PDA

View Full Version : புதுமை இது!

குணமதி
24-10-2009, 05:29 PM
அழகிய பூஞ்சோலை. அருகில் சில மரங்கள். பக்கத்திலேயே ஓர் அழகிய பொய்கை. மாலை மயங்கும் நேரம். பூஞ்சோலையைச் சுற்றி வந்தாள், நிலவாய் ஒளிர்ந்து கொண்டிருந்த முகத்தினளான பேரழகுப் பெண் ஒருத்தி.

பூஞ்சோலையில் மிகுதியாகத் தேன் குடித்துவிட்டதால் மயக்கமுற்ற ஒரு கருவண்டு நாவல் மரத்தடியில் அசைவின்றிக் கிடந்தது. பூஞ்சோலையைச் சுற்றி வந்த பேரழகி, ஒரு நல்ல நாவற்பழம் அடிபடாமல் இருக்கிறதென்று எண்ணி மகிழ்வோடு அந்த வண்டைக் கையில் எடுத்துப் பார்க்க முனைந்தாள்.

அவள் கையில் எடுத்ததால் சற்றே விழிப்புற்ற அவ் வண்டு அவள் முகத்தை நிலவு என மயங்கி, 'இது என்ன, நிலவு இவ்வளவு ஒளி வீசுகிறதே!' என்று எண்ணமிட்டது; அரைகுறையாக நினைவு பெற்ற நிலையில், தான் தாமரை மலரில் இருப்பதாக உணர்ந்தது.

ஆம்! அப்பேரழகியின் கை, அவ் வண்டிற்குத் தாமரை மலர்போல் இருந்ததாம். திடீரென்று, அந்த வண்டிற்கு நினைவு வந்தது. ' இரவு தொடங்கிவிட்டதே, நிலவைப் பார்த்ததும் தாமரை மூடிக்கொள்ளுமே' என்று எண்ணி அஞ்சிய வண்டு தாமரை மூடுவதற்குள் தப்பிக்க எண்ணிப் பறந்து சென்று விட்டதாம்!

அப்பேரழகிக்கு அதிர்ச்சி! 'இது என்ன, நாவற்பழம் பறக்குமா?
பறந்தது பழமா, இல்லை வண்டா? என்ன புதுமை இது' என்று வியப்பில் ஆழ்ந்து விட்டாளாம்!

விவேக சிந்தாமணியின் 19ஆம் பாடல் இந்தக் காட்சியை அழகாக விளக்குகிறது; படிப்போரை மகிழச் செய்கிறது. அந்தப் பாடல் இதுதான் :

தேன்நுகர் வண்டு மதுவினை உண்டு

தியங்கியே கிடந்ததைக் கண்டு

தான்அதைச் சம்புவின் கனி என்று

தடங்கையால் எடுத்துமுன் பார்த்தாள்

வானுறு மதியம் வந்ததென்று எண்ணி

மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்

போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்?

புதுமையோ இது?எனப் புகன்றாள்.

புலவர், தன் கற்பனையால் அந்த அழகியையும் வண்டையும் மயங்கச் செய்ததோடு நம்மையும் மயங்கச் செய்து விடுகிறாரே!

வியாசன்
24-10-2009, 06:14 PM
ஆகா நல்லதொரு கவிதையையும் அதற்கு விளக்கத்தையும் எடுத்து வந்து தந்திருக்கின்றீர்கள். உண்மையில் பெரிய மனசு உங்களுக்கு.
நன்றி

ஜனகன்
24-10-2009, 06:40 PM
தாங்கள் படித்து ரசித்து பயன் பெற்றவற்றை எங்களுடனும்
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
நல்ல உரை நடை, நல்ல கவிதை
உங்களிடமிருந்து இன்னும் எதிர் பார்க்க தூண்டுகிறது. தொடருங்கள்

குணமதி
26-10-2009, 04:21 AM
இருவருக்கும் நன்றி.

கா.ரமேஷ்
26-10-2009, 05:25 AM
அழகான சிந்தாமனி வரிகளை விளக்கி சொல்லி இருக்கிறீர்கள் தொடருங்கள் நாங்கள் இதுபோன்ற பலவற்றை நுகர ஆசை படுகிறோம்...

குணமதி
26-10-2009, 08:26 AM
அழகான சிந்தாமனி வரிகளை விளக்கி சொல்லி இருக்கிறீர்கள் தொடருங்கள் நாங்கள் இதுபோன்ற பலவற்றை நுகர ஆசை படுகிறோம்...

மிக்க நன்றி.

பா.ராஜேஷ்
26-10-2009, 03:48 PM
என்னே ஒரு கற்பனை! அதை அழகிய தமிழில் எளிமையாய் தாங்கள் விளக்கிய விதமும் அருமை. நன்றி குணமதி!

குணமதி
26-10-2009, 03:52 PM
என்னே ஒரு கற்பனை! அதை அழகிய தமிழில் எளிமையாய் தாங்கள் விளக்கிய விதமும் அருமை. நன்றி குணமதி!

நன்றி.

வானதிதேவி
27-10-2009, 01:30 PM
இதையே கண்ணதாசன் சிறிது மாற்றி தன் பாடலில் (நான் மலரோடு தனியாக ஏன் நின்றிருந்தேன் என் மகராணி உனைக்காண....)குறிப்பிட்டிருப்பார்.
பொன் வண்டொன்று எனத்தொடங்கும் சரணம் வரிகள் சரியாக நினைவில்லை.

வியாசன்
27-10-2009, 03:06 PM
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மோத

பாடலை பெறுவதற்கு (http://isaitoday.com/songs/tamilsongsatoz/I/Iru%20Vallavarkal/Naan%20Malarodu.mp3)

குணமதி
27-10-2009, 04:29 PM
இதையே கண்ணதாசன் சிறிது மாற்றி தன் பாடலில் (நான் மலரோடு தனியாக ஏன் நின்றிருந்தேன் என் மகராணி உனைக்காண....)குறிப்பிட்டிருப்பார்.
பொன் வண்டொன்று எனத்தொடங்கும் சரணம் வரிகள் சரியாக நினைவில்லை.

பொருந்தும் பாடலை நினைவூட்டினீர்கள்.

நன்றி.

குணமதி
27-10-2009, 04:31 PM
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மோத

பாடலை பெறுவதற்கு (http://isaitoday.com/songs/tamilsongsatoz/I/Iru%20Vallavarkal/Naan%20Malarodu.mp3)

பொருந்துகின்ற பாடலைச் சரியாக எடுத்துக்காட்டி இருக்கிறீர்கள்.

நன்றி.

aren
27-10-2009, 04:42 PM
நம் மக்களுக்கு கற்பனை செய்ய சொல்லியாத் தரவேண்டும்.

அருமையாக ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

இங்கே அதை தெளிவாக எழுதி எங்களுக்கும் புரியவைத்த உங்களுக்கு என் நன்றிகள் பல.

இன்னும் இந்த மாதிரியான விஷயங்களை எங்களுக்கும் புரியும் வகையில் கொடுங்கள்.

குணமதி
28-10-2009, 03:11 AM