PDA

View Full Version : பிரார்த்தனைக்கு ஒரு பிரிவு அமைக்கமுடியுமா?



வியாசன்
24-10-2009, 11:04 AM
மன்றத்தின் உறவுகளின் பிணைப்பை அதிகரிப்பதற்கும் மற்றவர்களின் மனச்சுமை வேதனைகளை குறைப்பதற்கும். உறவுகளின் துன்பங்களில் பங்கு கொள்வதற்குமாக சாமந்தி மன்றத்தில் பிரார்த்தனை என்ற ஒரு பகுதியை ஆரம்பித்தால் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்வதன் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு மனதுக்கு ஆறுதலையும் ஒரு நம்பிக்கையையும் ஊட்டமுடியும் என்று நம்புகின்றேன். இது பற்றி மற்றைய உறவுகளும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும்

ஆ.ஜெயஸ்ரீ
24-10-2009, 11:23 AM
கூட்டு பிரார்த்தனைகள் எப்போதும் பலனளிக்கும்

தூயவன்
24-10-2009, 11:30 AM
நல்ல விடயம்.. நானும் இதற்கு ஆதரவு தருகிறேன்

பா.ராஜேஷ்
24-10-2009, 11:39 AM
நல்லதொரு முயற்சி... பாராட்டுக்கள் வியாசன்..

பிரம்மத்ராஜா
24-10-2009, 12:03 PM
தல மன்றத்தின் உறவுகளின் பிணைப்பை அதிகரிப்பதற்கும் மற்றவர்களின் மனச்சுமை வேதனைகளை குறைப்பதற்கும். உறவுகளின் துன்பங்களில் பங்கு கொள்வதற்குமாக சாமந்தி மன்றத்தில் பிரார்த்தனை என்ற ஒரு பகுதியை ஆரம்பித்தால் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்வதன் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு மனதுக்கு ஆறுதலையும் ஒரு நம்பிக்கையையும் ஊட்டமுடியும் என்று நம்புகின்றேன். இது பற்றி மற்றைய உறவுகளும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் நன்றாக இருக்கும்

பண்பட்ட ஒரு முயற்சி அனைவரும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் நம்முடைய மன இதயங்களில்தானே இறைவன் உள்ளார் அவசியமான முயற்சி சக மன்ற உறுப்பினர்கள்...!!! கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.!
(தல இதன் அர்த்தம் புரியவில்லை வியாசன் )

தூயவன்
24-10-2009, 04:45 PM
(தல இதன் அர்த்தம் புரியவில்லை வியாசன் )

அவர் "தல" என்று கூறுவது அறிஞர் அண்ணாவை

அமரன்
24-10-2009, 09:35 PM
மன்றத்தில் எப்போதும் நல்லனவற்றுக்கு ஆதரவுண்டு. நிர்வாகம் இதனை பரிசீலினைக்கு எடுக்கின்றது. நிர்வாக முடிவு மன்ற நண்பர்களின் கருத்துகள்ளையும் பிரதிபலிக்கும்.

aren
25-10-2009, 05:15 AM
அமரன் அவர்கள் சொல்கிறபடி, நல்ல விஷயங்கள் அனைத்திற்கும் மன்றத்தில் எப்பொழுதும் ஆதரவு உண்டு.

நிர்வாக முடிவு எதுவாக இருந்தாலும் அதை வரவேற்போம்.

நேசம்
25-10-2009, 02:53 PM
குமுதத்தில் ஆரம்ப காலங்களில் கூட்டு பிராத்தனை என்ற பகுதி வந்து கொண்டு இருந்தது.உங்கள் யோசனை நிர்வாகி அவசியம் பரிசிலனை செய்வார்

ஆதி
26-10-2009, 01:20 PM
தாமரை மன்றத்தில் உள்ள வாழ்த்துக்கள், அஞ்சலிகள் இதர தலைப்புகள் பகுதியை இதற்காக பயன்படுத்தலாம் என்பது என் கருத்து, அதனை பயன்படுத்தும் பட்சத்தில் இதற்காக தனி பகுதி திறக்க தேவை இருக்காது..

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=63

அறிஞர்
26-10-2009, 01:38 PM
அவரவர் நம்பிக்கையில் வேண்டுவதற்கு உபயோகமான பகுதிதான்.

மதம் சம்பந்தப்பட்ட பகுதியில் இதை வைக்கலாம். முதலில் தனிபிரிவு ஆரம்பிக்கும் முன் பிராத்தனைகளை (பிராத்தனை-1, 2, 3 என்ற தலைப்புகளில்) ஆன்மீகம். (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=65) பகுதியில் கொடுப்போம். 10ற்கும் மேல் பிராத்தனைகள் வந்தவுடன் தனிப்பிரிவு ஆரம்பிக்கலாம்.

நிர்வாக குழு ஆலோசித்து விரைவில் முடிவு சொல்கிறோம்.

(பொதுவான தலைப்புகளைல் பட்டங்களை அழைக்கவேண்டாம் (குறிப்பாக எனக்கு))