PDA

View Full Version : அப்பாவிபைத்தியக்கார இளைஞனை தாக்கிகொன்ற சமுதாயம்



வியாசன்
30-10-2009, 06:38 PM
http://video.yahoo.com/watch/6312211/16378193

நேற்று பம்பலப்பிட்டி கடலுக்குள் குதித்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் இளைஞரின் சடலம் சற்று நேரத்திற்கு முன்னர் கரை ஒதுங்கியது. இத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது

(3ம் இணைப்பு)

பம்பலப்பிட்டி கடலில் மூழ்கி மரணமான இளைஞர் தமிழர் என அடையாளம்: பொலிஸ் உத்தியோகத்தர் கைது (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2009, 12:22.01 PM GMT +05:30 ]
நேற்று பம்பலப்பிட்டி கடலுக்குள் குதித்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் இளைஞரின் சடலம் சற்று நேரத்திற்கு முன்னர் கரை ஒதுங்கியது. இத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்தார். சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது.

சடலம் கரையொதுங்கிய இடத்திற்குச் சென்ற இவ்விளைஞரின் சகோதரர் சடலத்தை அடையாளங் காட்டினார்.

இவ்விளைஞரைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரைக் கைது செய்வதற்கும் ஏனையோரை அடையாளம் காண்பதற்கும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சற்று முன்கிடைத்த செய்தி

சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு, இவரை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் இடம்பெற்றபோது கடற்கரைக்குச் சென்றதாகக் கூறப்படும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர் தமிழர் என அடையாளம் காணப்பட்டுள்ளது

பம்பலப்பிட்டியில் நேற்று கடலில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட, இளைஞர் தமிழர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ரத்மலானையை சேர்ந்த 26 வயதான பாலவண்ணன் சிவக்குமார் என அவரது சகோதரர் அடையாளம் காட்டியுள்ளார்.

இவர் ஒரு மனநோயாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்கண்ட சாட்சியின்படி குறித்த இளைஞர் பம்பலப்பிட்டி கரையோர பிரதான வீதியில் நின்று வாகனங்களுக்கு கல்லெறிந்துள்ளார்.

இதன் போது வீதியில் சென்ற இராணுவ வாகனத்திற்கும் அவர் கல்லெறிந்துள்ளார். இந்தநிலையில் இராணுவ வாகனம் நிறுத்தப்படவே, அவர்,அருகில் உள்ள புகையிரத கடவைக்கு பாய்ந்து சென்றுள்ளார்.

இதன்போது, புகையிரதம் ஒன்று வரவே, அதற்கும் அவர் கல்லெறிந்துள்ளார்.உடனடியாக புகையிரம் நிறுத்தப்பட்டபோது இளைஞர் கடலில் குதித்துள்ளார்.

இந்தநிலையிலேயே பொதுமக்களில் இருவரும் பொலிஸ்காரர் ஒருவரும் கடலில் இறங்கி அவரை தாக்க முனைந்துள்ளனர். பொதுமக்களில் இருவர் குறித்த தமிழ் இளைஞரை பலமாக தாக்கியமையை தொலைக்காட்சி கமாரவின் மூலம் காணமுடிகிறது.

இளைஞர் தம்மை தாக்கவேண்டாம் என கும்பிட்டு கேட்டுக்கொண்டபோதும் அவரை கரைக்கு வரவிடாமல் பொதுமக்கள் இருவரும் தடிகளால் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலை சமாளிக்கமுடியாத இளைஞர் கடல் அலைக்கு மத்தியில் பின்னால் சென்ற போது அலை அவரை இழுத்துச் சென்றுள்ளது.

இந்தநிலையிலேயே அவர் மரணமாகியுள்ளார். இந்த மரணம் பலவந்தத்தினால் இடம்பெற்றதன் காரணமாக இதனை கொலை எனவே கருதவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்ட பழம்
சுட்ட இடம் தமிழ்வின்

ஜனகன்
30-10-2009, 10:48 PM
நானும் இந்த நியூஸ் பார்த்தேன். கடலில் வைத்து அந்த மனநோயாளி இளைஞனை மூன்று பேர் தாக்கியதையும், அவன் கடல்நடுவே போனதையும்.
மனிதாபிமானம் செத்துப்போச்சு

தூயவன்
31-10-2009, 04:51 AM
மோட்டு சிங்களவன்...

டிவி யில் இதை பார்த்து அதிர்ந்து போனேன்.
அந்த இளைஞன் இரு கரம் கூப்பி மன்றாடிய போதும் அந்த நாய்கள் விடவில்லை.

http://www.youtube.com/watch?v=pNvQ-zg4C78

praveen
31-10-2009, 04:55 AM
இது சம்பந்தமாக என்னுடைய கருத்து மாறுபட்டது.

