PDA

View Full Version : இந்தியா-ஆஸ்திரேலியா தொடர்



அறிஞர்
26-10-2009, 02:11 PM
இந்தியா அணியுடன் 7 ஒரு நாள் தொடர்களில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்துள்ளது.

அது பற்றிய கருத்துக்களை இங்கு பகிர்வோம்.

1. அக்டோபர் 25 - வதோரா

2. அக்டோபர் 28 - நாக்பூர்

3. அக்டோபர் 31 - டெல்லி

4. நவம்பர் 2 - மொகாலி

5. நவம்பர் 5 - ஹைதராபாத்

6. நவம்பர் 8 - கவுகாத்தி

7. நவம்பர் 11 - மும்பை

அறிஞர்
26-10-2009, 02:16 PM
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஸ்கோர் விவரம்


ஆஸ்திரேலியா பேட்டிங்

வாட்சன் எல்பிடபுள்யூ (பி) நெஹ்ரா 5
பெய்ன் (சி) டோனி (பி) இஷாந்த் 50
பான்டிங் எல்பிடபுள்யூ (பி) ஜடேஜா 74
ஒயிட் (சி) ரெய்னா (பி) நெஹ்ரா 51
ஹஸ்ஸி (சி) கோஹ்லி (பி) இஷாந்த் 73
வோஜஸ் (சி) கம்பீர் (பி) ஹர்பஜன் 3
ஹோப்ஸ் (ரன் அவுட்) 14
ஜான்சன் (ஆட்டமிழக்கவில்லை) 14
பிரெட் லீ (பி) இஷாந்த் 0
உதிரிகள் 8
மொத்தம் (50 ஓவர், 8 விக்கெட்) 292

விக்கெட் வீழ்ச்சி: 1-5, 2-102, 3-151, 4-227, 5-233, 6-256, 7-291, 8-292.
இந்தியா பந்துவீச்சு: பிரவீன் 10-0-77-0, நெஹ்ரா 10-0-58-2, இஷாந்த் 10-1-50-3, ஹர்பஜன் 10-0-57-1, ஜடேஜா 9-0-39-1, ரெய்னா 1-0-9-0.

இந்தியா பேட்டிங்

சேவாக் (சி) பெய்ன் (பி) பிரெட் லீ 13
சச்சின் (சி) பான்டிங் (பி) வாட்சன் 14
கம்பீர் எல்பிடபுள்யூ (பி) ஜான்சன் 68
கோஹ்லி (சி) வாட்சன் (பி) வோஜஸ் 30
டோனி (சி) பிரெட் லீ (பி) வாட்சன் 34
ரெய்னா (சி அண்ட் பி) ஜான்சன் 9
ஜடேஜா எல்பிடபுள்யூ (பி) ஹாரிட்ஸ் 5
ஹர்பஜன் (பி) சிடில் 49
பிரவீன் (ஆட்டமிழக்கவில்லை) 40
நெஹ்ரா (ஆட்டமிழக்கவில்லை) 2
உதிரிகள் 24
மொத்தம் (50 ஓவர், 8 விக்கெட்) 288

விக்கெட் வீழ்ச்சி: 1-25, 2-45, 3-103, 4-167, 5-183, 6-186, 7-201, 8-285.
ஆஸி. பந்துவீச்சு: பிரெட் லீ 6-0-28-1, சிடில் 9-0-55-1, வாட்சன் 10-0-70-2, ஜான்சன் 10-0-59-2, ஹோப்ஸ் 2-0-10-0, வோஜஸ் 4-0-22-1, ஹாரிட்ஸ் 9-1-34-1.

ஆட்டநாயகன்: மைக் ஹஸ்ஸி (ஆஸ்திரேலியா)

பால்ராஜ்
26-10-2009, 03:03 PM
34 ரன் எடுத்த டோனிக்கு முன்னணி பாட்ஸ்மென் சரியாக ஆடவில்லை என்று கூறத் தகுதி உள்ளதா என்பது கேள்விக்குறியே..!

அவரது அதிர்ஷ்டம் தீர்ந்து விட்டதோ என்னவோ..

ஆனாலும் வால் நன்றாக ஆடி வெகு அருகில் வந்தது சுவாரசியமாகவே இருந்தது.

