PDA

View Full Version : வாகனங்களில் சுற்றத்திலே ஒரு பயணம்



சரண்யா
31-10-2009, 09:26 AM
அடுத்த வீட்டிற்கு நடந்தே
உடற் பயிற்ச்சிக்கு மிதிவண்டி
அடுத்த தெருவென்றால் விசையுந்து
பள்ளி மாணவர்கள் தானியிலே
சொகுசாய் செல்ல மகிழ்வுந்து
அனைவருடன் செல்ல தானூந்து
விழா என்றால் கூடு உந்துலே
சிறிய சுமை சிறியகூடு உந்துலே
பெரிய சுமை சுமையுந்துவிலே
நிறைய மக்கள் பேருந்திலே
வாய்ப்பு கிடைத்தால் தொடர்வண்டியிலே
அன்னார்ந்து பார்த்தால் வானூர்தி
இப்படி எங்கு சென்றாலும்
எதிலும் கவனம் முக்கியம்
பொறுமையாய் பயணித்து
விபத்தை தவிர்க்க
கைபேசியில் பேசியே
வாகனங்களை ஓட்டாமல்
பாதுகாப்பான பயணம் செய்து
நம் ஜீவனோடு இனிய
வாழ்வு வாழ்வோமே.....

பா.ராஜேஷ்
31-10-2009, 01:48 PM
நல்ல சிந்தனை. பாராட்டுக்கள் சரண்யா..

சரண்யா
02-11-2009, 07:33 AM
நல்ல சிந்தனை. பாராட்டுக்கள் சரண்யா..
நன்றிகள் .....பா.ராஜேஷ் அவர்களே....

சுகந்தப்ரீதன்
02-11-2009, 11:05 AM
சுற்றத்தின் நலம்நாடி சுற்றத்தை உற்றுநோக்கி உரைத்த கவிதையிது..!!

உங்கள் சிந்தனைகளை தொடர்ந்து செம்மையாக்குங்கள் சரண்யா..!! வாழ்த்துக்கள்..!!

சரண்யா
02-11-2009, 11:51 AM
நன்றிகள்...சுகந்தப்ரீதன் அவர்களே...