PDA

View Full Version : கொட்டுமா மழை .....Ravee
24-10-2009, 01:52 PM
கொட்டுமா மழை .....:traurig001:

http://farm4.static.flickr.com/3351/3427041103_e244968db0.jpg
ஐப்பசி மாதம் என்றாலே
அடை மழை என்பார்கள்
வாரம் இரண்டு
போனதுதான் மிச்சம்
காணவில்லை ஒரு பொட்டும்

அம்மன் கோயில் குருக்கள் சொன்னார்
நாத்திகம் பேசும் நாடாய் போனதால்
நாதி இழந்து போனோம் என்றார்

அம்மா ஏன் நாங்களும் உன் பிள்ளைகள் தானே
என் தாயாய் இருந்தால் ஒரு நாளும்
தனித்தனியே பிரித்துப் பார்க்க மாட்டாள்

ஊருக்கு அம்மா ஒரு கோயில் கட்டி
உடனே குடமுழுக்கு செய்வேன்
கொட்டுமா மழை உறுதி கூறுங்கள்

கழுதைக்கும் தவளைக்கும்
கல்யாணம் செய்துவைத்தால்
கண்மாய் நிறையும் என்றார்

ஏன் நான் யானைக்கும் பூனைக்கும்
கல்யாணம் செய்துவைக்கிறேன்
கொட்டுமா மழை கூறுங்கள்

இயற்கை தந்த செல்வத்தை
இறைத்திர்கள் தெருவில்
இறைவன் எங்கிருந்து வந்தான் இடையில்

காட்டை அழித்து
தேயிலை தோட்டம் போட்டீர்கள்

கண்மாய்களை அழித்து
வீட்டுமனை போட்டீர்கள்

அமிலத்தையும் அசிங்கத்தையும்
ஆற்றில் விட்டீர்கள்

பத்து நாள் தண்ணீர் வராமல்
சாலை மறியல் செய்தோம்

பதினோராம் நாள் நிரம்பிவழிந்த
குழாயை அடைக்க நாதி இல்லை தமிழகத்தில்

ஐந்நூறு ரூபாய்க்காய் கை ஏந்திய மக்கள்
அரை லிட்டர் நீருக்கு ஓட்டு
போடப்போகிறார்கள்

காலம் இன்னும் இருக்கிறது
கண்விளித்துக்கொள்விர்
காலம் போனால் ......

சந்திராயன் மூன்று வந்து
நிலவில் நீர் இருக்கிறது என்று
படம் பிடித்து காட்டும்

பார்த்துக்கொள்ளுங்கள்..........:icon_rollout:

வியாசன்
24-10-2009, 06:24 PM
மக்களின் அறியாமையும் இயற்கைளை அழிப்தனால் மழை இல்லாமல் போவதையும் ஆக்ரோசத்துடன் சொல்லியிருக்கின்றீர்கள். காலத்தின் தேவை இந்த கவிதை . இந்த கவிதையை படித்தபோது எங்கள் உணர்ச்சி கவிஞர் புதுவை இரத்தினதுரையின் வரிகளை ஞாபகப்படுத்தியது. அவரும் இப்படித்தான் ஆக்ரோசத்துடன் எழுதுவார்.

மூடநம்பிக்கையை உடைக்கும் உன்னதமான வரிகள் பாராட்டுக்கள் ரவி

கீதம்
24-10-2009, 10:24 PM
மனிதர்கள் நாம் செய்யும் தவறுகளுக்கு அம்மனைக் குறை கூறி என்ன ஆகப்போகிறது, பாவம் விட்டுவிடுங்கள். என்றைக்கு மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தி, இயற்கைக்கும், தன் இனத்துக்கும் நாசம் விளைவிக்காத செயல்களைச் செய்ய முனைகிறானோ அன்றைக்குதான் விடிவுகாலம் பிறக்கும். ஆனால் அது எப்போதுதான் என்று தெரியவில்லை. நாம் இந்த உலகில் இருக்கும்வரை மானுடம் தழைக்க, ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருப்போம். தங்கள் ஆதங்கக் கவிதைக்கு பாராட்டு.

Ravee
25-10-2009, 07:35 AM
நன்றி வியாசன் , நன்றி கீதம்

ஆதி
26-10-2009, 08:12 AM
சந்த்ராயன் ஒன்றே கண்டுவிட்டது ரவி, நிலவில் நீர் இருக்கிறது என்பதை.. நாசாவும் அதனை உறுதி செய்துவிட்டது..

நிலவில் நீர் இருந்து என்ன பிரையோசனம், அது இரவில்தான் ஊறும் அதுவும் பனியாய், பகலின் வெப்பத்தில் அது காய்ந்து போகும்..

அப்படியானால் நிலவில் இருந்து கூட நீர் கொண்டு வர முடியாது...

சரி, பிரச்சனை இப்போ அதுவல்ல..

இப்படியே போனால் ஒட்டகம் வாங்கி மெரினாவில் மேய்க்கத்தான் போகிறோம்.. என்ன பெட்ரோலும் கிடைக்காது பேரீச்சியும் விளையாது..

பாராட்டுக்கள் ரவி..

கா.ரமேஷ்
26-10-2009, 08:31 AM
மிகவும் அருமையான கவிதை நண்பரே...

மழையை தான் எல்லோரும் வேண்டிக்கொண்டிருக்கிறோம்...

சுகந்தப்ரீதன்
02-11-2009, 12:32 PM
போகிற போக்கை பார்த்தால் நீங்கள் சொல்வது வெகுவிரைவில் நிகழ்ந்துவிடும் போலிருக்கே ரவி..?!

இருப்பதை பாதுகாப்பதைவிட்டுவிட்டு பறப்பதற்க்கு ஆசைபடுவதும் கொண்டாடுவதுமே நமது கொள்கையாய் போய்விட்டது..!!

ஏற்கனவே பொய்த்துப்போன பருவமழையால் விவசாயிகளின் வாழ்க்கை நலிந்து போய்விட்டது...!! ஆக்கபூர்வமாய் அதற்கென்று எதையும் செய்யாமல் அவ்வப்போது அவர்களது வாயைமூடி தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொள்வதே ஆட்சியாளர்களுக்கு பிழப்பாய் போய்விட்டது..!! இதில் எதிர்காலத்தை பற்றி உங்களை போன்ற ஆட்கள் கவிதையெழுதி கவலைப்பட்டால்தான் உண்டு..!!

பத்து நாள் தண்ணீர் வராமல்
சாலை மறியல் செய்தோம்


பதினோராம் நாள் நிரம்பிவழிந்த
குழாயை அடைக்க நாதி இல்லை தமிழகத்தில்முன்னுக்கு பின் முரணான மக்களின் அவஸ்தையையும் அலட்சியத்தையும் அருமையாக எடுத்துக்காட்டும் வரிகள்...!! வாழ்த்துக்கள் ரவி.. தொடருங்கள்..!!

aren
02-11-2009, 02:12 PM
நல்ல கவிதை. யார் என்ன கத்தினாலும் நமக்கு எங்கிருந்தும் தண்ணீர் வராது என்பதே உண்மை. நாம் கடல் நீரை எப்படி குறைந்த செலவில் குடிநீராக்கலாம் என்று யோசிக்கவேண்டும். அதுதான் நமக்கு நிவாரணம்.

நம் மக்கள் மழைநீரை எப்படி சேமிப்பது என்று நினைக்கமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.