அறிஞர்
26-10-2009, 03:24 PM
ரெய்னா, ஜடேஜா ரொம்ப நம்பியிருப்பார்...

2வது டவுன் ரெய்னா இறங்கவேண்டும்.

வியாசன்
26-10-2009, 03:32 PM
34 ரன் எடுத்த டோனிக்கு முன்னணி பாட்ஸ்மென் சரியாக ஆடவில்லை என்று கூறத் தகுதி உள்ளதா என்பது கேள்விக்குறியே..!

அவரது அதிர்ஷ்டம் தீர்ந்து விட்டதோ என்னவோ..

ஆனாலும் வால் நன்றாக ஆடி வெகு அருகில் வந்தது சுவாரசியமாகவே இருந்தது.

34 ஓட்டங்கள் எடுத்தமையால் தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. ஆரம்ப ஆட்டக்காரர்கள் சரியாக தளம் அமைத்து கொடுக்கவேண்டும். அவர்கள் அதிக ஓவர்களை செலவழித்தால் பின்னால் வருபவர்களுக்கு இறுக்கமாகிவிடும். .என்னால் இந்த ஆட்டத்தை பார்க்கமுடியவில்லை. தோற்றவுடன் டோனியின் அதிஸ்டத்தை உரசிபார்க்க நினைக்கின்றீர்களே.

இன்னமும் ஆறுபோட்டிகள் உள்ளனவே

பா.ராஜேஷ்
26-10-2009, 03:57 PM
அடுத்த போட்டிகளிலாவது இந்திய அணி வெற்றி பெறட்டும்...

அமரன்
26-10-2009, 06:10 PM
ம்ம்.. ஆரென் அண்ணாவை இந்தப்பக்கம் காணவில்லையே.

அவுஸ்திரேலியாவுக்கு வாழ்த்து.

aren
27-10-2009, 08:24 AM
ம்ம்.. ஆரென் அண்ணாவை இந்தப்பக்கம் காணவில்லையே.

அவுஸ்திரேலியாவுக்கு வாழ்த்து.

ஏன் வீணாக நேரவிரயம் செய்யவேண்டும் என்று பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

அடுத்தநாள் கிரிக்கெட் இன்ஃபோவில் பார்த்துக்கொண்டால் போயிற்று என்று இருந்துவிட்டேன்.

இரண்டு மாட்சுகள் போகட்டும். இவர்கள் வாங்கும் காசுக்காவது ஏதாவது கொஞ்சம் ஆடவேண்டும்.

மிக சொற்பமான பணம் கிடைக்கும் பாகிஸ்தானியர்களும் இலங்கை வீரர்களும் இந்தியர்களைவிட சிறப்பாக விளையாடுகிறார்கள்.

நம் ஆட்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொருத்தே இனிமேல் கிரிக்கெட்.

aren
27-10-2009, 08:29 AM
ரெய்னா, ஜடேஜா ரொம்ப நம்பியிருப்பார்...

2வது டவுன் ரெய்னா இறங்கவேண்டும்.

ஜடேஜாவிற்கு பதில் ஒரு முழு பந்துவீச்சாளரை களத்தில் இறக்கலாம்.

ரெய்னா இன்னும் கொஞ்சம் கவனத்துடன் ஆடவேண்டும், இல்லையேல் இவருடைய இடம் விராத் கோலிக்கு போய்விடும்.

பிரவீன்குமாருக்கு பதில் முனாஃப் படேலை உள்ளே இறக்கலாம். அவருடைய பந்துவீச்சு இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

தியாகியையும் உள்ளே கொண்டுவரலாம்.

அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி இதுவாக இருக்கலாம்:

1. டெண்டுல்கர்
2. ஷேவாக்
3. காம்பீர்
4. யுவராஜ் சிங்
5. ரெய்னா
6. தோனி
7. விராத் கோலி அல்லது ஜடேஜா
8. ஹர்பஜன் சிங்
9. ஹிஷாந்த் சர்மா
10. ஆஷிஷ் நெஹ்ரா
11. முனாஃப் படேல் அல்லது பிரவீன் குமார்

பால்ராஜ்
27-10-2009, 08:39 AM
மெஜாரிட்டி இதுவரை ஆஸ்ட்ரேலியாவுக்கே வாக்களீத்திருக்கிறார்கள்..

