PDA

View Full Version : கூர்மதியால் கூறுவாயே!



குணமதி
27-10-2009, 01:00 PM
மஞ்சள்நிறம் மெய்யணியும் மடந்தையில்லை!

மணம்வீசி மயக்குமது மங்கையில்லை!

கொஞ்சிபலர் கையேறும் குழந்தையில்லை!

கொடுப்பார்கள் கையினிலே பணமுமில்லை!

பிஞ்ஞகன்மார் மேலாடும் பாம்புமில்லை!

பிரியமுடன் அருந்திடுவார் மதுவுமில்லை!

கொஞ்சுகிளி மொழியணங்கே பருவமானே,

கூர்மதியால் என்னென்று கூறுவாயே!


(பிஞ்ஞகன் = சிவன்)

வானதிதேவி
27-10-2009, 01:17 PM
சந்தனம்.சரியா நண்பரே.

பா.ராஜேஷ்
27-10-2009, 03:12 PM
சந்தானம் கீழ்கண்ட வரிக்கு பொருந்துவாதாய் தோன்ற வில்லையே!

"பிரியமுடன் அருந்திடுவார் மதுவுமில்லை!"

குணமதி
27-10-2009, 04:34 PM
சந்தனம்.சரியா நண்பரே.

ஏதோ ஓர் உருவில் அருந்தக் கூடியதாக இருக்க வேண்டுமே!

முயற்சி செய்ததற்கு நன்றி.

மறுபடியும் முயலுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குணமதி
27-10-2009, 04:36 PM
சந்தானம் கீழ்கண்ட வரிக்கு பொருந்துவாதாய் தோன்ற வில்லையே!

"பிரியமுடன் அருந்திடுவார் மதுவுமில்லை!"


சரியாகச் சொன்னீர்கள்.

முயற்சி செய்யுங்கள் நண்பரே.

aren
27-10-2009, 04:48 PM
பூ

ஆனால் இதை எப்படி குடிப்பார்கள்.

aren
27-10-2009, 04:50 PM
பழமாகவும் இருக்கலாம்

ஜனகன்
27-10-2009, 04:51 PM
மாம்பழம்

வியாசன்
27-10-2009, 07:20 PM
பஞ்சாதமிர்தமா?

குணமதி
28-10-2009, 02:52 AM
பழமாகவும் இருக்கலாம்


நெருங்கிவிட்டீர்கள்.

குணமதி
28-10-2009, 02:53 AM
மாம்பழம்

கொஞ்சம் மாற்றிச் சிந்தியுங்கள்.

குணமதி
28-10-2009, 02:56 AM
பஞ்சாதமிர்தமா?

நல்ல முயற்சி.

நன்றி.

வானதிதேவி
28-10-2009, 10:32 AM
கண்டுபிடித்தேன் பானம் சரியா நண்பரே

விகடன்
28-10-2009, 10:50 AM
நல்ல நொடிதான். தொடருங்கள்.

பஞ்சாதமிர்தமா?

நல்ல முயற்சி.

நன்றி.



கண்டுபிடித்தேன் பானம் சரியா நண்பரே

வியாசன் சொல்லி பாராட்டும் வாங்கிவிட்டார் வானதி

வியாசன்
28-10-2009, 01:12 PM
நல்ல நொடிதான். தொடருங்கள்.



வியாசன் சொல்லி பாராட்டும் வாங்கிவிட்டார் வானதி

குணாமதியின் பதிவை முதலில் பார்த்தது நான்தான் இதுவிடையாக இருக்கலாமென்று நினைத்ததேன். ஆனால் இந்த வரிகள்
என்னை குழப்பிவிட்டது.

பிஞ்ஞகன்மார் மேலாடும் பாம்புமில்லை!
அதனால் தயக்கத்துடன் பதிலளிக்காது விட்டுவிட்டேன் குணாமதி தொடருங்கள் இருக்கின்ற கொஞ்ச மூளைக்கு நல்லவேலை அத்துடன் தமிழையும் கற்கமுடிகின்றது.

பா.ராஜேஷ்
28-10-2009, 03:44 PM
நல்ல முயற்சி என்றுதானே சொன்னார். சரியான விடை என்று பாராட்டியதாக தெரியவில்லையே!!

விகடன்
28-10-2009, 04:12 PM
ஓ...
அப்படியும் ஒன்றிருக்கிறதா???

ஜனகன்
28-10-2009, 04:46 PM
நல்ல முயற்சி என்றுதானே சொன்னார். சரியான விடை என்று பாராட்டியதாக தெரியவில்லையே!!

அப்போ சரியான விடை தான் என்ன :confused:

குணமதி
28-10-2009, 05:37 PM
முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி.

சரியான விடை : எலுமிச்சம்பழம்.

மீண்டும் நன்றி.

வியாசன்
28-10-2009, 06:01 PM
ம்.................... ஏமாந்துவிட்டேன்

குணமதி
28-10-2009, 06:26 PM
ம்.................... ஏமாந்துவிட்டேன்

நன்றி வியாசன்.

அடுத்த விடுகதைக்கு எளிதாக விடை கண்டுபிடித்து விடுவீர்கள்.