PDA

View Full Version : ஒளவையார் பாட்டில் பொருட்குற்றம்

சொ.ஞானசம்பந்தன்
27-10-2009, 03:07 AM
ஒளவையார் பாட்டில் பொருட்குற்றம்

குறைந்தது மூன்று புலவர்கள் வெவ்வேறு காலங்களில் ஒளவையார் என்ற பெயரில் வாழ்ந்திருக்கிறார்கள்.

தகடூர் (இன்றைய தர்மபுரி) குறுநில மன்னன் அதியமானைப் புகழ்ந்து பாடல் பல புனைந்த முதல் ஒளவையார் அவனுடைய மகன் பொகுட்டெழினியின் ஆட்சியிலும் அங்கே வசித்துள்ளார். அவரைச் சங்க கால ஒளவையார் எனலாம்.

அடுத்தவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலிய நீதி நூல்களின் ஆசிரியர்.

அவருக்குப் பிந்தியவர் பல தனிப்பாக்கள் இயற்றியிருக்கிறார். முருகனுடன் உரையாடி அவன் கோரியவாறு பாடினார் எனக் கதையுண்டு.

அவ்விதம் பாடியவற்றுள் ஒன்று கொடுமை பற்றியது:

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினுங் கொடிது இளமையில் வறுமை
அதனினுங் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்

என்று மிகப் பொருத்தமான கருத்துகளை மொழிந்த அவர் வேறிரு பாட்டுகளில் சறுக்கிவிட்டார்.

ஒன்று பெரியவை குறித்தது. சிறியதில் தொடங்கி மேலே மேலே பெரியதுக்குப் போகிறது. பெரிது என்பதைப் புலவர் உருவங்கருதி வரையறுக்கவில்லை. பெருமையுடையது, ஆற்றல் மிக்கது என்ற கருத்தைத்தான் கவனத்தில் கொண்டுள்ளார். தக்க சமயத்தில் செய்த உதவி ஞாலத்தினும் பெரியது என்று குறள் கூறுகிறது அல்லவா? அது போன்றே ஒளவையார் அடுக்குகிறார்.

பாடலைப் பார்ப்போம்:

பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமால் அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனி கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்

என்று அது நீள்கிறது.

முதலில் புவனம், அதாவது உலகம். அதைப் படைத்த நான்முகன் (நான்கு முகமுடைய பிரமன்) அதைவிடப் பெரியவன். இவன் கருநிறத் திருமாலின் தொப்புளில் பிறந்தவனாதலால் இவனைக் காட்டிலும் திருமால் பெரியவர். இவர் கடலில் பள்ளி கொள்வதால் இவரைப் பார்க்கிலும் கடல் பெரிது. குள்ளமுனியாம் அகத்தியன் தன் அங்கையில் (உள்ளங்கையில்) கடல்நீர் முழுதையும் ஏந்திப் பருகிவிட்டதாய்க் கதை இருப்பதால் அகத்தியன் பெரியவன். அவன் பிறந்த மண்சட்டி அவனைவிடப் பெரியது. இது புவியின் (உலகின்) கொஞ்ச மண்ணால் வனைந்தது. எனவே கலசத்தை நோக்க உலகம் பெரியது.

அடக்கஷ்டமே! முதற்கட்டத்துக்கே திரும்பிவிட்டோமே! அதாவது புறப்பட்ட இடத்தில் வந்து நிற்கிறோம். 1,2,3,4 என்று எண்ணிக்கொண்டு போய் 1 என முடிந்தது போலல்லவா ஆகிவிட்டது?
சிலர் சொல்லலாம், இங்கே புவி என்பது உலகத்தை விடப் பெரியதான பிரபஞ்சம் என்று. இது தவறு என்பது அடுத்த அடியைப் படித்தால் தெரியும்.

புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்.

ஆயிரந்தலை ஆதிசேடன் என்னும் பாம்பு தன் ஒரு தலையால் உலகைத் தாங்குகிறது என்று புராணம் சொல்கிறதேயொழியப் பிரபஞ்சம் பற்றிப் பேச்சில்லை. எனவே புவி என்பது உலகந்தான்.

இவ்வாறு தடுமாற்றக் கருத்துகளைக் கூறுகிறது ஒரு பாடல்.

அடுத்ததைப் பார்ப்போம். அரியனவற்றை இது எடுத்தியம்புகிறது.

அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.

என்று தொடக்கத்திலேயே பிழையான தகவல்கள்!

மானிடராதல் அரிதல்ல! மக்கள் தொகை பயங்கரமாகப் பெருகுகிறது.

ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு 'முப்பது கோடி மக்களின் சங்கம்' என்று பாரதியார் பாடியபோது பாரத மக்கள் 30 கோடி பேர். மூன்றாய்ப் பிரிந்துவிட்ட நாட்டின் மக்கள் தொகை 2005 இல்:
இந்தியா ------ 110 கோடி
பாக்கிஸ்தான்----- 15 கோடி
பங்களாதேசம் - 14 கோடி
------------------------------------
--------------------- 139 கோடி
-----------------------------------
100 ஆண்டில் 6 மடங்குக்கு மேல் உயர்ந்துவிட்டது.

1970 இல் 360 கோடியாய் இருந்த உலகமாந்தர் தொகை 2006 இல் 660 கோடி என வளர்ந்து பிப்ரவரி 2009 இல் 670 கோடியை எட்டிவிட்டது. மானிடர் ஆதல் மிக எளிதாக இருப்பதால்தானே இந்தப் பிரமாண்ட பெருக்கம்? இப்படிப் பூதாகரமாகப் பெருகுகிற மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து உலகமெங்கும் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆயினும் முழுப்பயன் கிட்டவில்லை.

இவ்வாறு மனித உற்பத்தி கட்டுக்கடங்காமல் அபரிமிதமாக அதிகரித்துக் கொண்டிருக்கையில் வேறு பல உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அழிவின் விளிம்பில் இருக்கிற விலங்குகள், பறவைகளை உலகம் சரணாலயங்கள் அமைத்துப் பராமரிக்க வேண்டியதாகிவிட்டது.

1930 இல் 50 லட்சத்துக்கு மேல் இருந்த ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை 1979 இல் 13 லட்சமாய்க் குறைந்து 1989 இல் 6 லட்சமாய்த் தாழ்ந்துவிட்டமையால் அழியப்போகிற உயிரினங்களின் பட்டியலில் அவை இடம் பெற்றுள்ளன.

வேறு விலங்குகளும் மறைந்து வருகின்றன.

100 ஆண்டுகளுக்கு முன் ------தற்போது

பெரும் பாண்டாக்கரடி -----65,000 ----------- 650
நீலத்திமிங்கலம் ----- 33,500 ----------- 4,000
மலைக்கொரில்லா ---------85,000 ------------ 500

இவற்றோடு இந்தியச் சிங்கங்களையும், புலிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

எத்தனையோ வகை உயிரினங்கள் அழிந்தே விட்டன. காட்டுகள்: மம்மூத், டைனோசோர், மருதமரம்.

(தமிழ் நாட்டு நீர் வளப் பகுதிகளில் ஒரு காலத்தில் நெடிதோங்கி வளர்ந்து நின்று அப்பகுதிகளுக்கு மருதம் எனத் தன் பெயரைத் தந்த மருதமரம் இன்றில்லை என்று தாவரவியல் அறிஞர் பி.எல்.சாமி "சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்" என்னும் தம் நூலில் தெரிவித்திருக்கிறார்.)

ஆதலால் மம்மூத், டைனோசோர், மருதமரம் ஆவது இயலவே இயலது. சிங்கம், புலி, மலைக்கொரில்லா முதலிய விலங்குகளாதல் அரிதரிது. மானிடராதலோ மிகவும் எளிது.

மானிடர் பற்றி இவ்வாறு தவறான தகவல் தந்த ஒளவையார் உடற்குறைபாடு உடையோர் மிகுதி என்ற தப்பான இன்னொரு செய்தியையும் தெரிவிக்கிறார். நம் அக்கம்பக்கத்தார், உறவினர், நண்பர், நாம் அன்றாடம் கடைத்தெருவில் சந்திக்கிற பலதரப்பட்ட மக்கள் ஆகியோருள் ஊனமுற்றோர் எத்தனைப் பேர்? மிக மிகக் கொஞ்சம். அதிகக் குறைபாடுள்ள கருக்களை வளரவிடாமல் அழித்து கருப்பை தானாகவே வெளித்தள்ளிவிடும் எனவும் அது 'இயற்கையின் பாதுகாப்பு வால்வு' ( safety valve) எனவும் மருத்துவ நூல் கூறுகிறது. அதைத்தான் மிஸ்க்கேரேஜ் (miscarriage) என ஆங்கிலத்திலும் ‘கருச்சிதைவு’ எனத் தமிழிலும் குறிப்பிடுகிறோம். இந்த இயற்கைத் தடையையும் மீறிப் பிறக்கிற குறைபாடு கொண்ட குழந்தைகளின் விகிதாசாரம் அதிகமில்லை.

2006 இல் உலக விகிதாசாரம் 10% தான் என ஐ.நா. அறிக்கையால் தெரிகிறது.

(10% of world population live with some kind of disability)

இந்தியாவில் 2001 கணக்கெடுப்பின் படி 2.19% . ஒளவையார் காலத்தில் மட்டும் கண்ணில் படுகிறவர்களுள் பெரும்பாலோர் குறையுடையோராய்த் தெரியும் அளவுக்கு நிலைமை தலைகீழாய் இருந்திருக்குமா, என்ன?

ஆகையால் இந்தப் பாட்டுக்கு பதிலாக,

எளிதெளிது மானிடர் ஆதல் எளிது
மானிட ருள்ளும் உடற்குறை நீங்கி
இயல்பாய்ப் பிறத்தல் அரிதொன்றும் அல்ல.
அரிதரிது வனவிலங்கு ஆதலே அரிது.

என்று கூறுவதே உண்மைக்குப் பொருந்தும்.

நன்னூல் சொல்கிறது:

"முன்னோர்மொழி பொருளே யன்றி அவர்மொழியும்
பொன்னேபோல் போற்றுவம்" என்று.

இதன் பொருள்: முன்னோர் சொன்ன கருத்துகளை மட்டும் அல்லாமல் அக்கருத்துகளை வெளியிட அவர்கள் பயன்படுத்திய சொற்களையும் கூடப் பொன் போல் போற்றுவோம்.

இதை நாம் அப்படியே ஏற்றால் திறனாய்வுக்கு இடமேது? முன்னோரின் கருத்துகளை ஆய்ந்து ஏற்கவேண்டியவை ஏற்றுப் பிழையானவை மற்றும் காலத்துக்குப் பொருந்தாதவை தள்ளிவிடப் பின்னோர்க்கு உரிமையுண்டு.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" - குறள்.

praveen
27-10-2009, 04:21 AM
நண்பரே, அவரவர் வாழ்ந்த காலத்தில் அப்போது அறிந்திருந்த விசயத்தை வைத்து கவிதை இயற்றியிருக்கின்றனர். அதில் அன்று குற்றம் கண்டுபிடித்து சொல்லியிருந்தால் சரியே அன்றி பிற்காலத்தில் அதனை ஆராய்வது சரியல்ல. நம் தாத்தா அப்போது ஏக்கர் வெறும் 1000 ரூபாய்க்கு நிலம் விற்றபோது 10 ஏக்கர் வாங்காமல் விட்டு விட்டார் இன்று சதுர அடி 10000 விற்கிறது, அவர் வாங்கி வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்பது போன்ற ஒப்பீடே இது. இன்று ஒருவர் பொது அறிவு பெற பல வழிகள் உள்ளன. ஆனால் அன்று குருவை சார்ந்தே கல்வி கற்றிருப்பர், குரு சொல்வதே வேதம் அது தவறாக இருந்தாலும் அதனை குறுக்கு கேள்வி கேடக வழி இருக்காது. இன்று நாம் அனைத்தும் பெற்றதெல்லாம் நம் முன்னோர்கள் பெற்ற அறிவினால் தான் என்பதை மறந்து விடக்கூடாது. ஒன்றிரண்டு பிழை இருக்கலாம். அதனை பெரிதுபடுத்தக்கூடாது.

மேலும், உங்கள் வாதம் சிலவற்றில் தவறாகவே படுகிறது பெரிது என்பதற்கு நீங்கள் சைஸ் (அதவது அளவை) வைத்து சொல்கிறீர்கள். இங்கே பெரிது என்பது அளவை வைத்து சொல்லப்பட்டதல்ல, யார் பெரியவர் என்பதை வைத்தே. இதே போல நம் தளத்தில் ஒரு உதாரணம் சொன்னால், நம் தளத்தில் பெரியவர் அறிஞர் அவர் கருத்துக்கு மறு கருத்தில்லை, ஆனால் அவரோ உறுப்பினர்களை பெரிதாக நினைக்கிறார், உறுப்பினர்கள் ஏகோபித்த கருத்துக்கு மறுகருத்து சொல்வதில்லை. இப்போது பெரியவர் யார் என்று சொல்லுங்கள்?.

பொருள் கொள்வதை பொறுத்தே எதையும் சரி மற்றும் தவறு என்று சொல்ல முடியும். கண்பார்வையில்லாத நண்பர் ஒருவர் பக்கத்தில் ஒரு தாய் தன் குழந்தை இறந்ததை எண்ணி அழுகும் போது, அருகில் இருந்த நண்பரிடம் உரையாடுகிறார்.

