PDA

View Full Version : தமிழில் பயனர் பெயர்.

வியாசன்
22-10-2009, 03:23 PM
அன்பு நண்பரே...
தமிழ் மன்றத்தின் முக்கிய நோக்கமே தமிழ்.
தயவு செய்து ஆங்கிலப்பதிவுகளைத் தவிருங்கள்.
தமிழிற் பதிவிட ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், உதவிட நாம் அனைவருமே காத்திருக்கின்றோம்.
தமிழிற் தட்டச்சிப் பாருங்கள். அதன் சுவையை நீங்கள்ம் அனுபவியுங்கள்.
தங்கள் புரிதலை அன்புடன் எதிர்பார்க்கின்றேன்.

வரவேற்கின்றேன் நண்பரே முதலில் நிர்வாகம் ஆங்கிலத்தில் பயனர் பெயர்கள் உபயோகிப்பதை தடைசெய்யவேண்டும். சின்னதில் இருந்து படிப்படியாக இறுக்கமாக்கி கொண்டு வரவேண்டும். எல்லோரும் பயனர் பெயர்களை தமிழில் உபயோகித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.

அமரன்
22-10-2009, 07:57 PM

சில இடங்களிலிருந்து வரும்போது தமிழில் பெயர்கொண்ட எனக்கு சிக்கல், அசௌகரியங்கள் உள்ளன நண்பரே. சிலருக்கு இது நிரந்தரமாகவே இருக்கலாம். அவர்களுக்காக ஆங்கிலத்தில் பெயரை அனுமதிக்கிறோம். உங்கள் கருத்தை நிர்வாகம் பரிசீலினை செய்யும்.

சாதக பாதகங்களை ஏற்கனவே பொது மன்றத்தில் அலசியதாகவுன் ஞாபகம்.

aren
23-10-2009, 02:08 AM
பெயர், டைட்டில் இதிலெல்லாம் சில இடங்களில் தமிழில் தட்டச்சு நேரடியாக செய்யமுடியாது. அதற்காக நிர்வாகம் அந்த இடங்களில் ஆங்கிலத்தை அனுமதித்தது. ஆனால் உள்ளே பதிக்கும் பதிவுகள் தமிழில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகளை நாம் ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். ஆகையால் இப்போதைக்கு இந்த விதிமுறைகளே போதுமானது என்பது என்னுடைய கருத்து.

ஏற்கெனவே பலர் நாம் பல விதிமுறைகளை விதித்துள்ளோம் என்ற சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் இப்போதைக்கு இது போதும்.

வியாசன்
23-10-2009, 05:45 AM

நண்பர்களே எதற்கு நீங்கள் எடுத்தவுடன் முடிவுரை சொல்கின்றீர்கள். பலமுறை விவாதித்தாலும் விவாதிக்கின்றபோது வழிமுறைமுறைகள் தோன்றும். எனக்கு இந்த இணையத்தில் ஒருவிடயம் பிடிப்பதில்லை எதற்கெடுத்தாலும் ஒருசிலர் முடிவுரைகளை கூறுகின்றனர். ஏதோ தாங்கள் சொல்லிவிட்டால் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நினைப்பு. இங்கு ஆங்கிலத்தில் எழுதுகின்றவர்களில் எத்தனைபேர் தமிழில் பயனர்பெயர்களை தமிழில் முயன்று பார்த்தவர்கள். முயற்சிக்காதவர்கள் கூட முடியாது என்று சொல்லகூடாது. நிர்வாகம் ஆரம்பத்திலேயே தமிழில் பயனர் பெயர்களை உருவாக்க வேண்டுமென்று கூறியிருந்தால் உருவாக்கியிருப்பீர்கள் அல்லவா?

பயன்படுத்திய பெயர்கள் பிடிக்காமல் எத்தனைபேர் பெயர்களை மாற்றிக்கொள்கின்றார்கள் . மனமிருந்தால் மார்க்கமுண்டு.

குணமதி
23-10-2009, 05:10 PM
வரவேற்கின்றேன் நண்பரே முதலில் நிர்வாகம் ஆங்கிலத்தில் பயனர் பெயர்கள் உபயோகிப்பதை தடைசெய்யவேண்டும். சின்னதில் இருந்து படிப்படியாக இறுக்கமாக்கி கொண்டு வரவேண்டும். எல்லோரும் பயனர் பெயர்களை தமிழில் உபயோகித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.