அப்படியாவது இந்தியா ஜெயிக்குமா என்ற நப்பாசையாகவும் இருக்கலாம்..

டோனியின் லக்.. 'அந்த' 20-20 யிலேயே விடை வாங்கிக் கொண்டது என்றே தோன்றுகிறது.

aren
27-10-2009, 08:45 AM
மெஜாரிட்டி இதுவரை ஆஸ்ட்ரேலியாவுக்கே வாக்களீத்திருக்கிறார்கள்..

அப்படியாவது இந்தியா ஜெயிக்குமா என்ற நப்பாசையாகவும் இருக்கலாம்..

டோனியின் லக்.. 'அந்த' 20-20 யிலேயே விடை வாங்கிக் கொண்டது என்றே தோன்றுகிறது.

இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெரும்.

டெண்டுல்கர் சதம் அடிக்கும் வாய்ப்பு அதிகம்.

தோனி டாஸ் வென்று பாட்டிங் செய்யலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

அப்படி ஆஸ்திரேலியா முதலில் பாட்டிங் செய்தால், இந்தியா விளையாடும்பொழுது ஹர்பஜன் முதல் விக்கெட் விழுந்தவுடன் களத்தில் இறங்குவார். ஏன் அவர் முதல் போட்டியில் வரவில்லை என்பது எனக்கு புதிராகவே இருக்கிறது.

அறிஞர்
28-10-2009, 02:15 PM
இன்றும் ஆஸ்திரேலியா டாஸ் ஜெயித்து... பீல்டிங்க் எடுத்தது.

முதலில் ஆடிய இந்தியா 354/7 (50 ஓவர்) எடுத்தது.. தோனி 124 ரன்கள் எடுத்தார்.
கம்பீர், ரெய்னா சிறப்பாக விளையாடினர்..

வெகு நாளைக்கு பின் ஒரு நல்ல ஆட்டத்தை ரசித்தேன்.

ஆஸ்திரேலியா 47/3 (12.3 ஓவர்) தடுமாறுகிறது

அறிஞர்
28-10-2009, 03:16 PM
ரொம்பவே தடுமாறுகிறார்கள்...

73 பந்துகளாக பவுண்டரியே இல்லை

125/4 (27 ஓவர்)

aren
28-10-2009, 03:18 PM
நான் நேற்று சொன்னது எதுவுமே இதுவரை நடக்கவில்லை.

இந்தியா வென்றால் நான் சொன்னதில் ஒன்றாவது நடந்த்தாகும். வெல்வார்களா

பா.ராஜேஷ்
28-10-2009, 04:17 PM
இப்பொழுது ஆஸ்திரேலியா 222/7 (43). இந்தியா வெற்றி பெறுவது நிச்சயம்

அறிஞர்
28-10-2009, 04:46 PM
99 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி...

வியாசன்
28-10-2009, 05:33 PM
34 ரன் எடுத்த டோனிக்கு முன்னணி பாட்ஸ்மென் சரியாக ஆடவில்லை என்று கூறத் தகுதி உள்ளதா என்பது கேள்விக்குறியே..!

அவரது அதிர்ஷ்டம் தீர்ந்து விட்டதோ என்னவோ..

ஆனாலும் வால் நன்றாக ஆடி வெகு அருகில் வந்தது சுவாரசியமாகவே இருந்தது.

டோனி அதிஸ்டகாரரா? இல்லையா? கிறிகெட்டில் அதிஸ்டமும் திறமையும் வேண்டும்.

இன்னமும் ஐந்து போட்டிகள் உள்ளன.

அறிஞர்
28-10-2009, 06:44 PM
இந்த ஒரு போட்டியை வைத்தே.. பல போட்டிகளுக்கு கனவு காண்பார்கள்.. இந்திய அணியினர்.

மதி
29-10-2009, 01:18 AM
இந்த ஒரு போட்டியை வைத்தே.. பல போட்டிகளுக்கு கனவு காண்பார்கள்.. இந்திய அணியினர்.
அது தானே நம் பயம்..

aren
29-10-2009, 06:33 AM
அடுத்த போட்டியில் எப்படி விளையாடப்போகிறார்கள் என்று பாருங்கள்.