என் அருகில் உள்ள பெண் ஏன் அழுகிறார்.
அவர் குழந்தை பாலுக்கு விக்கி இறந்து விட்டதாம்
பால் எப்படி இருக்கும்
பால் வெண்மை போல இருக்கும்
வெண்மை எப்படி இருக்கும்
வெண்மை கொக்கு போல இருக்கும்
கொக்கு எப்படி இருக்கும்
கொக்கு இப்படி இருக்கும் என்று தன் முழங்கையை மடக்கி காட்டுகிறார்.
அதனை தடவி பார்த்து அந்த பார்வையற்றவர், இவ்வளவு பெரியது சிறிய குழந்தை தொண்டைக்குள் சென்றால் குழந்தை நிச்சயம் இறந்து தான் போகும் என்கிறார்..

அவரவர் புரிதலைப்பொறுத்தது.

குணமதி
27-10-2009, 04:46 AM

உங்கள் விளக்கம் சுவையும் கருத்தும் மிக்கது.

நன்றி.

samuthraselvam
27-10-2009, 05:09 AM
பிரவீன் அண்ணா சொல்வது மிகச்சரியே....

ஏனெனில் தமிழ் மூதாட்டி வாழ்ந்த காலங்களில் மானிடப் பிறவி என்பது மாபெரும் புண்ணியம் செய்தவர்களுக்கு கிடைக்கும் பாக்யம்... அந்த மனித பிறவியில் அறவழியில் நடந்து மேலும் பல புண்ணியங்களை செய்தால் அவர்களுக்கு முக்தி கிடைக்கும்..

அதாவது மீண்டும் பிறவா நிலை.... மனித பிறவியின் அடுத்த நிலைதான் மீண்டும் பிறவா நிலை... அதனால் தான் மானிடப் பிறவி அரிது என்று ஒளவையார் கூறியுள்ளார்...

அடுத்து

பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமால் அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனி கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்

இதற்கடுத்து இன்னும் மிச்சம் இருக்கிறது நண்பரே...
அது,

அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர்தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே !

அதாவது உமையாள் சக்தியின் விரலில் உள்ள மோதிரம்... எனவே அவள் தான் பெரியவள்.... ஆனால் உமையாளுக்கு தன ஒரு பாதியை கொடுத்த அந்த சிவனே பெரியவர்... ஆனால் சிவனோ தன் பக்தர்களின் உள்ளத்தில் வாழ்பவர்... எனவே அவரின் பக்தர்களே பெரியவர்கள்.....

இவ்வாறு அப்பாடல் தொடரும்....

உலகில் கடவுளை மனதில் துதிப்பவர்களே பெரியவர்கள் என்பது போல அந்தப்பாடல் செல்லும்....

எனவே தங்கள் கூறும் கருத்தை அதாவது ஒளவையின் பாடல்களில் தாங்கள் கூறும் குறைகள் இல்லை... உங்கள் புரிதலில் தான் குறை உள்ளது...

அனால் மற்றபடி நீங்கள் கூறிய, மூன்று காலகட்டங்களில் தமிழ் மூதாட்டி வாழ்ந்தார் என்வது நான் இதுவரை அறியாத விடயமே...

மனிதைகளின் கணக்கெடுப்பும் மற்ற உயிரினங்களின் கணக்கெடுப்பும் பயனுள்ளதே.....

தாமரை
27-10-2009, 06:27 AM
நீலத் திமிங்கலம் குறைந்தது என்பவர் எத்தனை புதிய வைரஸ்கள், பாக்டீரியாக்கள், கொசுக்கள், ஈக்கள் என எண்ண மறந்து விட்டார் ஒவ்வொரு மனித உடலிலும் எத்தனைக் கோடி இருக்கு என்று எண்ணி விட்டு வந்து பேசினா நலம்.

பிறப்பு விகிதம் விலங்குகளில் குறையவில்லை. இறப்பு விகிதம் அதிகரித்து விட்டது. அதான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை,

மானிடராய் பிறத்தல் அரிது என்றால்.. விலங்குகளாய் பிறத்தல் எளிது என்று அர்த்தமா என்ன? அப்படி எடுத்துக் கொள்ளல் குற்றம்தான்.

நான் பொய் சொல்ல மாட்டேன் என்றால் நீங்கள் பொய் சொல்வீர்கள் என்று அர்த்தம் கொள்வதற்கு பெயர் என்ன தெரியுமில்ல.. குசும்பு..

எந்த ஒரு விஷயமும் எதாவது ஒரு கோணத்தில் தவறாத்தான் தெரியும்.
அதாவது குற்றம் சொல்ல முடியாத கருத்தே இல்லை என்பதுதான் உண்மை..

எக்காலத்திலும் உண்மை என்று அறுதியிட்டுச் சொல்லக் கூடிய ஒரே ஒரே கருத்தைச் சொல்ல மூயற்சி செய்து பாருங்க தெரியும்..

கவிதைகளில் நேரடிப் பொருள் எடுத்து பொருந்தாவிடத்துப் பொருத்திப் பார்த்தால் அப்படித்தான் தெரியும்.

உதாரணமா சொல்றேன் கேளுங்க..

உலகம் தட்டையானதுன்னு சொன்னாங்க..

அப்புறம் உருண்டையானது அப்படின்னு சொன்னாங்க

அப்புறம் கோளம் என்றால் இடையில் வீங்கி,, துருவப் பகுதிகள் தட்டையான பூசணிக்காய் மாதிரி இருக்கு அப்படின்னாங்க

அப்புறம் அது கூட தவறுதான்.. சில சமயம் நிலநடுக்கோடு பகுதி பெருத்துகிட்டுப் போகுது.. சில சமயம் நிலநடுக்கோடு பகுதி சிறுக்குது... அப்படின்னாங்க..

இப்படி நாளுக்கு நாள் "உண்மை" என்பது "பொய்" ஆய்கிட்டு இருக்கு.

கோடிக்கணுக்கான உயிரணுக்களில் ஒண்ணுதான் கருவா மாறுது
அதில் சில பல சிதைவடைய சில பல இறந்து பிறக்க, சில பல பிறந்து இறக்க...

ஒரு குழந்தை பிறக்க எவ்வளவு கஷ்டம் பாருங்க..

அதிலயும் ஒரு பெண் தன் வாழ்நாளில் சில குழந்தைகளை மட்டுமே பெறுகிறாள். வாழ்நாள் நீட்சி, மருத்துவ வளர்ச்சி இதனால் தான் மனிதர்கள் எண்ணிக்கை வளர்ந்தது என்பதை மறக்கக் கூடாது. இப்பவெல்லாம் ஒரு வீட்டில் 4 குழந்தை பிறக்கறது ரொம்பவே கஷ்டம்.

ஒரு மீன் இலட்சக்கணக்கான முட்டைகள் இடும். அதில் இருந்து இலட்சக்கணக்கான மீன்குஞ்சுகள் வரும். ஈசல், நண்டுகள், ஆமைகள் இப்படி பல உயிரினங்களோட பிறப்பு எண்ணிக்கை ஒரு தாய் தந்தைக்கு என்று பார்த்தால் மிக மிக அதிகம். ஒரு கொசு எத்தனைக் கொசுக்களை உற்பத்தி செய்யும் தெரியுமா?

மனிதன் தான் பெற்ற ஞானத்தால் தன் வாழ்நாட்களை நீட்டித்துக் கொண்டதால் மட்டுமே எண்ணிக்கையில் பெருகி இருக்கிறான். பிறப்பிப்பது குறைவுதான்.

ஒரு மனிதனுக்கு தன் வாழ்நாளில் மொத்தம் எத்தனைக் குழந்தைகள் பிறக்கிறது என்பது குறைந்து கொண்டுதான் போகுது. தெரியுமில்ல..

கவிதைகளை அனுபவிங்கப்பா...

தாமரை
27-10-2009, 06:37 AM
பெரிது பெரிது கவிதையில் ஔவை எது பெரியது என்று அறிவியல் ஆராய்ட்சி ஒண்ணும் செய்யவில்லை என்பதை முதல்ல புரிஞ்சிக்கணும். அதை அறிவியல் ஆராய்ட்சியா பார்த்தா.. பிரம்மன் என்ற பெயர் வந்த உடனே பிரம்மன் யார் அவரோட அளவு என்ன என்று ஆராய்ட்சியில் இறங்கிடணும்... உலகைப் படைத்த பிரம்மன் உலகை விட அளவில் பெரியவனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஒண்ணும் இல்லை மக்கா..

ஒண்ணு வேணும்னா சொல்லலாம், இதைப் பாடிய ஔவையார் நாயன்மார் காலத்துக்கு கொஞ்சம் முற்பட்டவரா இருந்திருக்கணும். ஏன்னா தொண்டர்களுக்கு தொண்டு செய்யும் சிறுதொண்டர், தொண்டரடிப் பொடியாழ்வார் போன்றவர்களை சொல்லலையே :D :D :D

அகராதி மட்டும் வச்சுகிட்டு கவிதை படித்தால் இப்படித்தான் போய் முடியும்.

விகடன்
27-10-2009, 07:15 AM
ஔவையார் எழுதியதில் குற்றத்தை பிடிப்பதை விடுத்து அதிலிருக்கும், நீங்கள் சரியானது என நினைப்பனவற்றை மட்டும் படித்து அதன்படி ஒழுகினால் உங்கள் வாழ்க்கை எவ்வளவோ முன்னேறிவிடும்.

தமிழனில் ஓர் குணம் உண்டு. அதாவது, ஒரு திறமை மிக்கவரில் எங்காவது குற்றம் பிடித்து அவரை விட தான் திறமையானவர் என்று நிரூபிக்க முற்படுவர்.

சொ.ஞானசம்பந்தன்
28-10-2009, 07:29 AM
பின்னூட்டம் எழுதியவர்களுக்கு நன்றி.

நண்பரே, அவரவர் வாழ்ந்த காலத்தில் அப்போது அறிந்திருந்த விசயத்தை வைத்து கவிதை இயற்றியிருக்கின்றனர். அதில் அன்று குற்றம் கண்டுபிடித்து சொல்லியிருந்தால் சரியே அன்றி பிற்காலத்தில் அதனை ஆராய்வது சரியல்ல. நம் தாத்தா அப்போது ஏக்கர் வெறும் 1000 ரூபாய்க்கு நிலம் விற்றபோது 10 ஏக்கர் வாங்காமல் விட்டு விட்டார் இன்று சதுர அடி 10000 விற்கிறது, அவர் வாங்கி வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்பது போன்ற ஒப்பீடே இது. இன்று ஒருவர் பொது அறிவு பெற பல வழிகள் உள்ளன. ஆனால் அன்று குருவை சார்ந்தே கல்வி கற்றிருப்பர், குரு சொல்வதே வேதம் அது தவறாக இருந்தாலும் அதனை குறுக்கு கேள்வி கேடக வழி இருக்காது. இன்று நாம் அனைத்தும் பெற்றதெல்லாம் நம் முன்னோர்கள் பெற்ற அறிவினால் தான் என்பதை மறந்து விடக்கூடாது. ஒன்றிரண்டு பிழை இருக்கலாம். அதனை பெரிதுபடுத்தக்கூடாது.

மேலும், உங்கள் வாதம் சிலவற்றில் தவறாகவே படுகிறது பெரிது என்பதற்கு நீங்கள் சைஸ் (அதவது அளவை) வைத்து சொல்கிறீர்கள். இங்கே பெரிது என்பது அளவை வைத்து சொல்லப்பட்டதல்ல, யார் பெரியவர் என்பதை வைத்தே.

பிழை இருக்கலாம் என்று அரைமனமாய் ஒப்புகிறீர்கள். பரவாயில்லை.அளவை வைத்துச் சொல்லப்பட்டதல்ல என்பதுதான் என் கருத்தும்.

பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமால் அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனி கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்

இதற்கடுத்து இன்னும் மிச்சம் இருக்கிறது நண்பரே...
அது,

அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர்தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே !

அதாவது உமையாள் சக்தியின் விரலில் உள்ள மோதிரம்... எனவே அவள் தான் பெரியவள்.... ஆனால் உமையாளுக்கு தன ஒரு பாதியை கொடுத்த அந்த சிவனே பெரியவர்... ஆனால் சிவனோ தன் பக்தர்களின் உள்ளத்தில் வாழ்பவர்... எனவே அவரின் பக்தர்களே பெரியவர்கள்.....

இவ்வாறு அப்பாடல் தொடரும்....

உலகில் கடவுளை மனதில் துதிப்பவர்களே பெரியவர்கள் என்பது போல அந்தப்பாடல் செல்லும்....

குற்றம் இருக்கிற இடத்தை நான் சுட்டிக்காட்டினால் நீங்கள் அதைவிட்டுவிட்டு அடுத்த அடிகளுக்குப் போய்த் திசை திருப்புகிறீர்கள்.

நீலத் திமிங்கலம் குறைந்தது என்பவர் எத்தனை புதிய வைரஸ்கள், பாக்டீரியாக்கள், கொசுக்கள், ஈக்கள் என எண்ண மறந்து விட்டார் ஒவ்வொரு மனித உடலிலும் எத்தனைக் கோடி இருக்கு என்று எண்ணி விட்டு வந்து பேசினா நலம்.

பிறப்பு விகிதம் விலங்குகளில் குறையவில்லை. இறப்பு விகிதம் அதிகரித்து விட்டது. அதான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை,

மானிடராய் பிறத்தல் அரிது என்றால்.. விலங்குகளாய் பிறத்தல் எளிது என்று அர்த்தமா என்ன? அப்படி எடுத்துக் கொள்ளல் குற்றம்தான்.

நான் பொய் சொல்ல மாட்டேன் என்றால் நீங்கள் பொய் சொல்வீர்கள் என்று அர்த்தம் கொள்வதற்கு பெயர் என்ன தெரியுமில்ல.. குசும்பு..

