PDA

View Full Version : காணிக்கை போட்ட திருடன்: காட்டிக்கொடுத்தார் கடவுள்!



பா.ராஜேஷ்
27-10-2009, 10:59 AM
பாட்டியாலா: திருடிய பணத்தில் ஒருபங்கை, கோவில் உண்டியலில் காணிக்கை செலுத் திய திருடனை காட்டிக்கொடுத்து விட்டார் கடவுள். என்னது, கடவுள் காட்டிக் கொடுத்தாரா என்று நீங்கள் சந்தேகிக்க வேண்டாம்; உண்மையில் நடந்த சம் பவம் இது.


பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா நகரை சேர்ந்தவன் ஹித்தேஷ் சர்மா; கூட்டாளிகள் ஆறு பேருடன் சேர்ந்து ஸ்டேட் பாங்க் கிளையில் பல லட்சம் கொள்ளையடித்தான். கொள்ளை அடித்த பணத்தில் 10 சதவீத தொகையை உள்ளூர் காளி கோவிலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அதன்படி, வங்கியில் கொள்ளையடித்த பணத்தில், மூன்றரை லட்சத்தை காளி கோவில் உண்டியலில் செலுத்த சர்மா முடிவு செய்தான். அதன்படி, சர்மா வெள்ளை நிற குர்தா, பைஜாமா அணிந்து கொண்டு, பணத்துடன் கோவிலுக்கு சென்றான்; அங்குள்ள உண்டியலில் காணிக்கை பணத்தை போட்டான்.


பணக் கட்டுகளை உண்டியலில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டான்; கட்டுக்களை போடுவதை பார்த்த மற்ற பக்தர்கள் வியப்படைந்தனர். இவனது பெருந்தன்மையை புகழ்ந்து பூசாரிகள் மந்திரங்கள் ஓதினர். இந்த புகழ் மழையில் நனைந்த சர்மா, உண்டியல் இருந்த அறையில் மேலே சுழன்று கொண்டிருந்த சி.சி.டி.வி.,கேமராவை கவனிக்கவில்லை. காணிக்கை செலுத்தும் போது அவன் பல கோணங்களில் கேமராவால் படம்பிடிக்கப்பட்டான்.


கேமரா பதிவுகளை இன்னொரு அறையில் இருந்து கண்காணித்து வந்த போலீசார் உடனே உஷாராயினர். அவனை பின் தொடர்ந்து மடக்கிப்பிடித்து சிறையில் அடைத்தனர். அவனிடம் விசாரணை செய்ததை அடுத்து, மற்ற ஆறு பேரையும் கைது செய்தனர். வீடியோ கேமரா ஆதாரங்களை கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர். காணிக்கை பணத்தை திருப்பி ஒப்படைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நன்றி: தினமலர்

வியாசன்
27-10-2009, 11:41 AM
இதுக்குத்தான் சொல்கிறது திருட்டுக்கு கூட்டு சேர்க்ககூடாது என்று. அதிலும் கடவுளை சேர்க்ககூடாது

பா.ராஜேஷ்
27-10-2009, 02:32 PM
இதுக்குத்தான் சொல்கிறது திருட்டுக்கு கூட்டு சேர்க்ககூடாது என்று. அதிலும் கடவுளை சேர்க்ககூடாது

சரியா சொன்னீங்க வியாசன்!!

அறிஞர்
27-10-2009, 03:16 PM
என்ன பக்தி.....
பாவம்... அந்த பக்த திருடன்....

