PDA

View Full Version : கோலங்கள் தொடரில் ஈழம் பற்றிய காட்சி !!! நன்றி திருச்செல்வம்



Honeytamil
01-11-2009, 06:08 AM
ஆம். ஊடகங்கள்.மிகச் சக்திவாய்ந்தவை.மக்கள் மனதை ஊடுருவும் சாதனம் என்பதனால்தான் ஊடகம்.அதைப் பயன்படுத்த தெரிந்தவரின் கைகளில் அது அற்புதமான ஒரு பொருளாகிப் போகிறது...

...என்று நாம் நம்ப முயற்சித்தாலும் அதன் நிஜ முகம் வேறுமாதிரியாகவே இருக்கிறது.என்றாலும் திருச்செல்வம் போன்ற முனைப்பான இளைஞர்கள் தங்கள் எல்லை உணர்ந்து,அதற்குட்பட்டு,ஆனால் கருத்தை ஆணித்தரமாக பதியும் பொழுது படைப்பாளி ஊடகத்தை தன் கைகளில் ஏந்திக் கொள்கிறான்.

பல வருடங்களாக இழுத்துக்கொண்டு இருந்த தொடரை பாராட்ட...29ம் தேதி பாகம் ஒன்று மட்டுமே போதும் ஒரு இனப் படுகொலையை பதிந்ததற்காக.

http://video.yahoo.com/watch/6304235/16357488

அந்த பாகத்தை மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால்... ஆம். ஒரு இனம் அழிந்ததை,ஒரு வீர மரணத்தை மிக ஆதங்கத்துடனும்,இயலாமையுடனும் போராளிகுணத்துடனும் காட்சிப்படுத்தி மக்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையில் புரிய வைத்ததன் மூலம் தன் திறமையும் இனப் பற்றையும் பதிந்திருக்கிறார் திருச்செல்வம். நன்றி.

என்ன சொல்வது உங்களை தோழர் திருச்செல்வம்.மிக்க நன்றி என்ற ஒன்றைத்தவிர. சன் டிவி ஒரு சக்தி வாய்ந்த ஊடகம்,அதில் 9 மணி ஸ்லாட் என்பது அதைவிட சக்திவாய்ந்த பொழுது.கிட்டத்தட்ட அத்தனை தமிழ்க் குடும்பமும் தொலைக்காட்சி முன்னர் அமர்ந்திருக்கும் பொழுது... அவர்களுக்கு அந்த காட்சிகளின் மூலம் கடத்தப்படும் அறிவானது மிகக் கூறான ஆயுதம். ஒரு இடத்தில் கூட பெயரைச் சொல்லாமல்,ஆனால் மிக அற்புதமாக சொல்ல வந்த கருத்தையும்,ஆதங்கத்தையும்,கோவத்தையும் ,கண்ணீரையும் காட்சிப்படுத்தி ஒரு வரலாற்றுப் பிழையை தொலைக்காட்சி ஊடகத்தில் பதிந்தமைக்காக..

அதுவும் மிகக் கூறான வசனங்களால்.

மனம் திறந்து பாராட்டுகிறோம். நன்றி திருச்செல்வம். ..

praveen
01-11-2009, 06:38 AM
நான் கோலங்கள் தொடர் பார்ப்பதில்லை. உங்கள் சுட்டி மூலம் இந்த தொடர் பார்த்தேன். அதில் சில இடத்தில் (10 நிமிட வாக்கில் ) இலங்கை பிரச்சினை சொல்லிக்காட்டப்பட்டுள்ளது தெரிகிறது.

தமிழ்நாட்டில் நடந்த துயரத்தை நினைத்து எல்லோரும் மனதிற்குள் அழுகின்றனர். வாய்விட்டு அழுக பயப்படுகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. இவர் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் சிலர் தனிப்பட்ட பேட்டியின் போது கூட கருத்து தெரிவித்து அவை நீக்கப்படாமல் பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது.

ம், இப்படியே நடந்ததை நினைத்து நாமெல்லாம் ஒப்பாரி வைத்தே இருக்க வேண்டியது தான் உருப்படியா எதுவும் செய்ய இயலாது, அதுவா எக்குத்தப்பா இனி நல்லது நடந்தா தான் உண்டு.

சரியான நேரத்தில் சுட்டி காட்டியதற்கு நன்றி ஹனிதமிழ்.