எந்த ஒரு விஷயமும் எதாவது ஒரு கோணத்தில் தவறாத்தான் தெரியும்.
அதாவது குற்றம் சொல்ல முடியாத கருத்தே இல்லை என்பதுதான் உண்மை..

எக்காலத்திலும் உண்மை என்று அறுதியிட்டுச் சொல்லக் கூடிய ஒரே ஒரே கருத்தைச் சொல்ல மூயற்சி செய்து பாருங்க தெரியும்..

கவிதைகளில் நேரடிப் பொருள் எடுத்து பொருந்தாவிடத்துப் பொருத்திப் பார்த்தால் அப்படித்தான் தெரியும்.

மனிதன் தான் பெற்ற ஞானத்தால் தன் வாழ்நாட்களை நீட்டித்துக் கொண்டதால் மட்டுமே எண்ணிக்கையில் பெருகி இருக்கிறான். பிறப்பிப்பது குறைவுதான்.

ஒரு மனிதனுக்கு தன் வாழ்நாளில் மொத்தம் எத்தனைக் குழந்தைகள் பிறக்கிறது என்பது குறைந்து கொண்டுதான் போகுது. தெரியுமில்ல..

கவிதைகளை அனுபவிங்கப்பா...

அகராதி மட்டும் வச்சுகிட்டு கவிதை படித்தால் இப்படித்தான் போய் முடியும்.

விலங்குகளாய்ப் பிறத்தல் எளிது என்று அர்த்தமா? என்று கேட்கிறீர்கள். அர்த்தம் அல்லதான். மானிடராதல் எளிது என்பதுதான் என் வாதம்.

குற்றஞ்சொல்லமுடியாத கருத்தே இல்லை என்று எழுதியதன் மூலம் குற்றம் இருக்கிறது என்பதை உங்கள் மனம் ஒப்புகிறது. கை மறுக்கிறது. எக்காலத்துக்கும் உண்மையான ஒரே ஒரு கருத்தைச் சொல்லும்படி கேட்டிருக்கிறீர்கள்.
ஒன்றென்ன,மூன்று சொல்கிறேன்.

1. குடி குடியைக் கெடுக்கும்.
2. யாவரிடத்தும் அன்பு செலுத்தல் சிறந்த பண்பு.
3. நாயைக் காட்டிலும் நன்றியுள்ள விலங்கு வேறில்லை.

போதுமா? திருப்திதானே?

நீண்டகாலம் வாணாளை நீட்டிக்கிறவர்கள் திரைப்படத்தில் வருவது போல 2பேர், 3பேர் என்று பிரிந்து மக்கள் தொகையைப் பெருக்குகிறார்களா? குழந்தைப் பிறப்பு குறைந்துகொண்டே போனால் மாந்தர் எண்ணிக்கை எப்படி அதிகரித்தபடியே இருக்கும்?
குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டம் ஏன் செயல்படுத்தப் படுகிறது? கருத்தடைச் சாதனங்கள், கருத்தடை மாத்திரைகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன? ஒரு குழந்தைக்கு மேல் பெறக்கூடாது என்று ஏன் சீனாவில் சட்டம் இயற்றியுள்ளனர்?

நீலத்திமிங்கலம் குறைகிறது என்று புள்ளிவிவரம் தந்தேன். அதை மறுக்கவேண்டும் எனில் குறையவில்லை என்று வேறு புள்ளிவிவரம் அல்லது ஆதாரங்காட்டவேண்டும். அப்படிச் செய்யாமல் வைரஸ்களை, கொசுக்களை ஏன் எண்ணவில்லை என்று கேட்கிறீர்கள். நான் எதற்காக எண்ணவேண்டும்? நான் என்ன உயிரின ஆராய்ச்சி பற்றியா கட்டுரை எழுதியிருக்கிறேன்?

'நீ திருடினாய்!' என்று கூண்டில் நிற்பவரைக் குற்றஞ்சாட்டினால் 'அவன் கொலை செய்தான், இவன் ஏமாற்றினான், இவர்களை ஏன் பிடிக்கவில்லை?' என்று அவர் வினவுவது போலிருக்கிறது.

ஔவையார் எழுதியதில் குற்றத்தை பிடிப்பதை விடுத்து அதிலிருக்கும், நீங்கள் சரியானது என நினைப்பனவற்றை மட்டும் படித்து அதன்படி ஒழுகினால் உங்கள் வாழ்க்கை எவ்வளவோ முன்னேறிவிடும்.

தமிழனில் ஓர் குணம் உண்டு. அதாவது, ஒரு திறமை மிக்கவரில் எங்காவது குற்றம் பிடித்து அவரை விட தான் திறமையானவர் என்று நிரூபிக்க முற்படுவர்.

நான் திறமையானவன் என்று நிரூபிக்க முற்பட்டால் உங்களுக்கு என்ன இழப்பு? பாட்டில் குற்றம் உண்டா இல்லையா? இது அல்லவா கேள்வி?

பாட்டு 1: உலகம் உலகத்தை விடப் பெரியது என்கிறது.

பாட்டு 2: இரு கருத்துகளுமே பிழையானவை என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இவற்றுக்கு ஆதாரபூர்வ மறுப்பு உரையாமல்,

1.உங்களுக்குப் புரியவில்லை,
2.உங்களுக்குக் கவிதையை அனுபவிக்கத்தெரியவில்லை,
3.அகராதி வைத்துக்கொண்டு ஆராய்கிறீர்கள்,
4.குற்றத்தை விட்டுக் குணத்தைக் கண்டு முன்னேறத்தெரியவில்லை என்று என்மீது பாய்கிறீர்கள்.

நல்லவேளை! உங்களுக்கு நெற்றிக்கண் இல்லை. எனக்குத் தமிழே தெரியவில்லை என்று எழுதாமல் விட்டீர்களே! நான் பிழைத்தேன்.

அன்புரசிகன்
28-10-2009, 07:58 AM
அது தானே... நாம தமிழர் என்று காட்டவேண்டுமல்லவா... நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றம்தானேப்பா...

விகடன்
28-10-2009, 08:44 AM
முடிந்தளவு தாமரை அண்ணா விளக்கமளித்திருந்தபடியால் உங்க்ளுக்கு நானும் விளக்கமளிக்க முடியவில்லை.
உங்களின் கணக்கெடுப்பிற்கும் அதற்கு செலவழிக்கப்பட்ட நேரத்தினையும் மதிக்கின்றேன்.

படிப்படியாக உங்கள் எழுத்துக்களை சொன்னால்,
நீங்கள் மூன்று காலத்தில் ஔவையார் என்ற பெயரில் மூவர் வாழ்ந்ததாக சொல்லியிருந்தீர்கள். இந்த விடயம் எனக்கு புதிதே. என்னைப் பொறுத்தவரை ஔவையார் ஒருவர் என்ற கண்ணோட்டத்தில்த்தான் பார்க்கின்றேன்.

”பெரிது பெரிது புவனம் பெரிது...” என்ற பாடலிற்கு விளக்கமளித்திருந்தீர்கள். இதற்கு தகுந்த விளக்கம் தாமரை அண்ணா தந்திருந்தார் என்று நான் நம்புகின்றேன். உங்களைப்போல பாடல்களுக்கு குற்றம் கண்டுபிடிக்கப்போனால்,சேக்கிழார் எழுதிய சிவபுராணத்தில்

”புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாகி....” என்று வருகிறதே. இதில் சேகிழார் மனிதப்பிறப்பு எடுத்திருந்தபோதுதானே இப்பாடலைப்பாடியிருந்தார். அப்படியிருக்கையில் அதைத்தொடர்ந்து அவ்வாறான பிறப்புக்கள் இருப்பதை எவ்வாறு அறிந்திருந்தார்? அந்தப்பிறப்புக்கள் அத்தனையும் எடுத்தாகிவிட்டதக எவ்வாறு கூறினார்? ஆக இந்த பெரிய புராணம் எழுதிய சேக்கிழாரும் நீங்கள் கண்ட ஔவையார் போல.

அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது. ”

இது அந்தக்காலத்தில் சத்திர சிகிச்சை என்று ஒன்றோ, அல்லது எந்த வித ஆங்கில மருத்துவமோ இல்லாத காலத்தில் பாடப்பட்டது. குருதிச் சோதனைகூட இருந்திராத காலம். வந்த நோயின் கொடூரம் எதுவும் தெரிந்திராத காலம். அதேவேளை ராஜாக்களின் போர் படையெடுப்புக்களால் குறித்த காலத்திற்கொருமுறை மனித அறுவடையும் நிகந்த காலம். அக்காலத்தில் மக்கள் மத்தியில் மனித இழப்புக்களை குறைக்கும் பொருட்டு விழிப்புணர்விற்காக எழுதப்பட்ட அடிகளாக இருக்கலாம்.

ஆனால் நீங்கள் காட்டப்பட்ட புள்ளி விபரமோ விஞ்ஞானம் வளர்ந்திருந்த காலத்திற்குட்பட்டது. ஆக அப்பாடல் அக்காலத்தில் மிக மிகச் சரியானதாக இருந்திருக்கும்.

இக்காலத்திற்கும் பொருந்தலாம்! யார் கண்டது? இப்போதுதானே உலகினையே ஆட்கொல்லி நோய் ஆண்டு வருகிறது. இந்த வழியில்த்தான் பரவும் என்றின்றி எந்த வழியாலும் பரவும் என்ற வரத்தோடு உலாவுகிறது. இது கண்டறியப்பட்ட ஓர் நோய் (புற்று நோயினையும் சேர்த்துக்கொள்ளலாம்). ஆக, நாம் பார்ப்பவரும், நமக்குத்தெரிந்தவரும் நலமுடனிருப்பதால் ஔவையார் பாடியது அப்படியே பிழை என்று சொல்லிவிட முடியாது.

சில உயிரினங்கள் அழிந்துகொண்டு போவனவாக குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான். அதை முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த அழிவு எதனால் வந்தது? மனிதனின் சிந்திக்கும் ஆற்றலால்த்தான். ஔவையார் பாடியபோது மனிதனின் சிந்தனை இவ்வளவுதூரம் வளரும் என்று அறிந்திருப்பாரோ தெரியவில்லை (அவர் கடவுளில்லையே?). மனிதன் முன்னேற்றமின்றி நம் முன்னோர்கள் போல உடையின்றி காட்டில் திரிவானாக இருந்தால் உலகம் ஒரே மாதிரியான இயற்கைச் சமனிலையிலிருந்திருக்கும். மனிதன் எப்போது வின்ஞானத்துறையில் முன்னேறி ஆயுதம் கண்டு பிடித்து உலகிலிருக்கும் அனைத்து உயிரினங்களையும் கட்டுப் படுத்தும் வலிமை பெற்றானோ அன்றே உலக இயற்கைச் சமனிலையை சீர் குலைத்துவிட்டான். அதன் விளைவே இந்த அரிகிப் போகும் உயிரினங்களின் பட்டியில். இது இன்னும் தொடருமே அன்றி முடியப்போவதில்லை. (பி.கு: நான் இருந்த ஊரில் இன்றும் மருத மரும் இருக்கிறது).

இவையெல்லாம் என் சிற்றறிவிற்கு எட்டியவரை எழுதியவையே. நான் அறிந்தவற்றை வைத்து ஏதொ சொல்ல முனைந்தே இதை எழுதினேன். என் வாதம் என்னைப் பொறுத்தவரை சரி. கிணற்றுத்தவளைக்கு கிணறுதானே உலகம் இல்லையா. அதே போல்த்தான் என் விளக்கம். என் கிணறு எவ்வளவு பெரியது என்பதுதான் இப்போது என்னுடைய கேள்வி!!!

மீண்டும் உங்கள் ஆராய்ச்சிக்கும் அதற்கு செலவழித்த நேரத்திற்கும் பாராட்டி விடைபெறுகின்றேன்.

தாமரை
28-10-2009, 11:04 AM
விலங்குகளாய்ப் பிறத்தல் எளிது என்று அர்த்தமா? என்று கேட்கிறீர்கள். அர்த்தம் அல்லதான். மானிடராதல் எளிது என்பதுதான் என் வாதம்.

குற்றஞ்சொல்லமுடியாத கருத்தே இல்லை என்று எழுதியதன் மூலம் குற்றம் இருக்கிறது என்பதை உங்கள் மனம் ஒப்புகிறது. கை மறுக்கிறது. எக்காலத்துக்கும் உண்மையான ஒரே ஒரு கருத்தைச் சொல்லும்படி கேட்டிருக்கிறீர்கள்.
ஒன்றென்ன,மூன்று சொல்கிறேன்.

1. குடி குடியைக் கெடுக்கும்.
2. யாவரிடத்தும் அன்பு செலுத்தல் சிறந்த பண்பு.
3. நாயைக் காட்டிலும் நன்றியுள்ள விலங்கு வேறில்லை.

போதுமா? திருப்திதானே?

நீண்டகாலம் வாணாளை நீட்டிக்கிறவர்கள் திரைப்படத்தில் வருவது போல 2பேர், 3பேர் என்று பிரிந்து மக்கள் தொகையைப் பெருக்குகிறார்களா? குழந்தைப் பிறப்பு குறைந்துகொண்டே போனால் மாந்தர் எண்ணிக்கை எப்படி அதிகரித்தபடியே இருக்கும்?
குடும்பக் கட்டுப்பாட்டுத்திட்டம் ஏன் செயல்படுத்தப் படுகிறது? கருத்தடைச் சாதனங்கள், கருத்தடை மாத்திரைகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன? ஒரு குழந்தைக்கு மேல் பெறக்கூடாது என்று ஏன் சீனாவில் சட்டம் இயற்றியுள்ளனர்?

