PDA

View Full Version : செப்புவாயே!



குணமதி
23-10-2009, 03:46 PM
முன்னொரு மோதிரமும் வளையமுண்டு

முதலிலுடற் கெண்ணெயிடும் வணிகனில்லை!

பின்னிழுத்து மாட்டுவதும் உண்டுதானே!

பிசுபிசுப்பு தடவியதால் மினுக்குந்தானே!

முன்முதலாய் ஒலிஎழுப்பல் உண்டுதானே

மொறுக்குகறுக் கெனஎழுப்பும் ஒலியும் தானே!

கன்முள்ளும் கடுஞ்சூடும் தாக்கிடாதே

கருத்தாகக் கால்காக்கும் கண்டிருப்பாய்!

சின்னஅடி அழகினளே சிவந்தவுன்றன்

சீரழகு வாய்திறந்து செப்புவாயே!

ஜனகன்
23-10-2009, 06:48 PM
குணா! முருக்குத்தானே? அல்லது வடையா?

குணமதி
23-10-2009, 07:15 PM
மன்னிக்கவும்.
ஓரடி சேர்த்துத் திருத்தியிருக்கிறேன்.
இப்போது கண்டுபிடிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.

ஜனகன்
24-10-2009, 06:28 PM
தூண்டாமணி விளக்கு அல்லது
மண்எண்ணெய் விளக்கு

குணமதி
24-10-2009, 06:46 PM
இன்னும் கொஞ்சம் எளிமையாக்கி உள்ளேன்.

ஜனகன்
24-10-2009, 06:55 PM
குணமதி சரியாக தெரியவில்லை
செருப்பு எனவும் தோன்றுகின்றது

கீதம்
24-10-2009, 11:28 PM
முள்ளும், சூடும் தாக்கிடாமல் கால் காப்பாய் என்றால் அது ஜனகன் கூறியது போல் செருப்பாய்த் தானிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

குணமதி
25-10-2009, 05:01 AM
செருப்பு என்பதே சரியான விடை.

அனைவர்க்கும் நன்றி.

ஜனகன்
27-10-2009, 10:50 PM
செருப்பு என்பதே சரியான விடை.

அனைவர்க்கும் நன்றி.

அம்மாடியோ!....ஒரு வழியாய் முடிவுக்கு வந்தாச்சு :icon_b:

குணமதி
28-10-2009, 03:59 AM
அம்மாடியோ!....ஒரு வழியாய் முடிவுக்கு வந்தாச்சு :icon_b:

உண்மைதான்.

நன்றி.

aren
28-10-2009, 04:22 AM
கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது இந்தப் புதிர்.

பாராட்டுக்கள்.

குணமதி
28-10-2009, 04:31 AM
கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது இந்தப் புதிர்.

பாராட்டுக்கள்.


நன்றி.