ஒரு போட்டியில் தோல்வி அடுத்த போட்டியில் வெற்றி. இப்படி ஆடினால்தானே ஒரு எதிர்பார்ப்பு வரும், மக்கள் டிவி முன் உட்கார்ந்து பார்ப்பார்கள். நிறைய விளம்பரங்கள் வரும். பணமும் வந்து குவியும்.

அதைவிட்டு எல்லா மாட்சுகளிலும் இந்தியாவே வென்றால் பார்பவர்களுக்கு ஒரு சலிப்பு ஏற்பட்டுவிடும்.

அதனால்தான் நம் மக்கள் இப்படி விளையாடுகிறார்கள்.

ஒரு போட்டியில் சிறப்பாக மற்ற போட்டியில் மட்டமாக.

இந்த லாஜிக்கை இன்னும் யாரும் புரிந்துகொள்ளவில்லையே!!!!!

பால்ராஜ்
29-10-2009, 07:21 AM
நம்ம ஆட்களைத் திட்டிக் கொண்டே இருந்தால் ஜெயிக்க வாய்ப்பு உண்டு என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது..

பாருங்கள்.. தூங்கிக் கொண்டிருந்த (தோனியின்)...அதிர்ஷ்டம் .... லக்.. கூட விழித்துக் கொண்டது...!

பிரம்மத்ராஜா
29-10-2009, 08:47 AM
அறிஞர் அவர்களின் முத்திரை வாக்கியம் போல் முயன்றால் முடியாதது என்று ஒன்றும் இல்லை.!!! ஆனால் நம் அணியினர் முயலமாட்டார்களே.! இந்த வெற்றியின் மிதப்பில் அடுத்தபோட்டியில் தூங்கிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

அறிஞர்
29-10-2009, 02:19 PM
இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பலர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். ஹோப்ஸ், பிரெட்லீ ஆகியோர் காயமடைந்துள்ள நிலையில் தற்போது விக்கெட் கீப்பர் பெய்னியும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய 2வது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு கைவிரலில் காயம்பட்டது.
இதனால் அவர் எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

aren
30-10-2009, 04:47 PM
பிரெட்லீயும், பெய்னியும் ஊருக்குப் போய்விட்டார்கள். ஆகையால் எஞ்சியிருக்கும் வீரர்களை வைத்தே ஒப்பேற்றவேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது.

மூன்றாவது போட்டியில் இந்தியா வெல்லுமா?

aren
30-10-2009, 04:54 PM
பெய்னி ஊருக்குப் போய்விட்டதால் அந்த இடத்தில் முதல் ஆட்டக்காரராக ஷான் மார்ஷ் இறங்குவார் என்று எதிர்பார்க்கிறேன். ஷேன் வாட்சன் அவருடன் களத்தில் இறங்குவார். இடது கை வலது கை காம்பினேஷில் உள்ளே இறங்குகிறார்கள். ஆகையால் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை பார்த்து வீசவேண்டும்.

முதல் இரண்டு போட்டிகளில் ஷேன் வாட்சன் சரியாக ஆடவில்லையாதலால் இந்தப் போட்டியில் பார்த்து விளையாடுவார் என்றே எதிர்பார்க்கிறேன். அது தவிற ஷான் மார்ஷ் அடிபட்டதால் இதுநாள் வரை போட்டியில் கலந்துகொள்ளவில்லை. அவரும் எப்படியாவது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சி எடுப்பார் என்றே எதிர்பார்க்கிறேன். இந்தியாவில் ஐபிஎல்லில் ஆடிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது.

