PDA

View Full Version : இரண்டு வினாவுக்கு ஒரே விடை!



குணமதி
26-10-2009, 08:26 AM
இண்டு வினாவுக்கு ஒரே விடை. சொல்லுங்கள் :

ஆலிலை பழுப்பதேன்?
இரவு வழி நடப்பதேன்?

அன்புரசிகன்
26-10-2009, 08:37 AM
விழ..

praveen
26-10-2009, 09:35 AM
இண்டு வினாவுக்கு ஒரே விடை. சொல்லுங்கள் :

ஆலிலை பழுப்பதேன்?
இரவு வழி நடப்பதேன்?

விழுவதற்கு என்ற விடையே சரியானது, அது தவறாக இருக்கும் பட்சத்தில் இதற்கு விடை " காலங்கடப்பதால்" என்று நினைக்கிறேன்.


இதே போல சில விடுகதை மற்றும் விடைகள்.

எருக்கிலை பழுப்பதேன்?
எருமைக்கன்று சாவதேன்?
பால் வற்றி

அச்சாணி வண்டி ஓடுவதேன்?
மச்சான் உறவாடுவதேன்?
அக்காளையிட்டு

பற்களெல்லாம் தெரிவதேன்?
பொற்கொல்லர் தட்டுவதேன்?
நகை செய்ய

பஞ்சாமிர்தம் மணப்பதேன்
பலசொல் ஆட்டம் சுவைப்பதேன்
பழனியால்!

ஆதி
26-10-2009, 10:45 AM
இண்டு வினாவுக்கு ஒரே விடை. சொல்லுங்கள் :

ஆலிலை பழுப்பதேன்?
இரவு வழி நடப்பதேன்?


பறிப்பாரற்று

குணமதி
26-10-2009, 03:56 PM
ஆதி சரியான விடை அளித்திருக்கிறார்.

பாராட்டும் நன்றியும்.

குணமதி
26-10-2009, 03:57 PM
விழ..

முயன்றிருக்கிறீர்கள்.

நன்றி.

குணமதி
26-10-2009, 04:02 PM
விழுவதற்கு என்ற விடையே சரியானது, அது தவறாக இருக்கும் பட்சத்தில் இதற்கு விடை " காலங்கடப்பதால்" என்று நினைக்கிறேன்.


இதே போல சில விடுகதை மற்றும் விடைகள்.

எருக்கிலை பழுப்பதேன்?
எருமைக்கன்று சாவதேன்?
பால் வற்றி

அச்சாணி வண்டி ஓடுவதேன்?
மச்சான் உறவாடுவதேன்?
அக்காளையிட்டு

பற்களெல்லாம் தெரிவதேன்?
பொற்கொல்லர் தட்டுவதேன்?
நகை செய்ய

பஞ்சாமிர்தம் மணப்பதேன்
பலசொல் ஆட்டம் சுவைப்பதேன்
பழனியால்!

பிரவீண்,

உங்கள் விடை எதிர்பார்த்ததாக இல்லாதிருந்தாலும்,
மேலும் நான்கு விடுகதைகளைத் தந்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி.

கடைசி விடுகதைக்கும் விடைக்கும் பொருத்தம் புரியவில்லை. அன்புகூர்ந்து விளக்கிக் கூறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பா.ராஜேஷ்
26-10-2009, 04:05 PM
நன்றாக இருக்கிறது... விடைதான் தெரியவில்லை... ;) விழ என்பதே சரியாக இருக்கலாம்

குணமதி
26-10-2009, 04:11 PM
நன்றாக இருக்கிறது... விடைதான் தெரியவில்லை... ;) விழ என்பதே சரியாக இருக்கலாம்

நன்றி.

சரியான விடை இப்போது தெரிந்திருக்கும்.

குணமதி
26-10-2009, 04:20 PM
1. காற்றாடி பறப்பதெப்படி?
கல்வி வளர்வதெப்படி?

2. கீரை வளர்ப்பதேன்?
கீழ்க்குணத்தர் செல்வரை சுற்றுவதேன்?

3. கழனி நிறைவது எப்படி?
கன்றுக்குட்டி முட்டுவது எப்படி?

praveen
26-10-2009, 04:23 PM
பிரவீண்,

உங்கள் விடை எதிர்பார்த்ததாக இல்லாதிருந்தாலும்,
மேலும் நான்கு விடுகதைகளைத் தந்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி.

கடைசி விடுகதைக்கும் விடைக்கும் பொருத்தம் புரியவில்லை. அன்புகூர்ந்து விளக்கிக் கூறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைத்து தான் தந்தேன், உண்மையிலே புரியவில்லை என்றால் எனக்கும் தெரியவில்லை என்று தான் அர்த்தம் :)

அதாவது, உங்கள் கேள்விக்கு விடை கூகிளாண்டவர் துனையுடன் தேடுகையில் முதலில் நீங்கள் கேட்டதும்(பதில் இல்லாதது அந்த ஒன்று தான்) மற்ற நான் பதிந்ததும் இனையத்தில் கிடைத்தது. இதை பதிந்தவர் பெயர் பழனி.

