PDA

View Full Version : வந்திங்கே விடையிதற்கு வழங்குவாயே!



குணமதி
30-10-2009, 12:17 PM
சோலைகொண்ட இதுநாட்டின் அரசனில்லை!

சுணையுண்டு பூசுணைக்காய் தானுமில்லை!

ஆலையிலே அரைக்கவரும் தவசமில்லை!

அருஞ்சுவையை இனிதளிக்கும் தேனுமில்லை!

கோலினிலே சாறாகும் கள்ளுமில்லை!

கொப்பறையிற் கொண்டுவிடும் எண்ணெயில்லை!

வாலையெனும் பருவமுள வண்ணமானே

வந்திங்கே விடையிதற்கு வழங்குவாயே!

(தவசம் = தானியம்)

ஜனகன்
30-10-2009, 12:24 PM
கரும்பு

வானதிதேவி
30-10-2009, 12:48 PM
ஆலைக்கரும்பு

வியாசன்
30-10-2009, 03:50 PM
கரும்புதான்

aren
30-10-2009, 04:34 PM
கரும்பு என்று எல்லோரும் சொல்லிவிட்டபிறகு நான் என்ன சொல்வதற்கு இருக்கு

குணமதி
30-10-2009, 05:11 PM
அனைவர்க்கும் நன்றி.

கரும்பு - சரியான விடையே!

பா.ராஜேஷ்
30-10-2009, 05:49 PM
இவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டீர்களே, மக்களே! பாராட்டுக்கள் !!!

குணமதி
30-10-2009, 05:52 PM
இவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டீர்களே, மக்களே! பாராட்டுக்கள் !!!

ஆம். விடுகதைக்கு விடை காண்பது இப்போது எளிதாகிவிட்டது.
நன்றி.

ஜனகன்
30-10-2009, 08:11 PM
அனைவர்க்கும் நன்றி.

கரும்பு - சரியான விடையே!

அப்போ நான் சொன்னது சரிதான்:icon_b:
எனக்கு ஒரே சந்தோசம். ஜாலிதான்:wuerg019:

arun
31-10-2009, 04:50 AM
நான் சொல்றதுக்குள்ளேயே எல்லாரும் சொல்லிட்டாங்கய்யா :icon_rollout: :icon_rollout:

குணமதி
01-11-2009, 04:00 AM
நான் சொல்றதுக்குள்ளேயே எல்லாரும் சொல்லிட்டாங்கய்யா :icon_rollout: :icon_rollout:

கவலைப்படாதீர்கள். அடுத்தமுறை முதலில் சொல்லலாம்.

நன்றி.