வியாசன்
01-11-2009, 07:45 AM
இதை நான் இங்கு பதிவதற்கு எண்ணினேன் ஆனால் சில காரணங்களால் எடுத்துவரவில்லை. திருச்செல்வம் அவர்கள் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அகதிமுகாமிலுள்ள ஒரு அநாதையான ஈழக்குழந்தையை தத்தெடுப்பதாக காட்சியமைத்து அதன்மூலம் ஒரு செய்தியை தமிழகமக்களுக்கும் கூறினார். அடுத்தடுத்த காட்சிகளில் தோழர் என்ற பாத்திரத்தின் மூலம் ஈழத்தில் நடாத்தப்பட்ட இனப்படுகொலையை சுட்டிக்காட்டி தகுந்த வசனங்களால் சாட்டையடி கொடுத்துள்ளார்.
தன்னுடைய உள்ளக்குமுறலை வசனங்களாலும் காட்சிமைப்பினாலும் தமிழக மக்களுக்கு எடுத்துக்கூறிய திருச்செல்வம் அவர்கள் பாராட்டுக்குரியவர். கோலங்கள் தொடர் தமிழகத்தில் பெருந்தொகையானவர்களால் பார்க்கப்படுகின்ற தொடர். அதில் ஒரு பகுதியினரையாவது சிந்திக்க வைத்தால் .............

ஒருவேண்டுகோள் திருச்செல்வம் அவர்களுக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். எப்படி அவருடைய இலக்கங்களை பெறுவது யாராவது உதவமுடியுமா?

தூயவன்
01-11-2009, 10:38 AM
நானும் பார்த்தேன் இயக்குனர் திருச்செல்வதுக்கு எமது நன்றிகள்.

வெற்றி
02-11-2009, 05:35 AM
ஒருவேண்டுகோள் திருச்செல்வம் அவர்களுக்கு தொலைபேசி மூலம் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். எப்படி அவருடைய இலக்கங்களை பெறுவது யாராவது உதவமுடியுமா?[/COLOR]

தேடிப்பார்த்தேன்...கிடைக்கவில்லை...ஆனால் கூகிளில் தேடிய போது கோலங்களுக்கு என ஒரு பாரம் இருப்பதைக்கண்டேன்..அங்கே போய் நன்றி சொல்லிவிடுங்களேன்..
(ஆனால் அந்த தளத்தில் அனேகர் சீரியல் ரொம்ம்ம்ம்ம்ம்ப அறுவை என பதித்து இருந்தார்கள்... )

aren
02-11-2009, 07:01 AM
நானும் இதைப் பார்த்தேன். இவ்வளவு நாட்கள் இல்லாமல் இன்று ஏன் என்று நினைத்தேன்.

யாராவது சொல்லி அதை சேர்த்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

இவர்களுக்கு ஆதாயம் இல்லாமல் தானாகவே எதுவும் செய்ய மாட்டார்கள்,

praveen
02-11-2009, 07:41 AM
நானும் இதைப் பார்த்தேன். இவ்வளவு நாட்கள் இல்லாமல் இன்று ஏன் என்று நினைத்தேன்.

யாராவது சொல்லி அதை சேர்த்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

இவர்களுக்கு ஆதாயம் இல்லாமல் தானாகவே எதுவும் செய்ய மாட்டார்கள்,

சரியாக சொன்னீர்கள் அண்ணா,


அந்த தொடரை தயாரித்து வழங்குவது விகடன் டெலிவிஸ்டாஸ் எனும் விகடன் குருப். இவர்கள் பத்திரிக்கையில் ஈழத்தை வைத்து செய்தி பிசினஸ் செய்வதை முன்னரே ஒரு திரியில் சொல்லியிருந்தேன், இப்போது தொ.கா விலும் தினித்து விட்டார்கள்.

எப்படியோ மக்கள் மனதில் இந்த மாதிரி செய்திகள் நுழைந்தால் சரி தான்.

aren
02-11-2009, 07:56 AM
இதில் அருமை என்னவென்றால் நான் இந்த சீரியல் வந்தாலே வேறு சானலுக்கு ஓடிவிடுவேன். வேறு எங்கும் ஒன்றும் சரியாக இல்லாததால் இது அப்படியே இருந்தது நாங்கள் யாரும் பார்க்காமல். திடீரென்று இலங்கை தமிழர்கள் தங்கியிருப்பதைப் பார்த்தவுடன் என்ன சொல்லப்போகிறார்கள் என்று பார்த்தேன்.

இதை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியாது. இது ஒரு விளம்பரதந்திரம் என்று மட்டும் எனக்குத் தெரிகிறது.

வியாசன்
02-11-2009, 09:37 AM
தேடிப்பார்த்தேன்...கிடைக்கவில்லை...ஆனால் கூகிளில் தேடிய போது கோலங்களுக்கு என ஒரு பாரம் இருப்பதைக்கண்டேன்..அங்கே போய் நன்றி சொல்லிவிடுங்களேன்..
(ஆனால் அந்த தளத்தில் அனேகர் சீரியல் ரொம்ம்ம்ம்ம்ம்ப அறுவை என பதித்து இருந்தார்கள்... )

நன்றி மொக்கசாமி