எனக்குத் தெரிந்து ஆஸ்திரேலிய அணி, இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

1. ஷேன் வாட்சன்
2. ஷான் மார்ஷ்
3. ரிக்கி பாண்டிங்
4. கிரிஸ் வைட்
5. மைக்கேல் ஹஸ்ஸி
6. ஆடம் வாஜேஸ்
7. மணூ
8. மிட்சல் ஜான்ச*ன்
9. ஹாரிட்ஷ்
10. சிடில்
11. ஹில்பிஃன்ஹாஸ்

இந்த ஆட்டத்தில் ஹில்பிஃன்ஹாஸ் சிறப்பாக பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆஸ்திரேலியா உயிரைக்கொடுத்து விளையாடும். ஆகையால் அவர்கள் வெல்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் பெரிய ஆட்டக்காரர்கள் இல்லையே என்ற நினைப்பில் நிதானமிழந்து ஆடும் என்றே நினைக்கிறேன்.

ஓவியன்
31-10-2009, 09:38 AM
இன்றைய போட்டியில் பலரும் எதிர்பார்க்காத விடயம், பாண்டிங் ஆரம்பத்துடுப்பாட்டக் காரராக களமிறங்குவார் என்பதைத்தான், நிதானமாக ஆனால் வலுவாக ஓட்டங்களைக் குவிக்கும் அவுஸ்திரேலிய அணியின் திட்டம் நிறைவேறுமா..??

வியாசன்
31-10-2009, 10:31 AM
பார்வையிடுவதற்கு அழுத்துங்கள் (http://isaitoday.com/cricket/live.html)

பா.ராஜேஷ்
31-10-2009, 01:46 PM
இன்று இலகுவான இலக்காதலால் இந்திய அணி வெற்றி பெற கூடும்...

வியாசன்
31-10-2009, 05:08 PM
பலருக்கு இப்போது வியப்பாக இருக்கும் அதிஸ்டமில்லாத டோனியை பார்க்க

மன்மதன்
31-10-2009, 06:53 PM
இன்றும் டோனி / யுவராஜ் கூட்டணியால் இந்தியா வெற்றியடைந்தது. மேன் ஆஃப் த மேட்ச் -யுவராஜ்.

இன்னும் 2 ஆட்டம்.. தொடர்ந்து வெல்வார்களா??

aren
01-11-2009, 02:16 AM
டில்லி பிட்ச் கிரிக்கெட் ஆடுவதற்கு ஏதுவானதா என்று தெரியவில்லை. சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் படாதபாடு படுத்தியது. டெல்லி அணி அரையிறுதிக்கு செல்லமுடியாமல் போனதற்கு இந்த பிட்ச் பிரதான காரணமாக இருந்தது.

பிசிசிஐ இதனை கவனிக்கவேண்டும். நல்ல மேட்சுகள் வரும்பொழுது இவர்கள் டெல்லிக்கு கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் இவர்கள் இதை சரியாக உபயோகித்துக்கொள்வதில்லை.

இதனால் இந்த ஆட்டம் அவ்வளவு சுவாரசியமாக இல்லை என்பதே என் கருத்து.

பாவம் ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர், முதல் ஆட்டம் படாத பாடு பட்டுவிட்டார் பந்தை பிடிப்பதற்கு.

ஓவியன்
01-11-2009, 05:43 AM
மத்திய வரிசையில் யுவராஜ்-தோனி இணையாட்டம் மீண்டும் ஒரு முறை அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது - இந்த நிலை தொடரட்டும்.

மன்மதன்
01-11-2009, 06:21 AM
பாவம் ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர், முதல் ஆட்டம் படாத பாடு பட்டுவிட்டார் பந்தை பிடிப்பதற்கு.

அதையும் திரும்ப திரும்ப காட்டி காட்டிகொண்டிருந்தார்கள்..:D

aren
02-11-2009, 07:53 AM
எதற்கு தோனி டாஸ் வென்று பந்து வீசுவதாக ஒப்புக்கொண்டார் என்று தெரியவில்லை.

300 ரன்கள் நம்மால் சேஸ் செய்யமுடியுமா?

ஷான் மார்ஷ் உள்ளே வந்துவிட்டார். ஒரு கை பார்க்காமல் விடமாட்டார் என்றே நினைக்கிறேன்.

ஓவியன்
02-11-2009, 08:47 AM
மார்ஸை பெவிலியனுக்கு அனுப்பியாச்சு, இனி இந்த பாண்டிங்கை கொஞ்சம் கவனமாக கையாளணும்.. :)

aren
02-11-2009, 09:09 AM
கடைசி ஐந்து ஓவர்களில் நன்றாக அடித்திருக்கிறார்கள்.

