PDA

View Full Version : ***சின்னத்திரை***இன்பக்கவி
22-10-2009, 11:28 AM
http://mrbarlow.files.wordpress.com/2008/10/no-tv.png
மனைவியை சந்தேகிக்கும் கணவன்
கணவனை உளவு பார்க்கும் மனைவி
மருமகளை கொடுமை படுத்தும் மாமியார்
மாமியரை தனிமை படுத்தும் மருமகள்
அண்ணியை அடைய நினைக்கும் கொழுந்தன்
கொழுந்தனை காதலிக்கும் அண்ணி
இரு தார பிள்ளைகளுக்குள் ஒரு போராட்டம்

பள்ளிகூட காதல்
கல்லுரி காதல்
இளையவர்களின் மனதை
திசை திருப்பும் கதைகள்
அர்த்தம் புரியாத பாடல்கள்
குழந்தைகளுக்கு விளக்க முடியாத
விளம்பரங்கள்..
மனதை சிதைக்கும் படங்கள்

ஒரு மணி நேர திருமணம்
நடந்து கொண்டு இருக்கும்
வார கணக்கில்...
திருப்புமுனை என்ற பெயரில்
வாரகடைசியில் குழப்பமாய்
முடியும் தொடர்கதைகள்


சீரியல் என்ற பெயரில்
குடும்பத்தை குலைக்கும்
நிகழ்ச்சிகள்
பண்டிகைகளை
கொண்டாட முடியாமல்
அனைவரையும் கட்டிபோடும்
சிறப்பு நிகழ்ச்சிகள்

தொகுப்பாளர்களின் தமிழ் படுகொலை
கண்ணை உறுத்தும் ஆடைகள்
நகைச்சுவை என்ற பெயரில்
இரட்டை அர்த்த வசனங்கள்
அரைகுறை ஆடைகளில்
ஆட்டம் போடும்
நடன நிகழ்ச்சிகள்

ஆமை புகுந்த
வீடாய் மாற்றும்
சின்னத்திரை...
சின்னத்திரை என்ற பெயரில்
ஒரு சிரழிவு நமக்கு
தேவை தானா???

அமரன்
22-10-2009, 08:09 PM
சிறு இடைவெளியின் பின்னர் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது கவிதா123.

உங்கள் கவிதை பட்டியலால் நானும் அவதிப்பட்டிருக்கிறேன்.

வேலை.. படிப்பு.. உலாத்தல்.. என எல்லாம் முடித்து அசதியுடன் வீட்டுக்கு வந்து சற்று அயர்வோம் என்றால் பல பிரச்சினைகள். பல அசௌகரியங்கள். எரிச்சல் மிகுதியால் குழறுபடிகள். இருந்தாலும் வீட்டில் ஓய்வாக இருக்கும் போது செய்ய எதுவும் இல்லை என்ற நிலையில் அசிங்கங்கள் அழகாகத் தெரிவதை தடுக்க முடியவில்லை. கை தன்னிசையாக ரிமோட்டை எடுப்பதை தவிர்க்க இயலவில்லை. அன்றாடத்தில் கண்டதைக், கேட்பதைக் ஒரு நாளாவது பிரிந்திருக்க முடியாத வசநிலைக்கு ஆளாவதை எப்படித் தடுப்பது.

நட்சத்திரங்களுக்கு நடுவில் சின்னத்திரை. விடிவெள்ளியா.. மாலை வெள்ளியா..

பாராட்டுகள் கவிச்சிந்தனைக்கு.

தொடர்ந்து படையுங்கள்.

aren
23-10-2009, 03:22 AM
உண்மை, உண்மை, உண்மை, முற்றிலும் உண்மை.

அபாரம் கவிதா!!! எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள். சின்னத்திரையால் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை அப்படியே புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

கீதம்
23-10-2009, 03:39 AM
நெடுநாட்களாய் என் நெஞ்சில் ஒரு நெருஞ்சியாய் உறுத்திக்கொண்டிருக்கும் எண்ண ஒட்டங்களை அற்புதமாய் பிரதிபலித்துள்ளீர்கள், கவிதா அவர்களே. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்புடன் கீதம்.

samuthraselvam
23-10-2009, 04:42 AM
வருக கவி... எங்கே போனீர்கள் .. மன்றம் வர நேரமில்லையோ?

அருமையான சிந்தனை... வாழ்த்துக்கள் கவி...

வியாசன்
23-10-2009, 05:15 AM
கவிதா உங்கள் கோபம் நியாயமானதே. தனியாக சின்னத்திரைமீது கைகளை காட்ட வேண்டாம் .என்ன சம்பவத் சின்னத்திரையில் பெரிதாக்கி காட்டுகினறார்கள் . இதற்கெல்லாம் வழிவகுத்தது வெள்ளித்திரைதானே. நீங்கள் குறிப்பிட்ட கொழுந்தனை அடைய நினைக்கின்ற அண்ணி கதைதானே உயிர்.

தவறுகளை ஒருவர்மீது சுட்டிக்காட்டுதல் தவறு. புதுக்கவிதையால் புகழ்பெற்ற மேத்தா தான் புகழ்பெற்றபின் ஒரு பேட்டியில் புதுக்கவிதையை தடைசெய்யவேண்டும் என்று கூறி வாங்கிக்கட்டிக்கொண்டார் . தவறுகளை எங்கிருந்தாலும் சுட்டிக்காட்டவேண்டும் .அது வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி.

கவிதா உங்கள் நியாயமான கோபம் மக்களை சென்றடையாது. பத்துநிமிட நாடகத்துக்காய் 20 நிமிட விளம்பரத்தையே சகித்துக்கொள்கின்றார்கள் என்பதால் அவர்கள் இந்த வக்கிரமமான கதைகளை ஏற்றக்கொள்கின்றார்கள் என்றுதானே அர்த்தம். அதற்காக சும்மா இருக்க கூடாது.

அருமையான கவிதை. உங்கள் கோபம் ஆதங்கம் இதுபோன்ற இன்னும் பல கவிதைகளை தரவேண்டும்

பா.ராஜேஷ்
24-10-2009, 12:00 PM
நீண்ட நாட்களுக்கு பிறகு சிந்திக்க வைக்கும் கவிதயை படைத்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!

இன்பக்கவி
06-11-2009, 05:03 AM
எலோருக்கும் நன்றிகள்
சின்னத்திரை, பெரிய திரை என்ற பகு பாடு இல்லை ..
பெரியதிரையில் பேசும் இரட்டை அர்த்த வசன நகைச்சுவைகள் தாங்க முடியாத, முகத்தை சுளிக்க வைக்கும நிலையில் உள்ளது
இப்பொது சின்னத்திரையில் காமெடி சானல் என்று தனியாக வைத்து போட்ட நகைச்சுவை கட்சிகளையே 24 மணி நேரம் போட்டு சின்ன குழந்தைகள் அந்த வசனங்களை நமக்கு பேசி காட்டும் பொழுது அதிரிச்சியாக உள்ளது..
அதுவும் பெண்கள் நாடகங்கள் பார்த்து நடைமுறையை மற்றும் நிலை..

வெள்ளித்திரையை இப்பொது சின்னத்திரை ஆக்ரமித்து கொண்டதாக கருதுபவர்களும் உண்டு..
இரெண்டும் ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டது