நீலத்திமிங்கலம் குறைகிறது என்று புள்ளிவிவரம் தந்தேன். அதை மறுக்கவேண்டும் எனில் குறையவில்லை என்று வேறு புள்ளிவிவரம் அல்லது ஆதாரங்காட்டவேண்டும். அப்படிச் செய்யாமல் வைரஸ்களை, கொசுக்களை ஏன் எண்ணவில்லை என்று கேட்கிறீர்கள். நான் எதற்காக எண்ணவேண்டும்? நான் என்ன உயிரின ஆராய்ச்சி பற்றியா கட்டுரை எழுதியிருக்கிறேன்?

'நீ திருடினாய்!' என்று கூண்டில் நிற்பவரைக் குற்றஞ்சாட்டினால் 'அவன் கொலை செய்தான், இவன் ஏமாற்றினான், இவர்களை ஏன் பிடிக்கவில்லை?' என்று அவர் வினவுவது போலிருக்கிறது.

நான் திறமையானவன் என்று நிரூபிக்க முற்பட்டால் உங்களுக்கு என்ன இழப்பு? பாட்டில் குற்றம் உண்டா இல்லையா? இது அல்லவா கேள்வி?

பாட்டு 1: உலகம் உலகத்தை விடப் பெரியது என்கிறது.

பாட்டு 2: இரு கருத்துகளுமே பிழையானவை என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இவற்றுக்கு ஆதாரபூர்வ மறுப்பு உரையாமல்,

1.உங்களுக்குப் புரியவில்லை,
2.உங்களுக்குக் கவிதையை அனுபவிக்கத்தெரியவில்லை,
3.அகராதி வைத்துக்கொண்டு ஆராய்கிறீர்கள்,
4.குற்றத்தை விட்டுக் குணத்தைக் கண்டு முன்னேறத்தெரியவில்லை என்று என்மீது பாய்கிறீர்கள்.

நல்லவேளை! உங்களுக்கு நெற்றிக்கண் இல்லை. எனக்குத் தமிழே தெரியவில்லை என்று எழுதாமல் விட்டீர்களே! நான் பிழைத்தேன்.

மானிடராய் பிறத்தல் அரிது என்பதை காட்டி இருப்பதைக் காண விடாமல் உங்களைத் தடுத்தது எது என்பதுதான் புரியவில்லை,

ஒரு மீன் இலட்சக்கணக்கான முட்டைகள் இடும். அதில் இருந்து இலட்சக்கணக்கான மீன்குஞ்சுகள் வரும். ஈசல், நண்டுகள், ஆமைகள் இப்படி பல உயிரினங்களோட பிறப்பு எண்ணிக்கை ஒரு தாய் தந்தைக்கு என்று பார்த்தால் மிக மிக அதிகம். ஒரு கொசு எத்தனைக் கொசுக்களை உற்பத்தி செய்யும் தெரியுமா?

ஆனால் ஒரு மனிதன் உண்டாக்குவது சில மனிதர்களை மட்டுமே..

மனித இனத்தின் பெருக்கம் என்பது வாழ்நாள் அதிகரித்ததால் மட்டுமே என்பதை சொல்லி இருந்த கருத்து உங்கள் கண்ணில் பட்டதோ?

உதாரணமா சொல்றேன். வாரம் நான் மட்டும் 2 கோழி சாப்பிடறேன். அதாவது வருடம் 100 கோழி.. அதாவது எனது ஆயுளில் குறைந்த பட்சம் 6000 கோழி நான் மட்டுமே சாப்பிடுகிறேன், அப்படியானால் எனக்கு ஒருவனுக்கு மட்டுமே ஆறாயிரம் கோழிகள் பிறப்பெடுக்கின்றன..

நான் எத்தனை கொசுக்களை, ஈக்களை அழிக்கிறேன்.. எத்தனை பயிர்கள் என் வாழ்நாளில் உருவாக்கப்பட்டு எனக்காக அழிகின்றன எனக் கணக்குப் பாருங்கள். அனைத்திற்கும் உயிர் என்பது ஒன்றுதான் என்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்டால், 60 ஆண்டுகாலத்தில் ஒரு மனித ஜோடி பிறப்பிக்கின்ற மனிதரின் எண்ணிக்கை 2 அல்லது 3 தான். அவற்றைப் பேணிக்காப்பதாலேயே மக்கள் தொகை உயர்ந்திருக்கிறது. அவ்வளவுதான். அதனால் இன்றும் மானிடராய் பிறத்தல் அரிது என்பதே உண்மை.

அதாவது என் ஒருவனுக்காக கோடிக்கணக்கான உயிர்கள் பிறக்கின்றன. அப்போ நானாக இருப்பது அரிதா? அல்லது அந்தக் கோடியில் ஒன்றாக இருத்தல் அரிதா? எது அரிது?

உங்க கணக்கையே பாருங்க.. ஒரு நூற்றாண்டில் மனித எண்ணிக்கை 4 மடங்கு ஆகிறது என்கிறீர்கள். அதையே அடிப்படையா வச்சுக்குவோம்.

இந்திய ஜனத்தொகை இப்போ 120 கோடி.. 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது இந்தப் பாடலை எழுதிய ஔவையார் வாழ்ந்ததாகக் கருதப் படும் ஆறாம் நூற்றாண்டில் 120 கோடியை 4இன் மடங்கு 15 ஆல் வகுத்தால் என்ன கிடைக்குமோ அத்தனை மக்களிருந்திருக்க வேண்டும்.

அதாவது,
21 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 120 கோடி.
20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 30 கோடி.
19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 7.5 கோடி..
18 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 1.875 கோடி.
17 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 46,87,500 பேர்.
16 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 11,71,875 பேர்.
15 ஆம் நூற்றாண்டில் 2,92,968 பேர்.
14 ஆம் நூற்றாண்டில் 73,242 பேர்
13 ஆம் நூற்றாண்டில் 18,310 பேர்.
12 ஆம் நூற்றாண்டில் 4577 பேர்.
11 ஆம் நூற்றாண்டில் 1145 பேர்.
10 ஆம் நூற்றாண்டில் 286 பேர்.
9 ஆம் நூற்றாண்டில் 72 பேர்.
8 ஆம் நூற்றாண்டில் 18 பேர்
ஏழாம் நூற்றாண்டில் 5 பேர்.
ஆறாம் நூற்றாண்டில் ஒருவர் மட்டுமே... எப்படி இருக்கு கணக்கு?

நீங்க சொல்ற கணக்குப்படி அப்ப இந்தியாவில் ஔவையார் மட்டும்தான் இருந்திருப்பார். அதனால மானிடராதல் அரிது என்று பாடியிருக்கிறார்.. என்ன தப்புன்றேன்... :D :D :D

என்னவோ தெருவுக்கு அஞ்சு கோடி மனிதக் குழந்தைகள் பிறக்கிற மாதிரி நீங்கள் பார்க்கிறீர்கள். அதான் தப்பு. இயற்கையாகவே மனிதனின் பிறப்பு விகிதம் குறைவு. அதை செயற்கை முறையில் இன்னும் குறைச்சிட்டாங்க. மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் வாழ்நாட்கள் அதிகரித்தது மட்டுமே ஆகும்.. எனவே மானிடராதல் அரிது என்பது இன்னும் உண்மைதான்.

குற்றம் சொல்ல முடியாத கருத்தே இல்லை என்பதால், சொல்லுகின்ற அனைத்து புனையுரைகளும் சரி ஆகி விடாது. நினைவில் வையுங்கள்.

குடி குடியைக் கெடுக்கும் என்கிறீர்கள். அப்ப குடும்பமே இல்லாதவன் குடித்தால் நல்லதா? விஞ்ஞானிகள் அளவாக வைன் சாப்பிடுவதால் இரத்தம் சுத்தம் ஆகிறது என்கிறார்களே! அது தப்பு என்கிறீர்களா?
கூழ் குடித்தல் தப்பா? நீர் குடித்தால் தப்பா? எந்தக் குடி, எந்தக் குடியைக் கெடுக்கும் என்ற தெளிவு அதில் இல்லையே... குடும்பம் குடிப்பதைக் கெடுக்குமா? குடிப்பது குடும்பத்தைக் கெடுக்குமா? பிறந்த உடனே குழந்தை (பால்) குடிக்க ஆரம்பித்து விடுகிறதே? தண்ணீரில் இரண்டு ஹைட்ரஜன்கள் ஒரு ஆக்சிஜன்(H2O). ஆல்கஹாலில் ஒரு ஹைட்ரஜன் ஒரு ஆக்சிஜன்(OH). ஒரு ஹைட்ரஜன் அணு ஒவ்வொரு மூலக்கூறுகளிலும் அதிகமா இருக்கறதை குடிக்கறது சரி.. குறைவா இருப்பதைக் குடிப்பது தவறா?

யாவரிடத்திலும் அன்பு செலுத்தல் சிறந்த பண்பா? அப்படி என்றால் நான் இன்னொருவரைக் உங்கள் எதிரில் கொலை செய்யப் போகும் போது இருவர் மீதும் எப்படி எப்படி அன்பு காட்டுவீர்கள்? நீங்க என்னோட அன்பா இருக்கறதை பார்த்து முறைக்கிற போலீஸ்காரர்கிட்ட எப்படி அன்பா இருப்பீங்க...? அனைவரிடமும் அன்பா இருக்க நமக்கும் ஆசைதான்,. மனைவிதான் முறைக்கிறாங்க...

நாயைக் காட்டிலும் நன்றி உள்ள விலங்கு இல்லை என்கிறீர்கள். ஆனால் அந்த நாய்க்கு பிஸ்கட் போட்டு பழக்கி திருடர்கள் அதை அமைதியாக்கி விட்டு திருடுகிறார்கள். அதாவது பிஸ்கட் போட்ட திருடனுக்கு நாய் நன்றியுடன் இருக்குமா? அல்லது சாப்பாடு போட்டவனுக்கு நன்றியுடன் இருக்குமா? இல்லை நன்றியை பர்சண்டேஜ் போட்டுக் காண்பிக்குமா?

இன்னும் எந்தக் கருத்துன்னாலும் பிரிச்சி மேஞ்சிருவமில்ல...:icon_rollout::icon_rollout:

praveen
28-10-2009, 01:42 PM
பேசாமல் அவ்வை பாட்டிக்கு சம்மன் அனுப்பி இங்கே வரவழைத்து விடுவோம், அவ்வை பாட்டி அவதார் வைத்திருப்பவர் நம்ம மீனாகுமார் தானே :).

தப்புக்கண்டுபிடித்தால் சங்ககால பாடல்களில் ஆயிரம் தப்பு கண்டுபிடிக்கலாம். அந்தக்காலத்திலே எழுதிய உடனே தப்புக்கண்டுபிடித்த நக்கீரரும் உண்டு, வேண்டும் என்றே பாடலை தப்பாக எழுதி நக்கீரரை கலாய்த்த இறையனாரும் உண்டு.

அதிலே தருமி கூட சொல்வார். (நன்றி : திருவிளையாடல் திரைப்படம்)

"பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவன் இருக்கிறான்,
இந்த மாதிரி தப்பு கண்டுபிடிக்கும் புலவர்களும் இருக்கிறார்கள்" என்று இரண்டில் பிந்தையது மிக எளிது.

குணமதி
29-10-2009, 02:35 AM
ஒரு கோணத்தில் மட்டும் பார்த்தால், பிழையாகத் தெரிவது உண்மை.

இலக்கியங்களை அப்படி ஒரே கோணத்தில் பார்ப்பது, அந்த ஒரு கோணம் மட்டுமே தெரிந்தார் செயலாக இருக்கும்.

இருந்தாலும், ஞானசம்பந்தர் எடுத்துக்கூறியதில் ஒருவகை உண்மை உண்டு என்ற அளவில் சுவைத்து அவரைப் பாராட்டலாம்; அறிவு மிக்க ஒளவையை இழிவு செய்ததாகக் கருத வேண்டியதில்லை.

சொ.ஞானசம்பந்தன்
06-11-2009, 03:36 AM
மானிடராய் பிறத்தல் அரிது என்பதை காட்டி இருப்பதைக் காண விடாமல் உங்களைத் தடுத்தது எது என்பதுதான் புரியவில்லை,

ஒரு மீன் இலட்சக்கணக்கான முட்டைகள் இடும். அதில் இருந்து இலட்சக்கணக்கான மீன்குஞ்சுகள் வரும். ஈசல், நண்டுகள், ஆமைகள் இப்படி பல உயிரினங்களோட பிறப்பு எண்ணிக்கை ஒரு தாய் தந்தைக்கு என்று பார்த்தால் மிக மிக அதிகம். ஒரு கொசு எத்தனைக் கொசுக்களை உற்பத்தி செய்யும் தெரியுமா?

ஆனால் ஒரு மனிதன் உண்டாக்குவது சில மனிதர்களை மட்டுமே..

மனித இனத்தின் பெருக்கம் என்பது வாழ்நாள் அதிகரித்ததால் மட்டுமே என்பதை சொல்லி இருந்த கருத்து உங்கள் கண்ணில் பட்டதோ?

உதாரணமா சொல்றேன். வாரம் நான் மட்டும் 2 கோழி சாப்பிடறேன். அதாவது வருடம் 100 கோழி.. அதாவது எனது ஆயுளில் குறைந்த பட்சம் 6000 கோழி நான் மட்டுமே சாப்பிடுகிறேன், அப்படியானால் எனக்கு ஒருவனுக்கு மட்டுமே ஆறாயிரம் கோழிகள் பிறப்பெடுக்கின்றன..

