PDA

View Full Version : இந்தியாவா கொக்கா - தோனியின் திடீர் ஞானோதயம்shibly591
01-11-2009, 09:01 AM
http://www.cricinfo.com/db/PICTURES/CMS/109600/109669.jpg

அடுத்தடுத்து தொடராக இரண்டு வெற்றிகள் .. அதுவும் புஜ பல பராக்கிரமன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக..இந்தியா முதலிடம் பிடிப்பது கிட்டத்தட்ட உறுதி..அதுவும் 2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டிகளை இந்தியாவே நடாத்தப்போவது முடிவான நிலையில் இவ்வெற்றிகள் இந்தியாவுக்கு விட்டமின் மாத்திரைகள்தான்..


முதல் போட்டியில் 4 ஓட்டங்களால் தோற்றபோதே நிறைய வியூகங்களை வகுக்க ஆஸ்தி தவறிவிட்டது.பாவம் அவர்களால் என்ன செய்ய ஒண்ணும்..நிறையப்பேர் காயம் காயம் என்று சொந்த ஊர் திரும்பினால் வியூகமாவது?கியூகமாவது...

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/109600/109656.jpg

ஆனாலும் தோனி மீண்டும் தன் தலைமைப்பொறுப்பை நிரூபித்திருக்கிறார்..தனத அதிரடியை ரொம்ப காலம் மறைத்துவைத்திருந்தவர் (லக்ஸ்மிராயா ? அஸினா ?) தனது பழைய பாணியில் படு நேர்த்தியாய் பட்டையை கிளப்பியிருக்கிறார்...


இந்த காம்பீர் பையனும் ரெய்னா தம்பியும் (என்னை விடச்சிறிய வயசு அவனுக்கு..கடன் கிடன் கேட்டால் தருவானோ தெரியாது..அதுதான் தம்பி என்று திடீர் பாச மழை)என்னம்மா விளையாடுகிறானுங்கப்பா..இலங்கையில் மெத்யூஸ் கண்டாம்பி ஆகியோர் கொஞ்சம் அதை பார்த்து படித்தால் இலங்கை மத்திய வரிசையும் பலமுறுக்கூடும்.


மூன்றாவது போட்டியின் சுருக்கம்

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/109600/109660.jpg


Australia innings


Power Play 2: Overs 10.1 - 15.0
Australia: 50 runs in 10.6 overs (66 balls), Extras 0
1st Wicket: 50 runs in 66 balls (SR Watson 27, RT Ponting 23, Ex 0)
Drinks: Australia - 72/1 in 16.2 overs (RT Ponting 31)
Australia: 100 runs in 24.4 overs (148 balls), Extras 0
RT Ponting: 50 off 74 balls (4 x 4)
2nd Wicket: 50 runs in 81 balls (RT Ponting 25, MEK Hussey 24, Ex 1)
Australia: 150 runs in 36.5 overs (221 balls), Extras 1
Drinks: Australia - 151/3 in 37.0 overs (MEK Hussey 42, AC Voges 8)
MEK Hussey: 50 off 59 balls (2 x 4)
Power Play 3: Overs 45.1 - 50.0
Australia: 200 runs in 46.2 overs (280 balls), Extras 8
Innings Break: Australia - 229/5 in 50.0 overs (MEK Hussey 81, MG Johnson 9)


India innings


Power Play 2: Overs 10.1 - 15.0
India: 50 runs in 13.2 overs (81 balls), Extras 4
Drinks: India - 53/2 in 15.0 overs (G Gambhir 6, Yuvraj Singh 0)
India: 100 runs in 24.3 overs (152 balls), Extras 15
4th Wicket: 50 runs in 65 balls (Yuvraj Singh 18, MS Dhoni 21, Ex 11)
Drinks: India - 126/3 in 29.0 overs (Yuvraj Singh 23, MS Dhoni 33)
India: 150 runs in 34.4 overs (215 balls), Extras 22
4th Wicket: 100 runs in 122 balls (Yuvraj Singh 46, MS Dhoni 38, Ex 18)
Yuvraj Singh: 50 off 59 balls (5 x 4, 2 x 6)
MS Dhoni: 50 off 81 balls (2 x 4)
India: 200 runs in 43.4 overs (270 balls), Extras 23
Power Play 3: Overs 45.1 - 50.0


அடுத்தடுத்த போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற வாழ்த்துகிறேன்..


யுவராஜ் அவ்வப்போது காட்டும் நிதான அதிரடியை தொடரும் பட்சத்தில் எத்தகைய ஓட்ட எண்ணிக்கையையும் இந்தியா எட்டிப்பிடிக்கும் போலத்தெரிகிறது..