பஞ்சாமிர்தம் இனிப்பது பழனியால் தான் என்பது புரிந்தது அதற்கு விளக்கம் தேவையில்லை தானே, அடுத்து இந்த மாதிரி பலசொல் ஆட்டம் பதிந்த நண்பர் பெயர் பழனி, அவர் தன்னைத்தானே சிறப்பிக்க இந்த வரி பதிந்திருக்கிறார்.

நீங்கள் கேட்ட அந்த கேள்வி சொந்தக்கற்பனையில் பதிந்ததாக இருக்கும் என்று உணர்கிறேன்.

கேள்விக்கு சரியான பதிலை இப்போது நீங்கள் சொல்லுங்கள்.

praveen
26-10-2009, 04:28 PM
1. காற்றாடி பறப்பதெப்படி?
கல்வி வளர்வதெப்படி?
[/COLOR]

நூலால்



2. கீரை வளர்ப்பதேன்?
கீழ்க்குணத்தர் செல்வரை சுற்றுவதேன்?


உணவுக்காக



3. கழனி நிறைவது எப்படி?
கன்றுக்குட்டி முட்டுவது எப்படி?

ஏற்றத்தால்


/////

ஒரே திரியில் வரிசையாக கேளுங்கள் நண்பரே, மன்றத்திலே வரிக்கொரு திரி ஆரம்பித்து திரி எண்ணிக்கையை அதிகப்படுத்தாதீர்கள்.

பா.ராஜேஷ்
26-10-2009, 04:29 PM
கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன்...

குணமதி
26-10-2009, 04:37 PM
நான்காவது விடுகதைக்கான விடை இப்போது புரிகிறது.

எழுதியவர் பெயர் பழனி என்று தெரிந்திருந்தால் முன்னரே புரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

நன்றி.

ஆலிலையை யாரும் பறிக்காமல் விட்டு விட்டால் அது தானே பழுத்துத்தானே போகும்.
இரவில் கொள்ளையடிப்பவர் - திருடர் - தொல்லையில்லை என்றால் இரவு வழிநடை இனிதானது என்பது இரண்டாம் வினாவுக்கும் விடைக்குமான பொருத்தமாகும்.

பறிப்பாரற்று :- இரண்டு பொருள்கள் : 1. இலையை மரத்திலிருந்து பறிப்பது.
2. வழிநடையாகச் செல்வோரிடமிருந்து கள்வர் பொருளைப் பறிப்பது.

நன்றி.

குணமதி
26-10-2009, 04:41 PM
கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன்...

இப்போது புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

இன்னும் எந்த விடுகதையிலாவது ஐயமிருந்தால் கேளுங்கள்; தெரிந்தவரை சொல்லுகிறேன்.

குணமதி
26-10-2009, 04:45 PM
பிரவீண்,

முதல் விடுகதைக்கு உங்கள் விடை சரி.

நன்றி.

இரண்டாவது, மூன்றாவது - விடுகதைகளுக்கு இன்னும் பொருத்தமான விடை உள்ளது.

கண்டுபிடியுங்கள்.

மீண்டும் நன்றி.

" ஒரே திரியில்..." - எனக்குப் புரியவில்லை.
அன்பு கூர்ந்து விளக்கிச் சொல்லுங்கள்.

பா.ராஜேஷ்
26-10-2009, 04:52 PM
நன்றி குணமதி... இப்பொழுது விளங்கியது.. :)

அமரன்
26-10-2009, 05:56 PM
அன்பு குணமதி.

இரு வினாவுக்கு ஒரு விடை என்ற ஒற்றை இழையில் அனைத்து முத்துகளையும் கோர்க்கச் சொல்கிறார் பிரவீன். (நான் இணைத்தால் போல்) ஒரு இடத்தில் இருந்தால் பங்குபற்றுவர்களுக்கு சுலபம் அல்லவா.

ஆதி
26-10-2009, 08:52 PM
2. கீரை வளர்ப்பதேன்?
கீழ்க்குணத்தர் செல்வரை சுற்றுவதேன்?

செழிபுற்றதால்



3. கழனி நிறைவது எப்படி?
கன்றுக்குட்டி முட்டுவது எப்படி?

கொம்புமுளைத்ததால்

குணமதி
27-10-2009, 04:54 AM
அன்பு குணமதி.

இரு வினாவுக்கு ஒரு விடை என்ற ஒற்றை இழையில் அனைத்து முத்துகளையும் கோர்க்கச் சொல்கிறார் பிரவீன். (நான் இணைத்தால் போல்) ஒரு இடத்தில் இருந்தால் பங்குபற்றுவர்களுக்கு சுலபம் அல்லவா.

