 4

6+ 4 = 10

போதுமா?

இன்னிக்குச் செத்தா நாளைக்குப் பால்..
கல்யாணம் பண்ணினா
அன்னிக்கே பால்.!!!

நான் நினைத்த முறைப்படிதான், நீங்களும் பதில் தந்துள்ளீர்கள். நன்றி வாழ்த்துக்கள்.

ஜனகன்
24-12-2009, 08:44 AM
தாமரை: இன்னிக்குச் செத்தா நாளைக்குப் பால்..
கல்யாணம் பண்ணினா
அன்னிக்கே பால்.!!!

அன்பு:அப்போ சாகிறது நல்லதா? கல்யாணம் பண்றது நல்லதா???

தாமரை:நான் முதல் இரவு அறைக்குக் கொண்டு வருகிற பாலைச் சொன்னேனுங்க அன்பு!!!

அன்பு: அப்போ ஏன் சாகிறதயும் கல்யாணம் கட்டுறதையும் ஒன்றா சொன்னீங்கள்??? ஏதாவது வகையில ஒத்துப்போகணுமே...

தாமரை:எல்லாம் ஒத்துப் போனாத்தான் கல்யாணம் என்றால்
இந்த ஜன்மத்தில உங்களுக்கு கல்யாணம் ஆகாது..
வர்ட்டா...!!!

இந்த காமடியை எடுத்து அப்படியே காமடி பகுதியில் போடலாம் என இருக்கிறேன்.

அன்புரசிகன்
24-12-2009, 12:40 PM
அப்போ இந்த பதிவு எந்த பகுதியில இருக்கு???

தாமரை
24-12-2009, 02:01 PM
அன்பு ஜனகரைக் கொண்ஜ்சம் செல்லக் கடிகள் திரி பக்கம் அழைச்சிகிட்டு போய்ட்டு வாங்க..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13931

ஜனவரி 4 வரை உங்க ராஜ்யம்தான்,.

நான்? லீவு,..... ஹா ஹா ஹா

ஜனகன்
24-12-2009, 09:03 PM
அப்போ இந்த பதிவு எந்த பகுதியில இருக்கு???

"L.K.G.கடைசி பென்ஸ்" பக்கம் என்று நினைக்கிறேன்.

ஜனகன்
24-12-2009, 09:58 PM
விஞ்ஞானி ஒருவர் ஆய்வு கூடத்தில் நின்றார்.அவர் சோதனைகுழாயை காட்டி "இதில் ஒரு உயிர் அணுவை விடுகிறேன்.அந்த உயிரணு நொடிக்கு இரண்டாக பெருகும் தன்மை வாய்ந்தது.உயிரணுக்கள் இந்த நாலு அவுன்ஸ் சோதனைகுழாயின் கால் பாகம் நிரம்ப பத்து நிமிடங்கள் எடுத்து கொள்கின்றன.சோதனைகுழாய் முழுவதும் நிரன்ப எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவாகும்"

நீங்கள் சொல்லுங்கள் பாப்போம்.

தாமரை போய் விட்டால் என்ன, அன்பு, அரேன் இருக்கின்றீர்கள்தானே.

அன்புரசிகன்
24-12-2009, 11:24 PM
10 நிமிடங்களுடன் 2 அடுத்த நொடிகளில் நிரம்பிவிடும். அடுத்த வினாடியில் வெளியிலே ஊத்தின்டிடமே... அதுக்கு என்னபண்ணப்போறேள்...............?:D

aren
25-12-2009, 01:36 AM
அன்பு அவர்கள் சொன்னபடி இன்னும் இரண்டு நொடிகளே ஆகும் நிரம்புவதற்கு.

ஜனகன்
25-12-2009, 07:56 AM
இருவர் பதிலும் சரியானதே, நன்றி வாழ்த்துக்கள்.