ஹிஷாந்த் சர்மாவை செட்டில் ஆகவிடாமல் செய்வதுதான் அவர்கள் உத்தேசம் என்று நினைக்கிறேன்

ஓவியன்
02-11-2009, 09:23 AM
ம்ஹூம் வேற வழி இல்லை, ஹர்பஜனை அழைக்க வேண்டியதுதான்...

ஓவியன்
02-11-2009, 09:30 AM
எப்படி நம்ம ஆலோசனை, ஹர்பஜன் வட்சனின் விக்கெட்டை வீழ்த்திட்டாரே...... :icon_b::icon_b::icon_b:

aren
02-11-2009, 01:51 PM
மூன்று விக்கெட்டை இழந்துவிட்டார்கள். தோனியும் யுவராஜும் ரைனாவும் மட்டுமே உள்ளனர்.

இன்னும் 150 ரன்கள் எடுக்கவேண்டியிருக்கிறது.

அறிஞர்
02-11-2009, 01:57 PM
சச்சினுக்கு தவறான அவுட் கொடுத்து... சாதனையை சாதிக்கவிடாமல் தடுத்துவிட்டனர்.
-----------
போனமுறை டெஸ்டில் 12,000 மொகாலியில் கடந்தார்.... அதை ரசிகர்கள் பலமாக கொண்டாடினார்கள்.

இன்றும் 17000ற்காக ஆவலுடன் காத்திருந்தார்கள்...

என்ன செய்வது...

aren
02-11-2009, 02:02 PM
நான் பார்க்கவில்லை அறிஞரே. அதனால் தெரியாது.

எத்தனைமுறை டெண்டல்கருக்கு இப்படி தவறாக அவுட் கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு இப்படி தவறான முடிவு கொடுக்காமல் இருந்திருந்தால் அவர் 20000 ரன்கள் எடுத்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

aren
02-11-2009, 02:08 PM
யுவராஜ் ரன் அவுட் ஆகிவிட்டாரே. நான்கு விக்கெட்டுக்கள் விழுந்துவிட்டன.

இன்று ஜெயிப்பது சந்தேகம் என்று நினைக்கிறேன்

அறிஞர்
02-11-2009, 03:22 PM
177/7 வெற்றி காண்பது.... ரொம்பவே சந்தேகம் தான்...

ஹர்பஜன் - பிரவீன் கூட்டணி அசத்துமா...

அன்புரசிகன்
02-11-2009, 11:52 PM
நேற்று அவுஸ்திரேலியாவின் ஆட்டத்தினை பார்த்து பின் இந்தியாவின் ஆரம்ப ஆட்டத்தினையும் பார்த்துவிட்டு இந்தியா வெல்லும் என்று நினைத்தேன். புஸ்வானமாகிவிட்டது... அவுஸ்திரேலியா நேற்று ஓட்டங்களை எடுக்க திணறிக்கொண்டிருந்தது. ஒரு ஓவரில் ஒருமுறை 5 ஓட்டங்கள் எடுத்ததற்கு நல்ல முன்னெற்றம் என்று ரவிசாஸ்திரி சொன்னார்.

இந்தியா 226ற்கு 46.4 பந்துபரிமாற்றங்களுடன் சகல விக்கட்டுக்களையும் இழந்து தொடரினை தற்சமயம் சமப்படுத்தியுள்ளது...

வாட்சன் ஆட்ட நாயகன்.

ஹர்பஜன் சிறப்பாக பந்துவீசி ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தார்...

aren
03-11-2009, 03:16 AM
நான் நினைத்தது மாதிரியே நடந்துவிட்டது.

நம்மவர்கள் இப்படித்தான் அனைவரையும் அழவைப்பார்கள்.

mania
03-11-2009, 04:11 AM
டாஸ் ஜெயித்தவுடன் ஃபீல்டிங் என்றதுமே நான் கணித்துவிட்டேன் நமக்கு தோல்வி என்று.....:rolleyes: அதே போல ஆகிவிட்டது.....
அன்புடன்
மணியா...