என் பெயரையும் தமிழில் மாற்றித் தர
முடியுமா?
முடியுமானால் மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முன்னராகவே நன்றி கூறிக் கொள்கிறேன்.

வியாசன்
23-10-2009, 05:17 PM
என் பெயரையும் தமிழில் மாற்றித் தர
முடியுமா?
முடியுமானால் மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முன்னராகவே நன்றி கூறிக் கொள்கிறேன்.

முடியும் குணாமதி அறிஞரிடம் தனிமடல் மூலம் கேட்டுப்பாருங்கள்

ஆ.ஜெயஸ்ரீ
23-10-2009, 07:37 PM
குணா மதியா அல்லது குணமதியா என நீங்கள் தான் சொல்ல வேண்டும் .

அமரன்
23-10-2009, 08:34 PM
அய்யா...

இதை ஏன் நீங்கள் முடிவுரையாக எடுத்துக்கொள்கின்றீர்கள். அவருடைய கருத்தாக எடுத்துக்கொள்ள மறக்கிறீர்கள்.
நண்பர்களே எதற்கு நீங்கள் எடுத்தவுடன் முடிவுரை சொல்கின்றீர்கள். பலமுறை விவாதித்தாலும் விவாதிக்கின்றபோது வழிமுறைமுறைகள் தோன்றும். எனக்கு இந்த இணையத்தில் ஒருவிடயம் பிடிப்பதில்லை எதற்கெடுத்தாலும் ஒருசிலர் முடிவுரைகளை கூறுகின்றனர். ஏதோ தாங்கள் சொல்லிவிட்டால் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நினைப்பு. இங்கு ஆங்கிலத்தில் எழுதுகின்றவர்களில் எத்தனைபேர் தமிழில் பயனர்பெயர்களை தமிழில் முயன்று பார்த்தவர்கள். முயற்சிக்காதவர்கள் கூட முடியாது என்று சொல்லகூடாது. நிர்வாகம் ஆரம்பத்திலேயே தமிழில் பயனர் பெயர்களை உருவாக்க வேண்டுமென்று கூறியிருந்தால் உருவாக்கியிருப்பீர்கள் அல்லவா?

பயன்படுத்திய பெயர்கள் பிடிக்காமல் எத்தனைபேர் பெயர்களை மாற்றிக்கொள்கின்றார்கள் . மனமிருந்தால் மார்க்கமுண்டு.

அமரன்
23-10-2009, 08:35 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17215

இங்கே விண்ணப்பம் செய்யுங்கள் குணமதி.

என் பெயரையும் தமிழில் மாற்றித் தர
முடியுமா?
முடியுமானால் மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முன்னராகவே நன்றி கூறிக் கொள்கிறேன்.

பிரம்மத்ராஜா
24-10-2009, 04:52 AM
வரவேற்கின்றேன் நண்பரே முதலில் நிர்வாகம் ஆங்கிலத்தில் பயனர் பெயர்கள் உபயோகிப்பதை தடைசெய்யவேண்டும். சின்னதில் இருந்து படிப்படியாக இறுக்கமாக்கி கொண்டு வரவேண்டும். எல்லோரும் பயனர் பெயர்களை தமிழில் உபயோகித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.

இதை நானும் வரவேற்கிறேன். நானும் ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறேன் அதை நினைத்தால் எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது ஆகவே தமிழில் பயனர் பெயர் மாற்றி தந்தால் சந்தோசமடைவோம் முதலில் ஆங்கிலத்தில் பதிவு செய்தமைக்காக வருந்துகிறேன் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் அறிஞர் அவர்கள் இதை கவனத்தில் கொள்வார்கள் என நினைக்கிறேன்

வியாசன்
24-10-2009, 06:57 AM
அய்யா...

இதை ஏன் நீங்கள் முடிவுரையாக எடுத்துக்கொள்கின்றீர்கள். அவருடைய கருத்தாக எடுத்துக்கொள்ள மறக்கிறீர்கள்.

அமரன் நீங்கள் அவர் இறுதியில் கூறியிருந்ததை கவனிக்கவில்லையா ? இதோடுவிட்டுவிடுங்கள் என்று அதனால்தான் நான் அப்படி எழுதவேண்டியுள்ளது

அமரன் அய்யா என்றழைத்து என்னை தனிமைப்படுத்த வேண்டாம். வயசுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் நட்புக்கு இதெல்லாம் பிரச்சனையே அல்ல. நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள் மகிழ்வாயிருக்கும்