இம்மாதிரி மனநிலை சரியில்லாதவரை மற்றவர்கள் எப்போது தாக்குவார்கள் என்றால் அவர்கள் முதலில் அத்துமீறி பொதுமக்கள் அல்லது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் போது தானே அன்று எடுத்தவுடன் பைத்தியம் என்று எவரொருவரையும் பொதுவிலே தாக்க மாட்டார்கள்.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் தினமும் ரயிலில் தான் சென்று வந்தேன், ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்து வீடு திரும்பும் போது வயல்வெளியில் இருந்த சிலர் மனநிலை மாறி ரயில்பாதையில் இருந்த கற்களை எடுத்து வேகமாக சென்று கொண்டிருந்த ரயில் மீது வீசினர். சிலர் பாதிக்கப்பட்டனர். அதில் எனக்கு ஒரு கல் பட்டு என் வலது புறங்கை வீங்கி விட்டது. இது பற்றி ரயில் நிலையத்தில் புகார் தரச்சொன்னார்கள். நான் வாய்மொழியாக தர எழுத்துவடிவில் தர இயலாததை தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட மற்றவர்களிடம் எழுதி பெற்றுக்கொண்டனர்.

அன்றே சிறிது நேரத்தில் அந்த நபர்களை பிடித்து(மாடுமேய்ப்பவர்களாம்) ரயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு வந்து பின்னி விட்டார்களாம். எனக்கு கை சரியாகி எழுதும் நிலைக்கு வர ஒரு மாதம் வரை ஆகி விட்டது. அந்த மாடு மேய்ப்பவர்கள் மாடுமட்டும் மேய்த்திருந்தால் பிரச்சினை இல்லை.

அதே மாதிரி மனநிலை சரியில்லாத ஒருவரை மனநோய் கிசிக்சைக்கு ஆட்படுத்தாமல், அவரை பொதுவிலே விட்டு வைத்தது சம்பந்தப்பட்டவர் மற்றும் இப்போது வருத்தப்படுவர் தவறு.

மனநிலை சரியில்லாத ஒருவரை வெளியில் விட்டது முதல் தவறு.
அப்படி அவர் முதலிலே சில தவறுகள் செய்யும் போது பொதுமக்கள் வேடிக்கை பார்த்து மடக்கி பிடிக்காமல் அடுத்தடுத்து செய்ய விடுவது மற்றொரு தவறு.
அப்படி தப்பித்து ஓடுபவரை விரட்டி நீதியின் பால் ஓப்படைக்காமல், தாங்களே பதிலுக்கு தாக்கியது மாபெரும் தவறு.

ஆனால் இவரை தாக்கி தண்டனை தந்து அவர் இறந்த பின் தான் தாக்கியவர்கள் அவர் மனநோயாளி என்று அறிந்திருக்க முடியும் அதுவரை அவர் போதையில் இருந்தார் என்றோ சமுதாயத்தின் மேல் ஆத்திரப்பட்டு தகாத செயல் செய்பவராகவே நினைப்பார்கள்.

நான் நேரிலே நேற்று கண்டது:
எங்கள் நகரத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பலர் ஆட்டோக்களிலும், டூவிலர்களிலும் கையில் ஆளுக்கொடு குச்சியை வைத்து கொண்டு வருவோர் போவரை மிரட்டியும், எந்த போக்குவரத்து சிக்னல்களை மதியாமல் இஸ்டம் போல் கத்திகொண்டு வாகனங்களை இடித்தும் சேட்டை செய்தனர். இப்படி வரிசையாக சென்றதில் கடைசியில் ஒரு இருசக்கரவாகனத்தில் இரண்டு பேர் கெட்டவார்த்தையை உரக்க சொல்லிக்கொண்டே சிக்னலை மதிக்காமல் வேகமாக குறுக்கே சென்று சறுக்கி விழுந்தனர். அநேகர் தத்தம் வண்டியை நிறுத்தி ஓடினார்கள். நானும் ஆஹா அவர்களை தூக்கி விடத்தான் செல்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்த இருவருக்கும் அடி உதை மிதி வசவு, அந்த டூவிலரை மிதித்து உடைத்து துவம்சம் செய்தனர். பாதிக்கப்பட்ட இருவரையும் அதுவரை வேடிக்கை பார்த்த போலிசார் காப்பாற்றி வண்டியை தூக்கி கொடுத்து வீட்டிற்கு செல்லுமாறு சொல்லி வந்த வழியே திருப்பி விட்டனர்.


