PDA

View Full Version : அந்த ஒரு குப்பியில் இல்லை உலகம்



Ravee
29-10-2009, 04:01 PM
அந்த ஒரு குப்பியில் இல்லை உலகம்




http://www.uky.edu/~jkerr0/assets/images/injecting_drug_user5.jpg


உன் உள்ளத்தை போல
உலகம் இன்னும்
சுருங்கி போகவில்லை
இன்பங்கள் எல்லாம்
அந்த ஒரு குப்பியில்
இருப்பதாக எண்ணினாயா ,
இல்லை உன்னை சுற்றி
இருப்பது எல்லாம் இன்பம் தான்
கைகளை இறுக்கி பிடிப்பதை விட்டு
உயர்த்தி பிடி
உலகம் தெரியும்
உண்மைகள் புரியும்

நேசம்
29-10-2009, 05:58 PM
அதை புரியமால் தான் இந்த சிற்றின்பத்தில் மாட்டி கொள்கிறார்கள்.நல்ல கருத்து ரவீ

ஜனகன்
29-10-2009, 11:04 PM
இதற்கு அடிமையானவர்கள் மீண்டு வெளி வருவது மிகவும் கடினம். மனிதன் தானே போதையை உண்டுபண்ணினான், போதை மனிதனை உண்டுபண்ணியதா?

குணமதி
16-11-2009, 01:25 AM
சொல்ல வேண்டிய ஆக்கமான கருத்து.

jbala
16-11-2009, 02:53 AM
அந்த ஒரு குப்பியில் இல்லை உலகம்


இது எல்லா குப்பிகளுக்கும் பொருந்தும் தானே.

குப்பிகளின் அளவு மாறினாலும் கெடறதென்னவோ குடி தான்.
நல்லா தான் ஊதி இருக்கீங்க செவிடன் காதில் சங்கு.

இளசு
16-11-2009, 08:29 PM
அவசிய கருத்து.

பாராட்டுகள் ரவீ..

பா.ராஜேஷ்
20-11-2009, 01:16 PM
தூங்கியது போதும் என எழுப்பும் கவிதை... எழுவார்களா!??

குணமதி
22-11-2009, 06:48 AM
குப்பிக்குள் மூழ்கிக் குமைவோர் கரையேற உறுதியும் மனவலிவும் தர சிறு முயற்சி.

பாராட்டுக்குரியது.

Ravee
22-11-2009, 06:57 AM
பாலா,குனமதி ,ராஜேஷ் இளசு அவர்களே குப்பியின் அளவு சிறிதாக சிறிதாக விலையும் விஷத்தன்மையும் அதிகமாகத்தான் செய்கிறது.ஆனால் கிடைக்கும் போதை என்னவோ அவர்களுக்கு பெரிதாக தெரிகிறது.

அமரன்
27-11-2009, 09:30 PM
குப்பி விளக்குகள்..
சட்டென்று அணைந்து விடும்..

அபாயச் சங்கொலித்துள்ளீர்கள்.

பாராட்டுகள்.

muthuvel
23-12-2009, 03:04 PM
தூங்கியது போதும் என எழுப்பும் கவிதை... எழுவார்களா!??

அருமை