நன்றி அமரன்.
புரிந்தது.
இனி, அவ்வாறே பின்பற்றுவேன்.

குணமதி
28-10-2009, 03:09 AM
2. கீரை வளர்ப்பதேன்?
கீழ்க்குணத்தர் செல்வரை சுற்றுவதேன்?


விடை : பிடுங்கித் தின்ன.



3. கழனி நிறைவது எப்படி?
கன்றுக்குட்டி முட்டுவது எப்படி?


விடை : பாய்ந்து பாய்ந்து.

அனைவர்க்கும் நன்றி.

ஜனகன்
28-10-2009, 07:56 AM
பருப்புக்கறி மணப்பதேன்?
படைவீரன் சாவதேன்?

அன்புரசிகன்
28-10-2009, 08:19 AM
பருப்புக்கறி மணப்பதேன்?
படைவீரன் சாவதேன்?
பெருங்காயத்தால்.

குணமதி
29-10-2009, 02:15 AM
இறக்கையை மடக்காமல் பறப்பது எது?

கண்ணைச் சிமிட்டாமல் பார்ப்பது எது?

ஜனகன்
29-10-2009, 10:53 PM
விமானம்

குணமதி
30-10-2009, 01:38 AM
இன்னும் பொருந்தும் விடை உள்ளது.

ஆதி
30-10-2009, 07:05 AM
செயற்கைக்கோள் ??

குணமதி
30-10-2009, 07:44 AM
சரியான விடை : தட்டாம் பூச்சி

அனைவர்க்கும் நன்றி.

குணமதி
30-10-2009, 07:56 AM
பற்கள் தெரிவதேன்?

பொற்கொல்லர் தட்டுவதேன்?

ஆதி
30-10-2009, 08:00 AM
சரியான விடை : தட்டாம் பூச்சி

அனைவர்க்கும் நன்றி.

உண்மையில் நான் முதலில் நினைச்ச பதில் இதுதான்..

சிறகை மடக்காமல் என்று போன்றிருந்ததால் விட்டுட்டேன்..

சிறகை தட்டாம் பூச்சு அசைக்குமே.. சர்ர்ர்ர் என்று சத்தம் கூட வருமே அது சிறகைக்கும் போது..

ஆதி
30-10-2009, 08:00 AM
பற்கள் தெரிவதேன்?

பொற்கொல்லர் தட்டுவதேன்?

நகையால்

praveen
30-10-2009, 08:16 AM
பற்களெல்லாம் தெரிவதேன்?
பொற்கொல்லர் தட்டுவதேன்?
நகை செய்ய



பற்கள் தெரிவதேன்?

பொற்கொல்லர் தட்டுவதேன்?

அது தான் நீங்கள் கேள்வி கேட்கும் முன்னே பதில் சொல்லிட்டேனே கவனிக்கலையா?.

நகைச்சுவைக்காக
புத்தகத்தை பார்த்து வரிசையாக பதிக்காமல் இங்கே மற்றவர் பதிந்ததையும் பாருங்களேன். :)

குணமதி
30-10-2009, 11:49 AM
நன்றி.

பார்க்கிறேன்.

புத்தகம் எதுவுமில்லை.
எப்பபோதோ எழுதி வைத்த குறிப்புகள்.

உங்களைச் சலிப்புறச் செய்ததற்கு வருந்துகிறேன்.

ஜனகன்
30-10-2009, 10:19 PM
நாக்கு இனிப்பதேன்?
நாய் ஓடுவதேன்?

கீதம்
02-11-2009, 07:49 AM
நாக்கு இனிப்பதேன்?
நாய் ஓடுவதேன்?

கல்கண்டால்

praveen
02-11-2009, 08:40 AM
கல்கண்டால்

சரியான பதில்.

ஜனகன்
02-11-2009, 03:26 PM
நல்ல பாம்பு தலை தூக்குவைதேன்?
நாம் கமரா முன் நிற்பதேன்?

குணமதி
02-11-2009, 03:56 PM
படமெடுக்க.

ஜனகன்
02-11-2009, 08:53 PM
படமெடுக்க.

சரியான பதில் குணமதி:).
வாழ்த்துக்கள் :D

ஜனகன்
04-11-2009, 03:19 PM
குளத்து மீன் பெருகுவதேன்?
குடும்பத்தில் விரிசல் (பகை) வருவதேன்?

ஜனகன்
05-11-2009, 07:48 AM
யாருக்கும் பதில் தெரியல்லையா, நல்லாய் யோசிங்கப்பா

ஆதி
05-11-2009, 08:54 AM
குளத்து மீன் பெருகுவதேன்?
குடும்பத்தில் விரிசல் (பகை) வருவதேன்?

பிடிக்காததால்

ஜனகன்
05-11-2009, 09:56 AM
ஆதி சொன்னதும் ஓரளவு சரிதான்.
நான் நினைத்தது; பிடிப்பார்றற்று.
வாழ்த்துக்கள் ஆதி.