எனக்குத்தெரிந்த வரை பப்ளிக்கிலே ஒருவர் அத்து மீறும் போது அவரை செம்மையாக கவனிக்க வேண்டும் என்ற வெறி அநேக பொதுமக்கள் மனதில் இருக்கிறது.

குணமதி
15-11-2009, 01:34 AM
ஏதோ ஒரு காரணத்திற்காக, யாராவது கிடைத்தவரைத் தாக்க வேண்டுமென்ற வெறி ஒரு மன நோயே.

அமரன்
16-11-2009, 05:34 AM
நிலை உணர்ந்து அமைதி காத்தால் எல்லாமே எல்லை மீறுகிறது. இனியும் அப்படி இருக்க இயலாது. தமிழ் மன்றம் தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் மட்டுமல்லாது ஒட்டு மொத்த உலகுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் கவலைப்படல் வேண்டும். உலக ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும். இன்னும் பல பல வேண்டும்கள் இருக்க, மன்றத்தின் நெறிகள் தெளிவாக இருக்க அதை எல்லாம் பாராமுகம் பாராட்டி பதிவுகள் வருவது ஆரோக்கியமானதல்ல.

அதனால், இங்கிருந்த மன்ற நெறிக்கு முரணான பதிவுகள் அகற்றப்பட்டு ஒரு பதிவருக்கு ஒரு மாத காலத்துக்கு 5 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

மன்றத்தின் நாங்கள் எந்த இனத்தவனாகவோ எந்த மதத்தவனாகொவோ எந்த தேசத்தவனாகவோ வருவோம். ஆனால் நேயம்மிக்க மனிதனாகப் பேசுவோம்.. பழகுவோம்.. நடப்போம்.

அனைவரின் புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி.

-பொறுப்பாளர்.

வியாசன்
16-11-2009, 09:53 AM
[QUOTE=அமரன்;440618]நிலை உணர்ந்து அமைதி காத்தால் எல்லாமே எல்லை மீறுகிறது. இனியும் அப்படி இருக்க இயலாது. தமிழ் மன்றம் தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் மட்டுமல்லாது ஒட்டு மொத்த உலகுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் கவலைப்படல் வேண்டும். உலக ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும். இன்னும் பல பல வேண்டும்கள் இருக்க, மன்றத்தின் நெறிகள் தெளிவாக இருக்க அதை எல்லாம் பாராமுகம் பாராட்டி பதிவுகள் வருவது ஆரோக்கியமானதல்ல.
QUOTE]

சத்தியமான வார்த்தைகள் அமரன் .தமிழ் மன்றமானது விளையாட்டுக்களுக்கும் விடுகதைகளுக்குமான ஒரு மன்றமாக இருக்ககூடாது. முதலில் இனத்தவன் அடுத்தது மனிதநேயம் இதில் கருத்துவேறுபாடுகள் இருக்கமுடியாது. தன் இனத்தவனைப்பற்றி தமிழ் மன்றம் பேசாமல் இருக்குமாயின் தமிழ் மன்றம் என்ற பெயரை வைத்திருக்க தேவையில்லை. தமிழன் இருந்தால்தான் தமிழை வாழவைக்கமுடியும்.

குணமதி
16-11-2009, 03:06 PM
[QUOTE=அமரன்;440618]நிலை உணர்ந்து அமைதி காத்தால் எல்லாமே எல்லை மீறுகிறது. இனியும் அப்படி இருக்க இயலாது. தமிழ் மன்றம் தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் மட்டுமல்லாது ஒட்டு மொத்த உலகுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் கவலைப்படல் வேண்டும். உலக ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும். இன்னும் பல பல வேண்டும்கள் இருக்க, மன்றத்தின் நெறிகள் தெளிவாக இருக்க அதை எல்லாம் பாராமுகம் பாராட்டி பதிவுகள் வருவது ஆரோக்கியமானதல்ல.
QUOTE]

சத்தியமான வார்த்தைகள் அமரன் .தமிழ் மன்றமானது விளையாட்டுக்களுக்கும் விடுகதைகளுக்குமான ஒரு மன்றமாக இருக்ககூடாது. முதலில் இனத்தவன் அடுத்தது மனிதநேயம் இதில் கருத்துவேறுபாடுகள் இருக்கமுடியாது. தன் இனத்தவனைப்பற்றி தமிழ் மன்றம் பேசாமல் இருக்குமாயின் தமிழ் மன்றம் என்ற பெயரை வைத்திருக்க தேவையில்லை. தமிழன் இருந்தால்தான் தமிழை வாழவைக்கமுடியும்.

உண்மைதான்.