ஜனகன்
25-12-2009, 08:14 PM
ஒரு திருமண வீட்டிற்கு சென்ற ஒருவர், அந்த மணமகனின் வயது என்ன என அவர் அண்ணனிடம் கேட்டார்.அதற்கு அவர் கூறினார், " 10 ஆண்டுகளுக்கு முன் எனது திருமணம் நடைபெற்ற பொழுது என் தன்பியின் வயது என் வயதில் கால்(1/4)பாகம் குறைவு .இப்பொழுது என் வயதில் ஆறில் ஒரு(1/6) பாகம் குறைவாக உள்ளது.நீங்கள் தான் தம்பியின் வயதை கணக்கு போட்டு கொள்ளுங்கள்"என்றார். நீங்கள் சொல்லுங்கள் தம்பியின் வயது என்ன?

aren
26-12-2009, 12:32 AM
கணக்கில் ஏதோ தவறு இருக்கிறது என்று நினைக்கிறேன் ஜனகன்.

அண்ணனின் கல்யாணத்தின் பொழுது தம்பியின் வயது அண்ணனின் வயதைவிட கால் பாகம் குறைவாக இருந்திருக்கவேண்டும். அண்ணனுக்கு 24 வயது என்றால் தம்பிக்கு 18 வயது என்று. ஆனால் உங்கள் கேள்விப்படி அண்ணனுக்கு கல்யாணத்தின்பொழுது 24 வயது என்றால் தம்பிக்கு ஆறு வயது என்றல்லா கேள்வி இருக்கிறது.

கொஞ்சம் கவனிக்கவும்.

அன்புரசிகன்
26-12-2009, 01:01 AM
தம்பி x
அண்ணா y
(y-10)/4=x-10
y-10=4x-40
4x-y=30
x=5y/6
6x=5y
4x-4x/5=30
16x=150
x=9.375 :D

ஆகவே கணக்கு எங்கேயோ இடிக்குது... இப்பவே பத்துவயதிலும் குறைவு... அப்புறம் எப்படி 10 வருடத்துக்கு முன் கதை எல்லாம் வரும்.

aren
26-12-2009, 03:23 AM
நான் சொன்னதையே கணிதம் மூலம் கணித்து சொல்லியிருக்கிறார் அன்பு. ஆகவே ஜனகன், மறுபடியும் உங்கள் கேள்வியை ஒரு தடவை படித்துப் பாருங்கள். தவறு புரியும்.

ஜனகன்
26-12-2009, 09:10 AM
அன்பு, அரேன் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இப்போது பாருங்கள்.சிரமத்திற்கு வருந்துகிறேன்.

அன்புரசிகன்
26-12-2009, 09:49 AM
தம்பி x
அண்ணா y
(y-10)3/4=x-10
3y-30=4x-40
4x-3y=10 ....1
x=5y/6
6x=5y....2

ஒன்றில் பிரதியிட...

4x-18x/5=10
2x=50
x=25

மாப்பிள்ளையின் வயது 25...

ஜனகன்
26-12-2009, 10:15 AM
அன்பு, சரியான பதில் வாழ்த்துக்கள்.

ஜனகன்
26-12-2009, 05:10 PM
ஒரு கணித ஆசிரியர், தனது வகுப்பு மாணவர்களிடம் கேட்டார். "x2 பெரிதா?2x பெரிதா?இதுதான் கேள்வி".சிலர் x2 பெரிதென்றனர் .
வேறு சிலர் இரண்டும் சமம் என்றனர்.உங்களுக்கு எப்படி தோன்றுகின்றது.

அன்புரசிகன்
27-12-2009, 12:34 AM
x ஆனது 2 இலும் பெரிதென்றால் x இனது வர்க்கம் எப்போதும் பெரிது தான்...
2 என்றால் சமனாக இருக்கும். 2 இலும் குறைவான எண்களின் வர்க்கம் எப்போதும் 2 மடங்கிலும் சிறிதாகவே இருக்கும்.