நான் எத்தனை கொசுக்களை, ஈக்களை அழிக்கிறேன்.. எத்தனை பயிர்கள் என் வாழ்நாளில் உருவாக்கப்பட்டு எனக்காக அழிகின்றன எனக் கணக்குப் பாருங்கள். அனைத்திற்கும் உயிர் என்பது ஒன்றுதான் என்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்டால், 60 ஆண்டுகாலத்தில் ஒரு மனித ஜோடி பிறப்பிக்கின்ற மனிதரின் எண்ணிக்கை 2 அல்லது 3 தான். அவற்றைப் பேணிக்காப்பதாலேயே மக்கள் தொகை உயர்ந்திருக்கிறது. அவ்வளவுதான். அதனால் இன்றும் மானிடராய் பிறத்தல் அரிது என்பதே உண்மை.

அதாவது என் ஒருவனுக்காக கோடிக்கணக்கான உயிர்கள் பிறக்கின்றன. அப்போ நானாக இருப்பது அரிதா? அல்லது அந்தக் கோடியில் ஒன்றாக இருத்தல் அரிதா? எது அரிது?

உங்க கணக்கையே பாருங்க.. ஒரு நூற்றாண்டில் மனித எண்ணிக்கை 4 மடங்கு ஆகிறது என்கிறீர்கள். அதையே அடிப்படையா வச்சுக்குவோம்.

இந்திய ஜனத்தொகை இப்போ 120 கோடி.. 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது இந்தப் பாடலை எழுதிய ஔவையார் வாழ்ந்ததாகக் கருதப் படும் ஆறாம் நூற்றாண்டில் 120 கோடியை 4இன் மடங்கு 15 ஆல் வகுத்தால் என்ன கிடைக்குமோ அத்தனை மக்களிருந்திருக்க வேண்டும்.

அதாவது,
21 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 120 கோடி.
20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 30 கோடி.
19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 7.5 கோடி..
18 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 1.875 கோடி.
17 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 46,87,500 பேர்.
16 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 11,71,875 பேர்.
15 ஆம் நூற்றாண்டில் 2,92,968 பேர்.
14 ஆம் நூற்றாண்டில் 73,242 பேர்
13 ஆம் நூற்றாண்டில் 18,310 பேர்.
12 ஆம் நூற்றாண்டில் 4577 பேர்.
11 ஆம் நூற்றாண்டில் 1145 பேர்.
10 ஆம் நூற்றாண்டில் 286 பேர்.
9 ஆம் நூற்றாண்டில் 72 பேர்.
8 ஆம் நூற்றாண்டில் 18 பேர்
ஏழாம் நூற்றாண்டில் 5 பேர்.
ஆறாம் நூற்றாண்டில் ஒருவர் மட்டுமே... எப்படி இருக்கு கணக்கு?

நீங்க சொல்ற கணக்குப்படி அப்ப இந்தியாவில் ஔவையார் மட்டும்தான் இருந்திருப்பார். அதனால மானிடராதல் அரிது என்று பாடியிருக்கிறார்.. என்ன தப்புன்றேன்... :D :D :D

என்னவோ தெருவுக்கு அஞ்சு கோடி மனிதக் குழந்தைகள் பிறக்கிற மாதிரி நீங்கள் பார்க்கிறீர்கள். அதான் தப்பு. இயற்கையாகவே மனிதனின் பிறப்பு விகிதம் குறைவு. அதை செயற்கை முறையில் இன்னும் குறைச்சிட்டாங்க. மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் வாழ்நாட்கள் அதிகரித்தது மட்டுமே ஆகும்.. எனவே மானிடராதல் அரிது என்பது இன்னும் உண்மைதான்.

குற்றம் சொல்ல முடியாத கருத்தே இல்லை என்பதால், சொல்லுகின்ற அனைத்து புனையுரைகளும் சரி ஆகி விடாது. நினைவில் வையுங்கள்.

குடி குடியைக் கெடுக்கும் என்கிறீர்கள். அப்ப குடும்பமே இல்லாதவன் குடித்தால் நல்லதா? விஞ்ஞானிகள் அளவாக வைன் சாப்பிடுவதால் இரத்தம் சுத்தம் ஆகிறது என்கிறார்களே! அது தப்பு என்கிறீர்களா?
கூழ் குடித்தல் தப்பா? நீர் குடித்தால் தப்பா? எந்தக் குடி, எந்தக் குடியைக் கெடுக்கும் என்ற தெளிவு அதில் இல்லையே... குடும்பம் குடிப்பதைக் கெடுக்குமா? குடிப்பது குடும்பத்தைக் கெடுக்குமா? பிறந்த உடனே குழந்தை (பால்) குடிக்க ஆரம்பித்து விடுகிறதே? தண்ணீரில் இரண்டு ஹைட்ரஜன்கள் ஒரு ஆக்சிஜன்(H2O). ஆல்கஹாலில் ஒரு ஹைட்ரஜன் ஒரு ஆக்சிஜன்(OH). ஒரு ஹைட்ரஜன் அணு ஒவ்வொரு மூலக்கூறுகளிலும் அதிகமா இருக்கறதை குடிக்கறது சரி.. குறைவா இருப்பதைக் குடிப்பது தவறா?

யாவரிடத்திலும் அன்பு செலுத்தல் சிறந்த பண்பா? அப்படி என்றால் நான் இன்னொருவரைக் உங்கள் எதிரில் கொலை செய்யப் போகும் போது இருவர் மீதும் எப்படி எப்படி அன்பு காட்டுவீர்கள்? நீங்க என்னோட அன்பா இருக்கறதை பார்த்து முறைக்கிற போலீஸ்காரர்கிட்ட எப்படி அன்பா இருப்பீங்க...? அனைவரிடமும் அன்பா இருக்க நமக்கும் ஆசைதான்,. மனைவிதான் முறைக்கிறாங்க...

நாயைக் காட்டிலும் நன்றி உள்ள விலங்கு இல்லை என்கிறீர்கள். ஆனால் அந்த நாய்க்கு பிஸ்கட் போட்டு பழக்கி திருடர்கள் அதை அமைதியாக்கி விட்டு திருடுகிறார்கள். அதாவது பிஸ்கட் போட்ட திருடனுக்கு நாய் நன்றியுடன் இருக்குமா? அல்லது சாப்பாடு போட்டவனுக்கு நன்றியுடன் இருக்குமா? இல்லை நன்றியை பர்சண்டேஜ் போட்டுக் காண்பிக்குமா?

இன்னும் எந்தக் கருத்துன்னாலும் பிரிச்சி மேஞ்சிருவமில்ல...:icon_rollout::icon_rollout:

என் எடுத்துக்காட்டுகளால் உங்களுக்கு மனநிறைவு ஏற்படுத்த இயலாமற்போனது பற்றி வருந்துகிறேன்.

6 ஆம் நூற்றாண்டு மக்கள் தொகையை வகுத்தலால் கண்டுபிடித்துவிட்டீர்கள். வீடு வீடாகப் போய்க் கணக்கெடுக்கிற முறைக்குப் பதிலாக, இருந்த இடத்திலிருந்தே, உங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கால்குலேட்டர் மூலம் பெருக்கலால் கணித்தால் கோடிக்கணக்கான ரூபாய் பொதுப்பணம் மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும். நாட்டின் (உலகின்) பொருளாதார மேதைகளுக்கும், புள்ளிவிவரத்துறை அறிஞர்களுக்கும் இந்த எளிய வழி புலப்படவில்லையே! என்ன அறிஞர்கள் இவர்கள்!

இலக்கிய வரலாறு எழுதிய கா.சு.பிள்ளை, மு.வ. முதலியோர் கண்டுபிடிக்க முடியாததை (ஒளவையார் காலம் 6 ஆம் நூ.) நீங்கள் கண்டுபிடித்தது அதிரடி! பலே! பேஷ்! உங்கள் திறமையே திறமை! எனப் பாராட்டுகிறேன்.

இத்தகையவர் ஒளவையாரின் முதற்பாட்டுப் பற்றி எதுவுஞ்சொல்லாமல் நைசாய் நழுவி ஜகா வாங்கிவிட்டீர்களே! உலகத்தைவிட உலகம் பெரியதா?

மனித இனப்பெருக்கம் வாழ்நாள் அதிகரித்ததால் மட்டுமே என்று சொல்லியிருந்த கருத்து உங்கள் கண்ணில் பட்டதோ எனக் கேட்டீர்கள்.

பட்டதே! பட்டதால்தான் ஒரு மனிதன் 2 பேர், 3 பேர் எனப் பிரிவானா என எதிர்வினா விடுத்தேன். அது உங்கள் பார்வைக்குத் தப்பியதெப்படி?

உங்களின் வாதம் தவறானது என்பதைக் கீழ்வரும் இணையச்செய்தி உறுதிப்படுத்துகிறது.

உலகமக்கள் தொகை-விக்கிப்பீடியா

2.11.2009 தேதியில் உலகமக்கள் தொகை 679.4 கோடி என அமெரிக்கக் குடிக்கணக்கு அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.

இறப்பை விடப் பிறப்பு அதிகமாக இருப்பதால் உலக மக்கள் தொகை 2040 க்கு முன்பே சுமார் 900 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.

(world population - wikipedia

As of 2.11.2009 the Earth's population is estimated by the U.S. Census Bureau to be 6.794 billion.

Because births outnumber deaths, the world's population is expected to reach about 9billion by the year 2040. )

விக்கிப்பீடியா உளறுகிறது என்று சொல்லமாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை.

ஆக இன்னும் முப்பதே ஆண்டில் 200 கோடிக்கு மேல் மானிடர் தோன்றுவர். மானிடராதல் அவ்வளவு எளிது!

பிரிச்சு மேஞ்சாலுஞ்சரி, பிரிக்காமல் மேஞ்சாலுஞ்சரி, பிரிஞ்சு மேஞ்சாலும் சரி, பிரியாமல் மேஞ்சாலும் சரி,ஆதாரமற்ற மற்றுத் தவறான கருத்துகள் தலைகாட்டுமேல், ஒரு கை பார்த்து விடுவேன்னேன்.:)

கலையரசி
18-11-2009, 01:31 PM
இக்கட்டுரையையும் அதற்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களையும் படித்து ரசித்தேன். மானிடராய்ப் பிறப்பது எளிதென்று ஆசிரியர் ஆதாரப் பூர்வமாக நிறுவியுள்ளமை பாராட்டத் தக்கது.

தாமரை
18-11-2009, 02:05 PM
என் எடுத்துக்காட்டுகளால் உங்களுக்கு மனநிறைவு ஏற்படுத்த இயலாமற்போனது பற்றி வருந்துகிறேன்.

6 ஆம் நூற்றாண்டு மக்கள் தொகையை வகுத்தலால் கண்டுபிடித்துவிட்டீர்கள். வீடு வீடாகப் போய்க் கணக்கெடுக்கிற முறைக்குப் பதிலாக, இருந்த இடத்திலிருந்தே, உங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கால்குலேட்டர் மூலம் பெருக்கலால் கணித்தால் கோடிக்கணக்கான ரூபாய் பொதுப்பணம் மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும். நாட்டின் (உலகின்) பொருளாதார மேதைகளுக்கும், புள்ளிவிவரத்துறை அறிஞர்களுக்கும் இந்த எளிய வழி புலப்படவில்லையே! என்ன அறிஞர்கள் இவர்கள்!

இலக்கிய வரலாறு எழுதிய கா.சு.பிள்ளை, மு.வ. முதலியோர் கண்டுபிடிக்க முடியாததை (ஒளவையார் காலம் 6 ஆம் நூ.) நீங்கள் கண்டுபிடித்தது அதிரடி! பலே! பேஷ்! உங்கள் திறமையே திறமை! எனப் பாராட்டுகிறேன்.

இத்தகையவர் ஒளவையாரின் முதற்பாட்டுப் பற்றி எதுவுஞ்சொல்லாமல் நைசாய் நழுவி ஜகா வாங்கிவிட்டீர்களே! உலகத்தைவிட உலகம் பெரியதா?

மனித இனப்பெருக்கம் வாழ்நாள் அதிகரித்ததால் மட்டுமே என்று சொல்லியிருந்த கருத்து உங்கள் கண்ணில் பட்டதோ எனக் கேட்டீர்கள்.

பட்டதே! பட்டதால்தான் ஒரு மனிதன் 2 பேர், 3 பேர் எனப் பிரிவானா என எதிர்வினா விடுத்தேன். அது உங்கள் பார்வைக்குத் தப்பியதெப்படி?

உங்களின் வாதம் தவறானது என்பதைக் கீழ்வரும் இணையச்செய்தி உறுதிப்படுத்துகிறது.

உலகமக்கள் தொகை-விக்கிப்பீடியா

2.11.2009 தேதியில் உலகமக்கள் தொகை 679.4 கோடி என அமெரிக்கக் குடிக்கணக்கு அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.

இறப்பை விடப் பிறப்பு அதிகமாக இருப்பதால் உலக மக்கள் தொகை 2040 க்கு முன்பே சுமார் 900 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.

(world population - wikipedia

As of 2.11.2009 the Earth's population is estimated by the U.S. Census Bureau to be 6.794 billion.

Because births outnumber deaths, the world's population is expected to reach about 9billion by the year 2040. )

விக்கிப்பீடியா உளறுகிறது என்று சொல்லமாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை.

ஆக இன்னும் முப்பதே ஆண்டில் 200 கோடிக்கு மேல் மானிடர் தோன்றுவர். மானிடராதல் அவ்வளவு எளிது!

பிரிச்சு மேஞ்சாலுஞ்சரி, பிரிக்காமல் மேஞ்சாலுஞ்சரி, பிரிஞ்சு மேஞ்சாலும் சரி, பிரியாமல் மேஞ்சாலும் சரி,ஆதாரமற்ற மற்றுத் தவறான கருத்துகள் தலைகாட்டுமேல், ஒரு கை பார்த்து விடுவேன்னேன்.:)

உலகத்தை விட உலகம் பெரிசுன்னு நீங்களே சொல்லி விட்டீர்களே..

