PDA

View Full Version : இயற்கை அழகு



குணமதி
23-10-2009, 02:16 PM
பசும்பயிர் வயல்கள் பாராய்!

.பயிர்தவழ் காற்றால் அங்கே

அசைவுஅலைவு அழகைப் பாராய்!

.அட,ஓ!கண் கொள்ளாக் காட்சி!

நசைமிக பொருளிற் கோடும்

.நன்னெறி மறந்த மாக்கள்

மாசறு இயற்கை இன்பம்

.மகிழ்வறி யாரே யன்றோ?

வியாசன்
23-10-2009, 03:10 PM
என்ன கிராமத்து ஞாபகம் வந்துவிட்டதா? எனக்கு வந்தவிட்டது.

நல்ல கவிதை

அமரன்
24-10-2009, 07:38 AM
அதுக்காக அருவி வெட்டுபவர்களையும் சேர்த்துத் திட்டக் கூடாது:).

இயற்கை அழிவு ஒருபக்கதில்.. இயற்கை அழிப்பு மறுபக்கத்தில்..

உலகின் இரு கண்களிலும் விழுந்த துருக்கள்..

உறுத்திக்கொண்டே இருக்கின்றன.

அழுது தீர்த்தால் மட்டும் கழுவுப்படாது கண்கள்.

இயற்கை நேசத்தை தமிழ்தேசத்தில் பறக்கவிட்டு நல்வாசனை தந்த கவிதை.

வியாசன்
24-10-2009, 07:41 AM
என்ன செய்வது அமரன் போகின்ற போக்கை பார்த்தால் அடுத்துவரும் சந்ததிகள் மரம் கொடி செடிகளை காட்சிச்சாலைகளில் மட்டும்தான் பார்க்கமுடியும்பொல் இருக்கிறது

பா.ராஜேஷ்
24-10-2009, 11:43 AM
இயற்கையின் அழிவிற்கும், அழிப்பிற்கும் இயற்கையே விடை காணும் என்பது திண்ணம்.

நல்ல கவிதை குணமதி... நன்றி!!!

குணமதி
24-10-2009, 01:04 PM
வியாசன்
அமரன்
ராஜேஷ்

மூவர்க்கும் நன்றி.

சுகந்தப்ரீதன்
02-11-2009, 11:58 AM
நன்னெறி மறந்தபின் இயற்கையில் இன்பம் ஏது...?!

உணர்ந்தவர் இயற்கையை அனுபவிப்பார்... உணராதவர் இயற்கையிடம் அனுபவிப்பார்..!! ராஜேஷ் சொன்னதுபோல் எல்லாவற்றிக்கும் இயற்கையிடம் விடையுண்டு...!!

நல்லதொரு கவிதை... வாழ்த்துக்கள்..குணமதி..!! தொடருங்கள்..!!