சேவாக்கும் ஓ.கே..நல்ல ஆரம்பத்திற்கு அவர் கியாரண்டி..இந்தத்தொடரில் தொடர்ந்து ஏமாற்றுபவர் சச்சின்தான்..வயசாகுதுதானே..பாவம் அவர்..

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/109600/109638.jpg

அடுத்த போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்பது ரசிகர்கள் நமக்கெல்லாம் கொண்டாட்டமே..

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/109600/109637.jpg


ஆஸ்திக்கு நான் சொல்லும் ஒரே விடயம் - பழைய பெருமைகளில் படுத்திருக்கவேண்டாம்..புதியவர்களுடன் புத்தெழுச்சி
பெறவேண்டும்..தத்ஸ் இட்.

வியாசன்
01-11-2009, 03:20 PM
3 வது போட்டியில் இந்தியா நன்றாகத்தான் ஆடியது. பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் முதலாவது ஓவரிலேயே சச்சின் இரண்டு நாலு ஓட்டங்களை எடுத்து மிரட்டினார். சச்சின் ரன் அவுட்டானது துரதிஸ்டமானது. அவர் ஓடிவரும்போது பந்துவீசியவர் மைதானத்தில் குறுக்கே வந்ததால் அவர் சற்று வளைந்து ஓடியதால் அவுட்டானார். அதே போல் டோனிக்கு சந்தர்ப்பம் வந்தது.

ஆனால் அவர் வேண்டுமென்றே இடித்துவிட்டு ஓடினார். அவுஸ்திரேலியா பலவேளைகளில் அழுகுணி ஆட்டம் ஆடுவதுண்டு. சச்சின் ஆடியது ஒன்றும் மோசமில்லை. அருமையான துவக்கத்தை கொடுத்தார்.

வெற்றி கிட்டியது.

அன்புரசிகன்
02-11-2009, 11:58 PM
நேற்று தோனிக்கு ஆப்படிச்சாச்சே................

மன்மதன்
03-11-2009, 08:16 AM
நேற்று தோனிக்கு ஆப்படிச்சாச்சே................

இதெல்லாம் கிரிக்கெட்ல சகஜமப்பா..:D

aren
03-11-2009, 10:47 AM
நேற்று தோனிக்கு ஆப்படிச்சாச்சே................

இப்படி அடிக்கடி ஜெயித்து தோற்றால்தான் மக்கள் தொலைக்காட்சிமுன் உட்கார்ந்து மாட்சைப் பார்ப்பார்கள். அனைவருக்கும் வியாபாரம் ஆகும்.

இதெல்லாம் வெறும் வியாபார உக்தி.

நாம் தான் மாட்ச் என்று நினைத்து ஏமாந்துபோகிறோம்.

aren
03-11-2009, 10:48 AM
4க்கு மூன்று கணக்கில் இந்தியா வென்றுவிடும்.

அதேமாதிரி இந்தியா ஆஸ்திரேலியா போகும் பொழுது தோற்றுவிடும்.

இதெல்லாம் இந்த கிரிக்கெட் ஆட்டத்தில் சகஜமாக நடக்கும் விஷயம்.

பா.ராஜேஷ்
03-11-2009, 01:21 PM
இதெல்லம் நிஜமான்னு நம்ப முடியாத அளவுக்கு இருக்கு!!!

அறிஞர்
03-11-2009, 02:24 PM
3வது போட்டி ஓகே...

யாரு கண்ணு பட்டதோ... 4வது போட்டி ஊத்திக்கிடுச்சு...

இந்திய அணி வெற்றியிலே களித்திருக்காமல்.. ஒழுங்கா விளையாண்டால் சரிதான்.

பரஞ்சோதி
03-11-2009, 03:20 PM
நல்ல விமர்சனம், நன்றி தோழரே!

அடுத்து வரும் போட்டிகளுக்கும் எழுதுங்க.

aren
04-11-2009, 02:45 PM
3வது போட்டி ஓகே...

யாரு கண்ணு பட்டதோ... 4வது போட்டி ஊத்திக்கிடுச்சு...

இந்திய அணி வெற்றியிலே களித்திருக்காமல்.. ஒழுங்கா விளையாண்டால் சரிதான்.

யாரு கண்ணும் படவில்லைங்க. நம்ம ஆட்கள் சரியாக ஆடவில்லை அவ்வளவுதான்.

டாஸ் ஜெயித்தவுடன் தல அவர்கள் சொன்னபடி பாட்டிங்க் செய்திருந்தால் வென்றிருக்கலாம் என்பது என் கருத்து.