PDA

View Full Version : ஒரு புதிர்



ஜனகன்
23-10-2009, 09:53 PM
ஒரு வீட்டில் நாலு தூண் உள்ளது முதல் நாள் கொஞ்ச எலி முதலாவது தூணுக்கு வந்ததது ஒரு பூனை அதில் கொஞ்சத்தை தின்றது . மிகுதி எலி போய் ரெண்டாவது தூணுக்கு இரண்டுமடங்கு வந்தது . அதிலும் ஒரே அளவு எலியை பூனை தின்றது. மிகுதி எலி அடுத்தநாள் போய் மூன்றாவது தூணுக்கு மும்மடங்காக வந்தது.அன்றும் அதே அளவு எலியை பூனை தின்றது .மிகுதி எலி நான்கு மடங்காக நாலாவது தூணுக்கு வந்தது.அன்றும் அதே அளவு எலியை பூனை தின்றது.நான்காவது தூணில் எந்த எலியும் மிஞ்சவில்லை.
கேள்வி---
முதல் நாள் வந்த எலி எவளவு?
ஒவொரு தூணிலும் தின்ற எலியின் தொகை எவளவு? :smilie_abcfra:

வியாசன்
24-10-2009, 07:27 AM
ஜனகன்
முதலாவது தூணுக்கு 41 எலிகள் வருகின்றது. அதில் 24 எலிகளை பூனைசாப்பிட்டுவிடுகின்றது மீதி 17 எலிகள்

இரண்டாவது தூணுக்கு வரும் 17 எலிகளும் இரட்டைத்தொகையாகும்போது 34 நான்கு எலிகளாகின்றது. அதில் 24 போக மீதியுள்ள 10 எலிகள்

மூன்றாவது தூணுக்கு வரும் 10 எலிகள் மும்மடங்காகின்றது 30 இதில் 24 போக 6 மீதியுள்ளது

நான்காவது தூணுக்கு போகும் 6 எலிகளும் 24 நான்காகின்றது

சரியாகிவிட்டதா?

எங்களுக்கும் கணக்கு வருமில்ல

அமரன்
24-10-2009, 07:30 AM
நல்லாக் கணக்குப் பண்ணுறீங்க வியாசன். வாழ்த்துகள்.

வியாசன்
24-10-2009, 07:32 AM
நல்லாக் கணக்குப் பண்ணுறீங்க வியாசன். வாழ்த்துகள்.

நிறைய கணக்குவிட்டதால்தான் இந்தநிலை.

ஜனகன்
24-10-2009, 11:23 AM
வியாசன் சொன்னது சரியான விடை.
வாழ்த்துக்கள்

aren
25-10-2009, 05:24 AM
வாழ்த்துக்கள் வியாசன்.

கணக்கும் நன்றாக வரும் போலிருக்கே.

பிஜிகேயின் புதிர் அடிக்கடி வருமே. அங்கேயும் வந்து உங்கள் திறமைகளை காட்டுங்கள்.

வியாசன்
25-10-2009, 07:09 AM
வாழ்த்துக்கள் வியாசன்.

கணக்கும் நன்றாக வரும் போலிருக்கே.

பிஜிகேயின் புதிர் அடிக்கடி வருமே. அங்கேயும் வந்து உங்கள் திறமைகளை காட்டுங்கள்.


ஆரென் ஒரு நாளைக்கு நாங்கள் சமையல் செய்யப்போய் அது ருசியாக அமைந்துவிட்டால் நாம் பெரிய சமையல்காரர் என்று ஆகிவிடுமா கண்ணிழந்தவர் மனைவிக்கு அடித்தமாதிரித்தான். எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாம்

பாடசாலையில் நன்றாக கண்க்கு விடுவோம். நான் படித்தது உயிரியல்

குணமதி
26-10-2009, 04:18 AM
ஆரென் ஒரு நாளைக்கு நாங்கள் சமையல் செய்யப்போய் அது ருசியாக அமைந்துவிட்டால் நாம் பெரிய சமையல்காரர் என்று ஆகிவிடுமா கண்ணிழந்தவர் மனைவிக்கு அடித்தமாதிரித்தான். எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாம்

பாடசாலையில் நன்றாக கண்க்கு விடுவோம். நான் படித்தது உயிரியல்

உயிரியியல் படித்திருந்தும் கணக்கில் சரியாக விடை தந்த நீங்கள் கட்டாயம் பாராட்டப்பட வேண்டியவரே!

நன்றி.

தாமரை
26-10-2009, 05:23 AM
முதல் தூணுக்கு வந்த எலிகளின் எண்ணிக்கை X எனக் கொள்வோம்.
பூனை ஒரு முறை தின்னும் எலிகளின் எண்ணிக்கை Y எனக் கொள்வோம்.

முதல் நாள் முதல் தூணில் மிஞ்சிய எலிகள்

A = X - Y

இரண்டாம் நாள் இரண்டாம் தூணில் மிஞ்சிய எலிகள் (முதல் நாள் மிஞ்சிய A எலிகளின் இருமடங்கு வர Y எலிகளை பூனை தின்றது.

B = 2A - Y
= 2(X-Y) -Y
= 2X - 2Y - Y
= 2X - 3Y


மூன்றாம் நாள் மூன்றாம் தூணில் மிஞ்சிய எலிகள் (இரண்டாம் நாள் மிஞ்சிய B எலிகளின் மும்மடங்கு வர Y எலிகளை பூனை தின்றது.)

C = 3B - Y
= 3(2X-3Y) - Y
= 6X - 9Y -Y
= 6X - 10Y

நான்காம் நாள் நான்காம் தூணில் மிஞ்சிய எலிகள் பூஜ்யம் (மூன்றாம் நாள் மிஞ்சிய C எலிகளின் நான்கு மடங்கு வர Y எலிகளை பூனை தின்றது. ஒரு எலியும் மிஞ்சவில்லை.

0 = 4C - Y
= 4(6X-10Y) - Y
= 24X -40Y -1
= 24X - 41Y

24X = 41Y

இதன் மூலம்

வரும் முதலில் வரும் எலிகள் 41 என்றால் தின்னும் வேகம் 24 என்ற விகிதத்தில் அமைந்தால் கடைசித் தூணில் பூனை தின்றபின் எலிகள் மிஞ்சாது.

அதாவது 24-41; 48-82; 72-123 இப்படி பல விடைகள் சொல்லலாம்.

aren
26-10-2009, 05:50 AM
தாமரை என்னவோ சொல்கிறார். ஆனால் அது சரியாகவே இருக்கும் என்றே தோன்றுகிறது.

ஜனகன்
26-10-2009, 08:08 AM
தாமரை ஏதேதோ கணக்குகள் போட்டு (நான் படித்தது எண் கணிதம் ) இறுதியில்
சரியான விடை சொல்லி இருக்கின்ரீர்கள்.
வாழ்த்துக்கள்