அதாவது உலகம் என்று முதலில் சொல்வதற்கும் பிறகு உலகம் என்று சொல்வதற்கும் இடையில் இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து விடுகிறதல்லவா? அப்ப முதலில் சொன்ன உலகத்தை விட இப்ப இருக்கும் உலகம் பெரிசுதானே???

விக்கி பீடியாவை படிச்ச நீங்க நான் வலியுறுத்திய கருத்தை சரியா படிக்கலைன்னு தோணுது.

மனித மக்கள் தொகை பெருக காரணம் பிறப்பு விகிதம் அதிகரித்ததால் அல்ல. இறப்பு விகிதம் குறைந்ததுதான்..

Because births outnumber deaths - இந்த வார்த்தைகளில் நீங்க வழுக்கலாம். நான் வழுக்க மாட்டேன்.

A என்பது B ஐ விட அதிகமாகிறது என்றால், ஒரு அர்த்தம் B குறைகிறது. இன்னொரு அர்த்தம் A அதிகமாகிறது.

பிறப்புகள் அதிகரித்திருக்கலாம். ஆனால் பிறப்பு விகிதம் குறைகிறது. இறப்புகள் குறைந்தன. மனிதனின் சராசரி ஆயுள் 1940 களில் 30 ஆண்டுகள். இன்று 60 க்கு அருகில்.. (இதையெல்லாம் படிக்க மாட்டீங்களே)

ஒரு கணவன் மனைவிக்கு 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்த காலம் மலையேறி விட்டது, இன்று 2 அல்லது 3 தான். சைனாவில் ஒன்று, இந்தியாவில் 2 என கட்டுப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஐரோப்பாவிலோ மக்கள் தொகை குறைய ஆரம்பித்து இருக்கிறது..

நான் ஒரு கோடி உயிரினத்திற்கு இப்போது கூட ஒரு மனிதன் இல்லை என்கிறேன். அப்போ மானிடராய் பிறத்தல் அரிதுதானே..

உங்க கண்ணிற்கு தெரிவது அழிந்து போன மிருக இனங்கள்தான். அவையாய் பிறப்பது அரிதினும் அரிது என்று மட்டுமே நீங்கள் சொல்ல முடியுமே தவிர மானிடராய் பிறத்தல் எளிது என்றல்ல.

மானிடர்களில் கூட 10,15 வகை மானிடர்கள் இருந்ததாகவும் அவை எல்லாம் அழிந்து ஹோமோ சஃபியன்ஸ் என்ற ஒரு இனம் மட்டுமே இப்போது இருப்பதாகவும் நீங்கள் படிக்கலை போல இருக்கு.. மிருகங்களில் பல இனங்கள் இன்னும் வாழ்ந்துகிட்டு இருக்கு, பாவம் மனித இனம். ஒரே ஒரு இனம்தான் பாக்கி இருக்கு.

75000 ஆண்டுகளுக்கு முன்னால் லேக் டோபா என்ற மிகப் பெரிய எரிமலை வெடித்து மனித இனம் ஒன்றிரண்டு ஆயிரங்களாக குறுகி பிறகு வளர்ந்ததை அதே விக்கிபீடியாவில் நீங்கள் படிக்கலாம்.

எதிர்காலத்தில் (2050) 1000 கோடி மனிதர்கள் இருப்பார்கள் என்பது ஒரு ஊகம்தான். உலகமே அழியப் போகிறது என்பதும் ஒரு ஊகம்தான்.. அதாவது மனித இனம் பூண்டோடு அழியப் போகுதுன்னு சொல்றாங்களே அதைச் சொல்றேன். முப்பதே ஆண்டில் 200 கோடி மனிதர்கள் தோன்றுவார்கள் என்பது ஊகம்தான்.

குளோபல் வார்மிங், இயற்கைப் பேரழிவுகள் என பல்வகைகளில் மக்கள் தொகை கட்டுக்குள்ளேயே இருக்கும். வெள்ளத்தால், பூகம்பத்தால் சுனாமியால், நோய்களால், வறுமையால், வன்முறையால் என இறப்பவர் எண்ணிக்கை மறுபடி உயர ஆரம்பித்துள்ளது. இது மக்கள் தொகையை கட்டுப்படுத்தும்

கள்ள ஓட்டு, போலி ரேஷன்கார்டுகளில் இல்லாமலேயே இருக்கும் பல மனிதர்களும் உங்கள் கணக்கில் அடக்கம் என்பதையும் மறக்காதீங்க,

2 பேர் இருக்கின்றார்கள். அவர்கள் இரண்டு குழந்தை பெறுகின்றார்க்ள்.. அப்ப 4 பேர் ஆயிடறாங்க. அவங்க ஜோடிக்கு இரண்டிரண்டு பேர் அதாவ்து 4 பேரை உண்டாக்கறாங்க. ஆக மொத்தம் 10 பேர்..

இப்போ முதலிரண்டு பேர் இறக்கிறார்கள்.. இரண்டாம் நான்கு பேர் அப்படியே இருக்காங்க. மூன்றாம் நாலு பேர் நாலு பேரை உண்டாக்குகிறார்கள். அப்ப இருப்பது 4 + 4 + 4 பேர்.

அடுத்து இரண்டாம் நாலு பேர் இறக்க நான்காம் 4 பேர் நாலு பேரை உண்டாக்கறாங்க.. அப்ப இருப்பது 4+4+4 பேர் அதாவது 12 பேர்..

அதாவது, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் படி நாம் இருவர் நமக்கு இருவர் என்பது செயல்பட்டால் மூன்று தலைமுறைகளுக்கு அப்புறம் மக்கள் தொகை உயராது. குறைய ஆரம்பிக்கும். காரணம் குழந்தை இல்லாதவர்கள், முதலில் சொன்ன காரணங்களால் அற்ப ஆயுளில் இறப்பவர்கள் இப்படி பல உண்டு,,,

ஆக எதற்கும் ஒரு சேட்சுரேசன் பாயிண்ட் அதாவது நிறைவுப் புள்ளி உண்டு, அதற்குப் பின் அதன் எண்ணிக்கை உயராது என்பது உலக தத்துவம். எனவே 100000 கோடி மனிதர்கள் உலகத்தில் தோன்ற வாய்ப்பே இல்லை என்பதை தெளிந்து தெளிவீராக..

காரணம் இயற்கை அன்னை சார்புச் சுழலில் மனித எண்ணிக்கை கட்டுப்படுத்தப் படும்.

அதனால் என்றுமே மானிடராய் பிறக்க 0.00000000000000000001 சதம்தான் வாய்ப்ப்பு என்பதால் மானிடராதல் அரிதுதான்.

தாமரை
23-11-2009, 09:23 AM
http://news.yahoo.com/s/ap/20091122/ap_on_sc/us_marine_census

உலக நிலப் பரப்பில் 15 இலட்சம் வகையான தாவரங்களும் விலங்கினங்களும் உள்ளன.

நீருக்கடியில் ஏறத்தாழ 2 இலட்சத்து முப்பதாயிரம் வகையான உயிரினங்கள் உள்ளன. அதாவது மனிதனுக்குத் தெரிந்து ஏறத்தாழ உயிரினங்களின் வகைகளே 17 இலட்சத்து 30 ஆயிரம்.

ஆச்சர்யப் படவைக்கும் தகவல் அல்லவா இது...

இதில் இத்திரி ஆசிரியர் எடுத்துக் கொண்டவை சில ஆயிரங்கள் மட்டுமே.. நான் எடுப்பது அனைத்து உயிரினங்களையும். பரிணாம வளர்ச்சியில், இயற்கையில் இருந்து காணாமல் போகும் சில உயிரினங்களை மட்டுமே நோக்காமல், மனிதர், மற்ற உயிரினங்கள் என்ற நோக்கில் பார்க்க வேண்டும்.

இல்லா விட்டால் திரித்து கூறப்படும் கருத்தாக அது முடிந்து விடும்.

இன்பா
23-11-2009, 10:38 AM
ஹைய்யா..!!! நமக்கு மூணு ஔவையாரா...?! ஜாலி

குணமதி
23-11-2009, 11:02 AM
ஔவையார் மட்டுமில்லை.

நக்கீரரும் மூவர் என்று மகிழலாம்.

இன்பா
23-11-2009, 11:04 AM
அஹ...... நக்கிரர் ஒருவரே போதுமப்பா...!!! கேள்வி கேட்டு நுங்கெடுத்திடுவாங்க.. :)

குணமதி
23-11-2009, 11:11 AM
அஹ...... நக்கிரர் ஒருவரே போதுமப்பா...!!! கேள்வி கேட்டு நுங்கெடுத்திடுவாங்க.. :)

அதை வைத்து அருமையான திரைப்படம் பார்க்கலாமே!

தாமரை
24-11-2009, 05:18 AM
உங்களுக்கு விக்கிபீடியாவில் இருந்துதான் ஆதாரங்கள் வேணும்னா

1. http://en.wikipedia.org/wiki/File:Population_curve.svg
2. http://en.wikipedia.org/wiki/Population_decline
3. http://en.wikipedia.org/wiki/File:World_population_increase_history.svg
5. http://en.wikipedia.org/wiki/File:Population_growth_rate_world.PNG
4. http://en.wikipedia.org/wiki/One-child_policy

இதிலிருந்து தெரிவது மக்கள் தொகை ஔவையார் காலங்களில் குறைவாகவே இருந்தது.

மக்கள் தொகை கடந்த சில நூற்றாண்டுகளில் மிகப் பெரியதாகப் பெருகினாலும் இப்போது மக்கள் பெருக்க விகிதம் சரிந்து வருகிறது. முக்கியமாக இந்தியா, மற்றும் சீனச் சதவிகிதம் வருடத்திற்கு 1% அளவிற்கு இருக்கிறது... (4 சதவிகிதம் என்பது முதலில் நீங்கள் தந்த கணக்கு. அது குறைந்து 1 சதவிகிதம் ஆகி இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் ??? India 1.548% (2009 est.) 0.655% (2009 est.) )

அப்புறம்

Among the countries currently classified by the United Nations as more developed (with a population of 1.2 billion in 2005), the median age of the population rose from 29.0 in 1950 to 37.3 in 2000, and is forecast to rise to 45.5 by 2050. The corresponding figures for the world as a whole are 23.9 for 1950, 26.8 for 2000, and 37.8 for 2050. In Japan, one of the fastest ageing countries in the world, in 1950 there were 9.3 people under 20 for every person over 65. By 2025 this ratio is forecast to be 0.59 people under 20 for every person older than 65.[3]

அதாவது வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதாவது மக்கள் தொகை குறையத் தொடங்கும்.

In 1990 the world's women, on average, were giving birth to 3.3 children over their lifetimes. By 2002 the average was 2.6."

இந்த சராசரி 2 க்கு கீழ் போகும் பொழுது மக்கள் தொகை குறையத் தொடங்கி விடும்....அது ரொம்ப தூரம் இல்லை.

lolluvathiyar
02-12-2009, 03:01 PM
ரொம்ப நாள் கழிச்சு தமிழ்மன்றம் வந்தேன், இதை படிச்சேன் ஔவை பற்றி ஆரம்பிச்சு அறிவியல் கனிதம் அது இது போய் என்னை மொத்தமா குழப்பீட்டாங்கப்பா.
இங்க ஆளாளுக்கு போட்ட கனக்கும் டிபேட்டையும் படிச்சு இதுல யார் சொல்லறது சரிங்கறது முக்கியமல்ல எல்லாத்தை விட அந்த ஔவையார் சொல்லறது மட்டும் படிச்சுகிட்டு போறது பெஸ்ட்னு முடிவுக்கு வந்துட்டேன். ஔவையின் புகழை உயர்த்திய ஞானசம்ந்தருக்கு நன்றி

சொ.ஞானசம்பந்தன்
03-12-2009, 05:30 AM
உங்களுக்கு விக்கிபீடியாவில் இருந்துதான் ஆதாரங்கள் வேணும்னா

1. http://en.wikipedia.org/wiki/File:Population_curve.svg
2. http://en.wikipedia.org/wiki/Population_decline
3. http://en.wikipedia.org/wiki/File:World_population_increase_history.svg
5. http://en.wikipedia.org/wiki/File:Population_growth_rate_world.PNG
4. http://en.wikipedia.org/wiki/One-child_policy

இதிலிருந்து தெரிவது மக்கள் தொகை ஔவையார் காலங்களில் குறைவாகவே இருந்தது.

மக்கள் தொகை கடந்த சில நூற்றாண்டுகளில் மிகப் பெரியதாகப் பெருகினாலும் இப்போது மக்கள் பெருக்க விகிதம் சரிந்து வருகிறது. முக்கியமாக இந்தியா, மற்றும் சீனச் சதவிகிதம் வருடத்திற்கு 1% அளவிற்கு இருக்கிறது... (4 சதவிகிதம் என்பது முதலில் நீங்கள் தந்த கணக்கு. அது குறைந்து 1 சதவிகிதம் ஆகி இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் ??? India 1.548% (2009 est.) 0.655% (2009 est.) )

அப்புறம்

Among the countries currently classified by the United Nations as more developed (with a population of 1.2 billion in 2005), the median age of the population rose from 29.0 in 1950 to 37.3 in 2000, and is forecast to rise to 45.5 by 2050. The corresponding figures for the world as a whole are 23.9 for 1950, 26.8 for 2000, and 37.8 for 2050. In Japan, one of the fastest ageing countries in the world, in 1950 there were 9.3 people under 20 for every person over 65. By 2025 this ratio is forecast to be 0.59 people under 20 for every person older than 65.[3]

அதாவது வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதாவது மக்கள் தொகை குறையத் தொடங்கும்.