வியாசன்
03-11-2009, 09:40 AM
அடுத்த போட்டியை எதிர்பார்ப்போம்

aren
03-11-2009, 10:40 AM
டாஸ் ஜெயித்தவுடன் ஃபீல்டிங் என்றதுமே நான் கணித்துவிட்டேன் நமக்கு தோல்வி என்று.....:rolleyes: அதே போல ஆகிவிட்டது.....
அன்புடன்
மணியா...

நம்ம ஃபீல்டிங் மேல் நம்பிக்கையில்லையா அல்லது நம் ஆட்களின் சேஸ் செய்வதில் நம்பிக்கையில்லையா?

உங்களுடைய சப்போர்ட் இல்லாமல் போனதால்தான் நாம் தோற்றுவிட்டோம்.

aren
04-11-2009, 02:47 PM
நாளைக்கு நடக்கவிருக்கும் ஐந்தாவது போட்டியில் ஒரு புது வேகப்பந்து வீச்சாளரை உள்ளே இறக்குகிறது ஆஸ்திரேலியா. நம் ஆட்கள் அவரை ஹீரோ ஆக்காமல் இருந்தால் சரிதான்.

அறிஞர்
04-11-2009, 03:27 PM
பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணியில் இரண்டு (சிடில், ஹென்றிகுயூஸ்...) பேர் திரும்புகிறார்கள்.

13 பேர் அணியாக ஆஸ்திரேலியா உள்ளது.

கம்பீர் நாளை களமிறங்குவார் என நம்புகிறேன்... 5-2ல் இந்தியா வெற்றி காணுமா...

aren
04-11-2009, 03:51 PM
... 5-2ல் இந்தியா வெற்றி காணுமா...

நான்கு மூன்று என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெரும்.

அறிஞர்
05-11-2009, 01:59 PM
4-3 இந்தியாவா.. ஆஸ்திரேலியாவா......
----------
இன்று நம் பவுலர்கள் சூப்பரோ சூப்பரென சொதப்பிவிட்டனர்...

ஆஸ்திரேலியா 350/4 (50 ஓவர்)
-----------
இந்தியா... பதிலடி கொடுத்துவருகிறது..
யுவராஜின் எதிர்பாராத அவுட்.... சற்று பலவீனம்.

இந்தியா 161/3 (23 ஓவர்)

அறிஞர்
05-11-2009, 02:00 PM
கட்டைப் போட்ட தோனியும் காலி....

162/4 (டெண்டுல்கர் 95 ரன்களுடன் விளையாடுகிறார்)

வியாசன்
05-11-2009, 04:54 PM
சச்சின் அழகாக ஆடினார். துணைக்கு வந்த ரெய்னாவும் தூள் கிளப்பினார். பாதி நம்பிக்கை போனது. வந்த ஜடேஜா கொஞ்சம் நம்பிக்கை தந்தார். சச்சின் அவுட்டாக தோல்வியை இந்தியா தழுவும்போல் இருந்தது. ஜடேஜாவும் அவுட்டாக பிரவீன்குமார் ஆறு அடித்து நம்பிக்கை தந்தார்.

அறிஞர்
05-11-2009, 06:18 PM
351 ரன்கள் தேவை...
எடுத்தது 347 ரன்கள்

இந்தியா தோல்வியடைந்தது வருத்தமே... போராடி தோற்றனர்.

மற்றவர்களுக்கு பாடம் சொல்லும் தோனி கடைசி இரண்டு போட்டிகளில் ஜொலிக்கவில்லை...

யுவராஜ், ஹர்பஜன் அவுட்டானது.... பெரிய திருப்பம்...

சச்சின் சிறப்பாக ஆடி.. தனக்கு பெருமை சேர்த்துக்கொண்டார்.

ஆ.ஜெயஸ்ரீ
05-11-2009, 07:08 PM
சச்சின் ஆடிய இன்றைய ஆட்டம் தனக்கு பெருமை சேர்த்துக்கொண்ட ஆட்டம் போல் இல்லை .பொதுவாக இலக்கு நிர்ணயம் செய்த பிறகு சச்சின் அவ்வளவாக ரன் எடுத்ததில்லை ஆனல் இன்றைய ஆட்டம் சச்சின் மட்டுமே இழுத்த தேர் ஆகி போனது. காம்பிர் மற்றும் டோனி சற்று முனைப்புடன் ஆடி இருக்க வேண்டும் .

