PDA

View Full Version : என்.ஹெச் 47



சுஜா
22-10-2009, 07:20 AM
இரவு நேர அரவமற்ற சாலையில்
அவனின் கைகாட்டலை புறக்கணிக்கும்
பேருந்து நிரப்பிச் செல்லும்
பயணிகள் மனதில் அவன் வலிகளை.

வியாசன்
22-10-2009, 08:27 AM
சுஜா பாவம் அவன்.

ஆனால் நீங்களே சொல்கின்றீர்கள் அரவமற்றசாலை என்று .யாருமே பயப்படத்தான் செய்வார்கள். ஒரு தடவை அதிகாலை 2 மணிக்கு நான் வேலைக்கு போவதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு இளம்பெண் கைகாட்டி மறித்தாள். .யாராவது வலியவம்பை விலைக்கு வாங்கமாட்டார்கள். அதனால் நான் நிறுத்தாமல் சென்றுவிட்டேன்.

உண்மையில் அந்தபெண் அவசரமாக ஏதாவது இடத்திற்கு செல்லவேண்டியும் இருந்திருக்கலாம். ஐரோப்பாவில் சில பிரச்சனைகளும் இதனால் வருகின்றது. இதற்காக சிலநேரம் வருந்துவேன். எனக்கு தெரியாது நான் செய்தது சரியா தவறா என்று. மனிதாபிமானங்கள் சிலவேளைகளில் பிரச்சனையில் முடிகின்றது.

கவிதை நன்றாக இருக்கின்றது. கருவிவாதத்திற்குரியது

aren
22-10-2009, 11:00 AM
எதுக்கு என்.எச். 47க்கு போகவேண்டும். சென்னையிலேயே இதை தினமும் பார்க்கலாமே. பல்லவன் பஸ் அதனுடைய நிறுத்தத்தில் நிறுத்தவே மாட்டார்களே. கொஞ்சம் தள்ளித்தான் நிற்பார்கள்.

நாம் அவசரமாக எங்காவது செல்லவேண்டும் என்றால், வேறு வழியேயில்லை, ஆட்டோதான்.

அமரன்
24-10-2009, 07:16 AM
உங்கள் பார்வையில் அன்பு பள்ளிச்சிடுகிறது.

கொறிக்கப்படும் நொருக்குத் தீனிகளாகவும்
தூக்க கலக்கம் நீக்கும் தேனீர் மிடருகளாகவும்
அவனது வலிகள் பயணிகள் வாய்களில்..
சத்தம் நிறைந்து வெளிச்சிந்தி
மேலும் கறுக்கிறது தார்ச்சாலை.

பாராட்டுகள்.

மன்மதன்
25-10-2009, 07:56 AM
நாம் அன்றாடம் பார்க்கும் காட்சிகளை அழகு கவிதையாக தந்திருக்கிறீர்கள்.. பாராட்டுகள்..

ஆதி
26-10-2009, 07:59 AM
யதார்த்தமாய் பார்த்தால், எந்த பயணியும் ஏற்றப்படாத பயணிக்க வறுத்தப்படுவதில்லை.. உண்மையில் நிறுத்தாமல் சென்றதுக்காய் எத்தனையோ பேர் சந்தோஷம் கூடப்பட்டிருக்கலாம்..

அவன் வலிகள் மனதை நிரப்ப வழியில்லை சுஜா.. ஒரு வேளை அவர்களின் நினைவில் கொஞ்ச தூரம் வேண்டுமானால் அவனை சுமந்து செல்ல வாய்ப்பிருக்கு.. கவிதை அப்படியே இருந்திருந்தா இன்னும் யதார்த்தமா இருக்கும் என்பது என் நினைப்பு..

உண்மை நிலையை சொல்லும் கவிதை என்று நம் மக்கள் சிலர் சொல்லி இருப்பதால் கவிதையின் முடிவு வரிகளை ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது..


வாழ்த்துக்கள்..