In 1990 the world's women, on average, were giving birth to 3.3 children over their lifetimes. By 2002 the average was 2.6."

இந்த சராசரி 2 க்கு கீழ் போகும் பொழுது மக்கள் தொகை குறையத் தொடங்கி விடும்....அது ரொம்ப தூரம் இல்லை.

குழந்தை பிறந்ததால் உலகம் பெரிதாயிற்று என நீங்கள் உரைத்தது நல்ல ஜோக்! காற்றடைத்த பலூனுக்குள் மேலுஞ் சிறிது காற்றைச் செலுத்தினால் அது உப்பிப் பருப்பது போலவா? பெரிது என்பது அளவை வைத்துச் சொல்லவில்லை என்ற அடிப்படைக் கருத்தை என் முதற்கட்டுரையில் குறிப்பிட்டேன். திரு.பிரவீண் அவர்களும் அளவை வைத்துச் சொல்லப்பட்டதல்ல என்று பின்னூட்டம் அளித்தார். இப்போது நீங்கள் குழந்தை எண்ணிக்கை என்னும் எண்ணலளவையைப் புகுத்தி அடிப்படையை மாற்றுகிறீர்கள். இது கபி வாதம்.

வைரஸ்கள், பாக்டிரியாக்கள் உள்பட்ட உயிரினங்கள் அனைத்தையும் நோக்க, மானிடராதல் அரிது என்கிறீர்கள். இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்துந்தானே? மனிதர் உட்பட உலகின் தெரிந்த, தெரியாத கோடானுகோடி உயிரின எண்ணிக்கையோடு ஒப்பிட்டு ஒரு மின்மினியாதல் அரிது என்று சொல்லலாம். இவ்வாறே திமிங்கிலம் ஆதல் அரிது, முருங்கை மரமாதல் அரிது என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இதில் மனிதனுக்கு என்ன தனித்துவம்? ஆகவே இந்த ஒப்பீடு பிழை.

ஒரேயொரு மனித இனந்தான் இருக்கிறது என்று நீங்கள் சொன்னது சரிதான்; ஆனால் இந்த ஓரினந்தானே பல்கிப் பெருகிப் பிரவாகமாய்ப் பொங்கிப் பயமுறுத்துகிறது?

சராசரி வயது 30, 60, ---என உயர்ந்துகொண்டே போனால் முதியோர் எண்ணிக்கை கூடுகிறதேயொழிய மக்கள் தொகை பெருகாது. வாணாள் நீட்டிப்புத் தான் மானிடர் பெருகக் காரணம் என்ற உங்கள் கருத்துக்கு ஆதாரம் இல்லை.
10 குழந்தை பிறந்தவிடத்தில் 2 பிறக்கிறது என்ற கணக்குப் போதுமா? தகுதி வாய்ந்த இணையர் (eligible couples) அபரிமிதமாகிவிட்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இணையர் 40 கோடி x 10 = 400 கோடி குழந்தை
இணையர் 250 கோடி x 2 = 500 கோடி குழந்தை!

நிறைவுப் புள்ளியுண்டு என நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது எப்போது வரும் எனத் தெரியாது. தற்போதைய நிலவரத்தை வைத்துத்தான் பேசலாம்.

முதியோர் தொகை கூடுவதற்கும் மக்கள் தொகை குறைவதற்கும் நீங்கள் காட்டிய ஆதாரம் வளர்ந்த நாடுகளுக்கானது. (more developed countries)

குறைந்த வளர்ச்சியுள்ள நாடுகள்தான் பெரும்பான்மை. இவை: ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா, நடு அமெரிக்கா, ஜப்பான் தவிர ஆசியா (இதில் சுமார் 250 கோடி மக்கள் கொண்ட இந்தியாவும், சீனாவும் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது), சிறு பசிபிக் தீவு நாடுகள்.

பெரும்பான்மையை வைத்துத்தான் வாதிட வேண்டும். இங்கே சில நாடுகளில் வாணாள் குறைகிறது:

1970-75------------------------------ 2000-05

49.7 -- ஜாம்பியா--------------------- 32.4
47.3 -- சுவாஜிலாந்து ----------------- 34.4
56 ---- ஜிம்பாப்வே ------------------ 33.1
56 ---- லெசொத்தோ ----------------- 35.1
43 ---- நடு ஆப்பிரிக்கக்குடியரசு ------- 39.5

(ஆதார நூல்: Poverty by Cath Senker - 2007 )

இங்கெல்லாம் மக்கள் தொகை பெருகுவதால் தான் 900 கோடியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்.

It is expected என்பதை யூகம் என்கிறீர்கள். எதிர்பார்ப்பும் யூகமும் வெவ்வேறு. எதிர்பார்ப்பு என்பது கிட்டத்தட்ட உறுதி. நம் வசதிக்கேற்பச் சொற்களின் பொருளை வளைக்கக்கூடாது.

பிறப்பு விகிதம் 2க்குங் கீழே போனால் என நீங்கள் சொல்வதுதான் யூகம்! போனால் என்ற நிபந்தனை இதிலிருக்கிறது. அத்தைக்கு மீசை முளைத்தால்!

rajarajacholan
03-12-2009, 06:40 AM
வாதம் ரொம்ப நல்லா போகுது. திரும்ப எப்போ எழுதுவீங்க?

தாமரை
03-12-2009, 11:04 AM

நீங்கள் உளமாற அவர்களின் வாதத்தை ஒப்புக் கொண்டிருந்தால் நான் அதைத் தொட்டிருக்கவே மாட்டேன்.

ஆனாலும் நான் சொன்னதில் உண்மை ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது.,

ஒவ்வொரு வினாடியும் உலகத்தின் மீது கோடிக்கணக்கான போட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலெக்ட்ரான்கள் வந்து மோதி இணைந்து கொண்டிருக்கின்றன என்பது அறிவியல் உண்மை. அதாவது உலகம் பெரிதாகிக் கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை,

நீங்கள் பிரவீண், சமுத்ரா செல்வம் ஆகியோரின் வாதத்தை ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் மிஞ்சி இருப்பது மக்கள் தொகை எப்பொழுது குறைய ஆரம்பிக்கும் என்னும் வாதம்தான்.

இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது 1975 ல்.

1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 70 கோடி. இன்று 115 கோடி. இதைத்தாம் நீங்கள் பார்க்கிறீர்கள்

நான் எடுத்துக் கொடுத்த

2008 ல் இருந்து 2009 வரையான இந்தியாவின் மக்கள் தொகை உயர்வு
India 1.548% (2009 est.) மட்டுமே.

2008 ல் இருந்து 2009 வரையான சீனாவின் மக்கள் தொகை உயர்வு China 0.655% (2009 est.) ) மட்டுமே.

இதை கவனிக்கத் தவறி விட்டீர்கள். அதாவது இந்தியா சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகை பெருக்க விகிதம் மிகவும் குறைந்து விட்டது.

http://en.wikipedia.org/wiki/File:World_population_increase_history.svg

இதைப் பாருங்கள். உலக அள்வில் இன்று 1.2% வருடத்திற்கு மக்கள் தொகை உயர்கிறது. இருந்தாலும் மக்கள் தொகை பெருக்க விகிதம் குறைகிறது...1970 களில் இது 2.2 ஆக இருந்தது...

1975 இல் இருந்து 90 வருடங்கள் என்று கணக்கு எடுக்கும் பொழுது 2050 ஆம் வருடத்தில் மக்கள் தொகை சரிய ஆரம்பித்து விடும்.

இது உங்கள் கேள்வி.. உங்கள் கணக்கு பாதியில் நிற்கிறது என்பதுதான் உண்மை.

ஏற்கனவே சொன்னதுதான். கொஞ்சம் மாற்றிச் சொல்கிறேன்

2 மனிதர்கள் இருக்கிறார்கள். அவர் 30 ஆண்டுகளில் 2 குழந்தைகளை பிரசவிக்கிறார்கள்.

ஆக மக்கள் தொகை 30 ஆண்டுகளுக்குப் பிறகு 4 ஆகி விடுகிறது.

அடுத்த முப்பது ஆண்டுகளில் இந்த இரண்டு குழந்தைகளும் வளர்ந்து இன்னும் இரண்டு குழந்தைகளை பிரசவிக்கிறார்கள். அதாவது எலிஜிபிள் கபுள்ஸ் ஒன்றுதான்.... அது மாறலை.

மக்கள் தொகை இப்பொழுது இரண்டு வயதானவர்கள், இரண்டு நடுத்தர வயதினர் இரண்டு குழந்தைகள்.

அடுத்த முப்பது வருடங்களில் வயதானவர்கள் இரண்டு பேரும் இறந்து விடுகிறார்கள், இரண்டு நடுத்தர வயதானவர்கள் வயதானவர் ஆகி விடுகிறார்கள். இரண்டு குழந்தைகள் வளர்ந்து நடுத்தர வயதை அடைகிறார்கள்.. இரண்டு குழந்தைகள் என்பார்கள்

அதாவது உலகில் எப்பொழுதும் 2 வயதானவ்ர்கள், 2 நடுத்தர வயதினர் மற்றும் 2 குழந்தைகள் என ஆறு பேர் மட்டுமே இனி வாழ்வார்கள்

இப்பொழுது 2 க்கு பின் எத்தனை பூஜ்யம் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள் கணக்கு மாறாது..

இதில் வயதானவர்கள் அதிகரிப்பது, மக்கள் தொகை பெருக்கம் என்பது ஏற்கனவே மட்டுப்பட ஆரம்பித்து விட்டது என்பதற்கான ஆதாரம் ஆகும். ஏனென்றால் பிறக்கப் போகும் குழந்தைகள் எண்ணிக்கையை விட இறக்கப் போகும் முதியவர்கள் அதிகமாகப் போகிறார்கள் என்று இதற்குப் பொருள்.

மக்கள் தொகை பெருகுவதால் தான் 900 கோடியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்.

பிறப்பு விகிதம் 2க்குங் கீழே போனால் என நீங்கள் சொல்வதுதான் யூகம்! போனால் என்ற நிபந்தனை இதிலிருக்கிறது. அத்தைக்கு மீசை முளைத்தால்! .

அது யூகமல்ல என்பதற்கு ஆதாரம் கொடுத்திருக்கிறேன்.

1990 களில் உலகத்தில் ஒவ்வொரு பெண்ணும் 3.3 குழந்தைகளைப் பிரசவித்தாள்

2002 ல் ஒவ்வொரு உலகிலே ஒவ்வொரு பெண்ணும் 2.6 குழந்தைகளையே பிரசவித்தாள்

2012 - ல்??? இது 2.3 க்கும் கீழே வரக்கூடும். 2030 ற்குள் இது 2க்கும் கீழே போய்விடும்

Among the countries currently classified by the United Nations as more developed (with a population of 1.2 billion in 2005), the median age of the population rose from 29.0 in 1950 to 37.3 in 2000, and is forecast to rise to 45.5 by 2050. The corresponding figures for the world as a whole are 23.9 for 1950, 26.8 for 2000, and 37.8 for 2050.

அதாவது 2050ல் பெரும்பாலான மக்கள் 38 வயதுடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் மக்கள் தொகையை பெருக்க மாட்டார்கள். அன்றிலிருந்து 60 ஆண்டில் மக்கள் தொகை குறைந்திருக்கும்.

In 1990 the world's women, on average, were giving birth to 3.3 children over their lifetimes. By 2002 the average was 2.6

இதுவும் உலகலாவிய கணக்குதான்.

1990 ல் ஒவ்வொரு பெண்ணும் 3.3 குழந்தைகளுக்குத் தாய்
2002 ல் ஒவ்வொரு பெண்ணும் 2.6 குழந்தைகளுக்கு மட்டுமே தாய்

2030 க்குள் இது 1.75 ஆக குறைந்து விடும். அதனால் மக்கள் தொகை குறையும்.

இன்றைய மக்கள் தொகை : 650 கோடி
மக்கள் தொகை பெருக்க விகிதம் : 1.2
30 ஆண்டுகளுக்கு பின் மக்கள் தொகை = 929 கோடி (650கோடிx((1+0.012)^30)

FV = P (1 + r)Y

என்பதுதான் இதற்கான சூத்திரம்
இதனால் உங்களுக்கு வரலாம் ஆத்திரம்.
என்ன செய்ய நான் வெறும் பாத்திரம்
படித்தேன் விக்கிபீடியா தோத்திரம்
நான் படிக்கலை தர்க்க சாத்திரம்
நான் நக்கீரரோட கோத்திரம்
(இது நகைச்சுவைக்காக மட்டுமே!!!)

இதுதான் நீங்கள் சொன்ன அந்த எதிர்பார்ப்பு கணக்கு..

மக்கள் தொகை பெருக்க விகிதம் 2.2 லிருந்து 1.2 க்கு 40 ஆண்டுகளில் விழுந்து நிற்பதை எதிரே பார்க்கத் தவறியதுதான் இந்த எதிர்பார்ப்பை யூகமாக்கி இருக்கிறது...

ஆனால்... இந்த் 1.2 சதவிகிதம் என்பது குறையும்.2020ல், 2030 ல், 2040ல் எத்தனை சதவிகிதமாக இருக்கும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சொல்வது தவறு என்று சொல்வதுதான் எதிர்பார்ப்பு.. யூகம் அல்ல.

மக்கள் பெருக்க விகிதம் குறைந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Globally, the growth rate of the human population has been steadily declining since peaking in 1962 and 1963 at 2.20% per annum. In 2007 the growth rate was 1.19% per annum.