அறிஞர்
05-11-2009, 10:16 PM
கம்பீர், தோனி, யுவராஜ்... கொஞ்சம் விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

டெண்டுல்கரால் பல ஆட்டங்களில் வெற்றி பெற்றோம் என்பதை மறுக்க இயலாது.

வியாசன்
07-11-2009, 06:59 AM
சச்சின் மிகவும் நிதானமாக வெற்றியை குறிவைத்துதான் ஆடினார். அவர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்திருந்தார். ஆனால் இந்தியாவின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் கைகொடுக்வில்லை என்பதுதான் உண்மை. ஹர்பஜன்சிங் வெளியேறியது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது என்பதுதான் உண்மை.

aren
07-11-2009, 03:54 PM
சச்சின் இன்றைக்கும் நன்றாக விளையாடுவார் என்பதற்கு இந்த ஆட்டம் ஒரு எடுத்துக்காட்டு. அதேபோல், நம் மக்கள் கடைசியில் சொதப்புவார்கள் என்பத்ற்கும் இந்த ஆட்டம் ஒரு எடுத்டுக்காட்டு.

அடுத்த ஆட்டத்திற்கு சுதீப் தியாகியை உள்ளே கொண்டுவரலாம் என்பது என் கருத்து.

அதுபோல் ஆமித் மிஸ்ராவையும் ஜடேஜாவிற்கு பதில் உள்ளே கொண்டு வரலாம்.

ஓவியன்
08-11-2009, 03:52 AM
நான் வரலை இந்த விளையாட்டுக்கு இன்று கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் பந்து வீசுறாங்க அவுஸ்திரேலிய பசங்க... :eek:

அமரன்
08-11-2009, 11:42 AM
இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது. காலநிலையைக் கூடச் சரியாகக் கணித்து விடலாம்.

அன்புரசிகன்
08-11-2009, 11:58 AM
இன்று இந்திய அணியில் இன்று ஒரு விசேடம். டோனி மற்றும் காம்பீர் தவிர அனைவரும் பந்துவீசியுள்ளனர். 5 விக்கட்டுக்களை இழந்து ஒருகட்டத்தில் 27 ஓட்டங்களை மட்டுமே இந்திய அணி பெற்றிருந்தது. ஜடேயா மற்றும் பிரவீன்குமார் சற்றே இந்தியாவை நிலை நிறுத்தினர்.

டோனியின் ஆட்டமிழப்பில் சர்ச்சை இருந்தது. தூரதி்ஷ்டம். நடுவர் கையை தூக்கிவிட்டார். யுவராஜ் தேவையற்ற வேலையால் ஆட்டமிழந்தார். இன்றய காலநிலையை பொறுத்தமட்டில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட முன்வந்திருக்கக்கூடாது. பனிமூட்டமாக இருந்தது...

எப்படியோ இந்தியா இந்த தொடரை பறிகொடுத்துவிட்டது...

அஸியின் இளம் வீரர்கள் நன்றாக திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

அமரன்
08-11-2009, 12:00 PM
இந்தப் போட்டியில் இளம் வீரர் அஸி விளையாடினாரா என்ன?:aetsch013:

aren
08-11-2009, 03:11 PM
பெரிய ஆட்கள் பலர் ஆஸ்திரேலியா அணியில் விளையாடவில்லை. ஆனாலும் இந்தியா தோற்றுவிட்டது. இதற்கு இந்திய அணியில் யார் பொறுப்பேற்றுக்கொள்ளப்போகிறார்கள்.

தோனி பதவி விலகுவாரா அல்லது பழியை மற்றவர்கள் மேல் போடுவாரா?

அறிஞர்
09-11-2009, 02:52 PM
பேட்டிங்க் முதலில் எடுத்தது தவறான முடிவு...
தொடரை இழந்த இந்தியாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
வெற்றி பெற்ற ஆஸிக்கு வாழ்த்துக்கள்.

xavier_raja
10-11-2009, 11:12 AM
பலமுறை இதுபோன்று இந்தியா தொற்று இருக்கிறது. வெட்டி பசங்க.