பா.ராஜேஷ்
27-10-2009, 03:20 PM
பக்தி மற்றும் நேர்மை! ஆச்சரியமாகத்தான் இருக்கிறது அண்ணா!

praveen
27-10-2009, 03:28 PM
இப்படித்தான் அநேகர் தப்பு செய்துவிட்டு அதனை நிவர்த்தி செய்ய கடவுளுக்கு ஏதாவது செய்தால் பாவம் வராது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தமிழ்ப்படத்தில் கூட கொள்ளையடிப்பதை குலத்தொழிலாக கொண்டிருக்கும் ஒரு கூட்டம், கொள்ளையடிப்பதில் முதலில் வருவதை கடவுளுக்கு அர்ப்பனிப்பதாக பார்த்தேன். படம் பெயர் நியாபகம் வரவில்லை :)

வியாசன்
27-10-2009, 03:40 PM
புராணக்கதைகளில் திருடர்களுக்கு அருள்செய்த இறைவன் அந்த பக்தனை கைவிட்டுவிட்டாரே. அப்படியானால் கடவுளை நம்பினோர் கைவிடப்படுவாரா?

aren
27-10-2009, 03:48 PM
அதுக்குத்தான் ஆத்திலே போட்டாலும் அளந்து போடு என்று நம் ஆட்கள் சொன்னார்கள்.

பணத்தை உண்டியலில் போடுபவன் ஒரே நாளிலா அத்தனை பணத்தையும் போடுவார்கள்.

திருப்பதி மாதிரியான பெரிய கோயில்களில் இந்த அளவு பணம் போடுவது சர்வ சாதாரணம், ஆனால் இந்த மாதிரி சின்ன கோவில்களில் வருடம் முழுவதும் சேர்த்தே இவ்வளவு பணம் உண்டியலில் சேராது.

இனிமேலாவது மக்கள் கொஞ்சம் கவனத்துடன் உண்டியலில் பணத்தைப் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ஜனகன்
27-10-2009, 04:34 PM
கமரா இல்லா விட்டால் அன்று பூஸாரிக்கு நல்ல கொண்டாட்டம்தான்.

aren
27-10-2009, 04:54 PM
கமரா இல்லா விட்டால் அன்று பூஸாரிக்கு நல்ல கொண்டாட்டம்தான்.

உண்டியலில் போட்டதை பூசாரி எடுக்கமுடியாது, ஆனால் தர்மகர்த்தா எடுத்துவிடுவார். ஆகையால் காமரா இல்லாவிட்டால் தர்மகர்த்தாவிற்கு கொண்டாட்டம்தான்.

பா.ராஜேஷ்
27-10-2009, 05:10 PM
உண்டியலில் போட்டதை பூசாரி எடுக்கமுடியாது, ஆனால் தர்மகர்த்தா எடுத்துவிடுவார். ஆகையால் காமரா இல்லாவிட்டால் தர்மகர்த்தாவிற்கு கொண்டாட்டம்தான்.

ஆனால் தர்மகர்த்தாவால் பங்கு கொடுக்காமல் கையாள இயலாதே! :D அந்த வகையில் பூசாரிக்கும் லாபம் தானே !!

ஜனகன்
27-10-2009, 10:36 PM
ஆனால் தர்மகர்த்தாவால் பங்கு கொடுக்காமல் கையாள இயலாதே! :D அந்த வகையில் பூசாரிக்கும் லாபம் தானே !!

சரியாய் சொன்னீர்கள் ராஜேஷ் :icon_b:

சிறுபிள்ளை
28-10-2009, 06:15 AM
அனாலும் அவனோட நேர்மைய பாராட்ட்றேன். தப்பு செஞ்சா தண்டனை நிச்சயம்.

அன்புரசிகன்
28-10-2009, 08:04 AM
அப்பாவிகளை (கடவுள்) கூட்டுச்சேர்த்ததற்கு அனுபவிக்கவேண்டும் தானே...... (நம்மூரில் சர்மா என்று பெயர் முடிந்தால் அவர்கள் பூசாரிகள் என்பார்கள். இந்தியாவில் அவ்வாறு இல்லையா???)

samuthraselvam
28-10-2009, 08:34 AM
கடவுளுக்கு நன்றியே இல்லை..... ஹா ஹா...

உப்பு தின்னா தண்ணி குடிக்கணும்.... தப்பு செய்த காணிக்கை போடணும்...

அப்பதானே தண்டனை கிடைக்கும்....