எண்ணிக்கையையே எடுத்துக் கொள்ளுங்கள்

The actual annual growth in the number of humans fell from its peak of 87.8 million per annum in 1989, to a low of 74.6 million per annum in 2003,

மக்கள் தொகை பெருகும் சதவிகிதத்தை விடுங்கள்.. எண்ணிக்கையே குறைந்து வருகிறது என்பதைக் கவனியுங்கள்....

இதையெல்லாம் பார்க்காமல் நேர்கோடு போட்டுக் கொண்டே போகாதீர்கள். உலகம் உருண்டையானது. நேர்கோடு சாத்தியமில்லை.

சொ.ஞானசம்பந்தன்
10-12-2009, 07:04 AM

இருக்கிற உலகம் பெரிதாவது பற்றி ஒளவையார் எதுவுஞ் சொல்லவில்லை. உலகத்தைப் பிற பொருள்களுடன் அவர் ஒப்பிடுகிறார். அவரது பாட்டில் பிரச்சனைக்குரிய இரு கருத்துகளை மட்டுஞ் சுருக்கி இவ்வாறு கூறலாம்.

(தொடக்கம்) 1. உலகத்தை விட பிரம்மன் பெரியவன்.
(பிற்பகுதி) 2. பிரம்மனை, etc. விட உலகம் பெரியது.

இரண்டும் முரண் என்று மேலோட்டமாக வாசிப்பவரே கூறிவிடுவார். இதைத் தமிழிலக்கணம் 'மாறுகொளக்கூறல்' என்னுங் குற்றம் என்கிறது.

நீங்கள், முரண்தான் என ஒப்புக்கொள்ளவேண்டும்; அல்லது முரணல்ல என்று சொல்லி எப்படி என்று விளக்கவேண்டும்.

இரண்டையும் விட்டுவிட்டுக் குழந்தைகள், எலக்ட்ரான்கள் எனச் சம்பந்தா சம்பந்தமின்றிச் சொல்லித் திசை திருப்புகிறீர்கள். மீண்டும் சொல்கிறேன், இது கபிவாதம்.

மக்கள்தொகை உச்சத்தை எட்டியபின்பு குறையத் தொடங்குந்தான். கணிசமாகக் குறைந்துவிடின் அழிவுநிலை விளிம்பை அடையாதபடி பார்த்துக் கொள்வார்கள், நிறையக் குழந்தைகள் பெறும்படி பரப்புரை செய்தும், அதிகம் பெறுவோர்க்கு ஊக்கத்தொகை, பரிசு, விருது வழங்கியும், சோதனைக்குழாய், குளோனிங் (இன்னும் என்னென்ன கண்டுபிடிப்பு வருமோ) முதலியவற்றைப் பயன்படுத்தியும், இன்னோரன்ன வழிகளில் முயன்றும்.

எல்லா முயற்சிகளையும் மீறி மானிடவினம் மறைந்தே தீரும் என்னும் நிலை வந்துவிடுமேல் அப்போது கூறலாம் மானிடராதல் அரிதென்று; அதுவரை அரிதன்று.

gans5001
18-12-2009, 12:39 PM
ஒன்று மட்டும் எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. விவாதம் தனி மனித விமர்சனமாக பல இடங்களில் மாறியிருக்கிறது. சம்பந்தனார் புதியவர் மன்ற விதிகள் தெரியாமல் போகலாம்.. பண்பட்ட தாமரையும் தரமிறங்க வேண்டுமா? வாதிடுங்கள்.. கருத்துகளை வைத்து மட்டும்.

"இன்னும் எந்தக் கருத்துன்னாலும் பிரிச்சி மேஞ்சிருவமில்ல..." என்ற தாமரை வரிகளில் தெரியும் உரிமையான நகைச்சுவையை சம்பந்தனார் புரிந்து கொள்ளாமல் போனது வேதனையே.. சம்பந்தனாருக்கு மன்ற விதிகளை கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால் நலம். இளசு களமிறங்கலாமே சமாதானத் தூதுவராக?

Kannan K
27-12-2009, 12:55 PM
பழைய பாடலானது, அறிஞர்களின் சுவையான வாதத் திறமையால் பட்டை தீட்டப்பட்ட வைரம் போலானதை உணர்ந்து மகிழ்கிறேன். கன்னித் தமிழ் வாழ்க!

jbala
28-12-2009, 11:06 AM
குடுமி பிடி சண்டைல ஒன்ன மறந்துட்டீங்களே சம்மந்தரு ., பாட்டி சொன்ன புவனமும் புவியும் வேறே வேறே. ரெண்டையும் உலகம்னு சொன்ன., உலகத்துக்கே அடுக்காது.

ஈ லோகானிகி நேனே ஸ்ருஷ்டி கர்த்தா. அப்படின்னு ஒரு தமிழ் படத்ல தெலுங்கு டயலாக் வருமே. நியாபகம் இருக்கா. ( தலைவர் படமுங்கோ. ) அந்த லோகம் தான் இந்த புவனம்.

புவனம்னா என்னன்னு திரிபுவன சஞ்சாரியான நாரதர் தான் சொல்லனும்னு அவசியம் இல்லனு நெனைக்கிறேன்.
தன்னோட மூன்றே அடிகளால் அந்த வாமனன் அளந்தது மூன்று உலகங்களை.... வானுலகம்., பூலோகம்., பாதாள லோகம்.

இந்து புராணங்களின் படி பார்த்தா மொத்தமும் இப்படி ஈரேழு பதினான்கு லோகங்கள் இருக்காம்.

இது மட்ட்டுமில்லாம நம்மோட திரையுலகம், தமிழ் பேசும் நல்லுலகம், , டிஸ்னி உலகம்..... டீன் ஏஜ்ல நாம காணற கனவுலகம் இதெல்லாம் வேற கணக்கு.

“ உலகத் தொல்லைக்காட்சிகளில் முதன் முறையாக.... “ இதுல உலகமும் வேறே கணக்கு தான்.

உலகம் என்பதை ஜியோக்ரபி என்ற வட்டத்திற்குள் அடக்கி விட முடியாது.

சிறியதும் பெரியதுமாய் அவரவர்க்கு அவரவர் உலகம்.
இப்படி ஆயிரம் உலகங்கள்

ஆனா இந்த புவி இருக்கு பாருங்க, அதாங்க நம்ம பூமி. அது ஒன்னே ஒன்னு தான். இந்த புவி ஒரு கோளுங்க. மார்கழி மாசத்து கோலமில்லிங்க. கோள் சொல்ற கோளும் இல்லீங்க.
“நாளும் கோளும் என் செய்யும்”ல வர்ர கோளுங்க. அதாகப்பட்டது சூரியனையே சுத்தி சுத்தி சைட் அடிக்கிற ஒன்பது கோள்கள்ல மூனாவது ப்ளாணட்டுங்க.

புவனம் - world
புவி - planet Earth

ரெண்டும் வேறே வேறேங்க.

இன்றைய கலாசார பாஷைல சொல்லனும்னா.,
என்ன தான் ஐஸ்வர்யா ராய் அழகியா இருந்தாலும் அவங்க Miss world மட்டுந்தானே. மிஸ் யுனிவர்ஸ்னு சொல்லிடுவீங்களா என்ன. இல்ல Miss Planetனு தான் சொல்லிட முடியுமா.

So புவனம் என்பது வேற, புவி என்பது வேற,
உலகம், பூமி இவை இரண்டின் வரையறைகளும் வேற வேற.

இப்போ சொல்லுங்க சம்மந்தரு., பாட்டி சொன்னது தப்பா . ??

ஆனாலும்., பாட்டி சில இடங்கள்ல குழப்பல் பேர் வழி தான்.
குழப்பறதுல அந்த காலத்து பெண் விசு.
என்ன குசும்பு பாருங்களேன். “தையல் சொல் கேளேல்” அப்படின்னு தையலான இவங்களே சொல்லி குட்டைய கொழப்பிடுவாங்களாம். இவங்க சொல்ற பேச்ச கேக்கறதா வேண்டாமானு நாம தலைய.. தலை முடிய பிச்சுக்கணுமாம்.

எப்படின்னா... தையல் சொல் கேளேல் அப்படின்னா “பெண்களின் வார்த்தைய கேட்டு நடக்காதே” அப்படின்னு பொருள் வருதா...
வரும். அப்படின்னா., பாட்டியும் பெண் தானே. அப்போ அவங்க பேச்ச கேட்க கூடாது. அவங்க பேச்ச கேட்க கூடாதுன்னா., தையல் சொல் கேட்கனும்., தையல் சொல் கேட்கனும்னா, பாட்டி சொன்ன “தையல் சொல் கேளேல்”., அதாவது பாட்டி சொல்லைக் கேட்க கூடாது..
ஐய்யோ.. ஐயய்யோ.
என்னா ஒரு வில்லத்தனம்.

இப்போ என்ன தான் சொய்யறது. பாட்டி சொல்ல கேட்கனுமா வேணாமா..

பாட்டிய சொல்லி தப்பில்லங்க. நாம பொருள் எடுத்துக்கறதுல தான் தப்பு.
தையல் சொல் கேளேல். இதுக்கு பொத்தம் பொதுவா, தையல்னா பெண் அப்படின்னு அர்த்தம் பண்ணிக்கறத விட., இங்கே பெண் என்பது பெண்டாட்டிய குறிப்பது. மனைவியும் பேச்சைக் கேட்டு, பெற்றவர்களையும் மற்ற்வர்களையும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பர மஹானு பாவர்களுக்காகவே எழுதப்பட்டதா தான் எனக்கு படுகிறது.

( உடனே அந்த காலத்தில முதியோர் இல்லம் எல்லாம் இல்லனு எதிர் பதில் போட்டா பிச்சுபுடுவேன் பிச்சி. என் தலை முடிய நானே பிச்சுக்குவேன்னு சொன்னேனுங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். )

(( என்னா ஒரு தீர்க்க தரிசனம் பாருங்க கெழவிக்கு அப்படின்னு சொல்லி தப்பிச்சிடுவோமில்ல... ))

இதோடு விட்டாரா அந்த கூன் கிழவி, ஆத்திச்சுடில பாக்கணும்.
ஒரு இடத்ல,”ஈவது விலக்கேல்”னு சொல்லிட்டு அடுத்த லைன்ல “ஏற்பது இகழ்ச்சி” யாம். அத படிச்சி முடிக்கறதுக்குள்ள., “ஐயமிட்டு உண்” அப்படின்னு ஒரு போடு போடுவார்.

அடிப் பாவி., இப்போ தானே சொன்னே “ஏற்பது இகழ்ச்சி”னு
அப்புறம் எவன் ... எந்த இனா வானா நா இடற ஐயத்தை ஏற்பான். ?
சீ.. சீ... ஏற்பது இகழ்ச்சினு சீ கொட்ட மாட்டானா.
அப்புறம் எங்கே இருந்து ஐயமிட்டு உண்ணுறது. இதுல ஈவது விலக்கேல் வேற.

அது தான் போகட்டும்னா கொன்றை வேந்தன்ல “பிச்சை புகினும் கற்கை நன்றே”னு வேற இன்னொரு குண்டு.

ஏன்.......எதுக்கு ...... நல்லா தானே போய்கிட்டு இருக்கு.

குழப்பத்தின் இன்னொரு பெயர் ஔவையாரோ அப்படின்னு ரூம் போட்டு யோசிக்கும் போது தான் பாட்டி சொல்ல வர்ர விஷயம் புரிய வரும்.

தான் உழைத்துப் பெறாத எதையும், எதையும் என்றால் எதையும், அது பொருளாக இருக்கட்டும், புகழாக இருக்கட்டும், புண்ணியமாக இருக்கட்டும், எதுவாகினும் , தான் உழைத்துப் பெறாததை., தனக்கு தகுதி இல்லாததை , பிறரிடம் இருந்து ஏற்பது என்பது இழிவானது.
அதை தான் இங்கே சொல்றார். “ஏற்பது இகழ்ச்சி”

அப்படிப் பட்ட இழிவான ”ஏற்பதை”யும் ஏற்றுக்க்கொள்பவர்கள் அடியார்கள்.
அத்தகைய அடியார்களுக்கு “ஐயமிட்டு உண்”. அடியவர்களை பேண்.
உன்னைச் சார்ந்தவர்கள் மற்றும் சார்ந்தவைகளுக்கும் உணவிட்டபின் நீ சாப்பிடு.
பகிர்ந்து உண்ணுதல் அப்படிங்கற்து தான் இதோட சாரம்.

கல்வி அப்படின்னு வரும் போது, கேவலமேயானாலும், படிக்கணும்னு ஆசை இருந்தா பிச்சை எடுத்தாலும் தப்பில்லை. அந்த காலத்ல எஜுகேஷன் லோன் எல்லாம் இல்லீங்களே.
பிக்ஷாந்தேஹி தான்.
அதனால பிச்சை புகினும் கற்கை நன்று.

அதனால சம்மந்தரு, பாட்டி சொன்ன சொல்லிலும் குத்தமில்ல, பொருளிலும் குத்தமில்லீங்க. .
உள்ளொன்று வைத்து புறமொன்றாய் பொருள் தருவது தானே கவிதைக்கு அழகு.
எல்லாம் நாம பார்க்கற பார்வைல தாங்க இருக்கு.

நுனிப் புல் மேய்ஞ்சுட்டு, கரும்பு இனிக்கலன்னா எப்படிங்க.
அடிக்கரும்பை சுவைத்து பாருங்க.. இனிக்கும்.

முருகனையே, அசால்டா “ஞான பழம்”னு சொன்னவராச்சே.,
பாட்டியோட பாட்டில மூழ்கி தானுங்க முத்து எடுக்கணும்.

எப்பவும் ஔவைப் பாட்டி சொல்லைத் தட்டாதே தான்.