PDA

View Full Version : !!!உனக்கும் வேண்டுமா சுதந்திரம்!!!!!



இன்பக்கவி
30-10-2009, 05:15 AM
காற்றுக்கு கூட சீறி வீசும் புயலாய்
கடல் கூட பொங்கி எழும் சுனாமியாய்
பூமிக் கூட வாய் பிளக்கும் பூகம்பமாய்
யானைக்கு மதம் பிடித்தால்
பாகனே இரையாவன்...
கண் முன்னே பல அநீதிகள்...
கண் இருந்தும் குருடர்களாய்
வாய் இருந்தும் ஊமையாய்
மக்கள்....

தண்ணிக்கு பிச்சை எடுக்கும்
நாடு..
ஆள ஒரு அரசியல்...:mad:
இளைஞர்கள் முகம்
காண முடியாத ஒரு மாமன்றம்...

குடும்பத்தையே ஒரு கட்டுக்குள்
வைக்க முடியாமல்
நாட்டை காக்க புறப்படும்
முதுகு எலும்பு இல்லாத
முதியவர் கூட்டம்...

எழுந்து நடக்க முடியாத நிலை...
உனக்கு மட்டுமா..
எம் நாடும் என்று வரை
எழுந்து நிற்க முடியவில்லை....

தமிழனே
தமிழனை கொன்றான்
வரலாற்றில் மறைக்க முடியாத
உண்மை...
மார்த்தட்டிக்கொள்
நீயும் ஒரு தமிழன் என்று.....:mad::mad:

எம் மக்கள் தண்ணிக்கு
அரை கூவல் கொடுக்கும் நிலை...
சென்று வந்த நீயோ..
எதை பார்த்து வந்தாயோ???
ஒரு தகவலும் வரவில்லை...
கை நிறைய பரிசு பொருட்கள்
கண்டோம்....

கண் முன்னே கண்டோம்
கயவர் கூட்டம் எது என்று..
நேரில் கண்டால் சுட்டு
வீழ்த்துவேன் என்றான் ஒருவன்...
நேரில் சென்று வாய் நிறைய
பல்லை காட்டி
எம்மை இளிச்சவாயன் ஆக்கினான்...
பணத்துக்காக வேஷம் போடும்
வேசியாய் ஆனான்....

ஆடம்பர அறையில்
அரைகுறை ஆட்டம் போட்டு
ஆடை இழந்து இருக்கும்
நடிகைகளின் அந்தரங்கத்தை
அம்பல படுத்த முடியாமல்
ஆர்ப்பாட்டம் இட்டனர்....
பத்திரிகை சுதந்திரம்
பறிப்போனது என்று..

வெட்ட வெளியில்
கஞ்சிக்கு
கை ஏந்தி நிற்கும்
உறவுகளின் அவலங்கள்
வெளிக் காட்ட முடியாத
உனக்கும் வேண்டுமா
சுதந்திரம்.....:.....:sauer028::mad:

கா.ரமேஷ்
31-10-2009, 05:04 AM
உங்களது கோபம் சரிதான்...

நமது சுதந்திரத்தை காட்ட வேண்டிய இடங்களில் காட்ட மறந்து விடுகிறோம் அதானாலேதான் சுதந்திரமில்லாதவர்களாய் நிர்வணியாக்க படுகிறோம்...

பக்கத்து மாநிலங்களில் குடிநீருக்காக கையேந்துகிறோம் அவர்கள் தருவதில்லை.. ஆனால் நமக்கு மின்சாரம் தடைபட்டாலும் மற்ற மாநிலங்களுக்கு வழங்குவதை தடை செய்வதில்லை...
எப்பொழுது நாம் சரியாக இருக்கிறோமோ அபொழுதுதான் அரசும் சரியானதாக இருக்கும் எல்லா விசயங்களிலும்...

aren
31-10-2009, 08:43 AM
நல்ல கவிதை. ஆனால் இதனை படிக்கவேண்டியவர்கள் படிக்க வேண்டுமே.

ஆமாம், அவர்கள் இப்பொழுது மிகவும் பிஸியாக பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள் அரசியலில்.

சுகந்தப்ரீதன்
02-11-2009, 11:40 AM
சபாஷ்... சரியான சாட்டையடி கவிதை கவிதா...!! பாராட்டுக்கள்..!!

பொதுவாழ்வில் சுயநலவாதிகளின் சூழ்ச்சியும் ஆட்சியும் அதிகரிக்கும்போது பொதுமக்களால் என்னத்தான் செய்ய முடியும்.. அடிமைப்பட்டு கிடப்பதை தவிர..??

இதில் என்னக்கொடுமை என்றால், "தாங்கள் விட்டில்பூச்சிகளாய் இவர்களின் சித்துவிளையாட்டில் சிக்கிக்கொண்டிருக்கிறோம்" என்ற உணர்வே மக்களுக்கு தோன்றாத அளவுக்கு அவர்களது சிந்தனை முழுமையாக மழுங்கடிக்கப்பட்டிருப்பதுதான்..!!

சிந்தனை எழுச்சி பெற்று மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இதற்க்கெல்லாம் விடிவு கிடைக்கும்..!! விடியல் வருமா.. வரத்தான் விடுவார்களா.. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்..!!

என்றைக்குமே அநீதிகள் அதிககாலம் நிலைத்துநின்றதுமில்லை... இனி நிற்கபோவதுமில்லை..!!

இன்பக்கவி
06-11-2009, 04:53 AM
நன்றிகள்
ரமேஷ், சுகந்தப்ரீதன், அரேன் சமீபத்தில் ஒரு நடிகையை வைத்து பத்திரிகைகள் போட்ட ஆட்டம் தாங்க முடியவில்லை
இதற்காக பெரிய போராட்டம். நாட்டுக்கு ரொம்ப தேவை
தானா?

ஜனகன்
06-11-2009, 06:28 AM
மக்கள் நலனுக்குத்தான் அரசு. அரசு நலனுக்கு மக்கள் அல்ல இது போன்ற அரசு வேண்டுமா என்பதை, வாக்குச்சீட்டுக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
நல்ல கவிதை வரிகள்.பாராட்டுக்கள் :icon_b: