PDA

View Full Version : வெட்டுக்கிளி



வானதிதேவி
26-10-2009, 04:46 PM
எனக்கான சொந்தமாய்
நம் இல்லம் வந்த நாள் முதல்
சினேகமாய் புன்னகைக்கும் உன்
விழிவலையில் சிக்கித்தான் போனேன்

அலுவலகம் முடிந்து ஓடோடி வருவேன்
உன் ஒளிர்முகம் தேடி
மிட்டாயுடன் வரும் தந்தையை
எதிர்நோக்கும் குழவியாய் நீ

உனக்கு பிடித்த உணவை வேண்டாம்
என மறுத்தாய்
காரணம் புரியாமல் திகைத்த உன் தாய்க்கு
கூறினாய் அவருக்கு மிக பிடிப்பதால்
எனக்கு சிறிதும் உண்ண மனமில்லை என்று

தலைகேசம் கலைத்து, செல்லமாய்
என்காதருகில் குனிந்து சிணுங்கும்
உன் ஒலிகளின் கிறக்கத்தில் நான்
சர்ப்பமாய் கட்டுண்ட இரவுகள்

களைத்து எழுகையில் கவனமாய்
அமுதுட்டிய அன்னையாய் நீ
பிள்ளையுடன் பிள்ளையாய்
கண்ணாமூச்சி ஆடவைத்தாய்

ஆனால் இன்றோ என்னை
மட்டும் கண்ணை கட்டி காட்டில்
விட்டு விட்டு நீ மட்டும்
தடுத்தாட்கொண்டவனோடு

உன மனம் நோகாமல் கேட்கிறேன்
அன்பே நான் செய்த குற்றமென்ன?

வியாசன்
26-10-2009, 04:52 PM
வானதிதேவி இந்த கவிதையை புரிந்துகொள்ள முடியவில்லை என்ன சொல்ல வருகின்றீர்கள்?

வானதிதேவி
27-10-2009, 11:51 AM
அன்பாய் திருமண பந்தத்தில் இணைந்து வாழ்ந்து பின் சட்டென்று பிறன் மனை நோக்கிய பெண்ணை மறக்க இயலாமல் போன கணவனது ஆற்றாமையான புலம்பல்.இப்போது புரிகிறதா நண்பரே.

சுகந்தப்ரீதன்
02-11-2009, 11:50 AM
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்ன கதையா இருக்குது..!!

அவ்ளோ பாசமா இருந்தவள்.. இவ்ளோ மோசமாக மாறுவாளா..?! அப்படியானால் குற்றம் எங்கே.. கொண்டவனிடமா.. கொண்டு போனவனிடமா..?? சிந்திக்க வைக்கும் கவிதை... வாழ்த்துக்கள் வானதிதேவி..!!

வானதிதேவி
17-11-2009, 01:28 PM
ஒரு நாள் தற்செயலாக நாளிதழில் கண்ணுற்ற செய்தி.எவ்வாறு பிறழ்கிறோம் என்று தெரியாமலே நடந்து விடுகிறதோ இல்லை சூழ்நிலை மாற்றமா என்று வெகுநேரம் யோசித்தும் விளங்கவில்லை.
நன்றி நண்பருக்கு.

கீதம்
18-11-2009, 07:27 AM
இக்கவிதையின் கருவை நீங்கள் விளக்கும்வரை, மனைவியை காலனிடம் திடீரென்று பறிகொடுத்த கணவனின் நிலையாகத்தான் எனக்குத் தோன்றியது. யோசித்துப் பார்த்தால் அங்கும் இது பொருந்துகிறது. நல்லதொரு கவிதைக்கு பாராட்டு வானதிதேவி அவர்களே.

வானதிதேவி
19-11-2009, 10:10 AM
நன்றி கீதம்.

கா.ரமேஷ்
20-11-2009, 04:01 AM
நல்லதொரு கவிதை வானதி வாழ்த்துக்கள்...